Covid 19

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

எல்லாரும் எப்படி இருக்கிங்க? எல்லாரும் safe ஆ இருக்கிங்கன்னு நம்புறேன். நானும் Lock down
ல தான் இருக்கேன். வீட்டு வேலைலாம் தனியா பார்த்துட்டு மூனு வேலையும் நம்மலே சமையல் பண்ணி அதை நம்மலே சாப்பிட வேண்டி இருக்கு! கதை எழுதறதை விட்டு என்ன எழுதுறதுன்னு யோசனை பண்றதுக்கு கூட நேரம் பத்த மாட்டேங்குது. சுத்தி நடந்துட்டு இருக்கதை எல்லாம் பார்த்தா சுத்தமா கதைல மனசை ஈடுபடுத்த முடியல. இதெல்லாம் தான் நேத்திக்கி அப்டேட் ரொம்ப லேட்டா வந்ததுக்கான ரீசன்ஸ். இனி மேல் வார அப்டேட்ஸ் கூட அடுத்தடுத்து வராது. எனக்கு each அப்டேட் எழுதுறதுக்கு கொஞ்சம் டைம் தேவைனு உங்ககிட்ட எல்லாம் தெரிவிக்கிறதுக்கு தான் இதை நான் எழுதுறேன். ஒரு அப்டேட் போடறதுக்கு எனக்கு maximum 1 to 2 weeks ஆகலாம். So இனிமேல் அப்டேட்ஸ் இந்த இடைவெளில தான் வரும்.

Actually ஆரோஹி எழுத ஆரம்பிக்கும் போது ஆரோஹி Paris போகும் வரையான கதையை தான் நான் plan பண்ணி வச்சிருந்தேன். அது எனக்கு எப்போதுமே ஒரு கெட்ட பழக்கம் கதையை முன்குட்டியே கம்ப்ளீட்டா plan பண்றது கிடையாது. Flow ல பார்த்துக்கலாம்னு விட்டுடுறது. அடுத்தடுத்து என்ன எழுதப் போறோம்ங்கறது mind ல இல்லாததும் அப்டேட்ஸ் delay ஆகறதுக்கான இன்னொரு reason. எனக்கு டைரக்டர் கௌதம் மேனன் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவர்கிட்ட இருந்து நான் கத்துக்கிட்ட ஒரு விஷயம் நம்ம வாழ்க்கைல நடந்த விஷயங்களை, நம்ம நம்ம வாழ்க்கைல சந்திச்சு impress ஆன நபர்களை, நம்மல ரொம்ப பாதிச்ச விஷயங்களை நம்ம கதைல சொல்றது. அதை தான் நான் சஞ்சனால தொடங்கி ஆரோஹி வரை follow பண்ணிட்டு வாரேன். அதை தாண்டி கதை எழுதுறதுக்குன்னு பெருசா ஒரு effort போடுறது கிடையாது. இந்த கதைகள் ஒவ்வொன்னும் நிறைய நிஜங்களால் ஆனது. நீங்கள்லாம் என் கதைல காட்ற ஆர்வம் காரணமா இதை எல்லாம் உங்க கிட்ட share பண்ணிக்கலாம்னு தோணிச்சு சொல்லிட்டேன். உங்களுக்கு என்ன தோணுதோ அதை நீங்கல்லாம் கமெண்ட்ல சொல்லுங்க.

சஞ்சனாவை விட டபுளா ஆரோஹியை சப்போர்ட் பண்ணிட்டு இருக்க உங்க ஒரொருத்தருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. என்ன என்னால கமெண்ட்ஸ்ல எல்லாரோட கமெண்ட்டுக்கும் கீழே தனித் தனியா நன்றி சொல்ல முடியறதில்லை. அந்த டைம் இருந்தா அதுல இன்னொரு அப்டேட்டை எழுதிடலாமேனு நான் யோசிப்பேன். ஆனால் யாராவது நம்ம ரொம்ப ரசிச்சு எழுதுற விஷயத்தை நோட் பண்ணி அதை பாராட்டி சொல்லும் போது அவங்களுக்கு மட்டும் ஒரு ரிப்ளை போடுவேன். So இந்த சந்தர்ப்பத்தை நான் உங்ககூட எல்லாம் connect ஆகுறதுக்கு ஒரு வாய்ப்பா பயன்படுத்திக்கலாம்னு இருக்கேன். நீங்க இந்த thread க்கு கீழே உள்ள கமெண்ட்ஸ் செக்‌ஷன்ல கதை பத்தி சொல்லலாம், கதைல உங்களுக்கு பிடிச்சது பிடிக்காதது பத்தி சொல்லலாம், என் writing பத்தி நிறை குறை சொல்லலாம், என்னை ஏதாச்சும் கேட்கணும்னா கூட கேட்கலாம். எல்லாரோட கமெண்ட்டுக்கும் இந்த thread ல மட்டும் Special ஆ reply போடப்படும். So let's get started....

இப்படிக்கு
மிருதுளா ❤️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro