31

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

happy independence day

மூவரும் அந்த அரண்மனைக்குள் அந்த காவலர்களின் உடைகளை தரித்துக்கொண்டு உள்ளே செல்ல வழியில் காவலர்கள் அதிகமின்றி இரண்டு அல்லது மொன்று பேறே கண்ணில் தென்பட்டன .இத்தனை தடைகளை தாண்டி எவரும் வந்துவிட முடியாதென்ற மிதப்பில் நீலகாந்தன் காவலிற்கான வீரர்களை சொற்ப அளவிலேயே நியமித்திருந்தான்.

அந்த அரண்மனையின் உள் பக்க கட்டமைப்பை மூவரும் ஆராய்ந்து கொண்டே செல்ல அங்கே சிறைக்கு செல்லும் பாதையினை கண்டுபிடிப்பது சற்று சவாலாகவே இருந்தது .அரண்மனையோ நான்கு பாகங்களாய் பிரிக்க பட்டிருக்க அவர்களும் நான்கு முறை சுற்றி சுற்றி வந்து விட்டனர் எனில் எந்த பக்கம் பார்த்தாலும் வழிகள் அனைத்தும் ஒரே போல் இருக்க வரைபடம் இருந்தும் வழி அறிய முடியாமல் தவித்தனர் மூவரும் .

அருள்மொழி "சா என்ன இது அத்தனை வழிகளும் ஒரே போல் உள்ளது!இரண்டு நாழிகையாய் நாமும் உள்ளே சுற்றி சுற்றி வந்தாயிற்று எனில் எந்த முன்னேற்றமும் இல்லையே ."என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில் அவர்கள் மூவரையும் நோக்கி பின்னே இரு காவலர்கள் குரல் கொடுத்தனர்.
முகத்தை மூடி இருந்த காரணத்தாலும் அவர்களின் உடையாய் அணிந்திருந்த காரணத்தாலும் பதற்றம் அடையாமல் மூவரும் அவர்கள் முன் வந்து நிற்க ஆதேஷ் "என்ன விஷயம் எதற்காக எம்மை விளித்தீர்கள் ?"என்று கேட்க

அதில் ஒருவனோ "ஆரகாந்தா உங்கள் மூவரின் வரவை தான் வெகுநேரமாய் அரசர் எதிர்பார்த்து காத்திருந்தார் நீங்கள் திரும்பினால் உம்மை கையோடு அழைத்து வர சொன்னார்"என்க

இன்னொருவனோ சித்ராங்கதா என்று அருள் மொழியின் புறம் திரும்பியவன் "இன்னும் மூன்று நாளில் வரும் மகா பௌர்ணமிக்கான யாக பொருட்களை சேர்க்க அனைத்து சிறைக்காவலர்களும் சென்றுவிட்டனர். வர இரு நாழிகைகள் முழுவதும் ஆகலாம் ஆதலால் இப்பொழுது நீ என்னுடன் சிறைச்சாலைக்கு காவலிற்கு வா.தாங்கள் இருவரும் அரசரை சந்தித்து விட்டு இவனுடன் சிறைச்சாலைக்கு வந்துவிடுங்கள் "என்க மூவருக்கும் கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்று காதில் கேட்பதை போல் இருந்தது .

மனதிற்குள்ளே கும்மாளமிட்டவர்கள் சிறு தலை அசைப்புடன் அருள் மொழி ஒருவனுடன் சிறை சாலையை நோக்கி செல்ல ஆதேஷும் ஆதிராவுமோ இன்னொருவனுடன் நீலகாந்தனை சந்திக்க சென்றனர் .அங்கே ஓர் விசாலமான அறையில் வெளிச்சத்திற்காக விளக்குகள் ஏற்றப்பட்டிருக்க அங்கே அலங்காரப்பொருட்களாய் அமைந்தனவை அனைத்தும் மனிதனின் எலும்பிலிருந்து செய்தவையாய் இருக்க விளக்குகளை ஏந்தி இருந்த விளக்கேந்திகளோ மைந்தனின் மண்டை ஓடுகளால் ஆனதாக இருக்க அந்த அறையில் வீசிய மாமிச நாற்றம் உடலை குமட்ட வைக்க ஒரு மனிதன் வாழும் அறையாய் அல்லாது ஒரு ராட்சதன் வாழும் அறையை போல் இருந்தது அவ்வறை.

இருவரும் அந்த மூன்றாமவனுடன் உள்ளே செல்ல தன் தந்தை அன்னை என தன் குடும்பத்தையே சிதைத்த மிருகத்தை காணப்போகும் வன்மம் நிறைந்த கண்களுடன் ஆவலாய் உள்ளே நுழைந்தால் ஆதிரா அவனை பழி தீர்க்கும் வெறியுடன் .அவர்கள் உள்ளே நுழைந்ததும் நிலவொளியில் முகம் மூடி நின்றிருந்தவன் "சென்ற காரியம் என்னானது ?"என்று வினவ

ஏற்கனவே முடிவு செய்திருந்ததை போல் "மன்னிக்கவேண்டும் அரசே தமது தாயார் எம்மிடம் இருந்து தப்பிக்க எண்ணி ஓடியதில் அவரை நிறுத்த யாம் அவர் காலில் அம்பெய்திட தடுமாறியவர் முன்னிருந்த பாறாங்கல் தலையை பலமாய் தாக்கியதில் அவ்விடத்தே உயிர் நீத்துவிட்டார்"என்க

அவனோ சலனமே இல்லாமல் நின்றவன் பின் அவ்விடம் அதிரும் பெரும்சிரிப்புடன் "ஹான் நல்லது என் சொற்படி நடக்காத எவரும்  இவ்வுலகில் வாழ தகுதி அற்றவர்களே. அப்பாழும்கிழம் இறந்தது நன்மையே" என்றிட இருவருக்குமே கோபத்தில் கண்கள் சிவந்தது .பின் அவ்விருவரையும் நோக்கி அவன் திரும்பிட அவனின் கோர முகத்தை இன்றே கண்ணார கண்டாள் ஆதிரா .அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதை போல் நன்று வளர்ந்து கொழுத்த நாகப்பாம்பு படமெடுத்து நிற்பதை போல் இருந்தது அவனை காண்கயில்.கையில் என்றும் காய்ந்திடாத ரத்த தடம்,முகத்தில் வெட்டுக்காயங்கள் அதையும் தாண்டி வன்மத்தையும் வஞ்சகத்தையும் நிறைத்த பழுப்பு நிற கண்கள் என்று மிகவும் அகோரமாய் இருந்தான் அவன் .அமைதியும் ,அழகும், நற்குணமும் ஒருங்கப்பெற்ற விஷாகனின் உடன் பிறந்த தமயன் இவன் என்று அடித்து கூறினாலும் எவரும் நம்ப மாட்டார்கள் அப்படி மலைக்கும் மடுவுக்குமான வித்யாசம் இருந்தது .

பின் இருவர் புறமும் திரும்பியவன்"நீங்கள் செல்லலாம் "என்றுவிட்டு

அவர்களுடன் வந்த இன்னொருவனின் புறம் திரும்பி " நாளை அந்த ஆதிராவினை அவர்களின் ராஜ்ஜியத்தில் இருந்து கவர்ந்து வர நாம் நம் படையினரோடு அவ்விடம் சென்றிட வேண்டும் அல்லவா அதற்கான ஏற்பாடுகள் செய்தாகிவிட்டனவா ?"என்க

அவர்களுடன் வந்த இன்னொருவன் "ஆகி விட்டது மன்னா அவளை இம்முறை எந்த பிசகும் இன்றி கவர்ந்து வந்து விடலாம் "என்க ஆதிராவிற்கோ சிரிப்பதா அழுவதா என்று தெரியாத நிலைமை .

அவன் கூறுவதை கேட்டுக்கொண்ட நீலகாந்தன் இவ்விருவரும் இன்னும் இவ்விடம் விட்டு அகலாதிருப்பதை கேள்வியாய் பார்த்துவிட்டு "உம் இருவரையும் நான் வெளியேற சொல்லிவிட்டேனல்லவா இன்னும் இங்கென்ன செய்கிறீர்கள் அற்பப்பதர்களே "என்று கத்த

ஆதேஷ் "இதோ சென்று விட்டோம் மன்னா "என்று அவளுடன் வெளியே செல்ல

ஆதிரா அவனை ஒரு முறை தீர்க்கமாய் பார்த்தவள் "டேய் பெரியப்பா உனக்கு வைக்குறேண்டா பெரிய ஆப்பா "என்று நினைத்துக்கொண்டு செல்ல முன்னே வைத்திருந்த தண்ணீர் நிறைந்த குவளையை கவனியாது லேசாய் தடுமாறியவள் அதன் முன் குனிந்துவிட முகத்திரை அவிழ்ந்து விட்டது பதறியபடி அதை சரி செய்தவள் பின் ஆதேஷுடன் வெளியே சென்றுவிட்டாள் யாரும் கவனிக்கவில்லை என்ற நினைவில் .

இங்கே அந்த ஒரு காவலனுடன் சிறைச்சாலையை நோக்கி சென்றுகொண்டிருந்தான் அருள் மொழி .மூன்று வருடங்கள் காத்திருந்தவனால் அந்த மூன்று நிமிட பயணத்தை பொறுத்துக்கொள்ள இயலவில்லை .அவனின் ஒவ்வொரு நரம்பும் அணுவும் அவளது அண்மையை வேண்டி யாசிக்க கண்கள் அவளை காணவென்று ஆவலில் வெளியே வந்து வீழ்ந்துவிடுவேனென்ற அளவிற்கு துடிக்க விட்டால் பறந்து சென்றுவிடுவான் எனில் நடந்து தான் செல்ல வேண்டி இருந்தது . அவனை ஓர் இருள் படிந்த மூலைக்கு அழைத்து வந்த காவலன் அங்கிருந்த ஒரு பெரிய யானை சிலை ஒன்றின் தந்தத்தை லேசாய் திருக அந்த யானை சிலையின் வயிற்றுப்பகுதி மெல்ல மெல்ல ஓர் கதவு போல் மேலே எழும்பியது .

உள்ளே ஆங்காங்கே இருபுறமும் கொள்ளிக்கட்டைகள் இருக்க அங்கே ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய அளவு பாதை இருந்தது.அதனுள் சற்று தூரம் உள்ளே நடந்தவன் பின் படிகள் ஏறி ஓர் இரும்பு கதவை போன்ற அமைப்பிற்கு வெளியே நிற்க அருளிற்கு இதயத்துடிப்பு இருமடங்கை தாண்டதுவங்கியது .அந்த காவலன் அந்த கதவின் பூட்டை சாவி கொண்டு திறந்திட உள்ளே தலை முடி தரையை தொட அமர்ந்திருந்தவளின் பக்கவாட்டு தோற்றத்தை வைத்தே தன்னவளை அடையாளம் கண்டு கொண்டவன் ஒற்றை அடியில் அக்காவலனின் தலையை பதம் பார்த்து அவனை மூர்ச்சை அடைய செய்தவன் ஓடி சென்று மூர்க்கத்தனமாக அணைத்துக்கொண்டான் தன் காதல் கண்ணம்மாவை .

மேனியில் ஓர் மின்சார தாக்குதலையும் ஏனோ திடீரென்று இதயத்துடிப்பெகிற தனக்கு சொந்தமான பொருள் தனக்கு பாதுகாப்பை வழங்கும் ஒன்று தன்னிடம் சேர்ந்துவிட்டதை போல் உணர்ந்து கொண்டிருந்தவள் தன்னை வலது புறத்திலிருந்து தோளோடு அணைத்திருந்தவனின் கடினமான கைகள் அது யாரின் ஸ்பரிசம் என்றுணர்த்த அளவில்லா ஆனந்தத்தில் அவனின் கைகளிற்குள் கண்ணீருடன் அடங்கி போனாள் .

அதுவரை பட்ட துன்பங்கள்,வலிகள் தேற்றுவாரின்றி கண்ணீரை இழுத்து பிடித்திருந்தவள் ஆறுதலாய் கிடைத்த தனது மன்னவனின் கைச்சிறையில்
அனைத்திற்கும் சேர்த்து அழுது தீர்த்தாள் .

ஆண்கள் கண்ணீர் அறியாதவர்கள் என்று யார் சொன்னது இதோ சிங்கத்தினையும் தன் சினம் கொண்ட பார்வையில் சீர்குலைய வைக்கும் ஆறடி ஆண்மகன் தன் காதலியின் நிலை கண்டு அழுகிறானே .

பெண்களின் கண்ணீரை விட ஆண்களின் கண்ணீருக்கு மதிப்பதிகம் ஏனெனில் ஆண்களின் கண்ணீர் தனது உள்ளத்தில் உறைந்தவர்களுக்காக மட்டுமே சிந்தும் அரிதான ஒன்றாகும் .அவளை இழுத்து தன் மார்போடு இறுக்கி அணைத்துக்கொண்டவன் அழும் அவளின் தலையை ஆதுரமாய் வருடிவிட்டான் .காற்றிற்கும் இங்கு இடமில்லை என்னவன் என்னை மட்டுமே தாங்க வேண்டுமென்று நினைத்தாளோ அவளும் அவனை இறுக்கி அணைத்து தன் வேதனைகளை அனைத்தையும் அழுது கரைத்தாள்.

அவள் அழுது ஓயும் வரை காத்திருந்தவன் பின் கண்ணீர் திரையிடும் கண்களுடன் அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்க இதழோரத்தின் உறைந்திருந்த ரத்தமும் பலநாளாய் எண்ணெய் காணாது தன் அழகை இழந்திருந்த அவள் களைந்த கேசமும்,உறக்கத்தை தழுவாது கண்ணிற்கடியில் அழுத்தமாய் வரையப்பட்டிருந்த கருவளையமும் ஆயிரம் கதைகள் கூறியது.

அவர்கள் ராஜ்யத்தில் இருந்தவரை சற்று பூசினார் போன்ற உடல்வாகுடன் உடலில் சிறு கீறல் இல்லாமல் சிட்டுக்குருவியை சுற்றி வந்தவள் சிறகொடிந்த கிள்ளையாய் இன்று எலும்புக்கூட்டில் தோல் போற்றியதை போல் நைந்து மெலிந்து காணப்பட இருக்கும் தோற்றம் அவன் நெஞ்சில் ஆயிரம் ஆயிரம் ஊசியை குத்தியதை போன்ற வலியை ஏற்படுத்தியது .

அவள் உடலில் இருந்த வெட்டுக்காயங்கள் அவனுள் நீலகாந்தனை கொல்லும் வெறியை அதிகமாகிக்கொண்டே இருந்தது .அவளின் முகத்தை மென்மையாய் வருடியவன் உயிர் உருக்கும் குரலில் "கண்ணம்மா "என்றழைக்க

அவள் காற்றிற்கும் நோகாதவாறு அவன் முகத்தை தன் இரு கைகளிலும் பற்றியவள்" அத்தான் "என்றழைக்க விழிகள் நான்கும் ஒன்றோடொன்று கட்டுண்டு உயிரின் ஆழம் வரை சென்று தொட்டது .

அவன் அவளின் இதழின் ஓரத்தில் உறைந்திருந்த காயத்தை தொட அவள் ஸ்ஸ் என்று லேசாய் முனங்கினாள் வலியால்.சட்டென தனது விரலை விளக்கியவன் "மிகவும் வலிக்கிறதா கண்ணம்மா ?"என்க

அவளோ முயன்று சிரித்தவள் இடவலமாய் தலை ஆட்டியவள் "என் மன்னவன் என் மனதில் இருக்கும் வரை வலி ஏதும் என்னை நெருங்காதத்தான் "என்று அவனை பார்த்து சிரிப்புடன் கண்ணடிக்க அவள் முகத்தை கண்ணீருடன் கையில் ஏந்தியவன் அசுர வேகத்தில் முகமெங்கும் முத்தமிட்டான் அதில் அவன் அவளின்றி தவித்த தவிப்பு தெளிவாய் தெரிந்தது .

அவன் செய்ததை போல் அவளும் அவன் முகத்தில் தன் முத்திரைகளை பதித்தாள்.பின் விலகி தங்கள் கண்களை பார்த்துக்கொண்டவர்கள் விழிகள் ஆயிரம் கதை பேச அவளின் கண்களை பார்த்துக்கொண்டே அவளை தன்னோடு மேலும் சேர்த்தணைத்தவன் மெதுமெதுவாக அவளின் செவ்விதழை தன்னிதழால் நெருங்க அத்தான் என்று அவள் கூற வந்தது பாதியிலேயே தடைபட்டது அவனின் இதழ் முத்தத்தில் .

அதிர்ச்சியில் கண்களை அகல விரித்தவள் பின் அவன் முடிக்கற்றைகளை பற்றிக்கொண்டு அமைதியாய் அடங்கிப்போனாள் அவன் ஆளுகையில்.அந்த முத்தத்தில் காமம் துளியும் இல்லை இருவரின் மனம் கொண்ட ரணத்தின் மருந்தாக முழுக்க முழுக்க காதலால் நிறைந்தது அவர்களின் அத்தருணங்கள் .எத்தனை நேரம் நீடித்ததோ சிறைவாசலில் ஐயோ என்ற காத்தல் கேட்ட பின்பே இருவரும் பதறி விலகினர்.

அங்கே ஆதேஷும் ஆதிராவும் முதுகு காட்டி நின்றிருந்தனர் .அருள் அசடுவழிய "அ...அ.....அது "என்றிழுக்க

ஆதேஷும் ஆதிராவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டவர்கள் "நாங்க எதையும் பார்க்களப்பா "என்க

ஆதிராவோ "ஆனாலும் அருள் அத்தான் இந்த ரணகளத்துலயும் உங்களுக்கோர் கிளுகிளுப்பு "என்க அருளிற்கோ இது வரை அவன் அறியாத வெட்கம் அவனை அணைத்துக்கொள்ள தலை முடியை அழுந்த கோதினான் சிறு சிரிப்புடன் .

காவலர்கள் வந்துவிட்டனர் என்று பயந்த ஆராதனா பெண்ணின் குரல் கேட்கவும் குழப்பமாய் பார்க்க ஆதேஷ் முதலில் தன் முகத்திரையை விளக்கியவன் கை கூப்பி "வணக்கம் அண்ணி "என்றவன்

பின் தன் உடன்பிறந்தவளை பார்த்து உணர்ச்சிப்பெருகில் நின்றிருந்த ஆதிராவை அவளின்முன் கொண்டு நிறுத்தியவன் அவளின் முகத்திரையை விளக்க தனது ப்ரதிபிம்பமாய் தன் முன் நிற்கும் தன் சகோதரியை ஆனந்தம் பொங்கும் விழியோடு பார்த்திருந்தால் ஆராதனா .

அவளின் முகத்தை நடுங்கும் தன் கரத்தால் தாங்கியவள் "ஆதி "என்க ஆதிராவோ அவளை இழுத்து அணைத்துக்கொண்டாள் "அக்கா" என்ற ஆனந்த கூச்சலுடன் .

பின் சற்று நேரம் நால்வரும் தமது பாசப்போராட்டத்தில் நின்றிருக்க சிறையின் வாசலில் கேட்ட பலத்த கை தட்டலிலேயே சுயத்திற்கு வந்தனர்.அங்கே வாசலில் நின்றவனை பார்த்த நால்வருக்கும் திகைப்பு ஒன்றாய் தோன்ற அவர்களின் திகைத்த முகத்தை குரூரத்துடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் நீலகாந்தன் .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro