4

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

தன் தோழியான லட்சுமிக்கு கால் செய்ய உடனே அவளின் அழைப்பை ஏற்றவள்

"ஹேய் என்ன ஹீரோயின் பொண்ணு, ராமலிங்கம் சாரோட அடுத்த படத்துல நீதான் ஹீரோயினாம் என்று பேச்சு அடிபடுது நிஜமா?" என்று கேட்க மறுபுறம் பிருந்தா அழ ஆரம்பித்தவள் நேற்றிலிருந்து இன்று வரை நடந்ததை கூறி முடித்தால். தன் தோழியின் வாழ்வில் மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும் என எண்ணிய லட்சுமி

"இப்போ நீ எங்க இருக்க" என்று கேட்க

"நான் இப்போ வீட்லதாண்டி இருக்கேன்" என்றவளை லட்சுமி

"சரி நீ வீட்டுலேயே இரு நான் இன்னும் ஒரு மணித்தியாலத்துல வரேன்" என்றாள் தன் தோழியிடம் மனதில் உள்ள பாரங்களை எல்லாம் இறக்கி வைத்த நிம்மதியில் சிறிது நேரம் கண் அயர அவளின் தோழி வந்து சேர்ந்தது கூட அறியாமல் தூங்கிப்போனால்.

"ஏய் பிருந்தா, என்ன நீ வீட்ட இப்படி திறந்து போட்டு தூங்குற, யாரும் வந்து எதையும் எடுத்துட்டு போயிட்டா?" என்று கூற அவளோ விட்டேத்தியா

"ஆமா இங்க லட்சக்கணக்குல காசிருக்கு பாரு. எடுத்துட்டு போறதுக்கு"என்றால்.

தன் தோழி இன்னும் நல்ல மனநிலைக்கு திரும்பவில்லை என்பதை உணர்ந்தவள்

"இங்க பாரு பிருந்தா, இங்க பாருடின்னு சொல்றேன்ல" என்று எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை கலைத்தவளை

"என்னடி சொல்லு" என்றாள். என்னதான் இருவரும் தோழிகளாக இருந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் மிகவும் தேவையான நேரத்திற்கு மாத்திரமே "டி" போட்டு பேசுவார்கள்.

"இங்க பாரு பிருந்தா, எனக்கு என்ன சொல்ரதுன்னு தெரியல. நீ இப்போ ராமலிங்கம் சார்கு யெஸ் சொன்னாலும், நோ சொன்னாலும் உனக்கு அடுத்த படத்துக்கு சான்ஸ் கிடைக்கும். ஆனா அம்மாக்கு ஆபரேசனுக்கு தேவையான பணம் கிடைக்குமான்னு பார்த்தா கண்டிப்பா கிடைக்காது. இப்போ என்ன செய்யனும்னு நீதான் முடிவெடுக்கனும். ராமலிங்கம் சார் சொன்னது என்னமோ உண்மைதான். யாருக்குமே சினிமாவுல அவ்வளவு இலகுவா சான்ஸ் கிடைக்காது. உனக்கு முதல் படமே கண்டிப்பா நல்ல பெயர வாங்கி கொடுக்கும். ஆனால் அடுத்த படம் கண்டிப்பா உன்ன பெரிய கமர்ஷியல் ஹீரோயின் ஆக்கிவிடும்.அவரோட ப்ரெண்டு படத்துல நீ அடுத்து நடிச்சா கண்டிப்பா உன்ன இன்னும் ஒரு மூனு வருசத்து யாருமே அசைக்க முடியாது. இந்த ரெண்டு படமும் ரிலீஸ் ஆனாலே போதும் நீதான் தமிழ்நாட்டோட்ட சென்சேசனல் ஆகிடுவ. ஆனா அதுக்கு உனக்கு இந்த ரெண்டு படமும் கிடைக்கனும். இல்லைன்னா கூட பிரச்சினையில்ல உனக்கு நல்ல டைரக்டர்ஸோட மூவீஸ்ல சான்ஸ் கிடைக்கும். ஆனா இப்போ நமக்கு இருக்குற ப்ராப்ளம் அம்மாக்கு இருக்குற ஆபரேசன்" என்றவளை பிருந்தா

"எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. அன்வர் அண்ணா ரெண்டு லட்சம் தரேன்னு சொன்னாரு. ஒரு பத்து லட்சத்துக்கு வட்டிகு காசு வாங்கலாம்.அடுத்த படத்துக்கான அட்வான்ஸ் பத்து லட்சம் இருக்கு எல்லாம் சேர்த்தா இருபத்தியிரண்டு லட்சம் இருக்கு. எப்படியும் அட்ஜஸ்ட் பண்ணா அம்மாவோட முதல் ஆபரேசன பண்ணிடலாம்.ஆனா ரெண்டாவது ஆப்ரேசனுக்கு டைம் இல்லை.அதையும் உடனே பண்ணனும்" என்றவளை

"இங்க பாரு பிருந்தா, அம்மாகு ஆபரேசன் பண்ணனும்னா ராமலிங்கம் சார் சொன்னத கேட்குறதுக்கு ஒத்துக்குறத தவிர வேற வழியில்லை. என்னடா இவளைப்போலவே தன்னையும் மாத்துறதுக்கு டிரை பண்றாலேன்னு யோசிக்காத. நான் நிஜத்த சொன்னேன். நம்ம ரெண்டு பேருக்கும் படிப்பு சுத்தமா இல்லை. இல்லைன்னா ஒழுங்கான ஒரு வேலைக்கு போய் சம்பாதிச்சிருக்கலாம். நம்ம எங்கயோ பிறந்து இப்போ இங்க இருக்கோம்.உங்கம்மா ஒரு உடம்ப வித்துப்பிழைக்கிற ஒருத்தங்க. நான் உங்கம்மாவ குத்தம் சொல்லல. அவங்க நிலமைல யாரா இருந்தாலும் அப்படித்தான் பண்ணிருப்பாங்க. எனக்கு வந்த புருசன் அவனோட தேவைக்கு என்ன பயண்படுத்திக்கிடான். இப்போ நான் உயிரோட இருக்குறத என் மகனுக்காகத்தான்.அவன் பெரியவனானதும் என்ன புரிஞ்சிக்குவானா இல்லை போடி தேவிடியான்னு திட்டிட்டு போவானான்னு தெரியல. எனக்கு இப்போ இருக்குற ஒரே ஒரு ஆசை அவன நல்லபடியா படிக்க வெச்சி பெரிய ஆளாக்கனும் அவ்வளவுதான்" என்றவளை பிருந்தா

"உன்ன உன் மகன் கண்டிப்பா புரிஞ்சிக்கிவான் கவலைப்படாத" என்றவளை லட்சுமி தீர்க்கமாக பார்த்து

"எந்த முடிவானாலும் நீயே தெரிவு செய். ஏன்னா இது உன்னோட வாழ்க்கை. என்னால இதுல இருக்குற நல்லது கெட்டத மட்டுமே சொல்ல முடியும். முடிவெடுக்க வேண்டியது நீ" என்றவள் பிருந்தாவை பார்க்க அவளின் கண்களின் தெரிந்த தீவிரம் லட்சுமிக்கு அவள் முடிவை தெரிவு செய்து விட்டாள் என்று தெரிந்தது.

"நீ ஏதோ முடிவெடுத்துட்டேன்னு மட்டும் நல்லா தெரியுது என்னன்னு சொல்லு"என்று லட்சுமி கேட்டாலும் மனது
' ராமலிங்கம் கேட்டதுக்கு இவ சம்மதிக்க கூடாது' என்றே பிரார்த்தித்தது. பிரார்த்தனைகள் எல்லாம் நமக்கு எப்போதும் கைக்கூடாது. அதுவும் லட்சுமியின் இந்த பிரார்த்தனை எவ்வளவு முக்கியமானது என்று லட்சுமி மட்டுமே அறிவாள்.

"எங்கம்மாவ காப்பாத்தலாம்னு முடிவெடுத்திருக்கேன். எங்கம்மா இல்லைன்னா நான் எப்பவோ எங்கம்மா மாதிரி ஆகிருப்பேன்" என்றவளின் முகத்தில் இருந்த தீவிரத்தை பார்த்த லட்சுமி அவளை அணைத்து ஆறுதல் படுத்தினால்.

யாரை காப்பாற்ற தான் உரியினிலும் மேலாக மதித்து வந்த கற்பை இழந்தாலோ அந்த நபர் உயிருடன் இல்லை எனும் போது தான் செய்த தியாகத்துக்கு எந்த ஒரு மதிப்பும் இல்லாமல் போனதே என்ற எண்ணமே பிருந்தாவை மனதளவில் வலிமை இழக்க செய்தது.
ராமலிங்கத்தின் பின் அவரின் நண்பரை சந்தித்து அவர் கேட்ட விலையையும் கொடுத்த பின் பணத்துடன் தன் தாயை சந்திக்க ஹாஸ்பிடல் வந்தவளை அன்வர்

"அம்மாவ காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்க. முதல் ஆபரேசனா கொஞ்சம் கிரிட்டிக்களா இருந்திருக்கு. அம்மாக்கு கேன்சர் ரொம்ப முத்திடிச்சாம். ஏதேதோ மெடிக்கல் வார்த்தை எல்லாம் சொல்ராங்க எனக்கு அது எதுவுமே தெரியல. டாக்டர் உங்கிட்ட பேசனும்னு சொன்னாரு" என்று கூற எப்போதும் அந்த டாக்டரை சந்திக்க செல்லாமல் இருப்பவள் இன்று அவரை சந்திக்க எந்த தயக்கமும் இன்றி சென்றால், காரணம் டாக்டரோ பார்வையால் அவளை துகிலுரிப்பார் என தெரிந்தாலும் தன் விருப்பத்தின் பெயரிலேயே இரண்டு முறை துகிலுரியப்பட்டதை அறிந்தவள் அதைவிட மோசமாக இந்த டாக்டர் நடந்து கொள்ள மாட்டார் என்பது புரிந்து அவரை காண சென்றார்.

"உங்கம்மாவுக்கு இப்போ நினைவு இல்லாம போயிடிச்சி. இன்னும் சில நாட்கள்தான் அவங்க உயிருடன் இருப்பாங்க. அவங்க உடம்புக்கு இதுக்கு மேலயும் மருந்தோட வீரியத்த தாங்குற சக்தி இல்லை" என்று கூற பிருந்தாவால் அழுகையை கட்டுப்படுத்த முடியவே இல்லை.அழுதுகொண்டே டாக்டரை பார்த்தவள்

"அம்மாவுக்கு நினைவே திரும்பாதா டாக்டர், எங்கம்மா கூட நான் பேச முடியாதா?" என்று கேட்டவளை அவர்

" நினைவுக்கு கொண்டு வரலாம். ஆனா அதுக்கு கொஞ்சம் செலவாகும். நினைவுக்கு கொண்டு வர சில ஸ்டீரொய்ட் வகை மருந்துகள் இருக்கு. ஆனா உங்கம்மாவுக்கு அத தாங்குற சக்தி இல்லை. அப்படி அவங்கள நினைவுக்கு கொண்டு வந்த ஒரு ஒரு மணி நேரம்தான் உயிரோட இருப்பாங்க" என்று கூற சிறிது யோசித்த பிருந்தா

" நினைவு இல்லாம உயிர் பிரியுறதுக்கு நினைவோட ஒரு மணி நேரமாச்சும் இருக்கட்டும் டாக்டர், செலவ பத்தி கவலை படாதீங்க எவ்வளவு பணம் வேணும்னு சொல்லுங்க நான் அரேஞ்ச் பண்றேன்" என்றவளை எப்போது பணம் இல்லாமல் இருக்கும் இவள் எப்படி பணத்தை ஏற்பாடு செய்வாள் என்று யோசித்தவர் மருத்துக்கான பில்லை கொடுக்க அதை வாங்கிக்கொண்டு பணம் கட்ட சென்றாள்.

அடுத்த ஒரு மணி நேரம் தாயும் மகளும் மட்டும் பேசிக் கொண்டிருந்தனர். அன்வர் பிருந்தாவின் தாயின் நிலமையை லட்சுமிக்கு கால் செய்து கூற அவள் உடனே ஹாஸ்பிடல் வந்தாள்.

தாயுடம் பேசிக்கொண்டிருக்கும் பிருந்தாவின் அருகில் சென்ற லட்சுமி

" அம்மா எப்படிம்மா இருக்கு. டாக்டர் கிட்ட பேசினேன் அவரு அடுத்த ஆபரேசன நாளைக்கே பண்ணிடலாம்னு சொல்லிட்டாரு. அத்தோட உங்களுக்கு சுகம் ஆகி நீங்க வீட்டுக்கு போகலாம்னு சொன்னாங்கமா" என்று கூற உண்மை அறியாத பிருந்தாவின் தாய்

"நிஜமாவ சொல்ற எனக்கும் இப்போ உடம்பு ரொம்ப லேசான மாதிரி இருக்குமா. வலி எதுவுமே தெரியல" என்றார். கொடுத்திருந்த மருந்தின் வீரியம் அப்படி ஆனால் இன்னும் சில நிமிடங்களே அவரின் உயிர் இருக்கும் என்பதை அறிந்த லட்சுமி

"அம்மா பிருந்தாவுக்கு சினிமால ஹீரோயின் சான்ஸ் கிடைச்சிருக்கு. கண்டிப்பா இனி அவளுக்கு நல்ல காலம்தான்" என்று கூற இருவரையும் பார்த்து முகம் சுளித்தவர் பிருந்தாவை தன் அருகில் அழைத்து

" இங்க பாருமா, எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக்கொடு. சினிமால நீ இருந்தா உன்ன அங்க இருக்குற கழுகுகள் கொத்தாம இருக்காது. உன்னால உன் மானத்தை காப்பாத்திக்கிட்டு இருக்க முடியும்னா இரு. இல்லைன்னா கூலி வேல செஞ்சாவது பிழைச்சிக்கோ. ஆனா என்ன மாதிரி மட்டும் ஆகிடமாட்டேன்னு சத்தியம் பண்ணிக்கொடு" என்று கூற கண்களில் வழிந்த கண்ணீரை மறைத்துக்கொண்டு தன் தாய்க்கு சத்தியம் செய்தாள். ஆனால் இந்த சத்தியம் அவளின் எதிர் காலத்திற்காகனதா இல்லை நடந்து முடிந்தவற்றுக்கும் சேர்த்தா என்று யாருக்கும் தெரியவில்லை.
அதன் பின் லட்சுமியை அழைத்தவர்

"லட்சுமி கண்ணு, பிருந்தா ரொம்ப வெகுளிமா. வெளி உலகம் தெரியாத பொண்ணு, நீதான் அவ கூட இருந்து அவள் பார்த்துக்கனும்" என்று கூறியவர் இரும ஆரம்பித்தார். அந்த இருமல் முடியும் முன் அவரின் உயிர் அவரை விட்டு பிரிந்திருந்தது.

தான் இறக்கும் தருவாயிலும் தன் மகளை பற்றி யோசித்த தன் தாயை எண்ணி பிருந்தா மிகவும் வேதனைப்பட்டால்.

அடுத்த மூன்று மாதம் மின்னல் வேகத்தில் நகர பிருந்தாவின் கையில் இப்போது எட்டு படங்கள். அவளுடைய தாயின் ஆபரேசனுக்கு தேவைப்பட்ட பணத்தை விட இப்போது நான்கு மடங்கு பணம் அவள் கையில் இருந்தது. ஆனால் அவள் தாய்தான் யாரும் நெருங்க முடியாத தூரத்துக்கு அவளை விட்டு சென்றிருந்தார்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro