1. தூரம்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

Red lightஇல் கார் மெதுவாக ஊர்ந்து நின்றது. என்னை சுற்றி காலையில் வேலைக்குச் செல்ல காத்திருக்கும் கார்கள் horn சப்தமின்றி அமைதியாய் காத்திருந்தன. இதுவே நம் ஊராக இருந்திருந்தால் இந்த கூட்டம் எவ்வளவு ஜாலியாய் இருந்திருக்கும்! இந்த trafficஇல் கார்களின் நடுவே தலையில் பழக்கூடையோடு போபவளிடம் மாதுளைப்பழம் வாங்கி உடைத்து சாப்பிட்டிக்கொண்டிருப்பேன். ஆனால் நிற்பது ஜப்பானின் trafficஇல். வெகு அமைதியான பண்பான மக்கள் இவர்கள். சாலை விதிகளை மீறி இங்கு சாலையின் ஓரத்தில் கூட கடை போட மாட்டார்கள் இதில் எப்படி கூடையில் பழம் விற்பது?

Traffic light பச்சையாய் மாற முன்னால் நின்ற கார் நகர அடுத்த லெப்ட் turn எடுத்து மக்கள் நடமாட்டம் குறைவான airport சாலையில் பயணித்து அடுத்த 20 நிமிடங்களில் என் ஆபீஸை வந்தடைந்தேன். இங்கு வந்து சுமார் ஈராண்டுகள் முடிவடையப்போகின்றன. அம்மா தீபாவளிக்கு இவ்வருடம் ஊருக்கு வர சொல்லி கெஞ்சியிருந்தாலும் யோசித்து சொல்கிறேன் என அவ்விஷயத்தை தள்ளி வைத்துவிட்டேன். மீண்டும் இந்தியாவுக்கு திரும்பும் அளவுக்கு சக்தி இருக்கிறதா என்னும் ஐயம்.

"Hey Raj! Good thing you are here. Can you do a final check on the engines? We are dispatching it today," கூட வேலை செய்யும் அந்த ஜப்பான்காரன் என் டேபிளுக்கு வந்து சொல்ல sure என்று பதிலளித்துவிட்டு அவன் பின்னாலேயே engine roomக்கு சென்றேன். 2 மாடி உயரத்தில் விமான engine கம்பீரமாய் நின்றாலும் எனக்கு அதைப் பார்த்தவுடன் சற்று சலிப்பாக இருந்தது.

ஒரு சின்ன முடிவு, அதிகம் சிந்திக்காத சின்ன விஷயம் நம் வாழ்க்கையை திசைத் திருப்பும். ஆனால் இது தான் அந்த மாற்றத்தின் முதல் படி என்பதை நாம் அறிவதில்லை. அம்முடிவை எடுத்ததும் அடுத்து நடப்பவை எல்லாம் நம் கையை மீறி நம் அனுமதியின்றி தொடரும். Butterfly effect என்று கூறுவார்கள். என் வாழ்க்கையில் பட்டாம்பூச்சியின் சிறகுகள் அடித்து மாபெரும் புயலை எழுப்புவதற்கான முதல் படி எனது காலேஜ் அட்மிஷன் என்று அத்தருணத்தில் அறியவில்லை. உலகத்தில் கால் நனைக்கும் ஸ்கூல் முடித்த வயது அது.

அப்பா தான் aeronautical engineeringஇல் சேர சொன்னார். Chartered accountant என்று பேச்சு வாக்கில் வார்த்தையை விட்டதும், "இல்ல பா. இது படிச்சா வெளிநாட்டுல நல்ல வேலைல இருப்ப. நான் மத்தவங்கக்கிட்ட கேட்டேன் எதிர்காலத்துல நல்ல scope இருக்குன்னு சொன்னாங்க," இதோடு அந்த முடிவு எடுக்கப்பட்டது. இப்போது யோசித்துப் பார்த்தால் 10 வருடங்களுக்கு முன் வீட்டின் கதவின் சட்டத்தில் நின்று பேசிய நான் சற்று அழுத்தமாக chartered accountant தான் படிப்பேன் என்று சொல்லியிருக்கலாம். வெளிநாடு போக பிடிக்கவில்லை இந்தியாவில் தான் இருப்பேன் என்று போராடியிருக்கலாம். Aeronautical வேண்டாம் பா என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இன்று என் வாழ்க்கை வேறு பாதையில் சென்றிருக்கும். முடிவெடுக்கும் தருணத்தில் நாம் அறிவதில்லை அம்முடிவின் தாக்கத்தை.

அப்பா கூறியது போல் வெளிநாட்டில் வேலையும் கிடைத்து ஆனால் அதற்கு முன் பல சங்கடமான விஷயங்கள் நிகந்துவிட்டன. Butterfly effect சுழற்சி தொடங்கிவிட்டது. ஆசையாய் வெளிநாட்டில் வேலை பார்க்காமல் யாரிடமிருந்தோ ஓடி வந்து இங்கு ஜப்பானின் உட்கார்ந்திருக்கிறேன். தூரம் நினைவுகளை மங்கலாக்கும், புது சூழல் புது விஷயங்களை உருவாக்கி பழையனவற்றை புறந்தள்ளும், தனிமை தன்னிலையை மறக்கடிக்கச் செய்யும் என்று எதிர்பார்த்து ப்ளைட் ஏறினேன்.

இவ்விரு வருடங்களில் கற்றுக்கொண்டது தனிமை மறக்க விரும்பும் விஷயங்களையே மனதில் உள்ளடக்கும், மீண்டும் மீண்டும் அசைபோட வைக்கும் என்பதை. தூரத்தை எண்ணங்கள் ஒரு கணத்தில் கடந்து மனதை கனக்க வைக்கும். ஊருக்கு போகும் திடம் என்னிடத்தில் இல்லை. எதையும் புரிந்துக்கொள்ளாமல் ஊருக்கு வர சொல்லி நச்சரிக்கும் தாயை சொல்லி குற்றமில்லை, அன்பின் மிகுதியை வெளிப்படுத்துபவர்களுக்கு பொறுமை எளிதல்ல.

"Broken things have sharp edges. நான் தனியா இருந்தால் தான் என் அன்புக்குரியவங்களின் மனதைக் காயப்படுத்தாம இருக்கமுடியும். இந்த தூரம் அவசியம்." அம்மாவின் முகம் மனதிலிருந்து மறைந்தது.

[வாசகர்கள் நீங்க கொஞ்சம் சின்ன வயசா இருக்கீங்க, the amount of pain and regret someone has, I dont think you will understand this character and his story. But I continue writing for myself. ]

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro