9

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இலங்கை வந்தடைந்த பிருந்தாவை ஏர்போர்ட்டில் யாருமே சட்டை செய்யவில்லை. தமிழ் சினிமாவில் முதல் படத்துக்கே தேசிய விருது வாங்கியவளை இங்கு எவருமே அலட்டிக்கொள்ளவில்லை என்பதே அவளுக்கு பெரிய நிம்மதியாக இருந்தது. லட்சுமி ஏற்பாடு செய்திருந்த டூரிஸ்ட் கைட் விமான நிலையம் வர தாமதமாகி இருக்க அவள் தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியுடன் அரைவல் லாஞ்சில் இருந்த செல்போன் கம்பனி ஒன்றில் தனக்கு தேவையான் சிம்மை வாங்க சென்றால். விமானம் ஏறுவதற்கு சில நொடிகளுக்கு முன்பாக பிருந்தாவுக்கு கால் செய்த லட்சுமி இலங்கை போனதும் முதல் வேலையாக அவளது சிம்மை மாற்றும்படியும் அவளது புது மொபைல் நம்பரை தனக்கு அனுப்புபடியும் கூறியிருந்தால். லட்சுமி கூறிய எல்லாவற்றையும் பார்க்கும் போது பிருந்தாவுக்கு தான் ஏதோ ஆங்கில படங்களில் வரும் ஸ்பை யோ என எண்ணும் அளவுக்கு அவளது ஏற்பாடுகள் இருந்தது. ஆங்கிலப்படம் என்றதும் ஞாபகம் வர உடனே தனது மொபைலில் neflix ஐ டவுன்லோட் செய்து தனக்கான அக்கவுண்டை க்ரியேட் செய்தவள் பணப்பரிமாற்றத்துக்கு க்ரெடிட் கார்ட் டீடைல்ஸ் கேட்க என்ன செய்வது என்று புரியாமல் முழித்துக்கொண்டிருந்தால். காரணம் பிருந்தா க்ரெடிட்கார்ட் பயன்படுத்த கூடாது என்பதற்காக அவளது க்ரெடிக் கார்ட்டை அவளிடம் கொடுத்து அனுப்பவில்லை. மாறாக டிராவலர்ஸ் செக்கில் பணத்தை டிபாசிட் செய்து அதற்கான  பத்திரங்களையும் கொடுத்திருந்தால்.

முப்பது நிமிடங்களின் பின் ஒரு வாட்ட சாட்டமான இளைஞன்  கைகளில் இவளின் பெயர் தாங்கிய மட்டையுடன் நிற்பதைக்கண்டவள் அவன் அருகில் சென்று

"ஐ ஆம் பிருந்தா" என்று கூற அவனோ

"இலங்கைக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். என் பெர்யர் விக்ரம். சாரி மேடம் கொஞ்சம் டிராபிக்ல மாட்டிக்கிட்டதால கொஞ்சம்  தாமதமாகிட்டு" என்றவனின் தமிழ் வித்தியாசமாக இருந்தது. அதே நேரம் அவனது மொபைல்க்கு கால் வர அவன் இரண்டு தடவை கட் செய்தும் மூன்றாவது முறையும் கால் வர அவளோ

"இட்ஸ் ஓக்கே, நீங்க பேசுங்க"என்று கூற அவனோ

"சாரி மேடம் "என்று கூறி காலை அட்டண்ட் செய்தான்.

"அம்மே மங்க் கியளா தியனவானே. தெங்க் மம வெடங்க் இன்னவா. சமாஹர வெலாவட்ட பஸ்ஸே மங்க் கால் கரன்னங்க் "என்று பேச பிருந்தாவுக்கு கோபம் தலைக்கேறியது. உடனே தனது புது நம்பரில் இருந்து லட்சுமிக்கு கால் செய்ய அவளும் தாமதிக்கு இலங்கை நம்பரை கண்டதும் உடனே பதில் அளித்தவளை பிருந்தா

"நீ என்ன நினைச்சிக்கிட்டு இருக்க லட்சுமி. என்ன இங்க நீ தனியா அனுப்பினது மட்டுமில்லாம என்ன அழைச்சிட்டு போக ஒரு சிங்களவன அனுப்பிருக்க. உனக்கு தெரியும்ல எனக்கு சிங்களவனுகள கண்டாலே பிடிக்காதுன்னு. அப்புறம் எதுக்கு இப்படி பண்ண. என்னால ஒரு நிமிசம் கூட இவன் கூடல்லாம் இருக்க முடியாது. எனக்கு கைட் இவந்தான்னா நான் இப்பவே ஊருக்கு கிளம்பி வரேன் என்றவளை" மறுமுனையில் ஆத்திரம் கொண்ட லட்சுமி

"லூசு மாதிரி பேசாத. இங்க இருக்குற சிட்டுவேசன் உனக்கு தெரியுமா?..  ராமலிங்கம் சார் எதிர்க்கட்சி ஆளு.  விக்னேஷ் மத்திய  அரசுக்கு சப்போர்ட் பண்றவன். நீ இவங்க இரண்டு பேரையும் பத்தி ஓபனா ஸ்டேட்மண்ட் விட்டுட்ட!!! இப்போ இருக்குற நிலமைல எவன் எங்க இருந்து என்ன பண்ணுவான்னே தெரியல். நம்ம ஸ்டேட் ஆளுங்கட்சி ஆளுங்க யாரையும் பிடிச்சி இந்த ப்ராப்ளத்த சால்வ் பண்ணலாம்னு பார்த்த அது ஒரு முதுகெலும்பில்லாத கட்சி. அவனுங்களே மத்திய அரசுக்கு எப்படி ஜால்ரா போடலாம்னு யோசிச்சிக்கிடு இருக்கானுங்க. நீ உன் திருவாய மூடிகிட்டு கொஞ்ச நாளைக்கு அங்க இரு" என்றவளை பிருந்தா

"என்னடி இப்படி சொல்ற. சாதாரண  ஒரு விசயம் இப்போ அரசியல் ஆகிடிச்சா" என்று ஆச்சரியப்படு கேட்க

"நீ எந்த உலகத்துலடி இருக்க. நம்ம தமிழ்நாட்டுல அரசியலும் சினிமாவும் பிண்ணி பிணைஞ்சிருக்கு... படத்துலதான் ஒருத்தன் நல்லா நடிச்சி ரோடு போட்டு, ஸ்கூல், காலேஜ், ஹாஸ்பிடல்லாம் கட்டினால்,  அவன் ஏதோ நிஜத்துல கட்டி முடிச்ச மாதிரி நினைச்சி அவன் எலக்சன்ல வோட்டு கேட்டு வந்ததுமே உடனே நம்ம மக்கள் வோட்ட அள்ளிக்கொடுக்குறாங்க. ஏன் காமராஜருக்கு அப்புறமா சினிமா பின்புலம் இல்லாத ஒரு CM அஹ் காட்டு பார்க்கலாம். தயவு செஞ்சி கொஞ்ச நாளைக்கு பொறுமையா இரு. உனக்கு அவன்கூட வெளில போக விருப்பமில்லைன்னா ஆன்லைன்ல மூவீஸ் பாரு, இல்லைன்னா ரூம்ல நல்லா தூங்கு. நான் ஏன் ஒரு சிங்கள ஏஜன்சிய தெரிவு செஞ்சேன் தெரியுமா, அவனுங்களுக்கு உன்ன பத்தி எதுவுமே தெரியாது. அவனுங்க யாரும் தமிழ் படம் பார்க்க மாட்டாங்க. சோ நீ கொஞ்சம் ப்ரீயா இருக்கலாம்னுதான் பண்ணேன். எல்லா சிங்களவனும் கெட்டவன் இல்லைடி. நம்ம இனத்த சேர்ந்த எல்லோரும் நல்லவனும் இல்லை" என்றவளை தன் தோழி தனக்காக எவ்வளவு யோசித்திருக்கின்றாள்  என்பது அறிந்து

"சரிடி நாந்தான் ஏதோ அவசரபட்டுட்டேன்.என்னை மன்னிச்சிடு. என்னால அவன் கூட வெளில எல்லாம் போக முடியாது. நான் netflix டவுன்லோட் பண்ணிட்டேன். என்னோட யூசர் நேம் பாஸ்வேர்ட் அனுப்புறேன் ஒரு வருசத்துக்கு தேவையான சப்ஸ்க்ரிப்சன கட்டிடு" என்று கூற மறுமுனையில் பிருந்தா "சரி" என்றாள்.

விக்ரம் போன் பேசிவிட்டு பிருந்தாவின் அருகில் வந்தவனை  அருவருப்பாக பார்த்தவள்

"உங்களோட உண்மையான முழுப்பெயர் என்ன" என்று கேட்க அவன் ஆச்சரியமாக

"விக்ரமரத்ன"என்று கூறியவனிடம் அவள்

"ஆமா நீங்க சிங்களவர்தானே. எப்படி தமிழ் பேசுறீங்க" என்று கேட்க புன்னகைத்தவன்

"நான் ஜப்னா யுனிவர்சிட்டியில் (யாழ்ப்பானம்) தமிழ் மொழியில் பிஏ முடித்திருக்கின்றேன். எனக்கு தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும். அதுக்கு ஒரு சின்ன ஒரு காரணம் சொல்றேன்.. ரொம்ப காமடியா இருக்கும்"என்க அவளோ என்ன என்பது போல புருவதை சுருக்கி கண்களாலேயே கேட்டால்

"உயிரே படத்துல ஒரு பாட்டு இருக்கு, 'பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக கேட்டு பார்த்தேன்' அப்படின்னு"என்று கூற அவளோ

"அந்த பாட்டு ஒவ்வொரு தமிழனோட மொபைல்லயும் கண்டிப்பா இருக்கும்.அதுக்கு இப்போ என்ன" என்று கேட்க அவனோ புன்னகைத்து

"அந்த பாட்டோட ஹிந்தி வேர்சன் 'ஏ அஜ்னபி தூ ஹி கபி' அப்படின்னு இருக்கும். அந்த பாட்டுக்கு ஹிந்தியில 'குல்சார்' என்ற கவிஞர்  வரி எழுதியிருப்பார். அவரோட ஒரு இண்டர்வியூல 'தமிழ் போல ஒரு அழகான மொழியில சூப்பர் ஹிட்டான அந்த வரிகள் போல பாரசீக மொழி தவிற வேற எந்த மொழியிலும் சிறப்பா எழுத முடியாது. தான் ஏதோ தன்னால் முடிந்தளவு முயற்சி செய்திருக்கின்றேன்' அப்படின்னு சொன்னாரு. அன்னைக்கு நான் முடிவு செஞ்சதுதான் எப்படி சரி தமிழ் படிக்கனும்னு. என்னோட நல்ல நேரம் இலங்கைல யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று வருசத்துல எனக்கு யுனிவர்சிட்டி போக வாய்ப்பு கிடைச்சது. என்னோட கனவான தமிழ நான் படிக்க யாழ்ப்பானம் போய் படிச்சேன். படிக்க படிக்க இந்த மொழி எவ்வளவு அழகானது என்று புரிஞ்சிக்க்ட்டேன். ஆனா என்ன தமிழ்ல  இருக்குற ஒரு கெட்ட பழக்கம் தமிழ் மொழி தாய் மொழி இல்லாதவன் எவ்வளவுதான் தமிழ கத்துக்கிட்டு பேசினாலும் அவன் தமிழன் இல்லை என்கிறத ஈசியா காட்டிக்கொடுத்திடும்" என்று கவலையாக கூற அவளோ சிறு புன்னகையுடன்

"ஹ்ம்ம்" என்று கூறிய நேரம் அவர்களை ஏற்றி செல்ல வாகனம் வந்தது. போகும் வழி எங்கும் அவளை டிஸ்டர்ப் செய்யாது விக்ரம் அமைதியாகவே வந்தான். ஆனால் வந்த டிரைவரோ அடிக்கடி பிருந்தாவின் முகத்தை பார்த்துக்கொண்டே வந்தான்.

ஒரு மணி நேர பயணத்தின் பின் அவர்கள் 'மவுண்ட் லெவின்யா பீச் ஹோட்டல்' இன் முன் அவர்கள் கார் நிறுத்தப்பட்டது. ஐந்தாவது மாடியில் கடலை நோக்கிய ஒரு அறையை அவளுக்காக முன்கூட்டியே பதிவு செய்திருந்த விக்ரம் அவளது பொருட்களை தூக்க முயல அவளோ

"என்னோட பேக்க நானே தூக்கிகிறேன். நீங்க ஒன்னும் சிரமபடவேண்டாம்" அவனும் அவளுடன் அது பற்றி விவாதம் எதுவும் பண்ணாமல்

"சரி மேடம் "என்று கூற அவளோ

"என் பெயர் ஒன்னும் மேடம் இல்லை. என்னை பிருந்தா என்றே கூப்பிடுங்க" என்றாள்.

தன் அறைக்குள் அவள் நுழைந்ததும் விக்ரம் வெளியில் நின்றவன்

"சரி மிஸ் பிருந்தா. நீங்க ரெஸ்ட் எடுத்து ரிப்ரெஷ் ஆனதும் கால் ஒன்னு பண்ணுங்க. உங்களோட டூர் ப்ளானிங்க் பத்தி பேசலாம். எங்க கிட்ட சில பேக்கேஜஸ் இருக்கு. இல்ல நீங்க விரும்பிய மாதிரி ஏதும் மாற்றங்கள் செய்யனும்னாலும் செய்யலாம்" என்று கூற அவளோ

"முதல்ல நான் ரெஸ்ட் எடுக்கிறேன். அப்புறமா உங்களுக்கு கால் பண்றேன். அதுவரைக்கும் என்ன டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்" என்று கூற தனது கார்ட்டை எடுத்து கொடுத்தவன்

"இது என்னோட கார்ட். உங்களுக்கு எப்போ கூப்பிடனும்னு தோனுதோ அப்போ கால் பண்ணுங்க" என்று கூறி சென்றான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro