KADHAL 16

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


கடைசியில் யாரை தொடர்பு கொள்ளவேண்டும் என்று முடிவு செய்து, அவர்களுக்கு அழைப்பு விடுத்தாள்.

மறந்த அந்த எண்ணை நினைவு படுத்திகொண்டு, ACP இனியனுக்கு கால் செய்தாள். காலை அட்டென்ட் செய்தவன், "ஹலோ. ACP இனியன் ஹியர்" என்று கம்பீரமான குரலில் சொல்ல, இவளோ வறண்ட தொண்டையை கணைத்துக்கொண்டு, சோர்வுற்ற குரலில், "ஹலோ. நான்" என்று ஆரமிக்கும் போதே, "ஊர்வியா?" என்று ஆவலுடன் கேக்க, "ஆமாம்" என்றால் அவள்.

இதுவரை, ஏதோ குற்றவாளியுடன் விசாரணையில் இறந்தவனின் முகம் கல் போல் இருக்க, இவள் குரல் கேட்டவுடன் கல்லுக்கு உயிர் வந்தது போல புன்னகையுடன் உயிர் பெற்றது. "என்ன ஊர்வி. வேற நம்பர்ல இருந்து போன் பண்ணியிருக்க. வாய்ஸ் வேற ஒரு மாதிரி இருக்கு. ஏதாவது பிரச்சனையா?" என்று அவன் கேட்க, "ஏதாவது பிரச்னைனா மட்டும் தான் போன் பண்ணுறான்னு தப்பா நனைச்சிக்காதீங்க இனியன்" என்று கூற, "சே. அதெல்லாம் ஒன்னும் இல்ல ஊர்வி. நீங்க பண்ண ஹெல்ப்புக்கு, உங்களுக்காக என்ன வேணும் நாளும் பண்ணலாம். என்னால முடிஞ்சதை பண்ண போறன். என்ன ப்ரொப்லெம்ன்னு சொல்லு" என்றான் அவன். 

ஊர்விக்குதான் எங்கு தொடங்கி, எங்கு முடிப்பது என்று ஒன்னும் புரியவில்லை. தான் மஹாபலிபுரம் நோக்கி பயணித்தது, வழிமாறி சென்றது, அடியாட்கள் துரத்தியது, காட்டுக்குள் ஓடி வந்தது, வழிதெரியாமல் முழிப்பது என்று அனைத்தையும் கூறினால். சித்துவின் குரலை போனில் கேட்டதை தவிர்த்து.

"நீ ஒன்னும் பதறாத ஊர்வி. நீ சிக்னல் கிடைக்கற இடமா பார்த்து உக்காரு. Control room ல சொல்லி, நீ இருக்குற இடத்தை ட்ராக் பண்ண சொல்றன். நானே வந்து கூட்டிட்டு போறன். நீ பத்திரமா இரு. அவங்க ஆளுங்க யாரவது தேடி வந்தாலும் வரலாம். நா போன் கட் பண்றன்" என்று கூறிவிட்டு போன்ஐ அணைத்தான். தான் செய்து கொண்டிருந்த பணியை விட்டு விட்டு, அவள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டான்.

control ரூமில், ஊர்வி இருக்கும் இடத்தை அவனுக்கு தெரிவிக்க, சொல்லிவிட்டு, நேரம் தாழ்த்தாமல் ECR ரோட்டில் அவன் பயணத்தை தொடங்கினான். அவள் இருக்கும் இடம் பற்றி தகவல் வர, அந்த இடம் நோக்கி பயணம் செய்தான்.

ஊர்வியின் கையில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டே இருக்க, என்ன செய்வது என்று தெரியாமல், அவள் ஆடையின் ஒரு பகுதியை கிழித்து, கையில் கட்டி கொண்டாள். எங்கும் நகர பலம், மனம் இரண்டுமே இல்லாமல், அங்கேயே அமர்ந்திருந்தாள்.

விரைவிலே அங்கு வந்து சேர்ந்தான் இனியன். அவளை அவ்வாறு பார்த்தவன் அதிர்ந்து போனான். கையில் கட்டு, விழுந்து அடித்து ஓடி வந்ததில் உடலில் அங்கு அங்கு சீராய்ப்பு காயங்கள், என்று அவளை பார்த்தவனுக்கு மிகவும் வருத்தமாய் போனது.

அவன் அங்கு சென்று பார்க்கையில், மரத்தில் சாய்ந்தவாறு, கண்களை மூடிக்கொண்டு, துவண்ட மலர்க்கொடி போல அமர்ந்திருந்தவளின் அருகில் சென்றான். அவள் முகம் அருகில் குனிந்தவன், "ஊர்வி" என்று அழைக்க, அந்த மலர் இமைகளை திறந்தாள் அவள். "என்ன ஏதுன்னு போகுற வழியில பேசிக்கலாம். இப்போ கெளம்பு" என்றவன், அவள் தடுமாற, அவள் கைகளை பிடித்து அழைத்து சென்றான். முதலில் அவளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அவள் காயங்களுக்கு மருந்திட வைத்தான்.

அவளுக்கு காயம் பட்டது அவனுக்கு வருத்தமாக இருப்பினும், அந்த இக்கட்டான சூழ்நிலையில் அவள் அவனை அழைத்தது, அவன் கை பிடித்து நடந்து வர மறுப்பு தெரிவிக்காமல் இருந்தது எல்லாம் மனதுக்குள் ஒரு குளிர்ச்சியை ஏற்படுத்தியது. தனக்கு அவள் மேல் இருக்கும் எண்ணம் போல், அவளுக்கு அவன் மேல் இருக்க வாய்ப்புகள் உண்டு என்று நம்பினான் அவன்.

அவள் இல்லத்தை நோக்கி அவன் செல்ல, "வீட்டுக்கு இல்ல. ஆபீஸ்க்கு கூட்டிட்டு போய் விட்டுடுங்க. வீட்டுக்கு போன அப்பா, அம்மா ரொம்ப பயந்துடுவாங்க" என்று கூற அவனும் அவள் அலுவலகம் நோக்கி வாகனத்தை செலுத்தினான். "உன் காரை எடுத்து வர ஆள் அனுப்பிருக்கன். இன்னைக்கு சாயந்தரம் குள்ள, வீட்டுக்கு வந்துடும். அப்புறம், உன்ன கொள்ள ஆள் அனுப்புனது யாருனு நானே பெர்சோனாலா விசாரிக்கறன்" என்று அவன் அவளோ, "வேண்டாம். விசாரணை எல்லாம் எதுவும் வேண்டாம். எனக்கு தெரியும் யாருனு. நானே பாத்துக்கறேன்" என்று அவள் கூற, அதற்கு மேல் அவனும் எதுவும் பேசவில்லை.

****************************************************************

 "அவன் சொன்ன 10 நிமிடம் முடிந்து விட்டதே. ஒரு வேலை பொய்யாக இருக்குமோ?" என்று சித்து யோசித்துக்கொண்டு இருக்கும் போதே, சித்துவின் கைபேசிக்கு ஒரு அழைப்பு வர, அதே நேரம் அபியின் போனிற்கும் அழைப்பு வந்தது.

சித்துவிற்கு அந்த எண்ணை பார்த்ததும் கோவம் தலைக்கு ஏறியது.  போனினை எடுத்து இவன் பேச தொடங்கும் முன், எதிர் முனையில் இருப்பவனின் சிரிப்பு சத்தம் கேட்டது. "உண்மையா மட்டுமே பேசுறதுக்கு நா என்ன அரிச்சந்திரன் ன்னு நெனச்சியா சித்தார்த். ஆனாலும் நா சொன்னதுல பாதி உண்மை. பாம் வச்சது உண்மை தான். ஆனா அது ஆபீஸ் building ல இல்ல. க்ரானைட் godown ல. அது உன் பாசக்கார நண்பன்க்கு ரொம்ப செண்டிமெண்ட் ஆனா பிசினஸ் இல்ல. ஏன்ன அவங்க தொடங்குன first பிசினஸ் அதுதான். அப்புறம் ஏன்டா உன் கிட்ட மாத்தி சொன்னன்னு யோசிக்கரிய? உன்ன அலையை விட தான் டா. போ. போய் உன் நண்பனை சமாதான படுத்து போ. பல கோடி ரூபா நஷ்டம் லா" என்று கூறி சிரித்து விட்டு, சித்து ஏதும் பேசும் முன் காலை கட் செய்தான்.

அதற்குள் அபிக்கும் godown வாட்ச்மன் மூலம் தகவல் தெரிந்துவிட்டது. அவன் சித்துவிடம் விஷயத்தை சொன்னான். "நல்லவேளையாக godown வேலையாட்கள் யாரும் இல்லை. அந்த நேரத்தில் வாட்சமேனும் வெளியில் சென்று விட, உயிர் சேதம் ஏதும் இல்லாமல் போனது" என்று கூறும் போது, உயிர்சேதம் எதுவும் இல்லை என்ற ஒரு திருப்தி தெரிந்தாலும், வருத்தம் தெரியாமலும் இல்லை. மீண்டும் ஒரு முறை ஆஃபிஸில் சோதனை இட்டு விட்டு, ஊழியர்கள் அனைவரையும் உள்ளே சென்று வேலையை தொடங்குமாறு பணித்தார்கள்.

அபியின் முகம் மிகவும் வாடி இருந்தது. சித்து அவனுக்கு ஆறுதல் கூறவும் முடியாமல், அவனை இந்த நிலையில் பார்க்கவும் முடியாமல் அமர்ந்திருந்தான். 

அபி அவன் மீது வைத்திருந்த நம்பிக்கை வேறு சித்துவை பாடாய் படுத்தியது. இவ்வளவு நடந்த பின்பும், பாம் பற்றி உனக்கு எப்படி தெரிந்தது, யார் கூறியது என்று ஒரு வார்த்தை கூட கேக்கவில்லையே. 

அந்த நேரம் அங்கு கோப்புகளில் அபியின் கையொப்பம் வாங்க வந்தாள் மிருணாளினி. அவள் கோப்புகளை அவனிடம் கொடுக்க, அவன் கோப்புகளையும் பார்க்காமல், மிருணாளினியையும் பார்க்காமல், ஏதோ கடமைக்கு கையொப்போம் இட்டு கொடுத்தான். நேற்று,  அவளிடம் அப்படி வாயாடி அதிரவைத்தவன், இன்று இப்படி சிலைபோல அமர்திருப்பது அவளுக்கும் வருத்தமாகவே இருந்தது. என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டே அறையின் வாசல் வரை சென்றவள், திடீரென திரும்பி, "காபி?" என்றாள். 

அவளிடம் இதை எதிர்பார்காதவன், வெண்ணை உண்டு மாட்டிக்கொண்ட கண்ணன் போல திரு திருவென முழிக்க, அவனை பார்த்து சிரித்தவள், "காபி குடிக்க போகலாமான்னு கேட்டன்?" என்று மறுபடியும் கூறினாள். இப்படியே அமர்ந்திருந்தாள் எதுவும் சரி ஆகாது என்றும், இப்படி ஒரு வாய்ப்பை தவறவிட கூடாது என்றும் எண்ணியவன், அவளுடன் சென்றான். 

ஆபீஸ் கேன்டீனுக்கு சென்றவர்கள் ஆளுக்கு ஒரு காபி வாங்கிக்கொண்டு அமர்ந்தார்கள். அவன் கவனம் காபியை விட்டு அகலாமல் இருக்க, "பக்கி. மூட் அவுட்ல இருக்கானே, ஆறுதலா நாலு வார்த்தை பேசுவோம்னு கூட்டிட்டு வந்தா, இவன் என்னமோ காபி குடிக்கவே பொறந்த மாதிரி, அதுலயே மும்முறமா இருக்கான்" என்று நினைத்துக்கொண்டு, "சார்" என்று அழைக்க, காபி கப்பில் இருந்து வாயை எடுக்காமலே, "ம்ம்" என்றான் அவன். "கொஞ்சம் பேசலாமா?" என்று அவள் கேட்க, "நீ சார்ன்னு கூப்டாம இருந்தா பேசலாம்" என்று அவன் கூற, "வேற எப்படி கூப்பிடணுமாம்?" என்று கேட்டாள் அவள். "அது உன் இஷ்டம். அபி, மாமா, டார்லிங், செல்லம் ன்னு எப்படி வேணும் நாளும் கூப்டுக்கோ" என்று கூறும் போது கூட, அவன் வார்த்தைகளில் இருந்த குறும்பு, அவன் கண்களில் இல்லை.

இதர்க்குமேல் விட்டால் அவன் பேச்சு வேறு திசையில் சென்று விடும் என்று அறிந்தவள், நேராக விஷயத்துக்கு வந்தாள். "இப்போ எதுக்கு இப்டி மூஞ்ச உர்ருனு வச்சிருக்கீங்க? நடந்தது நடந்துடுச்சு. இப்டி ஒரு ரூம் குள்ள உக்காந்துட்டு, செவத்த மொறச்சி மொறச்சி பாத்துட்டு இருந்தா, எல்லாம் சரி ஆகிடுமா?" என்று அவள் கேட்க, "இல்லை மிரு. அந்த க்ரானைட் பிசினஸ். அப்பாக்கு ரொம்ப செண்டிமெண்ட். அவங்க பிசினஸ் ஸ்டார்ட் பண்ணதே அதுல தான். இந்த விஷயம் தெரிஞ்சா ரொம்ப ஒடஞ்சி போய்டுவாங்க. அது மட்டும் இல்லை மிரு. இது ரொம்பவே பெரிய லாஸ் தான். இதனால நம்ப ரெகுலர் customers க்கு கரெக்ட் டைம்ல சப்ளை பண்ண முடியாம, பல customers ஆ இழக்க வேண்டியது இருக்கும்" என்று அவன் கூறினான்.

"உங்க அப்பாவ நீங்க தான் சமாதான படுத்தனும். நீங்களே இப்டி உக்காந்துட்டு இருந்தா எப்படி? அப்புறம் அந்த லாஸ்எல்லாம் ஈடுகட்ட நீங்க தன் முயற்சி செய்யணும். இப்போவே போய் இன்சூரன்ஸ் கிளைம் பண்ண முடியுதா பாருங்க. அப்புறம் க்ரானைட் இறக்குமதி பண்றதுக்கு இப்போவே ஆர்டர் குடுத்துடுங்க. இன்னும் லாஸ் அதிகமாகம இருக்க என்ன பண்ண முடியும்ன்னு யோசிங்க. அதை விட்டுட்டு இப்டி உக்காந்திருந்தா எல்லாம் சரி ஆகிடுமா?" என்று அவள் கேட்க, அப்போதுதான் அபிக்கு யாரோ தலையில் தட்டி புத்தி கூறியது போல இருந்தது. 

உடனடியாக எழுந்தவன், "ரொம்ப நன்றி மிரு. இப்போ தான் ஏதோ தெளிவான மாதிரி இருக்கு", என்று கூறி நடக்கத்தொடங்கினான். "எங்க?" என்று மிரு கேட்க. "முதல, போலீஸ் கம்பிளைன்ட் குடுத்து, யாரு பாம் வச்சான்னு கண்டுபிடிக்கும். அதுக்கு அப்புறம் இன்சூரன்ஸ் டீடெயில்ஸ் எல்லாம் பாக்கணும். புது க்ரானைட்ஸ் இறக்குமதி பண்ண ஆர்டர் குடுக்கணும். நெறைய வேலை இருக்கு. பாய்" என்று கூறிவிட்டு, அவளை பார்த்து கையசைத்து, கண்ணடித்து விட்டு சென்றான். "கொஞ்சம் சிரிச்சி பேசுனா போதும். ஒடனே அவன் வேலைய காமிக்கறான் பாத்தியா. எப்டியோ எல்லாரும் நல்லா இருந்தா சரி. இவனை எப்டியோ சரி பண்ணியாச்சு. சித்தார்த் அண்ணா வேற மூஞ்ச தொங்கபோட்டுட்டு இருந்தாரு. போய் அவரு கிட்ட பேசிட்டு வருவோம்" என்று நினைத்து கொண்டு, சித்துவின் அறைக்கு சென்றாள்.

சித்துவின் அறைக்கு சென்றவள், "அண்ணா" என்று அழைக்க, அவன் "வாம்மா" என்று கூற, அறை கதவை திறக்கும் சத்தம் கேட்டு, இருவரும் திரும்பினர்.

அங்கு நின்றிருந்தது ஊர்வி தான். கையில் கட்டு, உடலில் சீராய்ப்பு காயங்கள், அங்கு அங்கு கிழிந்திருந்த உடை என்று அவளை பார்த்த இருவரும், அதிர்ந்தனர்.

 "ஹேய் ஊர்வி. என்ன இப்டி வந்து நிக்குற? என்று சித்தார்த் கேட்க, "எப்படி உயிரோட வந்து நிக்குறன்னு கேக்குறிய, சித்தார்த்?" என்று அவள் கண்களில் கோபத்துடன் கேட்க, என்ன என்று எதுவும் புரியாமல் முழித்தனர் சித்துவும், மிருணாளினியும்.

Sidhu dhaan urviya kola panna plan pannana? 

Avan urviya epdi samaalipaan?

Urvi avan solradha nambuvala?

Idhellam next ud la pakkalaam.


And next ud varadhuku one week agum friends.

Votes & comments pannitu poidunga...

🙏🙏🙏

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro