5

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அவளை நெருங்க முடியாததால் ஆத்திரமடைந்த கரும்புகை உருவங்கள் அவ்விடம் விட்டு அகன்று செல்ல அந்த உருவங்கள் அவளை விட்டு அகல்வதை சிறு சிரிப்போடு நோக்கிக்கொண்டிருந்தது இரு கண்கள்.

அங்கிருந்து அகன்ற அவ்வுருவங்கள் காடு மேடுகள் தாண்டி பயணித்து ஓர் குகையை அடைந்தன .அந்த குகை வெளியே இருந்து பார்க்கையில் அந்த நிலவவன் உள்ளே நுழைய அங்கு படர்ந்து இருந்த மரக்கிளைகளுடன் போராடிக்கொண்டிருக்க வென்றதென்னவோ மரக்கிளைகள் தான். அந்த குகையின் வெளிப்புறம் முழுதும் ஒரு பொட்டு வெளிச்சமில்லாது இருந்து இருக்க அவ்விடத்தை முதல் முதலில் எதிர்நோக்கும் உலகத்தை கட்டி ஆளும்வீரம் படைத்தவனும் வெலவெலத்துப்போவான் .

அதன் வெளியே படர்ந்திருந்த மரங்களின் வேர்களும் அக்கிளைகளும் அங்கு வீசிய காற்றில் சலசலத்திட அந்த குகையின் அமைப்பு ஏதோ ஒரு கோரமிருகம் தன் பற்கள் தெரியுமாறு வாயை பிளந்துகொண்டிருப்பதை போல் இருக்க அதன் உள்ளே சென்றன அந்த காரிருள் உருவங்கள் .உள்ளே அந்த குகைக்குள் செல்ல செல்ல இருள் பெருகிக்கொண்டே இருக்க சற்று நேரத்தில் தொலைவில் ஒரு வெளிச்சம் தெரிந்தது .அந்த வெளிச்சத்தை நோக்கி பயணித்த அந்த காரிருள் உருவங்கள் அந்த வெளிச்சம் பொருந்திய பகுதிக்குள் நுழைந்தன .

ஒரு வட்டமான நிலப்பரப்பில் அமைந்திருந்த அவ்விடத்தில் ஆங்காங்கே கொள்ளிக்கட்டைகள் வெளிச்சத்திற்காக பொறுத்தப்பட்டிருக்க அந்த பகுதியின் ஒவ்வொரு மூலையிலும் மனிதர்களின் எலும்புக்கூடுகள் மலை போல் குமிந்து கிடக்க ஆங்காங்கே அப்படியே போடப்பட்ட அழுகிய நிலையிலிருந்த பிணங்களின் துர்நாற்றமும் ரத்த வாடையும் சேர்ந்து அவ்விடத்தை நிற்கும் எவருக்கும் குடலை பிரட்ட வைக்க சுவற்றில் எங்கும் நிறைந்திருந்த அதர்வண வேதத்தின் எழுத்துக்களும் கீழே தரையில் அமைந்திருந்த ஓர் மாபெரும் யாககுண்டமும் அதன் முன்னே இரு எலும்புகளின் மேல் வைக்கப்பட்டிருந்த ரத்தம் சொட்டும் மண்டை ஓடும் அவ்விடத்தை நரகத்தின் ப்ரதிபிம்பமாய் காட்டியது .

அந்த கோர இடத்தில் நின்றிருந்த அந்த கரும் உருவங்களின் கண்கள் பயத்தோடு ஒருவரை எதிர்நோக்கி சுற்றி முற்றி நோக்க அவர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அவர்களின் பின்னிருந்து ஒலித்ததொரு சிம்மக் குரல் "சென்ற அலுவல் என்னானது ?"என்று

அந்த கர்ஜிக்கும் குரலில் நடுநடுங்கிய கரு உருவங்கள் நடுங்கிக்கொண்டே "அது அது ப்ரபோ தோல்வி.... அவளை எம்மால் நெருங்க இயலவில்லை"என்று கூற

அதை கேட்ட அந்த உருவத்திற்கு உரியவனோ இருளிலிருந்து கொள்ளிக்கட்டைகளின் வெளிச்சத்திற்குள் வந்தான் .பாதி முகம் ரத்தத்தால் மறைந்திருக்க அவன் கைகளில் இருந்த வாளில் ரெத்தம் சொட்டிக்கொண்டிருந்தது . தலை முடி தோளை தொட கண்களில் இருக்கும் விழிகள் விழிகளா தீப்பந்துகளா என்று என்ன வைக்கும் அளவு கண்களிள் தேங்கி இருந்த பழித்தீ எதிர் இருந்தவரை நடுநடுங்கச் செய்ய முக்கால் வாசி முகத்தை மறைத்திருந்த தாடியும் பறந்து பாறை போல் இறுகி இருந்த தோள்களும் ஆறடியில் ஆஜானுபாகுவான அவன் உருவத்தை முதல் முறை காண்பவரே உடல் வெலவெலத்து போவர் .

அவற்றின் அமைதியை கண்டு மேலும் ரௌத்திரமானவன் "ஒரு காரிகையை கவர்ந்து வர இயலவில்லை என்று கூறிக்கொள்ள வெட்கமாய் இல்லை .இதில் நான்கு வேதங்களிலும் தேர்ந்து தெய்வ சக்தியையும் கட்டுப்படுத்தி வைக்கும் அதர்வண வேதத்தில் அதிபுத்திசாலிகள் என்று மார் தட்டிக்கொள்ளவேண்டியது வேறு,ஒரு சிறு கயிற்றை முறிக்கும் சக்தியும் அற்றுப்போனரனோ உங்கள் கார்மேக வம்சத்தவர்கள்?"என்று ஏளனமாய் கூற

அதில் கோபமுற்ற அங்கிருந்த கரும் உருவங்களில் ன்று முன்னே வந்து "நடந்ததேதும் அறியாது பிதற்றாதே மார்த்தாண்டா.எம்மால் அக்காரிகையை கவர்ந்து வராமல் போனதன் காரணம் அச்சிறு கயிறென்று நினைத்தாயோ?அல்லல் மார்த்தாண்டா நீ நினைப்பதை போல் அவள் சாதாரண அற்ப மானுடப்பிறவி அல்லல்.தெய்வீக சக்திகள் அனைத்தும் நிரம்பப்பெற்றவள்.
அவளை நெருங்க நினைப்பதும் தனக்கு தானே மரணசாசனத்தை எழுதிக் கொள்வதும் சமமாகும் ."என்று கூற

முதலில் பயந்ததை போல் பாவனை காட்டிய அந்த மார்த்தாண்டன் பின் ஏளனமாய் உதட்டை சுழித்தவன் "தெய்வமாம் மரணமாம் .யான் நினைத்த காரியம் நிறைவேறிய அடுத்த கணம் அந்த தெய்வம் என் காலடி சேவகனடா"என்று சிரித்தது "பழையவை அனைத்தும் உமக்கு சிந்தையில் இருந்து அகன்றதோ "என்று கேட்டவன் அடுத்த நிமிடம் அந்த கரும் உருவத்திற்கு மிக நெருக்கத்தில் வந்தவன் "நீர் என்ன செய்வீர் என்பது எமக்கு அவசியம் அன்று எனில் அக்காரிகை இன்னும் முப்பது திங்களுக்குள் எமது கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் இல்லையேல் .."என்று முகத்தை இன்னொரு கரு உருவத்திற்கு நேராய் திருப்பியவன் ஏதோ மந்திரத்தை உச்சரித்து தன் உள்ளங்கையை அதன் புறம் காட்ட அவன் கையிலிருந்து வந்த ஒளியில் துடிதுடித்து சாம்பலானது அக்கரும் உருவம் .

அதை கண்டு அந்த கரும் உருவங்கள் திகைத்து நிற்க அவற்றின் முன் சொடுக்கிட்ட மார்த்தாண்டன் "இது தான் நிகழும்" என்றுவிட்டு அவ்விடம் விட்டு அகல அவன் செல்வதையே வலியுடன் நோக்கிய அக்கரும் உருவத்தின் தலைவன் "யாம் உமக்கு செய்த துரோகம் எம்மை அடிமைகளாக்கிவிட்டதே .எங்கனம் எமக்கு விடுதலை கிட்டும்"என்று நினைத்து கலங்க எங்கோ அடர்ந்த இருந்த வனத்தின் ஓர் பகுதியில் விழுதுகள் முழுதும் அவ்விடத்தை மூடி இருக்க அவ்விடத்தில் ஒரு நொடியில் மின்னலை மிஞ்சும் ஒளிக்கீற்று மின்னி மறைந்தது .

அடுத்த நாள் காலை வேலை அழகாய் விடிய கண்களை கசக்கி எழுந்த ஆதிரா birthத்தில் இருந்து கீழே பார்க்க அங்கோ வேதித்யா நிர்ச்சலனமாய் உறங்கிக்கொண்டிருக்க ஆதேஷும் ஒற்றை கையை தலைக்கு அடியில் வைத்து மற்றொரு கையை நெற்றியில் வைத்து உறங்கிக்கொண்டிருந்தான்.

அவன் உறங்கிக்கொண்டிருக்கையில் அலை அலையான அவன் கேசம் அவன் முன் நெற்றியில் புரள இதழின் ஓரத்தில் உறைந்திருந்த புன்னகை ஆதிராவின் முகத்திலும் புன்னகையை படர விட்டது.

பின் தனது birthilirundhu எழுந்து கீழே குதித்தவள் சென்று பல்துலக்கி, முகத்தை கழுவிவிட்டு கம்பார்ட்மென்டின் மற்றோர் ஓரத்தில் இருந்த கதவில் சாய்ந்து நின்று கதிரவனிற்கு என்றும் போல் ஒரு காலை வணக்கத்தை செலுத்தியவள் நாசியை coffeyin மணம் துளைக்க திரும்பியவள் எதிரே இரு கைகளிலும் coffeyudanum உதட்டில் ஒரு சிறு புன்னகையுடனும் நின்றிருந்தான் ஆதேஷ் .

அவனை கண்டு புன்னகைத்தவள் "குட் மார்னிங்" என்க

அவனோ அவளிடம் ஒரு coffee கப்பை நீட்டியவன் அவள் வாங்கியதும் தன் கையிலிருந்த coffee கப்பை லேசாய் உயர்த்தி "குட் மோர்னிங்"என்றான் .

புன்னகையுடன் அதில் ஒரு சிப் குடித்தவள் "இன்னும் எவ்ளோ நேரம் ட்ராவல் ?"என்க

அவனோ"இன்னும் ரெண்டு மணி நேரம் தான் ஆரா"என்க

அவன் வித்தியாசமாய் தன்னை அழைப்பதில் புருவம் தூக்கியவள் "அதென்ன ஆரா ?எல்லாரும் ஒன்னும் ஆதிரான்பாங்க இல்ல ஆதின்பாங்க நீங்க என்ன ஆராங்குறீங்க?"என்க

அவனோ அவள் கண்ணை பார்த்தவன்" எல்லாரும் அப்டி கூப்பிடறதால தான் நா ஆரானு கூப்பிடுறேன் "என்க

உள்ளே குத்தாட்டம் போட்டவள் தலையை குனிந்தவாறு கண்ணை மட்டும் உயர்த்தி"அதென்ன நீங்க மட்டும் ஸ்பெஷல் ?"என்க அவனோ லேசாய் ஓர் மர்ம சிரிப்பு சிரித்தவன் பதில் ஏதும் கூறாது உள்ளே சென்று விட்டான்.

அவன் செல்லும் திசையையே எட்டிப்பார்த்தவள் பின் திரும்பி இன்று "ஒர்க் அவுட் ஆவுது ஆதி"என்று எஸ் எஸ் என்று கையை முன்னே பின்னே ஆட்டியவள் திரும்ப அங்கே வேதித்யா இவளை முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள் .

அவளை பார்த்தவள் கை அந்தரத்திலேயே நிற்க வேதித்யாவோ அவளை சந்தேகமாய் பார்த்தவள் "என்ன நடக்குதிங்க "என்க

அவளோ மனதில் அய்யயோ இது தெரிஞ்சா என்ன கலாச்சே சாவடிகுகுருவா சமாளி ஆதி என்று நினைத்தவள் வெளியே "அதுவா வேது ஆடு நடக்குது மாடு நடக்குது நீ நடக்குற நா நடக்கிறேன் என்ன வேது இது கூட தெரியாத சின்ன புள்ளையா இருக்க "என்று அவள் கன்னத்தை கிள்ளியவள் உள்ளே விட்டால் போதும் சாமி என்று அவள் பேச்சை ஆரம்பிக்குமுன்னே ஓடிவந்துவிட்டாள்.அவள் செல்லும் திசையை பார்த்த வேதித்யாவோ "இது சரி இல்ல "என்று நினைத்துக்கொண்டாள் .

இரண்டு மணி நேர பயணம் முடிய மங்களாபுரியை வந்தடைந்தனர் ஆதிரா,ஆதேஷ் ,வேதித்யா மூவரும் .

இரு பெண்களும் முன்னே கீழே இறங்கி விட ஆதேஷ் அவர்களிடம் luggageay கொடுத்து விட்டு இறங்கினான் .அந்த ஊரில் அந்த மூவரையும் தவிர்த்து வேறு எவரும் இறங்க வில்லை .

அந்த ரயில் நிலையத்திலும் ஒரு ஈ காக்கா கூட இல்லாது வெறிச்சோடி போய் இருந்தது.இவர்கள் என்ன இது விசித்திரமாய் உள்ளதே என்று யோசித்தபடி ஒருவர் மற்றொருவர் முகத்தை பார்த்துக்கொண்டு நிற்க ஆதேஷ் "ஆரா நீ இங்க இரு நான் போய் வெளிய ஏதும் வண்டி கிடைக்குதான்னு பாக்குறேன் வேதித்யா நீயும் இங்க இரு"என்க

அவன் சென்ற சற்று நேரத்தில் வேதித்யாவிற்கு அவள் அம்மாவிடம் இருந்து கால் வர அதை எடுத்து காதில் வைத்தவள் "ஹலோ அம்மா "என்க அப்புறம் அவர்கள் பேசுவது ஏதும் கேட்கவே இல்லை .phoneai பார்த்தவள் சிக்னல் மிகவும் கம்மியாக இருப்பதை பார்த்துவிட்டு ஆதிராவிடம் திரும்பியவள் "ஆதி ஒரு நிமிஷம்டி சிக்னலே இல்ல வெளிய போய் பேசிட்டு வரேன் இங்கயே இரு "என்று விட்டு செல்ல ஆதிரா அவர்கள் luggageay எடுக்க திடீரென்று சுட்டெரிக்கும் செவ்வானத்தை கருமேகங்கள் சூழ ஆதவன் மேகக்கூடத்திற்குள் தன்னை மறைத்துக்கொண்டான் .திடீரென லேசாய் இடிச்சத்தமும் அவற்றுடன் சேர்ந்து கொள்ள அவ்விடத்தில் வீசிய சூறாவளிக்காற்று புழுதியை கிளப்பி அவ்விடத்தையே முழுதாய் சூழ்ந்தது .

வானிலை திடீரென மாறியதை குழப்பத்துடன் கண்ட ஆதிரா "என்ன திடீர்னு weather change ஆயிருச்சு இப்டி காத்து வேற அடிக்குது என்று வானத்தை நோக்க அவள் வாயை பின்னிருந்து பொத்தியதொரு கரம் ................ 

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro