அத்தியாயம் (12)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஆதித்யா முதலில் ஆரோஹியின் குடும்பம் தங்கி இருந்த ஆருவின் தாய் வழிப் பாட்டி வீட்டுக்குத் தான் சென்று இரங்கினான். ஆருவின் பாட்டியும் ஆருவின் குடும்பம் ஶ்ரீரங்கம் சென்றது முதலே ஆதி ஏன் வரவில்லை என்று தான் கேட்டுக் கொண்டு இருந்தாள். ஆதியைக் கண்டதும் பாட்டிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. பாட்டியோடு கொஞ்சம் நேரம் பேசி விட்டு, "என்னடா வேலை அது இதுன்னே.... இப்போ இப்படி பின்னாடியே ஓடி வந்துட்டே..." என்ற கேலிச் சிரிப்புகளுக்கு எல்லாம் உள்ளாகி விட்டு பின்பு மெதுவாக ஆரு எங்கே காணோம் என்று ரஞ்சினியைக் கேட்டு தெரிந்து கொண்ட பின்னர் தான் அவன் அவளைத் தேடி கோயிலுக்கு சென்றான். ஆதியும் ஆருவும் சிறு பிள்ளைகளாய் இருந்த போதே இருவருக்கும் திருமணம் முடித்து வைக்க பெரியவர்கள் ஆசைப்பட்டது தான். ஆனால் அவர்களின் ஆசை ஒரு போதும் பிள்ளைகளின் மேல் திணிக்கப்படவில்லை. அவர்கள் பெரியவர்களாய் வளர்ந்த பின்னர் அவ்விருவருக்கும் சம்மதமானால் இருவரும் திருமணம் செய்து கொள்ளட்டும் என்று பிள்ளைகளின் முடிவுக்காக பெற்றவர்கள் காத்திருந்தனர். ஆகவே ஆதியும் ஆருவும் இப்படி பேசிக் கொள்வதிலோ பழகிக் கொள்வதிலோ யாருக்கும் ஆட்சேபனை இருக்கவில்லை. ஆனால் அவர்களுக்குள் நிஜத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கின்றது என்பதும் யாருக்கும் சரிவரத் தெரியவில்லை. முடிவு எதுவாக இருப்பினும் அது தங்கள் பிள்ளைகளதாகவே இருக்கட்டும் என்று அவர்களுக்கிடையிலான எதிலுமே பெரியவர்கள் தலையிடுவதும் இல்லை.

ஆதியும் ஆருவும் காவிரி ஆற்றங்கரையிலே அமர்ந்து கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு வீடு திரும்பினர். ஆதி வந்த சந்தோஷத்தில் பாட்டி அவனுக்கு பிடித்த உணவு வகைகளை அவனுக்கு அன்று இரவு செய்து கொடுத்தாள். எல்லோரும் அந்த விஸ்தாரமான சமையற்கட்டில் வரிசையாக அமர்ந்து ஒன்றாக பேசிச் சிரித்தவாறு இரவு உணவு உண்டு முடித்தனர். ஆரோஹியின் பாட்டி வீட்டில் சொந்த பந்தங்கள் ஒன்று கூடி விட்டால் எல்லாரும் முன்கட்டில் பெரிய பெரிய ஜமுக்காலங்கள் விரித்து ஆளுக்கு ஒரு புறத்தில் படுத்துக் கொள்வது தான் வழக்கம். அன்றும் அப்படித் தான் ஆரு பெண்கள் வரிசையில் ஒரு ஓரமாய் படுத்திருக்க, அவளுக்கு நேர் எதிராய் ஆண்களோடு ஆதி படுத்து இருந்தான். சிறுவயது முதலே ஊருக்கு வரும் நாட்களில் எல்லாம் இப்படி படுத்துக் கொள்வது வழக்கம் தான். ஆனால் சிறுவயதில் இப்படி இல்லை, சிறுவர்களை எல்லாம் ஒன்றாக ஒரு வரிசையில் போட்டு விடுவார்கள். யார் பக்கத்தில் யார் தூங்குவதென்று அப்பொழுதெல்லாம் பெரிய சண்டையே நடக்கும். எத்தனையோ நாள் ஆரு பக்கத்தில் கூட படுத்திருந்து இருக்கிறான் அவன். ஆனால் இன்றைக்கு இது ஒரு இனம் புரியாத சந்தோஷத்தை அவனுக்குள் ஏற்படுத்தியது. அவளை இப்படி பார்த்துக் கொண்டே படுத்திருப்பது மனதுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதைப் போல இருந்தது. இருவரும் படுத்திருந்தவாறு மௌனத்தாலும், கண் அசைவாலும், கை அசைவாலும் பேசிக் கொண்டு இருந்தனர். நேரம் நல்லிரவைத் தாண்டி இருக்கும், சுற்றி படுத்திருந்த மற்றவர்கள் எல்லோரும் நன்றாக உறங்கி இருக்க ஆதி அவளிடம் வெளியே போகலாமா என்று சைகையில் கேட்டான். அதற்கு பதிலாக அவள் பயமாயிருப்பதாகவும் வேண்டாம் எனவும் தலையை தலையை ஆட்டினாள். "அப்போ நீ இருந்துக்கோ நான் வெளிய போய் ஒரு தம் அடிக்கப் போறேன்" என்றான் அவன் சைகையில். கொஞ்சம் நேரம் யோசித்தவள் "சரி நீ முன்னாடி போ, நான் பின்னாடி வாரேன்" என்றாள் கை அசைவில். "வரும் போது ஒரு போர்வையும் எடுத்துட்டு வா" என்றான் அவன் மீண்டும் கை ஜாடையில்.

அவள் 'அது எதுக்கு' என்று கேட்கும் முன்னர் ஆதி எழுந்து மெதுவாக பூனை போல நடந்து சென்று கதவைத் திறந்து கொண்டு போய் திண்ணையில் அமர்ந்து கொண்டான். கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்ததுமே பனிக் காற்று உடலை ஊடுறுவிச் சென்றது. குளிருக்கு இதமாக ஒரு சிகரட்டை பற்ற வைத்துக் கொண்டான் ஆதி. பின்னால் வந்து நின்றவள் அவன் நடு மண்டையிலேயே ஒரு குட்டு விட்டாள்.

"கொஞ்சம் கூட பயமில்லாமல் இப்படி நடுத் திண்ணைல வச்சு தம்மடிக்கிற. யாராச்சும் பார்த்துட்டாங்கன்னா....." என்று அவனை முறைத்தவாறு வந்து அவன் அருகில் அவளும் அமர்ந்து கொண்டாள்.

"ஷ்..... யாரும் வர மாட்டாங்க. நீ சத்தமா பேசி காட்டிக் குடுத்துடாதே...." என்று சொன்னவன் குளிருக்கு இதமாக அவள் எடுத்து வந்திருந்த போர்வையை எடுத்து தன்னோடு அவளையும் சேர்த்து போர்த்திக் கொண்டான்.

போர்வைக்குள் இருந்து கைகள் இரண்டை விடுவித்துக் கொண்டவள் கை இரண்டை சேர்த்து தேய்த்து விட்டு "வெளில ரொம்ப குளிருதுல்ல..." என்றாள்.

"தம் அடிக்கிறியா?" என்றான்.

கள்ளச் சிரிப்பொன்றை சிரித்தாள்.

"என்ன ஒருவாட்டி try பண்ணி பாக்குறியா?" என்றான்.

ஆசையும் பயமும் கலந்து தலையை ஆட்டினாள். வாழ் நாளில் ஒரே முறை களவும் கற்று மற என்று கூறி இருப்பதைப் போல் இதை எல்லாம் செய்துத் தான் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு.

"ஒரு puff உள்ள இழுத்துட்டு அப்பறம் அதை வெளில blow பண்ணனும் சரியா?" என்று மேலோட்டமாக விதிகளை கூறிவிட்டு அவள் கையில் சிகரட்டை கொடுத்தான் அவன். அவளும் பயத்தோடு சுற்றம் முற்றம் பார்த்த படி அதை கையில் வாங்கி தன் உதட்டில் பொருத்தி ஆதி கூறியது போல உள்ளே வைத்து இழுத்தது தான் தாமதம், அவளுக்கு வாயால் மூக்கால் காதால் எல்லாம் புகை வரும் போல இருமிக் கொண்டும் கண்ணை கரித்துக் கொண்டும் வந்தது.

"Easy easy easy... first time அப்படி தான் இருக்கும். ஆனால் உன் ஆசை நிறைவேறிடிச்சில்ல அது தான் முக்கியம்...." என்று சொல்லி போர்வைக்கு உள்ளே கை விட்டு அவள் முதுகை தடவிக் கொடுத்தான்.

"Thank youடா" என்றாள்.

"நாளைக்கு காலைல மலைக்கோட்டை போகலாமா?" என்றான்.

"ம்ம்ம்.... யாரெல்லாம்?" உற்சாகமானாள் அவள்.

"நானும் நீயும் தான்"

"ஓ... சூப்பர்" கண்கள் மின்னியது அவளுக்கு.

"கல்லணை, புளியஞ்சோலை falls எல்லாம் சுத்தி பார்த்துட்டு வரலாம்"

"என்னடா இப்படி திடீர்னு என் மனசுல உள்ள ஆசை எல்லாம் நான் வாய் விட்டு சொல்லாமலே நிறைவேத்தற???" கண்கள் விரிய கேட்டாள்.

"இனி எல்லாம் அப்படித் தான். எத்தனை நாளைக்கு தான் நீயே வரம் கொடுக்குற தேவதையா இருப்ப? உனக்கு வரம் கொடுக்குறதுக்கும் ஒருத்தன் வேணும்ல?" என்றான் ஒரு கை சிகரட்டை பிடித்து இருந்தது மறு கை போர்வையோடு சேர்த்து அவளையும் அணைத்து இருந்தது.

அவன் அப்படிச் சொல்லக் கேட்டதும் வெட்கப்பட்டு சிரித்தாள் அவள். பின்பு அவனே தொடந்தான்.

"இந்த இருட்டை சாட்சியா வச்சு, இந்த நட்சத்திரங்களை எல்லாம் சாட்சியா வச்சு நீ என்ன ஆசைப் பட்டு கேட்டாலும் அது உனக்கு உடனே கொடுக்கப்படும். உனக்கு வேற என்ன எல்லாம் ஆசை இருக்கு சொல்லு???" என்றான் அவள் கண்களைப் பார்த்து.

"எது வேணும்னாலும் கேட்கலாமா???" என்றாள் ஆர்வமாக.

அவளது அந்த "எது வேணும்னாலும்" என்பது கொஞ்சம் பயத்தை கொடுக்க, "எது வேணும்னாலும்னு சொன்னதுக்காக எல்லாம் என்னையவே கேட்டுறக் கூடாது. நான் உனக்காக பண்ணக் கூடிய மாதிரி எதையாச்சும் கேளு...." என்றான் தான் அவசரப்பட்டு கொடுத்த வரத்தை எண்ணி கொஞ்சம் பயத்தோடு கூட.

"அப்படி உன்னை என்னத் தான் கேட்கலாம்???" என்று கன்னத்தில் விரல் வைத்து யோசனை செய்தவள் பின்பு போர்வையை விலக்கி விட்டு திண்ணையில் இருந்து எழுந்து கொண்டு வீதியில் சென்று நின்று கொண்டாள். இப்பொழுது வானம் கொஞ்சம் பிசுபிசுவென தூரத் தொடங்கியது. கண்களை மூடி, கையை இரு புறமும் நீட்டி, நின்ற இடத்திலேயே சுற்றத் தொடங்கினாள் ஆரோஹி. ஆரு கருப்பு நிறத்தில் பாவாடை ஜாக்கெட்டும், சிவப்பு நிறத்தில் தாவணியும் அணிந்து இருந்தாள். அவள் நீளக் கூந்தல் அவிழ்ந்து முதுகின் மீது தவழ்ந்தது. அவள் சுற்றியதற்கேற்ப அவள் பாவாடையும் அவளோடு சேர்ந்து ராட்டினம் போல சுற்றியது. ஆடை மறைக்காத பாகங்கள் அந்த இருட்டிலும் பளிச்சென்று தெரிந்தது. இதையெல்லாம் அமர்ந்து இருந்து பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கோ தலை கின்னென்று சுற்றுவது போல இருந்தது.

"என்ன வேணும்னு தானே கேட்டேன்.... அதுக்கு எதுக்கு இவ இத்தனை சுத்து சுத்துறா??? நட்ட நடு ராத்திரில டான்ஸ்லாம் ஆடி நம்மல வீக் ஆக்கப் பாக்குறாலே.... டேய் ஆதி... மத்த பொண்ணுங்களை பார்க்கற கண்ணோட்டத்துல இவளை பார்க்காதடா. இவ வேறடா மறந்துறாத!!!!" ஆதியின் மூளைக்குள் மணி அடித்தது.

அவன் அப்படி யோசித்து முடிப்பதற்குள் அவனை நெருங்கி வந்தவள் அவன் சுற்றிக் கொண்டிருந்த போர்வையைத் தூக்கி அப்பால் போட்டுவிட்டு அவனையும் திண்ணையில் இருந்து எழுந்து தன்னோடு கூட அந்த தூரலில் சேர்ந்து நனையும் படியாக இழுத்தாள். அவனும் சற்று முன்பு செய்து கொண்ட சபதம் எல்லாம் மறந்து அவள் இழுத்த இழுப்புக்கு சென்றான். அவனது கையையும் சேர்த்துப் பிடித்த படி மழையில் ஆடியவள் அவன் எதிர்பார்க்காத நேரத்தில் அவனை நெருங்கி வந்தாள். அவன் கன்னத்தோடு முகம் வைத்துக் கொண்டாள். அவளது கூந்தல் முடிகள் அவன் முகத்தில் தவழ்ந்தது, அவன் ஒரு ஆழமான சுவாசத்தை உள்ளிழுத்து அவளை வாசம் பிடித்துக் கொண்டான். அந்த வாசனையே அவனுக்கு உடல் முழுவதும் மின்சாரத்தை பாய்ச்சியது போல இருந்தது. அதற்குள் அவன் முகத்துக்கு அருகில் வந்தவள் அவன் காதுக்குள் "எனக்கு என்ன வேணும்னு கேட்டல்ல? I want to make memories with you" என்றாள். பின்பு அவனருகே இருந்து அகன்று விட்டாள். அவன் கையை விட்டு கொஞ்சம் தள்ளிச் சென்று மழையில் ஆடியவள்.

"நீ எனக்கு இல்லைனு எனக்கு தெரியும் ஆதி. ஆனால் பரவாயில்லை நான் உன்கூட இருக்க போற இந்த கொஞ்ச நாள்ல நான் உன்கூட சேர்ந்து நிறைய ஞாபகங்களை உருவாக்கணும். Paris போனதுக்கு அப்பறமாவும், கடைசி வரைக்கும் நான் நினைச்சு நினைச்சு சந்தோஷப்படற மாதிரியான memories தான் எனக்கு உன்கிட்ட இருந்து வேணும். வா...." என்று இப்பொழுது அவனை கை நீட்டி அழைத்தாள். அவனும் தூக்கத்தில் எழுந்து நடப்பவன் போல அவள் அருகில் சென்றான். என்ன என்பது போல அவள் கண்ணைப் பார்த்தான்.

"என்னை தூக்கி ஒரு சுத்து சுத்துடா" என்றாள். கைகளை அவன் புறம் நீட்டிய படி அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு.

"மாட்டேன்" என்று தலை அசைத்தான்.

"ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்........." என்றாள். கைகளை இன்னும் அவனை நோக்கியே நீட்டிக் கொண்டு இருந்தாள்.

"No" என்றான். பின்னோக்கி மெதுவாக இரண்டு அடி எடுத்து வைத்தான்.

அவளோ ஒயிலாக நின்று கொண்டு அவன் வருவான் அவளை தூக்குவான் என்ற நம்பிக்கையோடு அவனை கண்ணோடு கண் பார்த்து கெஞ்சியவாறு அப்படியே நின்று கொண்டு இருந்தாள். மழையில் நனைந்த அவளது ஆடைகள் உடலோடு ஒட்டிக் கொண்டு அவள் மூடி மறைத்த அழகை எல்லாம் அவனுக்கு படம் போட்டு காட்டிக் கொண்டிருக்க அவன் சித்தம் கொஞ்சம் கொஞ்சமாக அவள் பாழ் இழந்து கொண்டிருந்தான். அவனுக்கு அவளிடம் மிகவும் பிடித்த அவளது கழுத்து வேறு அவனை வா வா என்று அழைத்து இம்சித்தது. தன்னிலை மறந்த அந்த ஒரு நொடியில் அவளை நெருங்கி சென்றவன் அவள் கூந்தலைப் பிடித்து அவள் தலையை அவன் முகத்தின் அருகில் கொண்டு வந்து அவள் கழுத்து நோக்கி குனிந்தான். ஆரோஹி என்ன நடக்கிறது என்று புரியாமாலேயே கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள். அவள் கழுத்தில் முகம் புதைத்தவன் அவளை மேற்கொண்டு எதுவும் செய்து விடும் முன்,

"வேண்டாம் ஆதி. இது பெரிய தப்பு இதை மட்டும் தயவு செஞ்சு பண்ணிடாதே.... உன்னையே நினைச்சிட்டு இருக்க இந்த பொண்ணுக்கு கடைசி வரை நீ கிடைக்கப் போறதில்லை!! யாரா இருந்தா என்னன்னு நீ உன் தேவையை தீர்த்துக்க ஆரு உனக்கு பத்தோட பதினொன்னும் இல்லை!! உன்னால அவளை மனசார ஏத்துக்க முடிஞ்சா மட்டும் அவளைத் தொடு. முடியலைனா அவளை விட்டுரு. இல்லைனா என்னைக்காவது ஒரு நாள் இந்த உலகத்துலயே அவ ரொம்ப வெறுக்குற நபரா நீ மாறிடுவ. இது நடந்தே தீரும்!!!" அவன் மனசாட்சி அவனை சரியான சமயத்தில் எச்சரித்தது!

அவ்வளவு தான். அவன் ஏதோ ஒரு காணக் கூடாத கனவில் இருந்து தெளிந்தவன் போல அவளிடம் இருந்து சட்டென விலகிக் கொண்டான்.

"ஆரு..... I'm sorry. Sorry.... sorry.... வா யாரும் பார்க்கறதுக்குள்ள உள்ள போகலாம்" என்று சொல்லி விட்டு அவள் கண் பார்த்து பேச தயக்கம் கொண்டு அவன் வந்த வழியாக மெதுவாக வீட்டுக்குள் சென்றான். அங்கு என்ன நடந்தது, அவனுக்கு என்ன ஆனது என்று புரியாமலேயே அவளும் அவன் பின்னால் சென்று மறைந்தாள்.

கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்
விழியின்மேல் நான் கோபம்கொண்டேன்
இமை மூடிடு என்றேன்

கலாபம் போலாடும்
கனவில் வாழ்கின்றனே
கை நீட்டி உன்னைத்
தீண்டவே பார்த்தேன்
ஏன் அதில் தோற்றேன்
ஏன் முதல் முத்தம்
தர தாமதம் ஆகுது
தாமரை வேகுது

தள்ளிப் போகாதே எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே
❤️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro