12

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அந்த புத்தகம் எரிந்து கொண்டிருப்பதை பார்த்தபடி நின்றிருந்த ஆதிரா பின் தன் பலம் மொத்தமும் வடிந்தார் போல் தரையில் மண்டியிட்டு அமர்ந்துவிட்டாள் .பின் எழுந்தவள் அந்த balconyin கம்பிகளை பிடித்தவாறே அந்த ஊரை வெறித்தாள்.

அவள் மனதில் இங்கு வந்ததிலிருந்து தன்னை சுற்றி நடக்கும் விசித்திரமான சம்பவங்கள் ஒன்றொன்றாய் நினைவில் வந்து போக தன் கையை எடுத்தவள் அதிலிருந்த பச்சை குத்திய இடத்தை தன் கைகளால் வருடினாள் .அவள் எண்ண அடுக்குகளில் அந்த பச்சை எப்போது குத்தப்பட்டது என்ற நினைவே இல்லை .முழுவதும் குழம்பியவள் அந்த ஊரை நோக்கி ஓர் பார்வையை செலுத்திவிட்டு இங்கு நடக்கும் சம்பவங்கள் அனைத்திற்கும் விடை காண வேண்டுமெனில் இந்த ஊரிற்குள் சென்று விசாரிக்க வேண்டுமென்று முடிவெடுத்துக்கொள்ள கொஞ்சம் கொஞ்சமாய் ஆதவன் மேற்கில் மறைய துவங்கினான் .

பின் தன் முகத்தை நன்றாய் தண்ணீரில் அடித்து கழுவியவள் கீழே இறங்கி செல்ல அங்கே ஆதேஷும் அஜயும் அப்பொழுதே தோட்டத்திலிருந்து உள்ளே வந்திருக்க வேதித்யாவோ உள்ளே சமைத்துக்கொண்டிருந்தாள் .ஏதோ ஒரு யோசனையிலேயே உள்ளே சமையல் கட்டிற்கு சென்றவள் வேதித்யாவின் அருகில் நிற்க அவள் வந்ததை உணர்ந்த வேதித்யா அவளை நோக்கி திரும்பியவள் ஒரு குறுநகையோடே "வாடி வா இப்போ தான் விடுஞ்சுச்சா காலைல ரூம்ல தூங்க ஆரம்பிச்சவ இன்னும் தூங்கிட்டு இருந்திருக்க"என்க

ஆதிராவோ ஏதும் காதில் விழாதவாறு நின்றுகொண்டிருக்க அவளிடமிருந்தது சத்தமே வராததை உணர்ந்து திரும்பிய வேதித்யா அவள் ஏதோ சிந்தனையிலேயே சுழன்றுகொண்டிருப்பதை பார்த்து அவள் கையை பிடித்து திருப்ப ஆதிராவோ அப்போது தான் ஏதோ கனவிலிருந்து விழிப்பவளை போல் திடுக்கிட்டு அவள் புறம் திரும்பினாள்.

வேதித்யா "ஹே என்னாச்சுடி ஒரு மாதிரி இருக்க காய்ச்சல் எதுவும் இருக்கா?"என்று நெற்றி கழுத்தை தொட்டு பார்க்க அவளிடம் கோவிலில் உள்ளே நடந்ததை கூற துடித்த மனதை சிரமப்பட்டு அடக்கிய ஆதிரா சிறு புன்னகையோடு அவள் கையை பற்றியவள் "ஒண்ணுமில்லடி நாளைக்கு ஊருக்குள்ள போய் விசாரிக்கணும் "என்க

வேதித்யாவிற்கோ காலையில் கோவிலில் நடந்த சம்பவங்கள் மீண்டும் கண்ணின் முன் தோன்றி உடல் நடுங்க ஆதிராவிடம் திரும்பியவள் "ஆதி வேண்டாம்டி நம்ம sirta நானே கால் பண்ணி பேசுறேண்டி இந்த ஊருல எதுவுமே சரி இல்ல போயிறலாம்டி வேற ஏதாச்சும் ப்ராஜெக்ட் பண்ணிக்கலாம் "என்க

ஆதிராவோ மறுப்பாய் தலை அசைத்தவள் "இங்க என்ன நடக்குதுங்குறத தெருஞ்சுக்காம நா வர மாட்டேன்டி ."என்றவள் அவள் பேசுவதற்கும் இடமளிக்காமல் விறு விறு வென்று வெளியே வந்தவள் அங்கு அமர்ந்திருந்த ஆதேஷிடமும் அஜயிடமும் பொதுவாய் "நாளைக்கு காலைல சீக்கரம் தயாராகி இருங்க நாம ஊருக்குள்ள போய் விசாரிக்க போறோம் "என்று விட்டு தன் அறைக்கு சென்று அடைந்து கொண்டாள் .

அடுத்த நாள் காலை பற்பல திருப்பங்களை இவர்கள் வாழ்வில் அள்ளித்தருவதற்கென்றே விடிந்தது .

ஆதவன் தன் ஒளிக்கிரனைகளை உலகிற்கு பரப்பிக்கொண்டிருந்த நேரம் ஆதேஷ்,ஆதிரா,அஜய் ,வேதித்யா நால்வரும் அந்த மங்கலாபுரி ஊருக்குள் நடந்து சென்றுக்கொண்டிருந்தனர் .

அவ்வூரின் உள்ளே நடந்து சென்று கொண்டிருந்தவர்களை வரவேற்றதென்னவோ இரு பக்கமும் பச்சை பசேலென்று தலை சாய்த்து நிலம் நோக்கிய கதிர்களை உடைய நிலங்களும் அதில் வேலை செய்து கொண்டிருந்த மக்களும் தான் .வறண்ட பூமியாய் கேட்பாரற்று இருக்கும் என்று நினைத்து வந்தவர்களுக்கு இது ஆச்சர்யத்தை தந்தது .

அவர்களை நோக்கி இந்நால்வரும் செல்ல வேலை செய்துக்கொண்டிருந்தவர்களில் ஒரு பெண் அவர்களை ஆராய்ச்சி பார்வை பார்த்தவர் "யார் புள்ளைங்களா நீங்க பாக்க பட்டணத்து புள்ளைங்க மாறி இருக்கீங்க இங்க என்ன சோலியா வந்தீக?"என்க

ஆதிராவோ "வணக்கம் அம்மா நா ஆதிரா இது எங்க நண்பர்கள். நாங்க ஒரு வேலையா இந்த ஊருக்கு வந்துருக்கோம் "என்க

அவரோ "அப்டியா புள்ளைங்களா "என்றவர்

அங்கிருக்கும் ஒரு பெண்ணிடம் திரும்பி "த... சரசு புள்ளைங்க கிட்ட பேசிட்டு வந்துருறேன் சட்டு புட்டுன்னு வேலைய பாருங்க "என்று விட்டு

அவர்களிடம் திரும்பியவர் "நீங்க வாங்க புள்ளைங்களா "என்றுவிட்டு முன்னே செல்ல ஆதிராவும் மற்ற நண்பர்களும் அவரை பின் தொடர்ந்தனர் .

அந்த வயல்காட்டிலிருந்து சிறிது தூரத்திற்கு பின் ஓர் குடில் போன்ற அமைப்பிருக்க அதற்குள் அவர் நுழைய இவர்களும் உள்ளே சென்றனர்.

அங்கே ஓர் ஓரத்தில் இருந்த ஓலைப்பாயை விரித்த அந்த பெண்மணி அவர்களை உட்கார சொல்லி விட்டு தன் முந்தானை தலைப்பால் முகத்தை துடைத்தவர் "சொல்லுங்கப்பா "என்க

வேதித்யா "இந்த ஊருல எத்தனை வருஷமா இருக்கீங்க ?"என்க

அவரோ "பொறந்ததுல இருந்து இங்க தான்மா இருக்கேன் "என்க

ஆதிரா "அப்போ உங்களுக்கு தெருஞ்சுருக்கும்னு நினைக்குறேன் ஏன் இந்த ஊருல இருந்து எல்லாரும் வெளி ஊருக்கு போறாங்க ?ஏன் இங்க கோவிலுக்கு யாருமே போக மாட்டேங்குறீங்க? இங்க வந்ததுல இருந்து நெறய மர்மமான விஷயங்களா நடக்குது ஏன் இருவது வருஷத்துக்கு முன்னாடி அப்டி என்ன தான் நடந்துச்சு ? இங்க ஏதோ ஒரு அருவி இருக்குறதாவும் அங்க போன யாரும் இது வரைக்கும் உயிரோட வந்ததில்லனும் கேள்விப்பட்டோம் அது எங்க இருக்கு "?என்க

அவரோ அவர்கள் இந்த ஊரை சுற்றி பார்க்க வந்திருக்கிறார்கள் என்று நினைத்து பேச முன்வர அவள் கேட்ட கேள்விகளில் இத்தனை வருடங்களாய் மனதில் புதைந்திருந்த நினைவுகள் அனைத்தும் கண் முன் விரிந்து கை கால்கள் நடுங்க துவங்க முகத்தில் வியர்வை துளிகள் வெளியேற துவங்கியது .அவரது திடீர் முகமாற்றத்தை பார்த்து குழம்பிய ஆதிரா அவர் கையை பிடித்து "என்னாச்சும்மா ?"என்க

அவரோ கையை தட்டி விட்டவர் "முதல்ல இங்க இருந்து கிளம்புங்க இதை பத்தி ஆராய்ச்சி பண்றதா இருந்தா இந்த ஊருலயே நீங்க இருக்க வேணாம் கிளம்புங்க கிளப்புக்கு" என்று திடீரென்று கத்த

ஆதிராவோ அவரை நோக்கி திரும்பியவள் "அம்மா எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க அப்டி என்ன தான் நடந்துச்சு சொல்லுங்கம்மா ப்ளீஸ்" என்று அவர் கையை பிடிக்க அப்பொழுதே அவள் கையிலிருந்த பச்சை குத்திய இடத்தை பார்த்தார் .

அவள் கையில் இருந்த அந்த பச்சையை பார்த்தவர் என்ன நினைத்தாரோ திடீரென்று கண்களில் ஆச்சர்யம் மின்ன அவளை நோக்கி வெடுக்கென்று நிமிர்ந்து உதடு துடிக்க ஏதோ கூற வர அவள் பின் நின்றிருந்த ஆதேஷோ கண்களாலேயே வேண்டாம் என்றான். பின் சற்று நேரத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவர் .
அங்கிருந்த பாயில் அமர்ந்து தண்ணீரை பருகியவர் அவர்களை நோக்கி ஒரு விரக்தி புன்னகையை சிந்திவிட்டு

"இந்த ஊரு இருபது வருஷத்துக்கு முன்னாடி அதோட பேருக்கேத்த மாதிரி மங்களகரமா இருந்த ஊருமா குழந்தைங்களோட சிரிப்பு சத்தம்,வயக்காட்டுல வேலைப்பாக்குறவுங்களோட குளவி சத்தம் ,வயசு பொண்ணுங்களோட கொலுசு சத்தம்னு மகிழ்ச்சிக்கு கொஞ்சமும் குறைவில்லாம இருந்துச்சு .

என்னதான் அரசாங்கம் வந்தாலும் எங்க ஊருல எப்பவுமே நாங்க எந்த முடிவு எடுத்தாலும் அதை எங்க ப்ரபுட்ட கேட்டு தான் எடுப்போம் ."என்க

அஜய் "ப்ரபுனா?...."என்க அவர் ஏதோ கூறவருமுன் வெளியே பலத்த காற்று புயல் காற்றாய் மாறி வீச அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த அந்த பெண்மணி திடீரென தொண்டையை பிடித்துக்கொள்ள அவர் குரல்வளையில் நரம்புகள் புடைக்க சற்று நேரத்தில் ரத்த வாந்தி எடுக்க ஆரம்பித்தார் .

அதை கண்டு பதறிய நால்வரும் அவரை நோக்கி செல்ல வாசலில் கருமை நிறம் முழுதாய் பூசிய உருவமொன்று தன் ரத்த சிகப்பு நிறங்களை கொண்டு அந்த பெண்மணியை க்ரோதமாய் முறைத்துக்கொண்டிருந்தது .

சற்று நேரத்திற்கெல்லாம் அந்த பெண்மணி மூர்ச்சையாகிவிட வெளியே ஓடி சென்று அங்கே வேலை பார்ப்பவர்களை அழைத்து வந்தான் ஆதேஷ் .அவர்கள் அவரை பரிசோதித்துவிட்டு அவர் முகத்தில் தண்ணீர் தெளிக்க கொஞ்சம் கொஞ்சமாய் கண்களை திறந்தார் அந்த பெண்மணி.

அஜய் "என்னாச்சு அவுங்களுக்கு நல்லா தான் பேசிட்ருந்தாங்க திடீர்னு ரத்த வாந்தி எடுத்து மயங்கிட்டாங்க"என்க

அங்கிருந்த ஊர்காரர்களில் ஒருவர் "எம்மா இந்த ஊற பத்தி விசாரிச்சீங்களா ?"என்க

ஆதிரா தயக்கமாய் மேலும் கீழும் தன் தலையை ஆட்ட அவர்களோ "அது தான் அதுனால தான் இப்டி ஆயிருக்கு. அம்மா உங்கள கை எடுத்து கும்புடுறோம் வந்தீங்களா ஊர சுத்தி பாத்தீங்களா என்னதயாச்சும் எழுதுநீங்கலானு போங்கம்மா ஆராய்ச்சி பண்றேன் உண்மைய கண்டுபுடிக்குறேன்னு ஆரம்பிசீங்கன்னா போறது உயிரா தான் இருக்கும் இது பொதை குழி நீங்களும் மூழ்கி எங்களையும் மூழ்க வச்சுராதீங்க. கை எடுத்து கும்புடுறேன் கெளம்புங்கம்மா "என்க நால்வரும் வெளியே வந்தனர் .

அஜயும் வேதித்யாவும் முன்னே செல்ல ஆதிரா ஆதேஷுடன் நடந்து வந்துகொண்டிருந்தாள்.அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டார் போல் இருக்க எண்ணங்களின் பிடியில் சுழன்றுக்கொண்டிருந்தவளை தோளில் படிந்த ஆதேஷின் கரத்தின் ஸ்பரிசம் நிகழ்வுக்கு கொண்டு வந்தது .

அவள் அவனை பார்க்க அவனோ "ஆதி feel பண்ணாத எந்த பிரச்னைக்கும் ஒரு வழி இருக்கும் அதை கூடிய சீக்கரத்துல கடவுள் காட்டுவார்."என்க அவளால் உதட்டில் ஓர் சிறு புன்னகை உறைந்தது .அவள் கையை தன்னோடு கோர்த்துக்கொண்டவன் நடக்க துவங்க அதிராவின் காதிலோ பின்னிருந்து கேட்ட குரலில் இருந்து வந்த வார்த்தைகள் மனதில் ஆழமாய் பதிந்தது '.

இரவொன்று இருந்தால் பகலொன்று உண்டு

ஒளியொன்று இருந்தால் இருளொன்று உண்டு

இருளும் ஒளியும் ஒன்றை ஒன்றெதிர்க்க

யுத்தத்தை சித்ததால் வென்றிடு

முடிவொன்று இருந்தால் ஆரம்பமொன்று இருக்கும்

நெருப்பின்றி புகையாது

வழி பிறக்காமல் முடியாது

முடிவின் மர்மத்தை அவிழ்க்க

ஆரம்பத்தின் எல்லைக்கு சென்றிடு

என்ற வார்த்தைகள் மனதில் பதிய குரல் வந்த திசையை அவள் நோக்க அங்கோ ஒருவரும் இல்லை அனைத்தும் விசித்திரமாகவே உள்ளதென்று நினைத்தவள் மனதில் மர்மத்தை அவிழ்க்க வேண்டுமென்று உறுதி பிறக்க அவள் முன்னே செல்ல அவள் செல்லும் பாதையை ஒரே சிரிப்புடன் வெறித்துக்கொண்டிருந்தார் அன்று ஆதேஷின் முன் தோன்றிய அந்த முதியவர் .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro