கற்பனை 22

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஷனா - 12

"உங்க ப்ரெண்டோட இதயம் ரொம்ப பலவீனமா இருந்திருக்கு. ஏதோ அதிர்ச்சியான செய்திய கேட்டதாலா அவங்க இதயம் வேகமா துடிச்சதால அவங்க இப்போ சீரியசா இருக்காங்க.எதுவா இருந்தாலும் இப்போ எங்களால எதுவும் சொல்லமுடியாது"என்று கூறி செல்ல நேத்ரா அழ ஆரம்பித்தால்.தகவல் கேட்டு அவ்விடத்துக்கு ஆகாஷனாவின் தாயும் தந்தையும் வர அவர்களிடம் சென்ற நேத்ரா

"அம்மா என்னால உங்களுக்கு பண்ணி கொடுத்த சத்தியத்த காப்பாத்த முடியல.என்னாலதான் ஆகாஷனாக்கு இப்படி ஆச்சி"என்று பித்து பிடித்தவள் போல அழ என்ன நடந்தது என்று தெரியாமல் ஆகாஷனாவின் தாயும் தந்தையும் முழிக்க அவர்களிடம் வந்த அஜய் நடந்த அனைத்தையும் கூறி

"ஆண்ட்டி இதுல நேத்ராவோட தப்பு எதுவுமே இல்ல.எல்லாமே என்னாலதான்"என்று அவனும் கண்கலங்க அவர்கள் என்ன கூறுவது என்று தெரியாமல் கவலையுடன் இருந்தனர்.
என்னதான் நாம் ஒன்றை நினைத்தாலும் கடவுள் என்ன நினைத்தாரோ தெரியவில்லை  வெளியில் வந்த டாக்டர்

"சாரிம்மா அவங்க இதயம் ரொம்ப பலவீனமா இருந்திருக்கு, மெடிடேசன் மூலமா அவங்க இதயத்துடிப்ப ஒரு கட்டுப்பாட்டில வெச்சிருந்திருக்கா.ஆனா அந்த மெடிடேசனையும் மீறி ஏதோ ஒரு கவலையான விசயம் அவங்க மனச தாக்கியிருக்கு.உங்க பொண்ண எங்களால் காப்பாற்ற முடியல "என்று கூற எல்லோருக்கும் இடி விழுந்ததைப்போலானது.யாருக்கு யார் ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் ஆளுக்கு ஒரு மூலையில் நின்று அழுது கொண்டிருக்க நேத்ராவின் அருகில் சென்று அவளை சமாதானாப்படுத்த முயன்ற அஜய்யை அவள் கட்டிக்கொண்டு

"என் ஷனா என்ன விட்டு போயிட்டா அஜய் அவள திரும்ப வர சொல்லுங்க.அவ இல்லாம என்னால வாழ முடியாது"என்று அழ அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் அவளை அணைத்துக்கொண்டு இருந்தான்.

ஆகாஷனாவுக்கு சுகமில்லை என்பதை அறிந்து அவளை பார்க்க வந்த கிஷோர் இங்கு நடப்பதை கண்டு மனதுக்குள் வெதும்பினான்.காரணம் ஆகாஷானாவை அவன் ஒரு தலையாக காதலிக்க ஆரம்பித்திருந்தது. மனதுக்குள் புலம்பிய கிஷோர்
'ஏன் கடவுள் எனக்கு பிடிச்ச எல்லாத்தையும் என்கிட்ட இருந்து நிரந்தரமா பிரிச்சிடுறாரு' என்று கவலைப்பட்டவன் மனதை கல்லாக்கிக்கொண்டு அவன் வந்த சுவடே தெரியாமல் அவ்விடத்தை விட்டு நீங்கினான்.

ஆகாஷனாவின் இறுதி கிரியைகள் முடிந்ததும் அஜய் பல முறை நேத்ராவை தொடர்பு கொள்ள முயன்று  இறுதியாக அவனை சந்திக்க சென்றால்.

"எப்படி இருக்க நேத்ரா" என்று கேட்க அவளோ வறட்சியாக புன்னகைத்தவள்

"என் ப்ரெண்ட நானே கொன்னுட்டி நிற்குறேன்"என்று ஆகாஷனாவின் இறப்பை தன் மீது பழியாக போட முயன்றவளை

"சட் அப் நேத்ரா, இதுல உன் தப்பு எதுவுமே இல்ல.அன்னைக்கு இல்ல என்னைக்குமே ஆகாஷனாவ நான் விரும்பல்ல.நான் விரும்பினது உன்ன மட்டும்தான்.சும்மா உன் மேல பழிய நீ போட்டுக்காத.அப்புறம் ஆகாஷனாவே என்ன விரும்பியிருந்தாலும் நான் முடியாதுன்னுதான் சொல்லியிருப்பேன். வன் வே டு அனதர் வே (ஏதோ ஒரு வழியில்) இந்த முடிவுதான் வந்திருக்கும்.நடந்தத நினைச்சி நம்ம எதுவுமே பண்ண முடியாது.இப்போ சொல்லு நான் உன்ன விரும்புறேன்,நம்ம ஒன்னா சேர்ந்த்து வாழலாம்.நான் ஏன் இதை இப்போ கேட்குறேன்னா இன்னும் 2 வாரத்துல நான் மேல் படிப்புக்காக அப்ரோட் போறேன்.வர 2 வரும்சம் ஆகும் அதான்" என்று கூற கோவத்துடன் அவள்

"ஆகாஷனா வாழாத வாழ்க்கை எனக்கு தேவையில்ல அஜய்.அதுவும் அவ விரும்பின உங்க கூட என்னால வாழவே முடியாது.சாரி அஜய் இன்னைக்கு இல்ல எத்தனை வருசம் ஆனாலும் என் முடிவு மாறாது.அதுக்காக நான் கல்யாணம் பண்ணிக்காம இருப்பேன்னு இல்ல.கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குவேன்.ஆனா அது நீங்க இல்ல" என்று கூற அவன்

"ஹேய் என்ன பேசுர நடந்து முடிஞ்சத......."என்று பேச ஆரம்பித்தவனை கைகளால் பேசுவதை நிறுத்துமாறு சைகை செய்தவள்

"சட் அப் அஜய் ,என்ன கன்வின்ஸ் பண்ண நீங்க டிரை பண்ண வேணாம்.எல்லாமே முடிஞ்சிடிச்சி.சோ ப்ளீஸ் .இதுக்கு மேலயும் நீங்க என்ன கட்டாய படுத்தினா உங்க மேல நான் வெச்சிருந்த நல்ல மதிப்பு இல்லாமலே போயிடும் "என்று கூறினால்.அவள் கூறியதைகேட்டு அவனால் எப்படி ரியாக்ட் செய்வது என்று புரியாமல் இருந்தவன் 'பாய்' என்று ஒற்றை வார்த்தையில் முடித்து சென்றான்.

ஐந்து வருடங்களின் பின்.................

"அம்மா ஸ்கூலுக்கு லேட்டாச்சுமா.சாப்பாட நீ கட்டுறியா இல்ல அவரு கட்ட போறாரா?" என்று கேட்க நேத்ராவின் தாய்

"ஏன்டி எரும எத்தனை தடவை சொல்லிருக்கேன் என்கிட்ட மாப்பிள்ளைய பத்தி நக்கலா பேசாதன்னு.என்னதான் அவரு உன் மேல உசிரையே வெச்சிருந்தாலும் ,நீ சொல்ரதுக்கு எல்லாம் தலை ஆட்டினாலும் என் முன்னாடி அவர நக்கல் பண்ணி பேசினா அவரு மனசு வருத்தப்படும்ல" என்று கூற  தன் தாயை கட்டுக்கொண்டவள்

"அம்மா என் புருசன் எனக்காக அவரு அப்பாவோட அரசியல் அதிகாரத்தையே விட்டுட்டு வந்தவருமா? அப்புறம் நான் எது பண்ணாலும் அது அவரு மனச பாதிக்காதுன்னு சொல்லுவாரு.ஏன்னா என்னால அவரு மனச ஹேர்ட் பண்ண முடியாதாம்.ஐ அம் சோ லக்கி இப்படி ஒரு ஹஸ்பன்ட் கிடைக்க" என்று கூறிய தன் மகளை

"அம்மாடி மாப்பிள்ளை ஏர்லியாவே ஸ்கூல் போயிட்டாரு. உனக்கு காலையில மயக்கம் ,தலை சுத்து வரும்னு சொல்லி உன்ன கொஞ்சம் லேட்டா வர சொன்னாரு.அவருக்கு சாப்பாடு கொடுத்தாச்சி .நீ கொட்டிக்கிட்டு ஸ்கூலுக்கு கிளம்பு"  என்று கூற 6 மாத கர்ப்பினியான நேத்ரா சாப்பிட்டு முடிந்த்ததும் ஸ்கூல் செல்ல தயாரானால்.

'ஆகாஷனா சிறுவர் உலகம்' என்றிருந்த அந்த அனாதை ஆசிரமத்திற்குள் நுழைந்தவள் அந்த ஆசிரம்த்தோடு இருந்த ஸ்கூலுக்குள் செல்ல அங்கு தன் கணவன் அந்த குழந்தைகளுக்கு பாடம் எடுப்பதை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தவளை அவன் கண்டதும் சைகையால்

"பாடம் முடிச்சிட்டு வர்ரேன்" என்று கூற அவளும் தலை அசைத்துவிட்டு ஸ்டாப் ரூம் சென்றால்.

சிறிது நேரத்தில் ஸ்டாப் ரூம் வந்த தன் கணவனை கண்டு புன் முறுவலித்தவலிடம் அருகில் வந்து அவளது மேடிட்ட வயிற்றை தடவை

"ஆகாஷனாம்மா என்ன பண்றீங்க.அம்மாவ இன்னைக்கு ரொம்ப தொல்லை பண்ணீங்களா"என்று கேட்க  நேத்ரா

"பொண்ணூ பிறந்தா ஆகாஷனா சரி, ஆனா பையன் பொறந்தா?"  என்று கேட்க

"அப்போ ஆகாஷ் சரியா"என்று கேட்டவனை புன் முறுவலுடன் அவனின் கைகளை பிடித்துக்கொண்டவள்

"ஐ லவ் யூ கிஷோர் "என்று கூறினால்.

மூன்று வருடங்கள் முன்பு ஆகாஷனாவின் பெயரில் ஒரு ஆரம்பநிலை பாடசாலையுடன் அனாதை ஆசிரமத்தையும் ஆரம்பிக்க கஷ்டப்பட்டவனை கண்ட நேத்ரா அவளும் அவனுக்கு உதவ இருவரும் சேர்ந்து அந்த பாடசாலைக்கு பொறுப்பாகவும் ஆசிரியர்களாகவும் இருக்கின்றனர். திடீரென்று ஒரு நாள் நேத்ராவின் வீட்டில் அவளுக்கு பெண் பார்க்கும் படலம் ஆரம்பிக்க தன் தோழிஅ மீது அதீத அன்பு கொண்ட கிஷோரை தான் ஏன் மணக்க கூடாது என நினைத்தவள் அவனிடம் தன் விருப்பத்தை கேட்க அவனும் தான் ஆகாஷனாவை காதலித்ததை கூறினான்.தன் தோழிதான்  தன்னை இடையில் விட்டு சென்றுவிட்டால்.அவள் மீது காதல் கொண்ட கிஷோராவது சந்தோசமாக வாழ வேண்டும் என்றும், கிஷோர் வேறு ஒரு திருமணம் செய்தால் இந்த ஆசிரமத்தை அவனால் சரியாக நடத்த முடியாமல் போய்விடும் என்பதையும் அவனுக்கு உணர்த்தி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.ஆரம்பத்தில் என்னதான் பட்டும் படாமலும் இருந்தாலும் அதன் பின் இருவரும் இருவர் காதலில் மற்றவர் மூழ்கி வாழ்க்கையை சந்தோசமாகா வாழ ஆரம்பித்தனர்.

என்னதான் கிஷோர் நேத்ராவை திருமணம் செய்தாலும் அவனால் ஆகாஷனாவை முழுவதும் மறக்க முடியவில்லை என்றே கூற வேண்டும்.அதனாலேயே தங்களுக்கு மகள் பிறந்தாள் ஆகாஷனா என்று பெயர் வைக்கலாம் என்று இருவருமே முடிவிஉ செய்திருந்தனர்.நேத்ராவுக்கும் கிஷோர் மனதில் ஆகாஷனா இருப்பது தெரியும்.முதல் காதல் வெகுவிரைவில் அழியாது என்பார்கள்.அதுவும் கிஷோருக்கு அது புது வாழ்க்கையை கொடுத்த காதல்.நேத்ராவும் அவன் மனதில் ஆகாஷனாவை முழுவதும் துடைத்து எறிய நினைக்கவில்லை.ஆகாஷனா பெயரை போலவே ஒரு விசித்திரமான வாழ்க்கை வாழ்ந்து எல்லோர் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்துவிட்டால்.

கடைசியில் அஜய் சில காலம் என்ன ஆனேன் என்பதே தெரியவில்லை.வெளிநாட்டிற்கு படிக்க சென்றவன் மீண்டும் இந்தியா திரும்பிய வேலை அவனின் தந்தை இறந்துவிட அவர் விட்டுச்சென்ற அரசியலை தொடர்ந்து செல்ல ஆயத்தமாகியுள்ளான்.

காதலால் கெட்டவன் ஒருவன் சாக்கடையில் இருந்து வெளி வந்து நல்லவனாக வாழ நல்லவன் ஒருவன் சாக்கடை போன்று இருக்கும் அரசியலில் இறங்க முடிவெடுத்துவிட்டான்.அவன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது ............. முதல்வன் படத்தில் அர்ஜுன் கூறுவதை போல "கடைசியில் என்னையும் ஒரு அரசியல்வாதி ஆக்கிட்டீங்கள்ள"என்பது போல மாறுமா அல்லது நல்லவனாகவே காலம் பூராக வாழ்வானா? தெரியவில்லை காரணம் நரிகள் இருக்கும் இடத்தில் நரியை போல யோசிக்காது இருந்தாள் அங்கு தன்னால் உயிர் காத்துக்கொள்ள முடியாதல்லவா.

கிஷோர் அவன் வாழ்க்கையை தேர்ந்தெடுத்தது போல அஜய்யும் தன் வாழ்க்கையை தேர்ந்தெடுத்தது அதே காதலால்தான்.காதல் நல்லதா கெட்டதா....அது அவரவர் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை பொறுத்தது.

-----------------ஆகாஷனா இனிமேல் வரமாட்டாள்--முற்றும்---------------------

கதையை எழுதி முடித்து பத்து நிமிடங்களில் வாசகர்களிடம் இருந்து வசைச்சொற்கள் வர ஆரம்பித்தது கதிருக்கு.அவன் யாருக்கும் எந்த பதிலும் கொடுக்காமல் இருந்தான்.ஆகாஷனா என்ன கூறுவால் என்பது அவனுக்கு தெரியும் .கண்டிப்பாக அவள் சண்டையிடுவாள் என்பதை மட்டும் அறிந்தவன் இதழ்

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro