27. ஜொலித்த இரவு - 2

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

(ராஜின் இருண்ட இரவுக்கு கொஞ்சம் ஒளி சேர்க்க ஆசை. )

சில மாதங்களாய் தூசி திரட்டிக்கொண்டிருந்த கருப்பு பேண்டையும் வெள்ளை சட்டையையும் அலமாரியிலிருந்து வெளியில் எடுத்து வெயிலுக்குக் காட்டினேன். நீ சென்னைக்கு வந்ததன் காரணத்தை மறந்துவிட்டாயா என அந்த கருப்பு பேண்ட் கேட்டது. வொர்க் ஷாப் வேலை உடலை வருத்தியத்தால் என் கனவுகளை பற்றி யோசிக்கக்கூட சக்தியின்றி அவற்றை பின்னுக்கு தள்ளிவிட்டேன்.  நல்ல மனிதர்களின் உதவி கிட்டியது நான் செய்த புண்ணியமோ என் தாய் மஹாவின் பிராத்தனையோ, அவன் அறிவான்.

தண்ணி தெளித்து சட்டை பேண்ட்டை அயர்ன் செய்து அதைப் போட்டுக்கொண்டு அதிகாலையில் ஹோண்டா கம்பெனியின் வாசலில் வந்து நின்றேன். பின் இருபது நிமிடங்களில் மேனேஜர் ஆபீஸ் கதவின் முன் நின்றேன். உள்ளே நாற்பது வயதுடைய  ஓர் ஆண்  கால் மேல் கால் போட்டு  மேசைக்கு பின்னால் அமர்ந்திருந்தார். என்னை ஏறெடுத்துப் பார்த்தார்.  பெயர் கேட்டார். நான் ரிஸூம்(resume) fileஐ நீட்டியபோது வேண்டாமென கைக்காட்டினார். இப்படி தான் அமர்ந்திருப்பவர் நிற்பவனை எகத்தாளமாய் பார்ப்பாரோ? எனக்கு என்ன தெரியும். பல முறை அப்பிளை(apply) செய்தும் இண்டர்வியூ கிடைத்தது இந்த முதல் இடத்தில் தானே. வாயைப் பொத்திக்கொண்டு வேலைக் கிடைத்தால் போதும் என மண்டைக்குத் தோன்றியது.

ஆனால் என் எதிர்பார்ப்பை முறியடிக்கும் வண்ணம் அவர் நாற்காலியிருந்து எழுந்து மேசைக்கு முன்னாள் வந்து நின்றார்.

"முன்னாடி நிற்பது மேனேஜரா இருந்தாலும் ஹோண்டா கம்பெனி ஓனரா இருந்தாலும் கான்பிடண்ட்(confident) ஆ ஹேண்ட் ஷேக்(handshake) பண்ணனும்," என சொல்லி கையை நீட்டினார்.

உடனே  அவர் கையை வாங்கி குலுக்கினேன். "சாரி சார்."

"இது தப்பு இல்ல. அறியாமை." 

எனக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. 

"ok. நாளைலேர்ந்து வேலைக்கு வா. ஒழுங்கா வேலைக்கு வரல, வேலைப் பார்க்கல நு சூபர்வைஸர்(supervisor) புகார் செஞ்சா வேலைய விட்டு தூக்கிடுவேன். எவ்வளவு லட்சியம் இருக்கோ அந்த அளவுக்கு கத்துக்கிட்டு வளரலாம். அத விட்டுட்டு அப்படியே காலத்தை உருட்டலாம், தப்பில்ல. ஆனா எதற்கு சம்பளம் தருகிறோமோ அந்த வேலை நடக்கனும். வெளிய செகிரிடரி (secretary) கிட்ட அப்பாய்ண்ட்மெண்ட்(appointment) லெட்டர் வாங்கிக்க. நாளைக்கு அவங்கள வந்து பாரு சூபர்வைஸரை காட்டுவாங்க."

"தாங்க்ஸ் சார்," என சொல்லி இப்போது நான் முதலில் என் கையை நீட்டினேன்.

"you learn fast," என சிரித்துவிட்டு என் கையைக் குலுக்கினார்.

நாளையிலிருந்து வேலைக்கு வரவும் என்ற இனிய சொற்களைக் கேட்டபின் கடந்த 7 மாதங்களாய் சஞ்சலமைடைந்திருந்த என் மனம் இப்போது அமைதிக்கொண்டது. விழவிருக்கும் ஒரு மாமரத்தை தோளில் சுமந்துக்கொண்டிருந்த மாதிரியும் இப்போது அம்மரத்தை நேராய் நிற்கவைத்துவிட்டது போலவும் ஓர் உணர்வு. பைக் வொர்க்ஷாப்பில் வேலை செய்வதை  தயங்கி  கூச்சத்துடன் அம்மாவிடம் மட்டும் கூறியிருந்தேன். என் தன்மானத்தை காயப்படுத்தாமல் எதுவும் துருவி கேட்காமல் உடம்ப பார்த்துக்கடா என கரிசணத்துடன் போனை வைத்தாள். இப்பொழுதே போன் பூத் கு சென்று தஞ்சாவூருக்கு ஒரு போன் செய்யவேண்டும் என உற்சாகம் தொற்றிக்கொண்டது!

அதோடு வினோதினிக்கும் ஒரு போன் செய்து விஷயத்தை சொல்லலாமா என கேள்வி எழுந்தது. ஆம், வினோதினியிடம் வேலைத் தேடுகிறேன் என்ற பொய்யை மட்டுமே கூறி பல மாதங்களைத் தள்ளிவிட்டேன். நான்கு மாதமாய் பார்த்த பைக் வொர்க்ஷாப் வேலையைப் பற்றி வாய் திறக்கவில்லை. அதுவும் வொர்க்ஷாப் வேலை முடிந்ததும் போன் போட்டு பேசக்கூட நேரமில்லை. இந்த நேரப்பற்றாக்குறையை வைத்து எனக்கும் வினோதினிக்கும் இடையில் எந்த சண்டையும் இல்லை என என்னை நானே ஏமாற்றி கொண்டிருந்தேன். பேசினால் தானே சண்டை வருவதற்கு.

 ஆனால் இப்பொழுது  உச்சித்தலையில் ஆம்லெட் போடும் அளவுக்கு வெயில் அடிக்கும் காலை நேரம். இன்று முழுக்க வெட்டியாய் இருக்கபோகிறோம் எனவே எல்லோருக்கும் ஒரு போன் போட்டு தகவலைத் தெரிவிக்கலாம் என முடிவுக்கு வந்து ஒரு போன் பூத்தை தேடி கால்கள் நடந்தன.

போன் பூத் களுக்காகவே தத்துக் கொடுக்கப்பட்ட டீ கடை ஒன்றில் ஒரு டீயை குடித்துவிட்டு போன் receiver ஐ எடுத்தேன். தஞ்சாவூருக்கு நல்ல செய்தி சொல்லிவிட்டு எல்லோரையும் நலன் விசாரித்தேன். மிச்சம் மீதி பலகையை வைத்து அப்பா நாற்காலி செய்வதும் அம்மா எப்பொழுதும் போல் சமைப்பதும் என்னோட இடத்தை கிரிக்கெட் கிரவுண்ட் இல் தம்பி நிரப்புவதுமாய் வீட்டில் இருந்தார்கள்.

அதன் பின் வினோதினிக்கு போன் செய்தேன். ரெண்டு ரிங் அடித்தது தான் தாமதம் உடனே ஒரு குரல் கேள்விக் கேட்டது, "ஹலோ. வெங்கட்ராமன் ஐயா வீடு ங்க. யார் கிட்ட பேசணும்னு சொன்னா கூட்டிட்டு வருவேனுங்க."

அச்சச்சோ, நம்ம நல்ல நேரம் வேலைக்காரன் போனை எடுத்தான். இப்படி அவள் வீட்டில் மாட்டிக்காமல் இருக்க  வினோதினி போன் அடிப்பதும் நான் எடுப்பதுமாய் ஒரு rule கடைப்பிடித்தோம். ஆனால் சந்தோஷத்தில் மூளை வேலை செய்யவில்லை, யோசிக்காமல் நம்பரை அமுக்கிவிட்டேன்.

"ஹ..ஹ...ஹலோ... பேசுற...பேசுறது கேட்குதா? ஹ..ஹலோ.."  நெருப்பு சுட்டதுபோல் உடனே போனை வைத்தேன்.

"காலை 11 மணிக்கு வினோதினி எங்க இருப்பா?" நினைத்தவுடனே பர்ஸ்ஸிலிருந்து ஒரு துண்டு சீட்டை எடுக்க அதில் கிறுக்கி இருந்த வினோதினியின் ஆபீஸ் நம்பர் என்னை தூண்டியது.

நால்வருக்கு  நடுவில் ஒரு போன் என அமைந்திருந்ததால் ஆபீஸ் போனை எவன் எடுப்பாநோ? காலையில் வேலைக் கொடுத்த கடவுளே, தொடர்ந்து என்மேல் கரிசணத்தைப் பொழுயும் ஓய்!

"ஹலோ. KKP Engineers."

நம்ம ஆளோட குரல் நமக்கு தெரியாதா? 

"வினோ"

மறுமுனையில் குரல் கண்டுக்கொண்ட வினோ அதிர்ச்சியில் மௌனமானாள்.

"பேசலாமா?"

அவளின் மூச்சுக்காற்று மட்டும் ஒலித்தது. 

"வேலை கிடைச்சுச்சு அதான் சொல்லனும்னு போன் பண்ணேன்."

"கன்கிரேட்ஸ்! எப்போ? Shhhh" குதூகலத்தில் தன் இடத்தை மறந்தவள் உடனே ஷ்ஷ்ஷ் என்றாள்.

"நீதாண்டி சைலண்ட் ஆ இருக்கனும். நா இங்க STD பூத்ல சத்தமா பேசலாம். ஐ லவ் யூயூயூயூ!!!!" என கத்தினேன்.

"ம்ம்ம்" சிரிப்பு பல மைல் தாண்டி என்னை வந்து சேர்ந்தது

"ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தான் கிடைச்சது. உன் கிட்ட தான் முதல்ல சொல்றேன்." அம்மாவை கணக்கில் சேர்க்க தேவையில்லை.

"கேட்க எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா! எனக்கு தெரியும் நீ succeed பண்ணுவன்னு."

"அப்புறம்  வினு குட்டி, கடலை போடலாமா இல்ல நைட் பேசுவோமா?"

"இப்படி ஈஈஈ நு இளிச்சா எல்லாரும் சந்தேகமா பார்ப்பாங்க. நானே அடிக்கிறேன்."

"என்னை நினைச்சி ரொம்ப இளைச்சிருப்ப லஞ்ச் டைம் நல்லா சாப்டு, வச்சிடுறேன்"

"ம்ம்ம்" ம்ம் என்றவள் அங்கு தலையாட்டி இருப்பாள் என எனக்குத் தெரியும். முதன் முறை அவளுடைய ஆபீஸுக்கு கால் செய்தது ஒரு வகையில் அவளின் வேலையை நான் ஏற்றுக்கொண்டதாய் அவளுக்குக் காட்டும் என நம்பினேன்.

பூத் இலிருந்து வெளிய வந்தபோது வெளிர்த்த சூரியன் என் வாழ்க்கையையே வெளிச்சமாக்கியது போல் ஓர் ஆனந்தம். 

------------------------------------------------------------------------------------------------------------------

கதழும் துறைவன்

வாராது அமையினும் அமைக!

சிறியவும் உள ஈண்டு, விலைஞர் கைவளையே

காதலன் வராவிடினும் பரவாயில்லை. வியாபாரிகள் இதைவிட சிறிய வளையல் வைத்திருக்கின்றனர். அதாவது வைரமுத்து பாட்டுல சொல்லுவாரே, 

அன்பு நாதனே, 

நீ அணிந்த மோதிரம் 

வளையலாகவே துரும்பென இளைத்தேன்

------------------------------------------------------------------------------------

I'm so sorry, I pressed publish instead of save. So you read only the first two-third of this chapter. திரும்ப unpublish பண்ணுரதுக்குள்ள 5 votes, 5 comments in 2 mins! நன்றி!!!! I'm so happy!

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro