நட்பு

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

காலடி தடங்கள் என் முன் வந்து நின்றன. குடிபோதையில் வார்த்தைகள் உளறின, "என்ன பாஸ், நைட் நேரம் பார்த்து நடு ரோட்டில் நிக்குறீங்க?"

பதற்றத்தை  வெளியில் காட்டிக்கொள்ளாமல் பதிலளித்தேன், "பெட்ரோல் முடிஞ்சுட்டு அதான்."

"பெட்ரோல் முடியப்போறது கூடவா தெரியாம highway இல் வண்டி ஓட்டிட்டு வந்தீங்க?" அந்த ஆள் என் முகத்தை உற்று பார்த்தான்.

"வீட்டுக்கு போனா வைப் கூட சண்ட போடனும்னு இங்கயே ரோட்டுல உட்காரலாம்னு முடிவு பண்ணிட்டேன்," பாதி உண்மையை கிண்டலாய் சொன்னேன் . அவனும் பதிலுக்கு சிரித்தான். பிறகு தன் நண்பனைக் கூப்பிட்டு அவர்களின் பைக்கிலிருந்து பெட்றோல் கொஞ்சத்தை என் வண்டியில் ஊற்ற சொன்னான்.
"தாங்க்ஸ்!" இப்போது casualஆக பேச ஆரம்பித்தேன். அப்போது அவன் சட்டைப் பையில் இருந்த சிகரெட்டை பாக்கெட்டைப் பார்த்ததும் ஒரு spark.

"சிகரெட் கிடைக்குமா?"

ஏறெடுத்து பார்த்துவிட்டு பாக்கெட்டிலிருந்து ஒன்றை எடுத்து நீட்டினான்.

"இல்ல, ஒன்னு வேண்டாம். ஒரு முழு pack வேணும்." என்று சொல்லிவிட்டு கார் ஜன்னலில் கை விட்டு walletஐ எடுத்து இருந்த நூறு ரூபாய் நோட்டை நீட்டினேன். அதை வாங்கிக்கொண்டு ஒரு packஐயும் நீட்டினான்.

"அப்டியே lighterஉம் தரலாம் பாஸ்," பழக்கத்தை ஒழித்து வருடங்கலானதால் பத்த வைக்க ஒன்றும் இல்லை. இந்த பத்து நிமிடங்களில் அவன் நண்பன் பெட்ரோல் போட அங்கிருந்து கிளம்ப ஆயுத்தமானேன். மீண்டும் தன் நண்பனின் பைக்கில் ஏறியவன் திரும்பி பார்த்தான், "சார், நாங்களாவது போதைல வண்டி ஓட்டிட்டு போறோம். நீங்க துக்கத்துல அதுவும்தனியா போறீங்க. பார்த்து போங்க சார்," என்று எச்சரித்துவிட்டு பைக் கிளம்பியது. 

அவன் சென்றபின் கார் ஸ்டீரிங் ஒரு கையிலும் சிகரெட் ஒரு கையிலும் என பனி இறங்கிய இரவில் இன்னும் புகைமூட்டம் அதிகரித்தது. முதல் சிகரெட்டை பத்த வைத்ததும் ஆள்காட்டி விரல் நடுங்கியது ஆனால் அடுத்த சிகரெட்டில் பழக்கமானது.ஆனால் அவன் சொன்னது நியாபகம் வரவே எண்ணங்கள் என் நண்பனை நோக்கி சென்றன, மனோஜ். பிரச்சனையின் நடுவில் இருந்தாலும் இந்த புதிய பிரச்சனையை யாரிடம் நான் பகிர்ந்துக்கொள்வது. நட்பு புரிந்துக்கொள்ளும் என்று என் குழப்பங்களை ஒதுக்கிவிட்டு வண்டியை அவன் ரூமை நோக்கி ஓட்டினேன்.

bachelors ரூம் என்பதால் காலிங் பெல்லுக்கு பதிலாக கதவை தான் தட்டினேன். மனோஜ் தான் திறந்தான். சிகரெட் வாசமும் வாடியிருந்த என் முகமும் என் சூழ்நிலையை வெளிப்படுத்த பின்னால் கதவை சாத்திவிட்டு முன்னாள் நடந்தான் மொட்டை மாடிக்கு. நானும் பின்தொடர்ந்தேன். மொட்டைமாடிக்கு வந்ததும் முதலில் அவனிடம் ப்ரியாவை சந்தித்ததையும் லாவண்யா ஆள் மாறாட்ட வேலையில் ஈடுவடுவதும் பற்றி விளக்கி அன்று பேசமுடியாததை எல்லாம் இன்று சொல்லிவிட்டேன். அமைதியாகக் கேட்டவன், "நீ தப்பு பண்ண வாய்ப்பு கம்மின்னு தெரியும் ஆனா லாவண்யா காட்டிய மெசேஜ்னால சந்தேகப்பட்டுட்டேன்," அனால் அவன் என்னை நன்றாகவே அறிந்திருந்தான், "ஆனா இந்த நேரத்துல நீ இங்க வந்தது அதுக்கில்ல தான?"

அவனிடம் எப்படி சொல்வதென்று தெரியவில்லை, சொல்லவும் நா கூசியது. போனில் எடுத்த போட்டோவை பதிலாகக்  காட்டினேன்.

"இது யாரு?"

"நித்தினும் என் wifeஉம் SVRC காலேஜில் படித்தபோது எடுத்தது. இன்னைக்கு SVRCஇல் மேட்ச் விளையாட போனேன்."

"உனக்கு முன்னாடியே எனக்கு இதைப் பற்றி தெரியும்டா." அவன் மெல்லிய குரலில் உண்மையை உடைத்தான்.

 இருள் வானத்தோடு ஒத்திப்போன முகம் இப்போது திரும்பி அவனை அதிர்ச்சியில் நோக்கியது.

சற்று சங்கடமான  பாணியிலே தொடர்ந்தான், "நித்தின்  திரும்பி இந்தியா வந்ததால  உன் மனைவிக்கும் அவனுக்கும் இருந்த  காதலை பத்தி தெரிந்து  நீ அவள் மேல இருந்த கோபத்தில் பழிவாங்க லாவண்யாகிட்ட நெருக்கமா பழகுறதா லாவண்யா சொன்னாள். அதுனால தான் நீ நிஜமாவே அவகூட நெருக்கமா பழகுறியோன்னு தப்பா நினைச்சுட்டேன். ஆனால் அவளுக்கு இது எப்படி தெரியும்னு எனக்கு தெரியல. ரெண்டு பெரும் காலேஜில் எடுத்த போடோக்களை லாவண்யா காட்டுனா, அதான் நம்பிட்டேன். சாரி  டா."

அந்நேரம் பார்த்து மனோஜ் கையில் இருந்த என் போன் ஒலித்தது. அவள் தான். மனோஜ் புருவத்தை தூக்கி என்ன செய்வதென விசாரித்தேன்.

"கால் கட் பண்ணிட்டு மெசேஜ் பண்ணு. நான் அவகிட்ட பேசுற நிலைமைல இல்ல."

எத்தனை மெசேஜ் அனுப்பியிருந்தால் எத்தனை முறை போன் செய்திருந்தால் என்று தெரியவில்லை, போன் ஐ back seat இல் வீசியதோடு சரி.

"ஆனாலும் எல்லார்கிட்டயும் அன்பா  பேசுற  உன் wife இவ்ளோ கல் நெஞ்சுக்காரியா இருப்பாங்கன்னு நினைச்சு பார்க்கல. உன்கிட்ட முன்னாள் காதலை பத்தியும் சொல்லல."

எனக்கு அதைப் பற்றி யோசிக்ககூட மனம் இடம் தரவில்லை. இருவருக்கிடையில் இருந்த தூரத்தை அதிகப்படுத்தவே தோன்றியது. "நான் இங்கயே இன்னைக்கு தங்கிக்கிறேன். ஏதாவது அவளுக்கு மெசேஜ் பண்ணிடு," என்று சொல்லிவிட்டு அவன் என்னை சமாதானப்படுத்தவதற்குள் கீழிறங்கி அவன் ரூமுக்கு சென்றேன். 

இன்றைய இரவு விடியா நிரந்தரமாய் ஆகக்கூடாதா? வானத்தின் கறுமை வெளுக்க பதட்டம் அதிகரித்தது. கண் மூடினால் கற்பனை ஆர்பரித்தது என இரவு முழுக்க விழித்திருந்தேன். அவ்விரவின் முடிவில் உதித்த  கதிரவனின் ஒளி மேனியை சுட்டெரித்தது போல் இருந்தது, இன்றைய நாளை கடந்தாக வேண்டும். 

ஒருவழியாக மனோஜின் வற்புறுத்தலால் வீட்டுக்கு சென்றேன். "என்ன ஆச்சு? ஏன் நேற்று நைட் மனோஜ் கூட தங்குனீங்க?" என அவள் அக்கறையைப் பொழிந்தாள் கதவை திறந்ததுமே. ஆனால் கசங்கிய tee ஷர்ட், கலைந்த தலைமுடி, சிவந்த கண்கள் என இவை நேற்றைய இரவின் அறிகுறியாய் தென்பட்டன. பதிலளிக்காமல் பாத்ரூமுக்குள் நுழைந்தேன். வெளியே குளித்துவிட்டு வந்தபோது பிடிவாதமாக எனக்காகக் காத்திருந்தாள்.

"மித்திரன்! என்ன ஆச்சுன்னு கேட்டுட்டே இருக்கேன் நீங்க பாட்டு போறீங்க!"

"என்ன ஆச்சுன்னு தெரியனுமா?" குரல் உணர்வின்றி பிணமாய் ஒலித்தது. போனை பெட் இல் தூக்கி வீசினேன். போட்டோவைப் பார்த்துவிட்டு எல்லாவற்றையும் உணர்ந்தவள் மௌனமானாள். 

"நான் என் பக்கம் உள்ள நியாயத்தை பேசலாமா?" 

"ஒன்னும் கேட்கும் மனநிலையில் இல்ல. முன்னாடி நீ இதை என்கிட்ட இருந்து மறைச்சிருக்கலாம். நித்தின் என்கூட வேலை பார்க்குறான், நெருங்கிய நண்பனா இருக்கிறான்னு  தெரிஞ்சும் நீ மறைச்சது அருவெறுப்பா இருக்கு." சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன் மனோஜை பார்க்க. 

உடைந்த சிதறல்களை பொறுக்கும் எண்ணமில்லை. உடைந்ததை ஓட்டினாலும் கீறல்களை மறைவதில்லை.

[ஏற்கனவே plan பண்ணியிருந்தாலும் ஏனோ தெரியல ரொம்ப நாள் இழுத்துட்டேன் இந்த chapter கு. ஆதரவுக்கு ரொம்ப நன்றி:) ] 

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro