அத்தியாயம் (49) - The end

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

காலையில் ப்ரித்வி கண் விழித்த போது ஆரு அருகில் இல்லை. அவன் குளித்து முடித்து கீழே சென்ற போது அவள் சமையல் செய்து கொண்டு இருந்தாள். சுற்றி வர மலைகள் நடு நாயகமாக அவன் தந்தை கட்டிய, அவன் பெற்றோர் குடும்பம் நடத்திய, அவன் பிறந்து வளர்ந்த வீடு. யாரும் இல்லாத அந்த வீட்டுக்குள் அவனும் அவளும் மட்டும். அந்த ஃபீலிங்கே புதிதாக இருந்தது. அது அவனுக்கு பிடித்தும் இருந்தது.

"குட் மார்னிங் பியூட்டிஃபுல்" என்ற படி உள்ளே சென்றான். இருவரும் கிச்சனில் நின்ற படியே காபி சாப்பிட்டார்கள். ஒன்றாக அமர்ந்து காலை உணவு உண்டார்கள். சாப்பிட்டது செரிக்க வெளியே கொஞ்ச தூரம் வரைக்கும் நடந்து விட்டு வந்தார்கள். தோட்டத்துக்கு சென்ற போது தோட்டத்தில் வேலை செய்யும் ஒரு பெண் மருதாணி அரைத்து ஆருவுக்கு கொடுத்தாள். மருதாணியை கண்ணால் கூட இதற்கு முன்பு கண்டிறாதவன் ஆர்வமாக 'நான் இட்டு விடுகிறேன்' எனக் கூறி அவள் ஒரு உள்ளங்கையில் 'ப்ரி' என்றும் மறு உள்ளங்கையில் 'த்வி' என்றும் மருதாணியால் எழுதி விட்டான். தன் பெயரை அவள் கைகளில் எழுதி விட்டவனுக்கோ எதையோ பெரிதாய் சாதித்ததைப் போல முகமெங்கும் அத்தனை பூரிப்பு. அவளும் அதை ஒரு சிறு புன்னகையோடு ஏற்றுக் கொண்டாள். திரும்பி வரும் வழியில் அங்கு இருந்தவர்கள் இவர்களை பார்த்து விட்டு இளநீர் பறித்துத் தரவும் ப்ரித்வி ஆருவின் இளநீரை அவளுக்கு பருக்கி விட்டு தன்னதை தானும் குடித்து விட்டு இருவரும் மெதுவாக வீட்டுக்கு திரும்பி நடந்தார்கள். அதிக நாட்கள் கழித்து இருவர் முகத்திலும் ஒரு உற்சாகம் இருந்தது.

நடந்து வரும் வழியில் "சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ல வேண்டிய சமயத்துல சொல்லாமல் விட்டுட்டா சில சமயம் கடைசி வரைக்கும் அதை சொல்ல வேண்டியவங்க கிட்ட நம்மலால சொல்லவே முடியாமல் போய்டும்" என்றான் ப்ரித்வி.

பதிலுக்கு அவளிடம் இருந்து "ஹ்ம்ம்" என்பது மட்டுமே பதிலாக.

ஏன் ஆரோஹி என்கிட்ட ஏதாவது சொல்ல நினைக்கிறியா?" என்றான் மீண்டும்.

"இல்லையே. எதை பத்தி கேட்குற நீ?" என்றாள் அவளும்.

"இல்லை. விடு. அது ஒன்னும் இல்லை" என்று அவன் அத்தோடு அந்த பேச்சை கை விட்டான்.

அவளுக்குத் தெரியும் அவன் என்ன எதிர்பார்க்கிறான் என்று அவளுக்கும் அதை அவனிடத்தில் சொல்ல வேண்டும் என்று தான் மனது அடித்துக் கொண்டது. ஆனால் என் மனதில் ஆதிக்கு இடமே இல்லை. பாரிஸ் வந்த நாள் தொடங்கி என் மனமெங்கும் நீ மட்டும் தான் நிறைந்திருக்கிறாய் என்று அவன் கண்ணைப் பார்த்து எப்படி சொல்லுவது? அவளாக சென்று தன் காதலை சொன்னால் அவன் அவளை அப்படியே அள்ளிக் கொள்ளத் தான் போகிறான் ஆனால் ஏதோ ஒரு பயம் ஏதோ ஒரு பரிதவிப்பு படபடப்பு அவளை அவனிடத்தில் மனம் விட்டு பேச முடியாமல் செய்தது. காதலை மனம் விட்டு கூறுதல் என்பது இத்தனை கஷ்ட்டமா???

வீட்டுக்கு வந்ததும் கைகளை கழுவி விட்டு சமையல் செய்ய தயார் ஆனவளை ப்ரித்வி தடுத்தான்.

"ஆரோஹி... அதுக்குள்ள கழுவாதே. கொஞ்ச நேரம் வச்சிருந்தா தானே நல்லா சிவக்கும்னு சொன்னாங்க. நீ இப்படி வந்து உட்கார்ந்துக்கோ. இன்னைக்கி நான் சமையல் பண்றேன்" எனக் கூறி அவளை அலேக்காக தூக்கி சமையல் மேடையில் அமர வைத்து விட்டு,

தோட்டத்தில் இருந்து பறித்துக் கொண்டு வந்த வெண்டிக்காய் கத்தரிக்காய் முதலியவற்றைக் கொண்டு ஒரு எளிமையான சமையலை ப்ரித்வி செய்து முடித்து அவனே அவளுக்கு ஊட்டியும் விட்டான். மாலை ஆனதும் மேலே சென்று மருதாணியையும் எடுத்து விட்டு குளித்து விட்டு வருவதாகக் கூறி ஆரு மாடிக்கு சென்று சில நிமிடங்களில் ஊருக்கு விசேஷத்துக்கு சென்றவர்கள் திரும்பி வந்தார்கள்.

அது சிந்தாமணிப் பாட்டி வழி திருமணம் ஆகையால் பாட்டியும் அவர் மகன் மகளும் பேத்தியும் கூடவே ப்ரித்வியின் சித்தி சித்தப்பா பிள்ளைகளும் சென்றிருந்தார்கள். ப்ரித்வியையும் கூட வரும் படி அவர்கள் கேட்டுக் கொண்ட போதும் வேலை இருப்பதாகக் கூறி ப்ரித்வி மறுத்து விட்டான். அனைவரும் இரண்டு கார்களில் கிளம்பி சென்றிருக்க இரண்டு கார்களும் முதலில் நேராக இவர்கள் வீட்டுக்குள்ளேயே வந்தது. உள்ளே வந்தவுடன் ப்ரித்வியை நலம் விசாரித்த படியே அவன் சாப்பிட்டானா அவனுக்கு இங்கு எல்லாம் சவுரியமாக இருந்ததா என விசாரித்த படியே வீட்டின் பெரியவர்கள் அனைவரும் வீட்டின் கூடத்தில் அமர்ந்து கொண்டனர்.

பின்பு கல்யாணம் பற்றியும் சொந்த பந்தங்கள் பற்றியும் கல்யாணத்துக்கு வந்திருந்த அநேகம் பேர் ப்ரித்வியும் பல்லவியும் நாடு திரும்பி இருப்பது பற்றி கேள்வி பட்டு அவர்கள் இருவரை விசாரித்ததாயும் ஒருவர் மாற்றி ஒருவர் ப்ரித்விக்கு புதினம் கூறினார்கள். கல்யாணத்தில் எடுத்த ஃபோட்டோக்களையும் ப்ரித்வி இன்னும் சந்திக்க வேண்டி இருந்த சில முக்கிய உறவினர்களையும் அர்ச்சனா தனது ஃபோனில் ப்ரித்விக்கு காண்பிக்க அவ்விருவரையும் கண்களால் பெரியவர்கள் படம் பிடிக்க தவறவில்லை.

"போன இடத்துல நம்ம தூரத்து உறவுல ஒருத்தங்க நம்ம பேத்தியை பார்த்து விருப்பப் பட்டுட்டாங்க. இவளை அவங்க பேரனுக்கு கேட்குறாங்க. பையன் அமெரிக்காவுல பெரிய உத்தியோகத்துல இருக்காணாம். அது என்ன பேரு சொன்னாங்கத்தா??" என சிந்தாமணிப் பாட்டி அர்ச்சனாவை பார்க்க,

அவள் ப்ரித்வியைப் பார்த்து "Software engineer" என்றாள்.

"ஆ அதே தான். நல்ல சம்பந்தம் தான்ப்பா. ஆனா என்ன....." என்று பாட்டி பாதி சொல்லிக் கொண்டு இருந்த போது ஆரோஹி குளித்து விட்டு தலை முடியை உலர்த்திய படி மாடியில் இருந்து இறங்கி வந்தாள். பாட்டியின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது. ஆருவும் அப்பொழுது அவர்களை அங்கு எதிர்பார்க்கவில்லை தான். கொஞ்சம் தயங்கிய படியே அனைவரையும் ஒரு முறை பொதுவாகப் பார்த்து சிரித்து வைத்தாள். ஏனோ அந்த சூழ்நிலைக்கு அவள் சற்றும் பொருந்தாது போல தோன்ற மாடிப் படி அருகிலேயே நின்று கொண்டாள்.

"வாம்மா. நீ எப்போ வந்த?" என ஆருவை அன்பாகவே விசாரித்தாள் சித்தி.

எப்படி கூறுவது என புரியாமல் "அது வந்து நானும் இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி தான் வந்தேன். மேல போய் பையை வச்சிட்டு குளிச்சிட்டு வந்தேன். அதுக்குள்ள நீங்கல்லாம் வந்துட்டீங்க" என்றாள் தயங்கித் தயங்கி.

"பல்லவி வரலையாம்மா??" என்றார் சித்தப்பா.

"இல்லை. அவ கொஞ்ச நாள் அம்மா கூட இருந்துட்டு வரேன்னு சொன்னா சித்தப்பா" என்றாள்.

அதன் பின்னர் அங்கு ஒரு சில நிமிட அமைதி நிலவ ப்ரித்வி தான் "ஆ சொல்லுங்க பாட்டி? அப்பறம் ஏதோ சொல்லீட்டு இருந்தீங்களே" என்று எடுத்துக் கொடுத்தான்.

"இல்லைப்பா அது தான் கல்யாணத்துக்கு போன இடத்துல அர்ச்சனாவை பார்த்து புடிச்சுப் போய் எங்க தூரத்து சொந்தத்துல இவளை பெண் கேட்டாங்க. நாங்க தான் ஒரு வார்த்தை உன்னை கலந்து பேசிட்டு முடிவை சொல்லலாம்னு..." என்று இழுத்தார் பெண்ணை பெற்றவர்.

"நல்ல இடமா இருந்தா பண்ணிற வேண்டியது தானே மாமா. இதுல நான் என்ன சொல்ல வேண்டி இருக்கு. அப்பாக்கு அடுத்து நம்ம வீட்ல ஒரு விசேஷம் நடக்குதுன்னா எல்லாருக்கும் சந்தோஷம் தானே" என்றான் ப்ரித்வி.

"என்னப்பு அப்படி சொல்லிட்ட? லட்டு மாதிரி மாப்பிள்ளை நீ இருக்கவே இருக்க. உன்னை விட்டுட்டு எதுக்கு அர்ச்சனாவை வேற எங்கயோ கொடுக்கணும்னு நான் தான் உன்கிட்ட கலந்து பேசி முடிவெடுக்கலாம்னு சொன்னேன்" என்றார் பாட்டி.

இப்பொழுது மாடிப்படி அருகே நின்று கொண்டு இவர்களது சம்பாஷனையைக் கேட்டுக் கொண்டு நின்றவள் வேகமாக வந்து ப்ரித்வி அமர்ந்திருந்த சோபாவின் அருகில் வந்து நின்று கொண்டாள். பாட்டியும் குடும்பமும் அவளை விசித்திரமாகப் பார்த்தார்கள். ப்ரித்வி அவளை காணாதது போல தொடர்ந்து பேசினான்.

"நான் என்ன நினைக்கிறேங்கறது இருக்கட்டும் அர்ச்சனா என்ன நினைக்கிறான்னு கேட்டிங்களா?" என்றான்.

ஆரு அப்படி அவன் அருகே வந்து நின்று கொண்டது சுற்றி இருந்தவர்களுக்கு சற்று நெருடலாய் இருந்த போதும் அவன் மேற் கொண்டு பேசியது சற்று நிம்மதியாய் தோன்ற அனைவர் பார்வையும் இப்போது அர்ச்சனா மீது திரும்பியது. ப்ரித்வியை நேராக பார்த்து பேச கூச்சப்பட்டவள்.

"அவருக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம்" என்றாள் தரையைப் பார்த்த வண்ணம்.

"அப்பறம் என்ன? இப்ப நீ தான் உன் சம்மதத்தை சொல்லணும்" என இப்பொழுது வாயெல்லாம் சிரிப்பாக பாட்டி கேட்க சற்று யோசித்து விட்டு ஏதோ சொல்ல ப்ரித்வி வாய் திறந்தான். அவ்வளவு தான் ப்ரித்வியின் அருகில் நின்று கொண்டு இருந்தவள் அவன் முன்னால் வந்து நின்று கொண்டு சுற்றி இருந்தவர்களைப் பார்த்து,

"அதெல்லாம் ஒத்துக்க முடியாது. அர்ச்சனாவுக்கு ப்ரித்வி சரியாவே வராது. நான் ஒன்னும் இன்னைக்கி காலைல கிளம்பி வரலை நான் நேத்திக்கு சாய்ந்தரமே வந்துட்டேன். நைட் ஒரே ரூம்ல ப்ரித்வி கூட தான் தங்கி இருந்தேன். நீங்க உங்க பொண்ணுக்கு அந்த அமெரிக்கா மாப்பிள்ளையைவே பாருங்க" என்றவள் பின்னர் ப்ரித்வியை திரும்பிப் பார்த்து ;

"அவங்க தான் தெரியாமல் கேட்குறாங்கன்னா நீயும் நல்ல புடிச்சு வச்ச புள்ளையார் மாதிரி உட்கார்ந்து கதை கேட்டுட்டு இருக்க. உனக்கு என்ன? உனக்கு இப்போ நான் என் வாயால அதை உன்கிட்ட சொல்லணும் அவ்வளவு தானே?? I love you Prithvi I love you. நான் சரியா தப்பா, இப்போ இது அவசியமா இல்லையா, எனக்குள்ள நீ எப்போ வந்த எனக்கு வேற ஒன்னும் தெரியாது. ஆனால் எனக்கே தெரியாமல் I have fallen in love with you" என்று சொல்லி சோபாவில் அமர்ந்திருந்தவன் மேல் சாய்ந்து அவனை தன்னோடு இறுக கட்டிக் கொண்டு தேம்பி அழ ஆரம்பித்தாள் ஆரோஹி.

சுற்றி இருந்த அனைவரின் வாய்களும் ஆச்சர்யத்தில் தானாய் திறந்து கொண்டது. பாட்டி ஆனால் ஒரு படி மேலே போய் கன்னத்தில் கை வைத்து கொண்டாள். அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகளை சித்தி வெளியே போய் விளையாடும் படி கை காட்டி துரத்தி விட்டாள். ப்ரித்வி எதுவும் பேசவில்லை ஆரோஹிக்குள் நடந்து கொண்டிருந்த மாற்றத்தை, அவள் கொஞ்ச கொஞ்சமாக ஆனால் தக்க சமயத்தில், அவள் தனக்குத் தானே இட்டு வைத்திருந்த தடைகளை எல்லாம் உடைத்துக் கொண்டு, சுற்றம் முற்றம் பற்றி சுத்தமாக கவலை கொள்ளாமல், தன் மனதில் இருந்ததை வெளிப்படையாக அவள் வெளிப்படுத்தியதையும் அவனே சற்றும் எதிர்பாராத சூழ் நிலையில் அவள் தன் காதலை அவனிடத்தில் தெரிவித்ததையும் அவன் ரசித்துக் கொண்டு இருந்தான்.

யாராவது பலவந்தமாக அவளை அவனை விட்டு பிரித்துக் கொண்டு வந்து நிறுத்தினாலே ஒழிய அவள் அவனது அணைப்பை விட்டு பிரிய மாட்டாள் போல் தோண்றவும் பாட்டி தான் அந்த சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வரும் படிக்கு கொஞ்சம் சத்தமாக தொண்டையை செருமினாள். ஆனால் அதற்கும் ஆரோஹியினிடத்தில் எந்த அசைவும் இல்லை. ப்ரித்விக்கு மட்டும் கேட்கும் சின்னக் குரலில் கன்னத்தில் கண்ணீர் வழிந்தோட அவனிடம் மெதுவாக பேசிக் கொண்டு இருந்தாள். அவனும் உதட்டில் புன்னகை மாறாமல் அவளுக்கு 'உம்' கொட்டிக் கொண்டு இருந்தான்.

அவர்கள் எதிர்பார்த்து வந்த கல்யாணப் பேச்சு வார்த்தை தோழ்வியில் முடிய, அங்கு சுற்றி இருந்தோரை மரியாதைக்கு கூட சட்டை செய்யாமல் அவர்கள் இருவரும் அவர்களுக்கேயான உலகில் காதல் புரிந்து கொண்டிருக்க அதற்கு மேல் அங்கே நிற்பது மரியாதை இல்லை என புரிய கடைசியில் சுற்றி இருந்த குடும்பம் தான் இடத்தை காலி செய்து விட்டு மெதுவாக அவ்விடம் விட்டு சென்றது.

"உன்னை முதல் முதலா நம்ம வீட்ல பார்த்த அன்னைக்கே எனக்கு தோணிறிச்சு நீ தான் எங்க வீட்டை ஆழ வந்தவன்னு. அன்னைல இருந்து நான் உன்னை பகிரங்கமா சைட் அடிச்சு இருக்கேன், பல முறை என் காதலை உனக்கு அப்படியும் இப்படியுமா சொல்லி இருக்கேன் கடைசியா இதோ இதே இடத்துல வச்சு உன்னை ப்ரப்போசும் பண்ணி இருக்கேன். ஆனால் உனக்கு என்னை புரிஞ்சிக்கறதுக்கு உன்னை நீயே புரிஞ்சிக்கறதுக்கு இவ்ளோ நாள் ஆச்சா?" என்றான் ப்ரித்வி.

கண்களை மூடிய வண்ணம் அவன் மேல் முழுவதுமாக சாய்ந்து இருந்தவள் பதிலுக்கு "I love you" என்றாள்.

"ஆனாலும் உனக்கு ரொம்ப தான் திமிரு. என்னை ஒரு வருஷமா உன் பின்னாடி லோலோன்னு அழைய விட்டு உன் பின்னாடி கெஞ்ச விட்டு உனக்காக அழ விட்டுட்டு. இப்போ என்னன்னா என் குடும்பம் எதிர்க்க தைரியமா நின்னு உன் லவ்வை சொல்ற. சத்தியமா நானே ஒரு நிமிஷம் ஆடிப் போய்ட்டேன். அதெப்படி நேத்திக்கி நீ என் கூட தங்கி இருந்தியா? தங்கி இருந்த ஓகே ஆனால் என் விரல் கூட உன் மேல படாமல் நான் சிவனேன்னு கட்டில் ஓரமா தானேடி படுத்து இருந்தேன். இப்படி நடு சபைல வச்சு ஒரு கன்னிப் பையனோட பேரையே கெடுத்துட்டியேடி"

அதற்கும் ஒரு "I love you" வே அவளிடம் இருந்து பதிலாக வந்தது.

"என்ன எதைக் கேட்டாலும் இதையே சொல்ற? இன்னும் எத்தனை வாட்டி தான் இதையே சொல்லுவ?" அவளை மேலும் சீண்டினான் அவன்.

அவன் கழுத்தை சுற்றிக் கொண்டு இருந்த கைகளை விடுவித்துக் கொண்டு அவன் எதிர்க்க எழுந்து நின்றவள் கை இரண்டை இடுப்பில் வைத்துக் கொண்டு "நீ என்னை பார்த்து அதையே திருப்பி சொல்ற வரைக்கும்" என்றாள் கோபமாக.

"ஓஹோ அது தான் மேட்டரா உனக்கு அது தான் வேணுமா? அப்போ இப்படி வா" என்றவன் விலகி நின்றவளை மீண்டும் அருகில் இழுத்து அவள் முகம் எங்கும் முத்தமிட்டு ஒவ்வொரு முத்தத்துக்கும் ஒவ்வொரு "I love u" சொன்னான்.

இருவரும் சாப்பிட்டார்களா என கேட்டு விட்டு வரும் படி சித்தப்பா சந்திரமோகன் தனது மனைவியை அனுப்ப சரியாக ப்ரித்வி அவளை முத்தமிட்டுக் கொண்டு இருக்கும் போது அங்கே மீண்டும் வந்தவள் "ஐயோ... சாரி.. நான் இல்லை.. சித்தப்பா தான்... நான் எதையும் பார்க்கலை..." என கண்களை மூடிக் கொண்டும் கையை பிசைந்து கொண்டும் மீண்டும் உள்ளே ஓடினாள் சித்தி. ஆனால் பாவம் ஆருவுக்கும் ப்ரித்விக்கும் தான் சித்தி அங்கு வந்தது கூட தெரிந்திருக்கவில்லை.

"60 வயசு அங்கிளுக்குலாம் கல்யாணம் நடக்குது உங்க ஊர்ல. ஏன் ஆரோஹி நம்மலும் கல்யாணம் பண்ணிக்கலாமா??" என்றான் ப்ரித்வி.

"ஆதி அக்காங்க எல்லாம் 3 months vacation ல வந்திருக்காங்கல்ல. So இனி திரும்ப இந்தியா வரதுக்கு maximum இன்னும் 3 to 5 years எடுக்கும். அதனால வந்தது தான் வந்தாங்க ஒரடியா ஆதி ருத்ரி கல்யாணத்தையும் உடனே முடிச்சிட்டு போலாமான்னு யோசனை பண்ணீட்டு இருக்காங்க. Most probably நம்மலும் ஆதி ருத்ரி கல்யாணத்தை முடிச்சிட்டு தான் போவோம் போலருக்கு" என்றாள்.

"ஹை... ஜாலி... ஒரே மேடைல நம்மலும் கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றான் அவன் கண்கள் மின்ன.

செல்லமாக அவன் தலையில் தட்டி "ஆர்வக் கோளாறு. எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கிறதா எந்த ஐடியாவும் கிடையாது. இன்னைக்கி தான்டா நான் என் லவ்வையே உன்கிட்ட சொல்லி இருக்கேன். உடனே கல்யாணமா?? அதெல்லாம் முடியாது. எனக்கு இப்பவே உன் பொண்டாட்டியா ஆக வேண்டாம். எனக்கு உன் காதலியா உனக்குள்ள உள்ள ஒட்டு மொத்த காதலுக்கும் சொந்தக்காரியா வாழ்ந்து பார்க்கணும்னு ஆசையா இருக்கு. நான் காதலிச்சிருக்கேன். ஆனால் காதலிக்கப் பட்டதில்லை. I'm being loved ங்கற அந்த feeling ஐ நான் feel பண்ணிப் பார்க்கணும். மரியாதையா என்னை துரத்தி துரத்தி லவ் பண்ணு. அதுக்கு அப்பறமா.... என்று இழுத்து...... சொல்லிக் கொண்டு இருந்ததை பாதியில் நிறுத்தி விட்டு அவள் எழுந்து நின்று அவனை கண்களுக்குள் பார்த்து ஒற்றை விரலை நீட்டி மாடிக்கு வருமாறு அவனிடம் சைகை காட்டி விட்டு அவள் ஓட்டம் பிடிக்க;

"ஏய்.. எங்கடி ஓடற? சொல்ல வந்ததை சொல்லிட்டு போடி... ஆரோஹி...." என அழைத்த படி அவள் கூறிவிட்டு சென்றது போல அவளை துரத்தி துரத்தி காதலிப்பதற்கு ஆரம்பமாய் அவளை துரத்திப் பிடிக்க மாடிப் படி ஏறி ஓடினான் ப்ரித்வி.

ப்ரித்வி மேலே சென்று பார்த்த போது அவள் பால்கனியில் தான் நின்று கொண்டு இருந்தாள். பால்கனியில் சாய்ந்து நின்றுக் கொண்டு தூரிக் கொண்டு இருந்த மழையை கையில் பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தாள். தூரல் சொட்டு சொட்டாக அவளது ஏற்கனவே குளித்து முடித்து ஈரமாக இருந்த கூந்தல் கற்றைகளையும் ஆடையையும் இன்னும் கொஞ்சம் நனைத்துக் கொண்டிருக்க அவள் பின்னால் போய் நின்று அவனது hoodie யால் அவளையும் சேர்த்து போர்த்திக் கொண்டு அவளோடு சேர்ந்து அவனும் மழையை ரசித்தான்.

சுற்றி வர மலைத் தொடர்கள். மாலை பனி மலைகளை இலை மறை காயாய் மறைத்திருக்க. பச்சையும் அல்லாத நீலமும் அல்லாத அந்த மந்தகாரமான சூழ்நிலைக்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் வானம் மழை தூவிக் கொண்டிருந்தது.

"இந்த வானம் சாட்சியா மலைகள் எல்லாம் சாட்சியா மழை சாட்சியா இயற்கை சாட்சியா நான் உன்னை காதலிக்கிறேன் ஆரோஹி" என்றான் அவள் கன்னத்தில் கன்னம் உரசி.

அவன் hoodie ஐ விட்டு வெளியே வராமல் அவன் புறம் திரும்பி அவனுக்குள் முழுவதுமாக புதைந்து அவனை கண் மூடி அணைத்துக் கொண்டாள் ஆரோஹி.

பரபரப்பாக நடந்து முடிந்த அந்த காதல் காட்சியில் ப்ரித்வி அவன் ஆசையாக அவளுக்கு வைத்து விட்ட மருதாணியை பார்க்க மறந்திருக்க ஆரு தன் கைகள் இரண்டை நீட்டி அதை அவனுக்கு காண்பித்தாள். அவள் உள்ளங்கைக்குள் 'ப்ரித்வி' சிவந்திருந்தான்.

அவள் கைகளையும் அவள் கண்களையும் மாற்றி மாற்றி பார்த்தவன் அவள் கன்னங்கள் இரண்டையும் தன் கையில் ஏந்தி அவர்கள் காதலுக்கு சாட்சியாக ஆருவை முதன் முதலாக முத்தமிட இம்முறை ஆரு கைகள் மட்டுமல்ல கன்னமும் சிவந்து போனாள்.

ஆருவின் மனது என்றும் இல்லாதது போல நிறைந்திருந்தது. அவளைப் பார்த்தவுடன் அவனாக அவள் மேல் ஆசை கொண்டவன் அவன். அவளை மட்டுமே நேசித்தவன் அவன். அவளை முதல் முதலில் ப்ரப்போஸ் செய்தவன் அவன், தன்னையும் தன் குடும்பத்தையும் தன் வீட்டையும் அவளை பார்த்த மாத்திரத்தில் அவளிடம் ஒப்படைத்தவன் அவன். அவள் அவனை காதலிக்கவில்லை என அறிந்திருந்தும் அவளை அணுஅணுவாக காதலித்தவன் அவன், அவள் அவனை ஏற்காமல் போகும் பட்சத்தில் தன் காதலை அவளது சந்தோஷத்துக்காக தியாகம் செய்யவும் தயாராக இருந்தவன் அவன். அவள் எப்படி ஆதியை உருகி உருகி காதலித்தாலோ எந்த காதல் அவளுக்கு ஆதியிடம் இருந்து திருப்பி கிடைக்காமலேயே போனதோ அவள் தன் வாழ்வில் தொலைத்த அனைத்துக்கும் சேர்த்து அவளை மொத்தமாக காதலித்தவன் அவன்.

ப்ரித்வி அவளுக்காக பிறந்தவன். ஆனால் என்ன அவள் பிறந்து இரண்டு வருடங்களின் பின்னால் பிறந்தவன். அவளது வீடு அவளது குடும்பம் என்று உலகம் அறியாமல் ஒரு கூட்டுக்குள் விரும்பி தன்னை அடைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தவள் இப்பொழுது தான் அவளுக்கான இடத்துக்கு வந்து சேர்ந்திருந்தாள். ப்ரித்வியிடத்தில் அவளுக்கான கூடு இருந்தது. அவனிடத்தில் அவளுக்கான காதல் கொட்டிக் கிடந்தது.

காதலிப்பது ஒரு வகை சுகம் என்றாள் காதலிக்கப் படுவது இன்னொரு வகை சுகம். ப்ரித்விக்கான காதலை அவள் சரிவர உணர்ந்திறாத போதும் இந்த ஒரு வருடமாக அவள் காதலிக்கப் படுகிறாள் என்பதை அவள் மௌனமாக ரசித்திருக்கிறாள். அதனால் தான் ஒரு முறை கூட ப்ரித்வி அவனது காதலை வெளிப்படுத்துகையில் அவள் அவனை தடுத்ததே இல்லை. எப்படி சரியான சமயத்தில் வெளிப்படுத்தாத ஒரே காரணத்தால் ஆரு ஆதியின் கை நழுவிப் போனாலோ அந்த நிலை ப்ரித்வியின் விஷயத்தில் நடந்து விடக் கூடாது என்று பயந்து தான் இத்தனை நாள் சேர்த்து வைத்த துணிச்சலை எல்லாம் ஒன்று திரட்டி இன்று அத்தனை பேர் முன்னிலையில் தன் காதலை தெரிவித்தாள் அவள்.

காதல் ஒரு முறை தான் வரும், முதல் காதல் முற்றும் காதல், காதல் போயின் சாதல் என்று டயலாக் விடுபவர்கள் எல்லாம் சுத்த முட்டாள்கள். காதல் மறுபடி மறுபடி சாத்தியமே.. நாம் இறங்க வேண்டிய இடம் வரும் வரை சாத்தியமே.. நாம் போய் சேர வேண்டிய இடத்தை நாம் சென்றடையும் வரை சாத்தியமே.. நமக்கானவனை நாம் கண்டு கொள்ளும் வரை சாத்தியமே.. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் உயிரோடு இருக்கும் காலம் வரை புது புது மனிதர்களை நாம் சந்தித்துக் கொண்டே தான் இருப்போம். ஒன்றை இழந்த மனம் இன்னொன்றை தேடத் தான் செய்யும், சரிவர நடத்தப்படாத மனம் தன்னை சரிவர நடத்தும் இடத்தில் பணிந்து போகத் தான் செய்யும்.

ஆரோஹி அன்பாள் உருவானவள். அன்பை கொடுக்க மட்டுமே தெரிந்தவள். ஆரோஹிகள் அனைவருக்குமே வாழ்க்கையில் ஒரு ப்ரித்விராஜ் தேவை. தனக்கான ப்ரித்வியை கண்டு கொள்வதற்காக எத்தனை ஆதிக்களை வேண்டுமானாலும் ஆரோஹிகள் இழக்கலாம் தப்பே இல்லை. இறுதியில் ஆரோஹி சந்தோஷமாக இருந்தாலா என்பது தான் முக்கியம். ஆம் ஆரோஹி ப்ரித்வியின் அரவணைப்பில் மிக மிக சந்தோஷமாக இருந்தாள். And they lived happily ever after.

ஆரோஹி நிறைவுற்றாள் ❤️

உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே
உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே
நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான்
நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ
♥️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro