அத்தியாயம் (9)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மறுநாள் திங்கட்கிழமை ஆதி ஆபிஸில் இருக்கும் போது ஆரோஹியின் தந்தை கிருஷ்ணன் கால் செய்தார். ஆரோஹி Paris செல்வதற்கு முன்னதாக ஒரு முறை எல்லோரும் ஶ்ரீரங்கத்துக்கு போய் விட்டு வருவதாக முடிவு செய்து இருப்பதாக கூறினார். இது பற்றி ஆதியின் தந்தையோடு அவர் பேசிய போது அவர் ஆதியையும் ஒரு வார்த்தை கேட்டுப் பார்க்கும் படியாக கூறியதாகவும், யோசித்து சொல்லுமாறும் அவர் ஆதியிடம் கேட்டுக் கொண்டார். இரு குடும்பங்களுக்கும் பூர்வீகம் ஶ்ரீரங்கம் தான். ஆனால் காலமும் நேரமும் கூடி வராததினால் ஒரு 5 வருடங்களாக அவர்களால்  ஶ்ரீரங்கத்திற்கு போய் வரவே முடியாமல் போனது. இப்பொழுது ஆரோஹி Paris செல்ல இருப்பதால் அதற்கு முன் ஒரு முறை சொந்த ஊருக்கு சென்று சொந்த பந்தங்களை பார்த்து விட்டு, அப்படியே ஶ்ரீரெங்கநாதனையும் தரிசித்து விட்டு வரலாம் என்று முடிவு செய்து இருந்தார்கள். ஆதி ஆபீசில் இருந்து 6 மணிக்கெல்லாம் கிளம்பி வீட்டுக்கு சென்று விட்டான். கீழே செல்லாமல் நேராக மாடிக்கு போனான் அவன். அவன் வீட்டுக்கு செல்லும் போது அவள் வீட்டில் இல்லை. எங்கேயோ சென்று விட்டு எட்டு மணிக்கு மேலே தான் வீட்டுக்கு வந்தாள். அவள் உள்ளே வரும் போதே ஆதியின் கார் வெளியில் நிற்பதை பார்த்தவள் அவன் வீட்டில் இருப்பதை அறிந்து கொண்டு நேராக மாடிக்கு சென்றாள்.

ஆரோஹி மேலே சென்ற போது ஆதி கட்டிலில் அமர்ந்து தனது லேப்டாப்பை வைத்து ஏதோ செய்து கொண்டு இருந்தான். ஆருவை கண்டதும் அவளை ஒரு புன்னகையுடன் வரவேற்றான்.

"வாங்க மேடம். Paris போறதுக்கான Shopping லாம் ஆரம்பிச்சாச்சு போலருக்கு"

"ம்ம்ம்..." என்று ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்து விட்டு அவனது கட்டில் ஓரமாக அமர்ந்து கொண்டாள். பின்னர் ஒரு பையை எடுத்து அவனுக்கு கொடுத்தாள்.

"என்ன இது" என்று கேட்டவாறு பையை பிரித்தான். அதனுள் ஒரு Gray கலர் Shirt இருந்தது. "என்ன திடீர்னு பரிசெல்லாம் குடுக்குற?" என்றான் Shirt ஐ கையில் எடுத்தவாறு. ஆதிக்கு அந்த Shirt ம் அந்த கலரும் இரண்டுமே பிடித்து இருந்தது. ஆதிக்கு இது திடீர் பரிசு தான். ஏனென்றால் இது அவனுக்கு அவள் தரும் முதல் பரிசும் கூட. இதற்கு முன் அவள் ஆதிக்கு எதுவுமே வாங்கிக் கொடுத்ததில்லை. அவனும் தான்! அவன் ஏன் வாங்கிக் கொடுக்கவில்லையோ தெரியாது. ஆனால் ஆரோஹிக்கென்று சில கொள்கைகள் உண்டு. அவள் யாருக்காவது ஒரு பரிசு கொடுத்தாள் அது அவள் தான் சம்பாதித்த பணத்தால் வாங்கிக் கொடுத்ததாக இருக்க வேண்டும் என்று அவள் விரும்புவாள். இன்னொருவர் பணத்தில் வாங்கிய பொருளை அவள் பரிசாக அளிப்பது அவளுக்கு பிடிக்காது. ஆரோஹி படித்துக் கொண்டு இருந்தாள் ஆகவே அவளுக்கென்று ஒரு வருமானம் கிடையாது. ஆரோஹி சமீபத்தில் Leela Palace இல் நடைபெற்ற Food festival இல் Crew member ஆக பங்காற்றியதற்காக அவளைப் பாராட்டி அவளுக்கு ஒரு சிறு தொகை பணம் அன்பளிப்பாக வழங்கப்பட அதைக் கொண்டு தான் அவள் அந்த பரிசை ஆதிக்கு வாங்கி இருந்தாள்.

"Food festival ல Participate பண்ணதுக்காக எனக்கு பணம் கொடுத்தாங்க. இது என்னோட முதல் சம்பளத்துல நான் உனக்காக வாங்கினது. நான் இது வரை என் ஞாபகமா உனக்கு எதுவுமே தந்ததில்லை. அது தான் நான் போறதுக்கு முன்னாடி என் ஞாபகமா உனக்கு ஒரு பரிசு கொடுக்கலாம்னு வாங்கினேன்" என்றாள்.

"Thanks ஆரு. எனக்கு Shirt ரொம்ப புடிச்சிருக்கு. ஆனால் இதை வச்சு தான் நான் உன்னை நினைச்சிக்கணும்னு இல்லை. இது இல்லாட்டியுமே கூட உன் நினைவுகள் நீ போனதுக்கு பின்னாடியும் என் கூடவே இருக்கும்... ஆனால் நீ உன்னோட முதல் சம்பளத்துல இதை எனக்காக வாங்கி கொடுத்திருக்க. அதுனால இது எனக்கு ரொம்ப ரொம்ப Special."

"இந்த ரொம்ப ரொம்ப Special ஆன Shirt ஐ நம்ம ஒரு ரொம்ப ரொம்ப memorable ஆன shirt ஆ ஆக்கலாம்" என்று சொல்லி அவனைப் பார்த்து கண்ணடித்தாள் அவள்.

"எப்படி???" என்றான் அவன் கண்கள் விரிய.

"அதை நான் அப்பறம் சொல்றேன்.... அது இருக்கட்டும். ஶ்ரீரங்கம் போறோம்னு அப்பா சொன்னாரா? நீ என்ன முடிவு பண்ணி இருக்க?"

"நீங்க எல்லாம் சந்தோஷமா போய்ட்டு வாங்க ஆரு. எனக்கு நிறைய வேலை இருக்கு. இந்த மாசம்லாம் Office போகாமல் இருக்கது Chance ஏ இல்லை."

"நீ ஓகே சொல்லுவன்னு ரொம்ப ஹாப்பியா இருந்தேன். நம்மல்லாம் ஒன்னா சேர்ந்து ஊருக்கு போய் எத்தனை வருஷம் ஆச்சு......." என்றாள் அவள். பேச்சில் உற்சாகம் கொஞ்சம் குறைந்திருந்தது.

"நீ ஹாப்பியா போய்ட்டு வா... இதுக்கெல்லாமா மூஞ்சிய இப்படி வெச்சுப்பாங்க? சரி எப்ப கிளம்புறிங்க?"

"நாளை மறு நாள்" என்றாள் அவள் இப்பொழுது அசுவாரசியமாக.

"இப்ப அதை பத்தி பேசி மூட் அவுட் ஆகாத. சரி.. நீ எனக்கு Shirt வாங்கி கொடுத்திருக்க. நான் உனக்கு என்ன வாங்கி தரட்டும்? என் ஞாபகமா???" என்றான்.

"நீ Shirt வேணும்னு கேட்டு தான் நான் வாங்கி கொடுத்தேனா? அதெல்லாம் தானா யோசனை பண்ணி வாங்கித் தரணும்..... அது கூட தெரியல ப்ச்ச்ச்...." என்றாள்.

"சரி அப்போ நாளைக்கு சாயந்தரம்  ரெடியா இரு. நான் வந்து உன்னை shopping அழைச்சிட்டு போறேன். உனக்கு என்ன எல்லாம் வேணுமோ எல்லாம் வாங்கிக்கலாம்..." என்றான்.

"நிஜமாவா????" என்றாள் கண்கள் மின்ன. ஆதி எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளும் படி கூறியதை விட அவன் அவளை Shopping அழைத்து செல்கிறேன் என்று சொல்லியதே அவளுக்கு பயங்கர சந்தோஷமாக இருந்தது. சொன்னது போலவே செய்யவும் செய்தான் ஆதி. மறுநாள் விடிந்ததில் இருந்தே கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை அவளுக்கு. நொடிக்கொரு முறை கடிகரத்தை பார்த்துக் கொண்டு பொழுது சாயும் வரை காத்திருந்தாள் அவள். தன்னிடம் இருந்த தனக்கு மிகவும் பிடித்தமான உடையை தெரிவு செய்து அணிந்து கொண்டாள். காலையிலிருந்து கடிகாரத்தை பார்த்துக் கொண்டு இருந்தவள் இப்பொழுது கண்ணாடியை பார்த்துக் கொண்டாள். மாலை 6 மணியளவில் அவளை வந்து பிக் அப் செய்து கொண்டான் ஆதி.

"ப்ப்ப்பா..... யாரோ இன்னைக்கி பயங்கர அழகா இருக்காப்ல இருக்கு" என்றான். ஒரு கை ஸ்டீரிங்கில் இருக்க மறு கை அவளது வலது கையை கோர்த்துக் கொண்டது.

பதிலுக்கு ஒரு வெட்கப் புன்னகையை மட்டுமே பதிலாக அளித்தாள் அவள்.

"அழகா இருக்கதா சொன்னா யாரோ முத்தம்லாம் கொடுப்பாங்களே....." என்று சொல்லி அவளை மறுபடியும் சீண்டினான் அவன்.

இப்பொழுது அவள் அவனை செல்லமாக முறைத்தாள். இப்படி அவளை சீண்டி விளையாடியவாறே இருவரும் Shopping mall ஐ சென்றடைந்தனர். ஆதி எதை வேண்டும் என்றாலும் வாங்கிக் கொள் என்று கூறியது போல அவளது தேவைகள் ஒன்றும் அவ்வளவு பெரியனவாக இருக்கவில்லை. அவள் Paris எடுத்து செல்வதற்கு தேவையான எதையுமே வாங்கிக் கொள்ளவும் இல்லை. நெயில் பாலிஷ் வாங்கினாள், ரப்பர் வளையல் வாங்கினாள், ஜிமிக்கி விலை ஜாஸ்தியாக இருப்பதாக கூறி அதை வேண்டாம் என்று சொல்லி விட்டாள், தலைக்கு போட்டுக் குளிக்கும் ஷாம்ப்பூவும் உடம்பில் தேய்த்துக் குளிக்கும் ஷவர் ஜெல்லும் விலை கேட்காமலேயே வாங்கிக் கொண்டாள். ஆருவுடன் பத்து கடை ஏறி இறங்கியதிலிருந்து ஆருவுக்கு வாசனை திரவியங்கள் மீது அதிக ஆர்வம் இருப்பதை ஆதி தெரிந்து கொண்டான். அதை தனது மனதில் குறித்தும் கொண்டான். Shopping ஐ முடித்துக் கொண்டு இரவு உணவுக்காக ஒரு பிரபல ஹோட்டலுக்கு ஆதி அவளை அழைத்துச் சென்றான். ஹோட்டலின் Roof top இல் அந்த ரெஸ்ட்டாரண்ட் அமைந்து இருந்தது.

"Wow... This place is so beautiful....." என்றாள் ஆரோஹி சுற்றிப் பார்த்தவாறு. ஆருவுக்கு அந்த இடம், அந்த மந்தகாரமான ராப்பொழுது, ஆதியின் அருகாமை என்று எல்லாமே மிகவும் பிடித்து இருந்தது.

"சொல்லு ஆரு. என்ன சாப்பிடற?" என்றான் அவன் அவள் கண்களைப் பார்த்து. அடர் நீலத்தில் முழுக்கை சட்டையும் கருப்பு பேண்ட்டும் அணிந்து ஆபீஸ் சூட்டில் அவன் அந்த இடத்துக்கென்றே அளவெடுத்து செய்தவன் போல இருந்தான். அவள் மெனுவை பார்க்காமல் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"இப்படியே மாத்தி மாத்தி பார்த்துட்டே இருந்தா எப்படி??? ஆர்டர் பண்ணு ஆரு. Italian veg pasta try பண்ணி பார்க்கலாமா?" என்றான் அவன் மெனு கார்டை புரட்டியவாறு.

"நீ உனக்கு அதுவா ஆர்டர் பண்ணப் போற?" என்றாள்.

"இல்ல நான் எனக்கு Non veg சொல்ல போறேன்." என்றான் இன்னும் அவன் கண் மெனு கார்டை மேய்ந்து கொண்டிருந்தது. அவளுக்காக Veg பட்டியலை பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

"பின்ன எனக்கு மட்டும் ஏன் Veg???" என்றாள் வெகு சாதாரணமாக.

ஆதி வீட்டுக்குத் தெரியாமல் எப்படி தண்ணி அடிப்பானோ தம் அடிப்பானோ இன்னும் என்னவெல்லாமோ அடிப்பானோ அது போல அவன் என்றைக்கோ சைவத்திலிருந்து அசைவத்திற்கு மாறியாகி விட்டது. ஆரு தனக்கும் அசைவம் சொல்லுமாறு கூறியதும் அவன் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தான் என்று தான் சொல்ல வேண்டும். அவன் அவளை இன்னும் தயிர் சாதம் என்று நினைத்துக் கொண்டிருக்க அவளானால் வெகு சாதாராணமாக எனக்கு மட்டும் ஏன் வெஜ் என்று ஒரு குண்டைத் தூக்கி போட்டாள்.

"நிஜமாவா சொல்ற??? அடிப்ப்பாவி...." என்று சொல்லி ஆச்சர்யத்தில் வாயிலேயே கை வைத்துக் கொண்டான்.

"நீயெல்லாம் non veg க்கு மாறும் போது ஒரு Chef ஆகப் போறவ நான் மாறக்கூடாதா???" என்று சொல்லி கண்ணடித்தாள் அவள்.

(அதுக்கு அப்புறமா அவங்க ரெண்டு பேரும் என்னல்லாம் ஆர்டர் பண்ணி சாப்பிட்டாங்கன்னு சொன்னா ரொம்ப அபச்சாரமா இருக்குங்கறதால நான் இதோட நிறுத்திக்கிறேன்)

உணவு உண்டு முடித்த பின்னர் ஆரோஹி அந்த இடத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தாள். அந்த Roof top balcony யில் நின்று பார்க்க மொத்த சிட்டியும் தெரிந்தது. அந்த உயரம் மிகவும் exciting ஆக தோன்ற கை கட்டி நின்று வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவள் முன்பு வந்து நின்றான் ஆதி. காற்று பலமாக வீசிக் கொண்டு இருந்தது. ஆரு அடிக்கடி தன் ஆடையையும் கூந்தலையும் சரி செய்து கொண்டாள்.

"நாளைக்கு கார்த்தால ஊருக்கு கிளம்புறல்ல???" என்றான்.

"ஹ்ம்ம்ம்....." என்றாள்.

"எத்தனை நாள்ள திரும்பி வருவ?"

"5 days"

"நான் ஏன் உங்க கூட ஸ்ரீரங்கம் வரலை தெரியுமா???" என்றான்.

"ஏன்???" என்றாள் விழிகள் விரிய.

"நீ Paris போறதுக்கு முன்னாடியே... இந்த அஞ்சு நாள்ல நீ இல்லாத நம்ம வீடு எப்படி இருக்கும், நீ இல்லாத அந்த தனிமை எப்படி இருக்கும், நீ இல்லாத நான் எப்படி இருப்பேன்னு எனக்கு நானே ஒரு ஒத்திகை பார்த்துக்க போறேன்." என்றான்.

"நீ இப்படி எல்லாம் பேசினாள் அப்புறம் நான் போக மாட்டேன்"

"நீ போய் தான் ஆகணும். அது தான் விதி"

"போகாதன்னு சொல்லு. எனக்கு நீ வேணும்னு சொல்லு. நீ இல்லாமல் என்னால ஒரு நாளை கூட நகர்த்த முடியாதுன்னு சொல்லு" ஆரு அவனது காலரை பிடித்துக் கொண்டாள்.

"சொல்ல மாட்டேன்" தலையாட்டினான் அவன்.

"அப்பறம் நான் போன பின்னாடி என்னை தேடி அலையப் போற கிறுக்கனாட்டம்"

"அலைறேன். ஆனால் போக வேண்டாம்னு சொல்ல மாட்டேன்."

"அப்ப என்கூட Paris வந்துரு...."

"முடியாது..."

"ஏனாம்????"

"என் காதலி இங்க மெட்ராஸ்ல தானே இருக்கா...."

"நீ என்னை தான் காதலிக்கிற"

"அதை நான் சொல்லணும்"

"எனக்கான காதலை நான் உன் கண்ணுல பார்த்தேன்"

"அப்ப அதை நான் என் வாயால எப்போ சொல்றேனோ அது வரை வெய்ட் பண்ணு"

"காத்துட்டு இருப்பேன். ஶ்ரீரங்கத்துல, Paris ல எங்க போனாலும் ஒரு நாள் நீ என்னை தேடி வருவன்னு உனக்காக காத்திட்டு இருப்பேன். இது சத்தியம்" என்றாள் அவன் நெஞ்சில் கரம் வைத்து!

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி
❤️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro