அவனவள்23

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அவ(ன்)ள் 23

கிருஷ்ணாவின் வார்த்தைகள் அவளை அமைதிப்படுத்தினாலும்  அவளால்  அந்த அறைக்குள் இயல்பாக  இருக்க முடியவில்லை…  முச்சு முட்டியது… அவன் கூறியதும் மறுவார்த்தை பேசாது மெத்தையில் படுத்துவிட்டாளே ஒழிய  தூக்கம் என்ற ஒன்று அவளை விட்டு தொலை தூரம் ஓடியிருந்தது…. அவன் கூறியது அனைத்துமே ஏற்றுக்கொள்ள கூடியதுதான் ஆனால் அவள் மனம் தான் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது…  இரவு வெகு நேரம் அழுகையில் கரைந்தவளது விழிகள் விடிவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் தான் உறக்கத்தை தழுவி இருந்தது.

அலைகடலின் ஆழுத்திலிருந்து அதன் கணம் தாளாமல் மேலெழும்பிய  சூரிய பந்தின் வரவு தன்னில் உலகமே அழகனாதொரு விடியலை சந்தித்திருந்தது, எப்பொழுதும் எழுந்துக்கொள்ளும் நேரமாதலால் கிருஷ்ணாவிற்கும் முழிப்பு தட்டிவிட, மெல்ல விழிகளை திறந்து தன்‌பக்கத்தில் துயில் கொண்ட மனையாளை  பார்த்தான். குளிருக்கு வாகாக இரு கைகளையும் ஒன்றாக சேர்த்து  உடலை குறுக்கி படுத்திருந்தவளின்  வதனம்‌ அவனை வெகுவாக ஈர்த்தது.  முடிகற்றைகள் கன்னத்தில் தவழ்ந்து விளையாட அறையில் ஊடுருவிய மெல்லிய வெளிச்சத்தில் கைதேர்ந்த கலைஞரின்  ஓவியமாய் அவனை கவர்ந்தாள் அவனின் ஒவிய பாவை.

மெல்ல முகத்தில் தவழ்ந்திருந்த  கார்கூந்தலை விலக்கியவன் கண்களுக்கு  கண்ணீர் கோடுகள் தப்பாமல் சிக்கியது. கன்னத்தில் படிந்திருந்த கண்ணீர் கோடுகளை  வைத்து இரவு முழுவதும் அழுகையில் கரைந்திருக்கிறாள் என்று அறிந்துக் கொண்டவனுக்கு மனம் வெகுவாக கனத்து போனது. எல்லாம் மாற வேண்டும் என் தேவதை என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்  என்ற எண்ணத்துடன்  தன் தேவதையின் பிறை நெற்றியில் பட்டும் படாமலும் முத்தம் வைத்தான் கிருஷ்ணா. அவன் அதரங்கள் தந்த ஈரத்தில் பிருந்தாவின் செவ்விதழ்கள்  அவளையும் அறியாது  மெல்லிய சிரிப்பில் வளைந்தது…

அதே மையலுடனே மனைவியைக் கண்டவன் மனதில் நேத்து "என்னென்ன பேசிட்டடி…  இப்போ ஒரு குழந்தை மாதிரி தூங்குறியேடி என் ஸ்வீட் பொண்டாட்டி… உன் மனசை எப்போ திறந்து என்னை ஏத்துக்கப்போற..... என்னை எப்போ நம்பப்போற| என்று தன் மனதோடு அவளிடம் பேசி மெல்ல தலையை வருடிவிட்டவன் கன்னத்தில் கை வைத்து கொஞ்சினான். அவன் ஸ்பரிசம் பட்டதலோ என்னவோ  இன்னும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள் பிருந்தா.

அவள் உறக்கம் கலையாமல் இருக்க சத்தமில்லாது மெத்தையிலிருந்து எழுந்தவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு தலையை துவட்டியபடி குளியலறையில் இருந்து வெளியே வந்தான். அதற்குள் அன்னையிடமிருந்து அழைப்பு வந்துவிட எங்கே சத்தம் கேட்டால் பிருந்தா எழுந்துவிடுவாளோ என்று அவசர அவசரமாக செல்லை எடுத்து ஆன்  செய்து காதில் பொருத்தி "ஹலோ… என்னம்மா?" என்றான் சத்தமின்றி மெதுவாகவே

"கிருஷ்ணா... எழுந்துட்டியா…?"

"எழுந்துட்டேன் மா சொல்லுங்க..." என்றான் துண்டால் தலையை துவட்டியபடியே.

"இல்லப்பா டைம் ஆச்சி... நம்ம முறைப்படி காலையில குலதெய்வ கோவிலுககு போயிட்டு வரனும்... அதான் நீ எழுந்துட்டியான்னு போன் பண்ணேன்" என்று செண்பகம் நிலைமையை விளக்கியதும்

"சரிமா…  எத்தனை மணிக்கும்மா…போகனும்?".

"ஒரு ஒன்பது மணிக்கு  போகலாம் பா நம்மக்கூட விஷ்ணு வருவான் மகேஷுக்கு உடம்பு முடியல அதனால அலைச்சல் வேண்டாம்... அண்ணாவும் மகேஷுக்கு துணையா இருக்கேன்னு சொல்லிட்டாரு என்றவர் பிருந்தா எழுந்துட்டாளாப்பா?" என்றார்.

"இல்லமா இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும் நானே கூட்டிட்டு வரேன்…" என்றான் அன்னையிடம்  செண்பகத்திற்கு தான் தெரியுமே அவள் மனநிலை என்னவென்று அதனாலேயே பிருந்தாவை பற்றி மகனிடம் வினவி இருந்தார்.

"சரிப்பா நீ உள்ளயே இரு வெளியே இன்னும் நம்ம சொந்தக்காரங்க இருக்காங்க… நீ மட்டும் வந்தா ஏதாவது பேசுவாங்க...அதனால  உங்க அறைக்கு நானே காபிய கொண்டு வரேன்" என்றவர் போனை வைத்துவிட பிருந்தாவை பற்றிய அன்னையின் புரிதலில் சற்று நிம்மதி ஆகிட கோவிலுக்கு செல்ல தயரானான்.

மணி 8 கடந்துவிட கோவிலுக்கு செல்ல வேண்டுமே என்ற எண்ணத்தில் பிருந்தாவை எழுப்ப மெத்தையில் அவளருகில் அமர்ந்தான். இன்னும் அதே நிலையில் தான் தூங்கிக்கொண்டு இருந்தாள் பிருந்தா. அவள் கன்னத்தில் கை வைத்து "பிந்து பிந்து மா" என்று  தட்டி எழுப்பிட கன்னத்தை தொட்ட அவன் கரங்களை பிடித்துக் கொண்டு மீண்டும் தன்  தூக்கத்தை தொடர்ந்தாள் பிருந்தா.

அவளுக்கு வாகாக தானும் மெத்தையில் சரிந்து அவளை பார்த்தபடி படுத்தவன் "ஸ்வீட் பொண்டாட்டி என்னை டெம்ப்ட் பண்றடி" என்று செல்லமாய் அலுத்துக் கொண்டு எழுந்துக்கொள்ள மனமில்லாமல் அவளையே  ரசித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.

கிருஷ்ணாவின் சூடான மூச்சிக்காற்று அவள் மேனியை உரசிட மெல்ல விழிகளை திறந்தவளுக்கு வெகு அருகில் அவன் பிம்பம் தெரியவும் சட்டென எழுந்து அமர முயற்சித்தவள், அவன் கரங்கள் தன் கரங்களுக்குள் சிக்கி கொண்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டு விழித்து பதற்றத்துடன் எழுந்து நின்றவள் "சாரி சாரி" என்றாள் மன்னிப்பு கேட்கும் விதமாக

அவள் பதற்றமாக எழுந்து "சாரி சாரி" என்று கூறவும் "ஹேய் பொண்டாட்டி... கூல் கூல்... என்ன இப்படி என்னை பயம்புறுத்துற?" என்றான் சிரித்தபடியே… அந்த மாயக் கண்ணனின் மோகன சிரிப்பு அவளை இம்சிக்க

அவனை பார்க்க தயக்கம் கொண்டு "இல்ல அது வந்து...  நான் உங்க கைய சாரி தெரியாம" என்றாள் உள்சென்ற குரலில்.

உப் என்று ஆயாசம் நிறைந்த காற்றை வெளியேற்றியவன் … "அதான நான் கூட  என் கை உன் மேல பட்டதால ஏதாவது உனக்கு ஆகிடுச்சோன்னு பயந்துட்டேன்" என்றான் கிண்டலாக

அவன் கிண்டலில் சட்டென நிமிர்ந்து அவனை கனலாய் பார்த்தவளை தன் வசிகரிக்கும் சிரிப்புடன் பார்த்தவன் "பின்ன என்ன ஏதோ தீயை தொட்ட மாதிரி இப்படி  ரியாக்ட் பண்ணா நான் என்ன பண்றது" என்றான் சாதரணமாக தோள்களை குலுக்கி.

"நீங்க… ரொம்ப கிண்டல் பண்றிங்க கிருஷ்ணா… உங்களை சட்டுன்னு அவ்வளவு கிட்ட பாக்கவும் பயந்துட்டேன்…  அதுக்கு போய் இப்படி கிண்டல் பண்றிங்களே?"..  என்றாள் சற்று கோபமுடன்.

"நல்ல பயந்த போ…" என்று சிரித்தவன் அவள் கோப முகம் கண்டு "சரி ஓகே.. ஓகே… கிண்டல் பண்ணல… அம்மா கோவிலுக்கு போகனும்னு சென்னாங்க அதான் எழுப்பிட்டேன்… சாரி டா" என்றான் முகம் சுருக்கி அவளிடம் மன்னிப்பை வேண்ட,

"அய்யோ என்ன கிருஷ்ணா இது... நீங்க போய் சாரியெல்லாம் கேக்குறிங்க...  நானே எழுந்துக்கனும்னு தான் இருந்தேன்… ஆனா முடியல கண்ணெல்லாம் ஓரே எரிச்சல்... கொஞ்ச இருங்க நான் குளிச்சிட்டு வந்துடுறேன்…  என்று இறைஞ்சல் பார்வையுடன் கூறியவள்  தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு குளியளறைக்கு சென்று விட்டாள்.

அவள் இவ்வளவு சகஜமாக பேசியதே பெரிய விஷயம்...  மேலும் அவளை சங்கடம் படுத்தக்கூடாது என்று நினைத்தவன் பிருந்தா தயாராகி வரும் வரை மொட்டை மாடியில் அவளுக்காக காத்திருந்தான்.

….

"ஏன் செண்பா இவ்வளவு நேரம் ஆகுது பொண்ணும் புள்ளையும் கீழ இறங்க காணோமே?" என்று சொந்தங்களில் ஒரு பெண்மணி கேட்கவும்.

"நான் தான் இப்போ வரவேண்டாம்னு சொன்னேன் மதனி வீடு பூர மக்க மனுசாளுங்க  இருக்காங்க பொண்ணும் புள்ளையும் நம்மள பாக்க சங்கடப்படுங்கல்ல" என்று கூறியவர் மற்ற வேலைகளை பார்க்கலானார்.

"அதுவும் சரித்தேன் புதுப்பொண்ணுல வெட்கம் இருக்கத்தானே செய்யும்" என்னும் போதே மாடியில் இருந்து கிருஷ்ணாவும் பிருந்தாவும் ஒன்றாக இறங்கி வந்தனர்.

பாசிநிறத்தில்  கையகள தங்க ஜரிகையிட்ட பட்டுபுடவையில் மிதமான ஒப்பனையில் தங்கவிக்ரகமாக நடந்து வந்தவளை பார்வையால் மெச்சிக்கொண்டார் செண்பகம். "இங்க வாம்மா" என்று மருமகளை அழைத்து திருஷ்டி கழித்து இரண்டு முழம் மல்லிகை சரத்தை கூந்தலில்  சூட்டி,
"போடா போய் ரெண்டு பேரும் பூஜை அறைக்கு போயிட்டு சாமி கும்பிட்டு வாங்க" என்றார் மலர்ந்து முகமாக.

கிருஷ்ணாவிடம் ஒதுக்கத்தை காட்டிய பிருந்தாவால் செண்பகத்திடம் அந்த ஒதுக்கத்தை காட்ட முடியவில்லை... "சரிங்க அத்தை" என்றவள் அவர் சொற்படியே விளக்கேற்றி சாமி கும்பிட்டவர்களை அமரவைத்து உணவை பறிமாறினர்.
அதற்குள் விஷ்ணுவும் வந்துவிட சிறு கலாட்டவுடன் அந்த இடம் காட்சியளித்தது.

….

பிருந்தா கிருஷ்ணா தம்பதியருக்கு திருமணமாகி ஓரிரு வாரம் கடந்து இருந்தது. பெரிதாக முன்னேற்றம் இல்லை என்ற போதும் வேண்டுமென்றே பேச்சு கொடுத்து அவளை தனக்குள்ளே முடிங்கிக் கொள்ளாது  சரளமாக பேச வைத்திருந்தான்.  ஒவ்வொன்றிற்கும் அவளை தேடி தன்னை உணர வைத்தான்.

அன்றும் அப்படித்தான் மருத்தவமனையில் அவன் பார்க்க வேண்டிய வேலைகளை எல்லாம் வேறு ஒருவரிடம் ஒப்படித்துவிட்டு ஒரு வாரக்காலம் விடுமுறையுடன் வீட்டிற்கு வந்த கிருஷ்ணாவின் விழிகள் காதலுடன் மனைவியை தேடியது.

"பிந்து... பிந்து மா" என்றபடி தங்கள் அறைக்குள் நுழைந்தவன் சொன்ன செய்தியில் "இப்போ எதுக்கு இங்கெல்லாம்... இதுல எனக்கு சுத்தமா விருப்பமே இல்ல கிருஷ்ணா…" என்றாள் முடிவாக

"ஏன் உன் பிரெண்டு கூட இங்க எல்லாம் போக்கூடாதுன்னு ஏதாவது ருல்ஸ் போட்டு வைச்சி இருக்கியா பிந்துமா" என்றான் புருவம் உயர்த்தி

"பச் என்று சலித்தவள் அப்படியெல்லாம் எதுவும் இல்ல" என்றாள் முறைப்புடனே அவளும் என்ன தான் செய்வாள் ஒவ்வொன்றை மறுக்கும் போதும் பிரெண்டு கூட போக மாட்டிய... பிரெண்டுக்காக வர மாட்டியா... எனக்காக செய்ய மாட்டியா" என்று ஒவ்வொரு முறையும் அவளை கிடுக்கு பிடி போடவும் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொள்ள வேண்டி வர, இப்போதும் அதே செயல்முறையை கையிலடுத்த கிருஷ்ணாவை அவளால் முறைக்கத்தான் முடிந்தது.

"அப்புறம் என்ன…  நாளைக்கு விடியல் காலை 5 மணிக்கு  ஏற்ப்போர்ட்ல இருக்கனும் இந்தா ப்ளைட் டிக்கெட் என்று அவளிடம் நீட்டியவன் அவளை பார்ப்பதற்கு வாகாக கட்டிலில் சரிந்து படுத்து அவளையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான்.

அவன் பார்வை பெண்ணவளை ஊசியாய் துளைக்க   அக்கிருந்து நழுவ எண்ணம் கொண்டு விலகியவளின் செம்மாதுளை அதரங்கள் "ஆனாலும் ரொம்ப படுத்துறிங்க கிருஷ்ணா…" என்று முனுமுனுத்தபடி அவன் கொடுத்த டிக்கெட்டை எடுத்து பத்திரப்படுத்தினாள் பிருந்தா.

மறுநாளே சுவிட்சர்லாந்த் பயணமாயினர் இளம் தம்பதியினர். மனம் முழுக்க அவள் மேல் கொள்ளை காதல் இருந்தாலும் பிருந்தாவின் மனம் மாறும் வரை காத்திருப்பேன் என்று சொன்னதை அங்கேயும் பின்பற்றினான் கிருஷ்ணா. மனைவி என்ற உரிமை இருந்தும் அவன் கன்னியத்தோடே நடந்துக்கெண்டான். ஆடவனின்  ஒவ்வொரு செயலிலும் அவனுடைய காதலை உணர்ந்தாள் பிருந்தா.

கிருஷ்ணாவின் அதிரடியான செயல்களும் பேச்சுக்களும் அவளிடம் சில மாற்றங்களைக்  கொண்டு வந்திருந்தது என்னவோ உண்மையே... அதில் ஒன்று அந்த வீட்டில் இயல்பாய் வலம் வருவது.

ஆரம்பத்தில் ஒரு சில தயக்கங்கள் அவளை ஒதுங்க வைத்தாலும் செண்பகம் அவளை அனைத்திலும் ஈடுபட வைத்தார்… இந்த வீட்டில் தானும் ஒருத்தி என்ற உணர்வு வர உரிமையாக வலம் வர ஆரம்பித்தாள். நாதனும் மருமகளிடம்  சாதாரணமாகவே பாசத்தை காண்பிக்க "அத்தை மாமா" என்று உரிமையுடன் அழைத்தாள். கிருஷ்ணாவிடம் மட்டும் ஏதோ ஒன்று‌ அவளை தடுத்தது. கணவன் என்று கருத்தில் நிறைந்தாலும் மனம் ஏனோ அவனை தள்ளி நிறுத்தி, அவனுக்கு நியாயம் செய்யவில்லை என்று மனதின்‌ ஓரம்‌ ஒரு குரல் ஒலித்துக் கொண்டே‌ இருக்கும்…‌  காலசக்கரத்தின் சுழற்சியில் நாட்கள் வேகமாக நகர்ந்துக் கொண்டிருந்தது.

Innum one or two uds la story finish vidum friends...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro