28

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அன்றைய இரவு முடிய நிலவு மறைந்து பொழுதும் புலர்ந்து ஆதவன் தன் செந்நிற கதிர்களை உலகத்தில் பரப்ப தங்கள் பிரயாணத்தை மீண்டும் தொடங்கினர் மூவரும் .

சற்று நேரப்பிரயாணத்திற்கு பின் ஒரு இடத்தில் ஆதேஷ் சென்றுகொண்டிருந்த குதிரையின் கால் முன்னேற அதுவரை சீராய் இருந்த தரை மாறி திடீரென பெரும் குழி ஒன்று உருவாக குதிரை கவிழப்போகும்முன் அதன் மூக்கில் கட்டப்பர்ட்டிருந்த கயிறை ஆதேஷ் தன் பலம் கொண்டமட்டும் பிடித்திழுக்க குதிரை மல்லாக்க விழ ஆதேஷும் ஆதிராவும் குதிரையுடன் சேர்ந்து தரையில் மல்லாக்க விழுந்தனர் .

கணநேரத்தில் நடந்துவிட்ட சம்பவத்தில் அருள் மொழி பதறி குதிரையை நிறுத்தியவன் இறங்கி அவர்கள் அருகில் வர அவர்கள் இருவருமோ எதிர்பாராமல் நடந்த சம்பவத்தில் பதட்டத்தில் இதயத்துடிப்பு தாறுமாறாக எகிறுத்துவங்க தம்மை சீர்படுத்திக்கொள்ளவே இருவருக்கும் சற்று நேரமானது .புரவிகள் இரண்டையும் அருகில் இருந்த மரத்தில் கட்டியவர்கள் அந்த பாதையின் முன்னே நிற்க ஆதேஷ் அப்பாதையை வெறித்தவாறே கூறினான் "புதைகுழிகள் நிறைந்த பாதையை அடைந்துவிட்டோம் "என்க

அருள் மொழி "இதை எப்படி கடப்பது ?"என்று யோசிக்க

சற்று யோசித்த ஆதிரா ஆதேஷிடம் திரும்பியவள் "ஆது அத்தான் தான் மேஜிக் பண்ணுவாருள நடந்தா தான புதைகுழில மாட்டுவோம் magicla பாலம் மாறி ஏதாச்சும் உருவாக்குனா என்ன ?"என்க

அருள் மொழியோ "செய்யலாம் ஆதிரா எனில் புதைகுழிகள் இருக்கும் இடத்திற்கு மேல் என்னுடைய மாந்த்ரீக ஷக்தி வேலை செய்யாது ."என்க அவளோ இருந்த ஒரு வழியும் போனதா என்று முகத்தை தொங்கப்போட ஆதேஷும் அருள்மொழியும் அங்கிருக்கும் பாறைகளை உருட்டிவிட புதைகுழிகள் பாறைகள் உள்ளே போன அடுத்த வினாடி எங்கே இருக்கிறதென்றே தெரியாதவாறு தரையோடு தரையாய் மறைந்து விட்டது .

அது சறுகளான பாதையாய் இருப்பதால் ஒரு குறிப்பிலிட்ட தூரத்திற்கு பின் அவர்கள் கண்களிற்கெதுவும் தெரியவில்லை .மூவரும் அங்கிருந்த மரத்தின் நிழலில் யோசித்தவாறே இருக்க திடீரென்று என்ன தோன்றியதோ ஆதிரா அருகிலிருந்த மரத்தில் சரசரவென ஏறிட அவள் மரம் ஏறுவதை கண்டு பதறிய அருளும் ஆதேஷும் "ஹே என்ன செய்கிறாய் ஆதி இறங்கு கீழே கீழே இறங்கு "என்றிட

அவளோ "ஷு சும்மா இருங்க ரெண்டு பெரும் நா ஏறாத மரமும் இல்ல பறிக்காத திருட்டு மங்காவும் இல்ல "என்றவள் மேல் கிளைக்கு ஏறி அங்கிருந்து எதையோ பார்த்தவள் பின் ஹைய் என்று ஒரு ஒரு கிளையாய் தாவி தாவி கீழே குதிக்க

அவள் குதிப்பதை கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த ஆதேஷ் "ஹ்ம்ம் இதை மட்டும் குரங்கு பாத்துருந்துச்சுனா அவமானத்துல தூக்குல தொங்கிருக்கும் இந்த குதி குதிக்குற "என்க

அவளோ அவனை முறைத்தவள் பின் அருளிடம் திரும்பி "அத்தான் இங்க இருந்து கீழ வரைக்கும் சரிவான பாதையா தான் இருக்கு அதுக்கப்புறம் ஒரு சின்ன குளம் மாறி இருக்கு அதுனால அதுகப்புறோம் புதைகுழி இருக்க வாய்ப்பில்லை .அந்த குளத்துக்கு பக்கத்துலயே ஒரு பெரிய ஆலமரம் இருக்கு .நீங்க அம்பு விட்டா எவ்ளோ தூரத்துக்கு விடுவீங்க ?"என்க

அருள்மொழியோ "என்னால் இரு காத தூரம் வரைக்கும் அம்பெய்ய முடியும் ஆதிரா "என்க

அவளோ "சூப்பர் இது மிஞ்சி மிஞ்சி போனா ஒரு கிலோமீட்டர் தான் இருக்கும் சோ நீங்க ஏதாச்சும் இங்க இருக்குற கொடிகள்ல அம்புல கட்டி இங்க இருந்து அந்த ஆலமரத்துல மாட்டுறமாரி பண்ணீங்கன்னா இன்னொரு முனைய இங்க கட்டிட்டு தொங்கிட்டு போயிரலாம் "என்க

ஆதேஷ் "ஆனா அந்த அம்புல விட்டு அந்த முனைல போய் பதியுறது நம்ம எடையை தங்குற அளவுக்கு ஸ்ட்ரான்காஹ் இருக்கணுமே"என்க

ஆதிராவோ "அங்க அந்த ஆலமரத்துல ஒரு சின்ன இடுக்குமாறி இருக்கு அதுக்கு நடுவுல விட்டுட்டா ஸ்ட்ரான்காஹ் இருக்கும் வேற வழி இல்ல இதை தான் பண்ண முடியும் "என்க இருவருக்குமே அது தான் சரி எனப்பட்டது .

பின் அங்கே அருகில் கிடந்த கொடிகளிலேயே மிகவும் நீளமான கோடியாய் பார்த்து பிரித்தெடுத்தவர்கள் ஒரு அம்பில் அந்த கொடியின் ஒரு முனையை முடிய அந்த மரத்தின் மேல் ஏரிய அருள் மொழி வேந்தன்  தன் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பினை அந்த ஆலமரத்தின் இடுக்கில் மாட்ட இன்னொரு முனையினை அந்த மரத்திலிருந்து உயரமான கிளையில் கெட்டியாய் கட்டினான் .

பின் ஆதேஷும் ஆதிராவும் அருளும் மேலே முதுகில் தங்கள் உடமைகள் அடங்கிய சிறு பையுடன் ஏற அவளின் துப்பட்டாவின் ஒரு பகுதியை மூன்று பாகங்களாய் பிரித்து கயிறில் போட்டு பிடித்துக்கொண்டவர்கள் அந்த மரத்திலிருந்து அந்த ஆலமரம் வரை தொங்கிக்கொண்டே கீழே வந்தனர் .அது சரிவான பாதையாக இருந்ததாலும் அக்கொடி வழவழப்பு தன்மையோடு இருந்ததாலும் எந்த வித தடையும் இன்றி மூவரும் அக்குளக்கரையை அடைந்துவிட்டனர் .

பின் கயிறில் இருந்து கீழே குதிக்க அங்கிருந்த குளத்தின் சௌந்தரியத்தை கண்டு மூவரும் சொக்கிப்போயினர்.சூழ்ந்திருந்த மூலிகை மரங்களின் நடுவே பாசிப்பச்சை வெளிப்புறத்திலும் கொஞ்சம் உள்ளே தெளிந்த இளநீல நிறத்திலும் சுற்றி புச்செடிகள் வரப்பு போல் அமைந்து அதிலிருந்த பூக்கள் தந்த சுகந்தமும் அக்குளத்தில் ஓரத்தில் ஆங்காங்கே உலவிய மயில்களும் அவ்விடத்தின் அழகை ஆயிரம் மடங்கு கூட்ட அக்குளத்தில் ஒரு ஓரத்தில் இயற்கையாய் ஒரு சிறு தடுப்பு போல் பாறைகளால் ஓர் மறைவிடம் இருக்க ஆதேஷும் அருள்மொழியுமோ ஒரு முறை தம் முகத்தை பார்த்துக்கொண்டவர்கள் பின் தமது மேலங்கியை கழட்டிவிட்டு குளத்தில் ஒரே குதியாய் குதித்துவிட்டனர் .

அவர்கள் குதித்ததில் தன் மேல் சிதறிய நீர்துளிகளை தன் கை கொண்டு மறைத்தவள் சிறுபிள்ளைகளாய் மாறி விளையாடும் அண்ணன் தம்பியரை பார்த்து சிரித்துவிட்டு ஒதுக்குபுறமான அந்த பாறை மறைவிற்குள் தானும் சென்று நீராடியவள் பின் வெளியே போட்டிருந்த ஒரு பையில் இருந்து ஆடையை எடுத்து மாற்றிவிட்டு வரலாமென்று ஓர் மரத்தின் பின் சென்றாள் .

அவள் சென்று ஆடையை மாற்றிவிட்டு திரும்பி நடக்க ஐந்தடி அவள் நடக்கயிலேயே காலில் ஏதோ முள் போன்று தைத்தது .ஸ்ஸ் என்று முனங்கியவள் கீழே குனிந்து காலை பார்க்க அவள் தோளில் ஒரு தளிர் கரம் படர பதறி சட்டென அவள் திரும்பி பார்க்க அவள் முன்னே ஓர் முதியவர் (கதையின் ஆரம்பத்தில் ஆதேஷின் கண்களிற்கு தெரிந்த அந்த முதியவர் ) கண்கள் உள்ளே சென்றிருக்க தலை முடி முழுதும் வெண்பஞ்சின் நிறத்தில் வெளுத்திருக்க சுருங்கி போய் இருந்த அந்த முதியவர் அவளை பார்த்து ஓர் கனிவான புன்னகையை சிந்தினார் .சுற்றி முற்றி பார்த்தவள் "யார் தாத்தா நீங்க இங்க எப்படி வந்தீங்க ?"என்க

அவரோ "முதலை அறிந்தாய் முடிவை நோக்கி செல்கிறாய் எனில் இடையில் இருக்கும் ரகசியத்தை அறியாது செல்கிறாயே ?"என்க

அவளோ அவர் ஏதோ குறிப்புடன் பேசுகிறார் என்று உணர்ந்தவள்"என்ன சொல்கிறீர்கள் புரியவில்லை "என்க

அவரோ ஒரு இளநகை புரிந்தவர்

"அழிவின் முடிவில்

அவன் வீழ்ச்சியின்

மூலத்தை அவன்

புதைத்திருக்க

வழியதை யான் தர

தடை அதை உடைத்து

விடுகதையை அவிழ்த்து

முற்பாதி நீ செல்ல

பிற்பாதியோடு அவ்விடம்

விரைந்திடு

வெற்றியை ஈட்டிட "என்றவர் அவள் புரியாது விழித்து திரும்பிய அடுத்த நொடி அவ்விடம் விட்டு மறைய சுற்றி முற்றி தேடியவள் அவர் எங்கும் இல்லாது போக அவ்வதிசயத்தை கண்டு விக்கித்தவள் கீழே குனிந்து பார்க்க ஏதோ காந்தள் துணி போல் இருந்தது

.கீழே குனிந்து அதை எடுத்து பார்த்தவள் அதில் ஏதேதோ வரைபடம் இருக்க அதை புரியாது விழித்தவள் எனோ அதை தன்னுடன் பத்திரப்படுத்திக்கொண்டு ஆதேஷும் அருள்மொழியும் இருந்த இடத்திற்கு விரைய அங்கே இருவரும் உடை மாற்றி கிளம்ப தயாராய் இருந்தனர் .

மூவரும் அந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் பேசிக்கொண்டே நடந்து செல்ல முன்னே சென்ற ஆதேஷ் காலை முன்னே ஒரு அடி வைக்க அடுத்த நொடி தடக் என்று ஏதோ காலிற்குக்கீழ் முறியும் சத்தம் கேட்க அவன் சுதாரிக்கும்முன்னே தன் அகன்ற வாயை திறந்தவாறு கோரப்பற்கள் தெரிய பசியோடு ஒரு முதலை அவன் காலை கவ்வ நொடியில் தடுமாறியவன் பின்னே வீழ அது அவன் காலை கவ்வியவாறே மேலே எழும்பி குதித்து அவன் மேல் பாய நொடியில் சுதாரித்த அருள்மொழி இடையில் சொருகியிருந்த வாளை அதன் குரல்வளையை நோக்கி செலுத்த அவ்விடத்திலேயே துடிதுடித்து இறந்தது அந்த முதலை .இறந்த பின்னும் அவன் காலை கவ்வியவாறே இருக்க ஆதேஷோ தன் இடையிலிருந்த வாளை உருவியவன் அதன் தலையை துண்டாகி தன் காலை அதிலிருந்து விடுவித்துக்கொண்டான் .

நடந்துகொண்டிருந்த கலவரத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருந்தவள் பின் பதறியபடி ஆதேஷின் அருகே சென்று அவன் காலை பார்க்க அந்த முதலையின் இருபுற தாடையின் பற்களும் அவன் காலில் ஆழமாய் பதிந்திருக்க ரத்தம் வழிந்துகொண்டிருக்க அதை பார்த்தவள் காதல் கொண்ட மனமும் ரத்தத்தை சிந்தியது .அவன் அருகில் முட்டி இட்டவள் கண்களில் வழிந்த நீருடன் "ஐயோ ஆது என்னடா இது இப்டி இருக்கு .இவ்ளோ பிளட் லாஸ் "என்று தன் துப்படாவின் ஒரு பகுதியை கிழித்து காலில் கட்டிவிட

அந்த வலியிலும் தன்னவள் அழுவது பொறுக்காமல் தன் வலியை மறைத்தவன் சிரித்தவாறு "ஹே லூசே ஒண்ணுமில்லடி லேசா முள்ளு குத்துன்னு மாறி தான் சரி ஆயிடும் "என்க அவளோ என்ன செய்வதென்று தெரியாமல் அருள்மொழியை தேட அவனோ ஓடிப்போய் பச்சிலைகளை பறித்துவந்தவன் ஆதேஷின் காலில் அதை பிழிந்துவிட்டு பின் ஏதேதோ மந்திரங்கள் கூறி அவ்விடத்தை மூன்று முறை நீவிவிட அந்த இடத்தில ஒரு சிறு ஒளி பரவியது ,

.அவன் செய்த மந்திரோபதேசத்தில் அதீத வலியில் துடித்த ஆதேஷிற்கு பின் இரண்டு நிமிடத்தியிலேயே காயம் இருந்த இடம் தெரியாமல் தடமின்றி மூடிவிட ஆதிராவிற்கு அப்பொழுது தான் மூச்சே சீராக வந்தது .

பின் மெதுவாய் அவனை தோள் கொடுத்து அருள் தூக்கிட

அங்கே உடைந்திருந்த மூங்கிலின் பகுதியை பார்த்தவர்களிற்கு அப்பொழுதே புரிந்தது இதுவே அந்த பிரம்மாண்ட அகழி என்று .

புதைகுழியை தாண்டிவிட்டவர்கள் கால் வைத்தாலே முறிந்துவிழும் அகழியை தாண்ட வழிதெரியாது குழம்பி நின்றனர் .சரிவான பகுதி என்றால் அங்கு செய்ததை போலவே செய்திருக்கலாம் எனில் இதுவோ மேடாக உள்ளதே.சுற்றிவிட்டு போகலாம் என்று பார்த்தல் அந்த காட்டுப்பகுதியில் இந்த ஆழியின் அளவிற்கு அது அனைத்துமே ஒரு மனிதனின் விறல் அளவு விஷ கொடுக்குகள் உள்ள செடிகளும் புதர்களும் தரையில் மண்டிக்கிடக்கும் இடமாக இருந்தது .மூவரும் தீவிர யோசனையில் இருக்க அப்புறம் பார்வையை திருப்பிய அருளிற்கு கண்ட காட்சியில் முகத்தில் இன்னதென சொல்ல முடியாத பாவமொன்று குடியேறியது . 

Eeeee sry for late update.oru happy news guys enaku na nenacha course naa aasapatta collegelaye councellingla kedachuruchu adhaan konjam busy aayten one weekaah .ellaarum sweet eduthukonga

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro