அவளைக் காதலித்ததில்லை

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பைக் அவள் ஊரின் எல்லையை நெருங்கியபோது, "இங்க எங்க வீட்டு தோப்பு ஒன்னு இருக்கு. அங்க நிறுத்துங்களேன்," என்றாள். ஓரிரு முறை இங்கு வந்திருந்ததால் இடத்தைக் கண்டுபிடித்து மூடப்பட்டிருந்த இரும்பு gateஇன் முன்னாள் பைக்கை நிறுத்தினேன்.

"ஏன் இங்க நிறுத்த சொன்ன?" அவள் பதிலளிக்காமல் பைக்கிலிருந்து இறங்கி கேட் இன் அருகில் நின்றாள்.

"ஒருத்தர் இறந்ததும் ஏன் மரம் வைக்கிறாங்கன்னு தெரியுமா மித்திரன்?"

அவளருகில் வந்து நின்றேன் குழப்பமாய், "மரம் வைக்கிறது நல்லது, அவர்களின் இடத்தில் அவர்கள் நினைவாக அது வளரும். அதான் சொல்லுவாங்களே,
தாவரங்கள் நல்லவை.
சண்டையிடாதவை
மனதுக்கு நெருக்கமானவை
மௌனத்தால் சிரிப்பவை
துக்கத்தில் துவளாதவை
இன்பத்தில் மகிழாதாவை
எப்போதோ  ஊற்றிய நீரிக்கு இலைகளால் பூக்களால் கனிகளால் நன்றி சொல்பவை 
பல நேரங்களில் மனிதர்களைவிட தாவரங்கள் நல்லவை"

"தாவரங்கள் நல்லவை. அதோடு குறிப்பாக நினைவஞ்சலி மரங்கள் ஊன்றப்பட்டப்பின் அவை கவனிப்பின்றி தானாக வளரும். என்னை பொருத்த்வரை நம் அன்புக்குரியவர்கள் நம்மை விட்டு பிரிந்ததும் நம்ம independentஆ வாழ கத்துக்கனும் இந்த மரங்கள் போல."

அவள் தன் ஆள்காட்டி விரலால் இருளோடு ஒட்டியிருந்த மூன்று கொய்யா மரங்களைக் கைக்காட்டினாள். "பெரிய மரம் என் பாட்டி தவறியதற்கு நான் நட்டது.  பக்கத்தில்அந்த சின்ன மரம் நித்தினுக்காக வச்சது."

நான் சொல்வதறியாது திகைத்தேன்.
உணர்ச்சியற்ற குரலில் அவள் தொடர்ந்தாள், "ஏன் நித்தினை பத்தி என்கிட்ட சொல்லலன்னு கேட்டீங்களே அதற்கு இதான் பதில். என்னைப் பொருத்தவரை நான் காதலித்த நித்தின் விபத்தில் இறந்துட்டான். நான் எதிர்பார்த்தபடியே நித்தினும் என்னை அந்நியராக தான் நடத்தினார். நீங்க காட்டிய உங்க நண்பன் நித்தின் வேறு. பழைய விஷயங்களை நீங்க தவறாக புரிந்துக்கொண்டு இப்போ நம்ம வாழுற வாழ்க்கையைப் பாதிக்கும்ன்ற பயத்துல மறைச்சுட்டேன். பயந்தமாதிரியே நடந்துட்டு."

"துரோகம் இழைத்தவர்களை மன்னிப்பதும் மறப்பதும் சாத்தியமல்ல" என்று துயரத்தில் நித்தின் சொன்னது இப்போது ஒலித்தது.

"இல்லாததைப் பற்றி சொல்ல எதுவும் இல்லை மித்திரன். நித்தின் இறந்துட்டான் என்னை பொருத்தவரை. 6 மாசத்துக்கு முன்னாடி கோயிலில் சொல்லிட்டேன்."

மறைத்ததற்கு காரணம் புரிந்தாலும் அவளின் செய்கைகளுக்கு இன்னும் திருப்திகரமான பதில் வரவில்லை. மனம் இன்னும் சலனமடைந்திருந்தது. மனோஜின், சதீஷ் என மற்றவர்களின் கேள்விகள் மண்டையைக் குடைந்துக்கொண்டே இருந்தன.

கேட்டுவிட்டேன், "ஆனாலும் கால் இழந்ததும் அவனை விட்டுட்டு ஓடிய கல் நெஞ்சுக்காரி  தான நீ? காதல் கஷ்டத்தைக் கண்டதும் பறந்துட்டு இல்ல? எதிர்காலத்துல எனக்கு ஏதாவது நடந்தா நீ கூட இருப்பியா?"

இருண்ட வானத்தில் முகில்களின் பாதையை பின்தொடர்ந்த கண்கள் இப்போது திரும்பி என்னை நோக்கின, "நான் கஷ்டக்காலத்துல  விட்டுட்டு போயடுவேனா மித்திரன்?"

அவளின் கேள்வியில்  என் தொண்டை வரண்டு பேச்சு வரவில்லை.

"இந்த விஷயம் நித்தினுக்குக்கூட தெரியாது. அவ்ளோ பெரிய நம்பிக்கை துரோகி இல்ல நான். நித்தினோட விபத்துக்கு பிறகு அவனோட அம்மாவுக்கு எங்களோட காதலைப் பத்தி தெரிய வந்தது. நித்தின் அவனோட காதலை விட்டுக்கொடுக்கமாட்டான்னு தெரிஞ்சு என்கிட்ட பேசுனாங்க, இல்ல மிரட்டுனாங்க. நான் அவனோட வாழ்க்கையிலிருந்து விலகாட்டி அவனை சிங்கப்பூருக்கு treatmentகு கூட்டிட்டு போக மாட்டேன்னு மிரட்டுனாங்க. வாழ்க்கை முழுக்க bed-riddenஆ நித்தின் வாழ்வதை என்னால எப்படி பார்க்க முடியும்? treatment நடந்தாலாவது ஓரளவு அவனால சுயமா வாழமுடியும். அதான் நீங்களே பார்த்தீங்களே, நம்ம நாட்டுல ஊனமா இருந்தா எப்படி வேடிக்கை பொருளா பார்க்கிறாங்கன்னு. அவன் UK, US நு போனா அங்க கொஞ்சமாவாது சுயமரியாதை உடன் வாழ்வான். தன் காதலி உழைத்து அவன் படுத்த படுக்கையா தன் வாழ்நாளை கடப்பது ஒரு ஆணுக்கு எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா?"

கண்களிலிருந்து எட்டிப்பார்த்த கண்ணீரை புறங்கையால் அவசரமாக துடைத்தாள். "இப்போ கூட நித்தின் என் மேல் இருக்கும் விரக்தியில், உங்களோடு நான் சந்தோஷமா வாழ்கிறதை பார்த்துட்டு திரும்ப UKபோய் ஏதோ ஒரு பெண்ணை திருமணம் செய்து அவன் வாழ்க்கையின் சந்தோஷங்களைத் திரும்பப் பெற வாய்ப்புண்டு. நான் நித்தின் என்கூடயே இருக்கட்டும்னு சுயநலமா யோசிச்சிருந்தா இந்நேரம் காதல் வாழ்க்கை நரகமாயிருக்கும். நம் அன்புக்குரியவர்கள் மேல் அதிக அன்பு வைத்திருந்தால் அவங்க நல்லதுக்காக அவங்கள விட்டுறணும்."

அணையை மீறும் வெள்ளமாய் கன்னங்களை ஈரமாக்கியது அவளின் கண்ணீர். "நிரந்தரமில்லா காதலையே இவ்வளவு நேசித்த நான் என் கணவர்மேல் அதைவிட எல்லையற்ற அன்பு வைத்திருக்கிறேன் மித்திரன்."

இத்தனை மணி நேரமாய் அவளை தொட கூசிய கரங்கள் இப்போது அவளை அணைத்தன. இவ்விரு வருடமாய் அவளை நான் காதலித்தல்லை என்பது தான் உண்மை. அத்தனை அன்பையும் காதலையும் உணர்த்திவிட்டாள் அவள். என்னுடன் வாழும் வாழ்க்கையை முக்கியமாய் கருதி அவளின் எல்லா சோகத்தையும் பொத்திவைத்தவள்.

"I am sorry and I love you," எனக்கு தெரிந்த ஒரே பாணியில் மன்னிப்பு கேட்டுவிட்டேன்.

"ம்ம்ம்"

"ம்ம்ம் தான? மன்னிச்சிட்டேன்னு ஏதாவது..?"

"முடியாது! நான் இன்னும் உங்கமேல கோபமா இருக்கேன்." போலி கோபத்தில் முறைத்தாள்.

ஐந்து மாதத்தின் எல்லா முத்தங்களையும் கொஞ்சல்களையும் அவ்விரவில் கொட்டிவிட வேண்டும் என ஓர் ஆசை.

[தாவரங்கள் நல்லவை- வைரமுத்துவின் கவிதை
any additional chapters? Read the next chapter to find out;) ]

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro