KADHAL 25

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அவன் பேசுவதை கேட்டு கொண்டிருந்த ஊர்விக்கு, சித்து உடன் இருப்பவனின் பெயர் விஷ்வா என்று தெரிந்து கொண்டாலே தவிர, அவனை பற்றி வேறு எதுவும் தெரியவில்லை அவளுக்கு. இருந்தாலும் உபயோகப்படும் என்று மனதில் பதியவைத்துகொண்டாள். 

அன்றைய இரவும் கடந்தது. தன் வேலையை செய்ய அந்த கதிரவனும் நேரம் தவறாமல் வந்து, தன் பொன் கதிர்களை தன் பூமி காதலி மீது தவழ விட்டான். 

வீட்டில் உள்ள அனைவரும் காலையில் எழுந்து, அவரவர் வேலைகளிலும் யோசனைகளிலும் மூழ்கி இருக்க, உமையாளுக்கு தான் ஒன்றும் புரியவும் இல்லை, புடிக்கவும் இல்லை. உம்மென அமர்ந்திருந்தாள், கார் சத்தம் கேட்ட உடன் வாசல் நோக்கி ஓடினாள். காலையில் மருத்துவர் வந்து கிருஷ்ணனை டிஸ்சார்ஜ் செய்துவிட, அவரை அழைத்துக்கொண்டு அவருடன் வந்திருந்தான் அபிமன்யு.

வாசலுக்கு சென்ற உமையாள் அபியிடம் வம்புவாங்கிக்கொண்டிருக்க, அதை கண்டும் காணாதவர் போல உள்ளே சென்று விட்டார் கிருஷ்ணன். "அபி சீக்கரம் வா. எனக்கு போர் அடிக்குது" என்று கூற, "உனக்கு போர் அடிச்சா நான் என்னடி பண்ணுறது. எனக்கு வேலை இருக்கு. நான் ஆபீஸ் கிளம்பறேன்" என்றான். உமையாள் இதை கேட்டு வாய் விட்டு சிரிக்க, "என்ன லூசு. எதுக்கு சிரிக்குற?" என்று கேட்க, "அபி. நான் இப்போ ஒன்னு சொல்லுவேன். அதை கேட்டதுக்கு அப்புறம், நீ எனக்கு வேலையே இல்லை. ஆஃபீஸ்க்கே போக மாட்டேன்னு சொல்லுவ பாரேன்" என்று கூறினாள். "அப்டி என்ன டி சொல்ல போற, என்று கேட்க, "உன் ஆளு, உள்ள தான் இருக்கு. ஜானு அம்மா தான் உக்கார வச்சி இருக்காங்க. இன்னைக்கு உங்க ரெண்டு பேரையும் உக்காரு வச்சி பேசி, அவளை எப்படியாவது கல்யாணத்துக்கு ஒதுக்க வைக்கணும்னு சொன்னாங்க. இப்போ நீ ஆபீஸ் கெளம்பு தம்பி. உனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லை, அதான் போய்ட்டான்னு நான் பெரியம்மா கிட்ட சொல்லிடுறேன்" என்றாள் உமையாள். "தங்கச்சி. நான் மறந்துட்டேன் தங்கம். இன்னைக்கு ஆபீஸ் ல பெருசா வேலை எதுவும் இல்லை. அதனால வீட்டுலே இருக்கன்" என்று அவன் பிளேட்டை மாத்தி போட, "அப்படி வா வழிக்கு" என்றாள் உமையாள். நேற்று இரவு நடந்த அனைத்தையும் அபியிடம் ஒப்பித்தாள் உமையாள்.

இருவரும் உள்ளே செல்ல, அங்கு அனைவரும் இவன் வரவை நோக்கி காத்திருப்பது போலவே அமர்ந்திருந்தனர். "என்னடா இது. எல்லாம் நம்மளையே மொறச்சி மொறச்சி பாக்குதுங்க... அதும் நம்ப அம்மா ரொம்ப டெரர் ஆ ல பாக்குது. ஏதோ பெருசா நடந்துருக்கும் போல. சேரி சமாளிப்போம்" என்று "மம்மி..." என்று கூவிக்கொண்டு ஜானகியிடம் செல்ல, "மவனே கிட்ட வா? அடி பிண்ணிடுறேன் உன்ன" என்று ஜானகி மிரட்ட, "என்ன ஆச்சு மம்மி?" என்று கேட்க, "நீ லவ் பண்றத ஏன் டா என் கிட்ட சொல்லல?" என்று ஜானகி முறைக்க, "அம்மா. ப்ளீஸ் மா. நீ முறைக்காத. எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது. இது என்ன மா கேள்வி. எந்த பையனாவது இந்த பொண்ண நான் லவ் பண்ண போறேன்னு சொல்லிட்டு பண்ணுவானா?" என்று கேட்க, "ஏன் டா பண்ண கூடாத?" என்று என்று ஜானகி கேட்க, "பண்ணலாம். ஆனா கிக் இருக்காது மா" என்றான் அவன்.

"சரி அதெல்லாம் இருக்கட்டும். அந்த பொண்ணு உன்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றா. அந்த பொண்ணு இல்லனா என்ன டா பண்ணுவ? இந்த suicide எல்லாம் ட்ரை பண்ண மாட்ட ல?" என்று ஜானகி கேட்க, அவன் பதிலுக்கு மிருணாளினியும் காத்திருந்தாள்.

இதுவரை அவன் பக்கம் திரும்பாத மிருணாளினி, இந்த பதிலுக்காக ஏக்கத்துடன் அவனை பார்ப்பதை அவனும் கவனித்தான். "அட. அது என்ன லூசு தனம். யாரவது இதுக்கு எல்லாம் தற்கொலை பண்ணுவாங்களா? நான் அப்டி எல்லாம் பண்ண மாட்டேன். இந்த பொண்ணு இல்லனா வேற பொண்ணு. அதும் இதெல்லாம் ஒரு மூஞ்சி. இது கெடைக்கலனா தற்கொலை வேற பண்ணிக்குறாங்களா? அங்க பாரு நல்ல பூசணிகாக்கு பவுடர் அடிச்சி வச்ச மாதிரி ஒரு மூஞ்சி. அந்த கண்ணை பாரு நல்ல ஆந்தை கண்ணு. ப்பா. இந்த பொண்ண விட அழகான பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிப்பேன். அப்டியே கொழந்தை குட்டின்னு பெத்துக்கிட்டு செட்டில் ஆகிடுவேன்" என்று அவன் கூறிக்கொண்டே போக, அவன் முதுகில் நான்கு அடிகள் விழ, திரும்பி பார்த்தான். தன் கைப்பையால் அபியின் முதுகை பதம் பார்த்துக்கொண்டிருந்தாள் மிருணாளினி. "ஏய் கொசு. என்ன பண்ற? " என்று அபி கேட்க, "என் மூஞ்சு பவுடர் அடிச்ச பூசணிக்கா மாதிரி இருக்கா? நீ தான டா என்ன சுத்தி சுத்தி வந்த? உன்ன போய்.. " என்று அவள் நிறுத்த, "என்ன? என்ன? என்னை போய்? சொல்லு" என்று அபி கேட்க, "உன்னை போய் நம்புனேன் பாரு" என்று அவள் தலையில் அடித்துக்கொண்டாள். "டேய். என்னடா?" என்று ஜானகி ஏதோ சொல்லவர, "அம்மா நீ சும்மா இரு" என்று கூறிவிட்டு, ஜானகியை பார்த்து கண் அடிக்க, அவரும் அமைதியானார். 

"வேற என்ன பண்ண சொல்ற? எனக்கு உன்னை புடிச்சி இருந்தது. அதை உன் கிட்ட சொன்னேன். நீ என்ன சொல்லணும். எனக்கு புடிச்சிருக்குனு சொல்லணும். இல்லை புடிக்கலைனு சொல்லணும். ஒண்ணுமே சொல்ல. சரி நானும் வெயிட் பண்ணுவோம் னு பண்ணேன். இப்போ வந்து என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு சொல்ற. சரி. நீ யாரை கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவு பண்ற உரிமை உனக்கு இருக்கு. ஆனா ஏன் கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு ஒழுங்கா ஒரு காரணம் சொன்னியா?" என்று அவன் கேட்க, அவள் அமைதியாகே நின்றாள். 

"உனக்கு என்ன புடிக்கலைனு ஒரு வார்த்தை சொல்லிருந்த உன் பக்கம் திரும்பி கூட பாக்க மாட்டேன். ஆனா இவங்க அப்படியும் சொல்ல மாட்டாங்க. எங்க அப்பா ஒத்துக்க மாட்டாரு. நான் யாரை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஏற்கனவே முடிவு பண்ணிட்டாங்கனு இந்த மாதிரி மொக்க காரணம் சொன்ன, லவ் பண்றவனுக்கு கடுப்பாகாத? கல்யாணம் பண்ணிக்க போறது நம்ப. காதல் நம்ப மனசு சம்பந்த பட்ட விஷயம். இதுல உன் அப்பா சம்பந்தம் எதுக்கு. உங்க அப்பா ஒதுக்கலைனா, உன்னை தூக்கிட்டு போய் நான் தாலி கற்றேன்" என்று கூற, முதல் முறையாக அவன் சீரியஸ் ஆகா பேசுவதை கேட்டவளுக்கு ஆச்சர்யமாக தான் இருந்தது.

"சரி. இப்போ சொல்றேன். எனக்கு உன்னை புடிச்சி இருக்கு தான். அதுக்காக என் அப்பா சம்மதம் இல்லாட்டியும் பரவாளான்னு உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது. காதல் வேணும்னா நீங்க சொல்ற மாதிரி ரெண்டு மனசு சம்பந்தம் பட்ட விஷயமா இருக்கலாம். ஆனா கல்யாணம் ரெண்டு குடும்பம் சம்பந்த பட்ட விஷயம்" என்று அவள் முடிக்க, "சரி அப்போ இதையாவது சொல்லி தொலை. உங்க அப்பாக்கு ஏன் காதல் நா புடிக்காது? அப்புறம் உனக்கு யாரை கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணி இருக்காங்க? உன்னை பத்தி. உன் குடும்பத்தை பத்தி சொல்லு" என்று கேட்டான். 

அவளும் கூற தொடங்கினாள். வேறு ஒருவரின் காதலால் இன்று அவள் வாழ்க்கை கேள்வி குறியாகி நிற்கும் கதையை.

(ellarum flashback keteengala..ippodhaiku miru flashback paapom.. ellarum mela paarunga)

இருபத்தி ஆறு வருடங்களுக்கு முன்னாடி நடந்த கதை அது. சொக்கம்பட்டி என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கிராமம் அது.

ஊரெங்கும் தோரணம், பூ அலங்காரம், மேல சத்தம். வாண்டுகள் அனைத்தும் புது சட்டை, பாட்டு பாவாடை என்று அணிந்துகொண்டு ஆரவாரம் செய்துகொண்டிருக்க, இளவயது நங்கைகளோ தாவணியில் தேவலோக கன்னிகைகள் போல வலம் வர, இளைஞர் கூட்டம் நங்கைகளை வலம் வர, நங்கைகளின் தந்தைமார்கள் இளைஞர்களை ஓட ஓட விரட்ட, ஊரே திருவிழா கோலம் பூண்டிருந்தது.

திருவிழா தானோ என்று கவனமாக பார்த்தால், அங்கு கோவிலில் அர்ச்சகரை தவிர யாருமே இல்லை.

 அப்போது மேல சத்தம் கேட்பது எங்கிருந்து என்று தேடிப்பார்த்தால், நம் கண்ணில் படுகிறது ஒரு வீடு. வீடு என்று சொல்வதை விட அரண்மனை என்றே கூறலாம். அப்பப்பா.. அந்த வீட்டின் வாயிற் கதவுகளுக்கே தான் என்ன ஒரு கம்பீரம். புதிதாக வெள்ளை அடிக்க பட்டு, ஜொலிக்கும் அந்த மாளிகை இன்று அல்லோலப்பட்டு கொண்டிருந்தது. வீடெங்கும் ஆட்கள் சுத்திக்கொண்டிருந்தனர். ஊருக்கே சமைப்பது போல, பெரிய பெரிய பாத்திரங்களில் சமையல் செய்துகொண்டிருந்தனர். மரத்தூண்கள் எங்கும் பூக்கள் சுத்தப்பட்டு, மங்கள நாதம் இனிதே வாசிக்க பட்டுக்கொண்டிருந்தது.

"என்னயா. நம்ப ஐயா பொண்ணு கல்யாணமே இப்படி திருவிழா மாதிரி கலை கட்டுது" என்று திருமணத்திற்கு வந்த ஒருவர் கேட்க, "பின்ன. ஊர் தலைவர் பொண்ணு கல்யாணம்னா சும்மாவா? அதுவும் மாப்பிள்ளை யாரு. பக்கத்து ஊரு தலைவர் பையன். அவங்களும் நல்ல ஜனக்கட்டு உள்ள குடும்பம் தானே" என்று மற்றொருவர் கூறினார். 

சொக்கம்பட்டி ஊரின் தலைவர் வீரபத்திரன். அவர் மனைவி பார்வதி. மீனலோச்சினி, சசிரேகா என்று இந்த தம்பதியருக்கு மகள்கள் இருவர். மூத்தமகள் மீனுவுக்கும், பார்வதியின் தம்பி மாறவர்மனுக்கும் திருமணம் ஆகி 'கார்த்திக்' என்று ஒரு வயதில் மகனும் இருந்தான். இப்போது இளையமகள் சசியின் திருமணம்.

சபையில் வெள்ளைவேட்டி சட்டை அணிந்து கம்பீரமாக அமர்ந்திருந்தார்  வீரபத்ரன். அவருடன் அமர்ந்து சிரித்துப்பேசி கொண்டிருந்தார் அவருடைய வருங்கால சம்மந்தி, அரசம்பட்டியின் தலைவர் தங்கதுரை.

மணமேடையில் மணமகன் விக்ரமன் அமர்ந்திருக்க, அய்யரோ யாருக்கும் புரியாத அந்த மந்திரங்களை ஓதிக்கொண்டிருந்தார்.

"சீக்கரம் பொண்ண அழைச்சிட்டு வாங்கோ" என்று அய்யர் கூற, "பார்வதி. பொண்ண கூட்டிட்டு வாமா.." என்று தன் மனைவியை ஏவினார் வீரபத்திரன். "சரிங்க.. என்று கூறிவிட்டு தன் மகள் அமர்ந்திருந்த அறையின் கதவை தட்ட, அந்த அறையில் இருந்து பதில் எதுவுமே வரவில்லை.

 பதறியவர் தன் தம்பி மாறவர்மனை அழைக்க, அவரோ கதவை இடித்து உடைத்தார். அறை முழுதும் மணமகளை தேடியவர்கள், அவளை காணாது வீரபத்ரனிடம் கூற, அவரோ வீடு முழுதும் தன் ஆட்களை ஏவிவிட, வீடு முழுதும் சோதனை இட்டும் பயன் இல்லை. "ஏங்க. வீடு முழுக்க தேடியாச்சுங்க. நம்ப சசியை காணோம்" பார்வதி கூற, வீரபத்ரனோ, சிலையாய் அமர்ந்திருந்தார்.

ஒரு ஓரத்தில் மீனு திருட்டு முழியுடன் நின்றிருக்க, அதை கவனித்தார் மாறவர்மன். அவளிடம் சென்றவர், "எங்கடி உன் தங்கச்சி?" என்று கேட்க, "எனக்கு தெரியாது" என்று மீனு தரையில் பார்வை பதித்து கூற, மாறவர்மனின் விரல்கள் அவர் கன்னத்தில் பதிந்தது.

"மரியாதையா உண்மையை சொல்லு என்று அவர் கேட்க, "ஆமா. என் தங்கச்சி இங்க இல்லை. நான் தான் அனுப்பி வச்சேன்" என்று கூற, "எங்க அனுப்பி வச்ச, ஏன் பொண்ண?" வீரபத்திரன் கேட்க, "இந்த கல்யாணத்த நீங்க எப்போ முடிவு பன்னீங்களோ அப்போவே அவளுக்கு அப்பாங்கிற தகுதியை இழந்துடீங்க பா" என்று கூற, "என்னடி சொல்ற?" என்று மறுபடியும் கை ஓங்கிய மாறவர்மனை தடுத்தார் வீரபத்திரன். "ஆமா பா. வீடு தேடி வந்தவங்க, கேட்டதை இல்லன்னு சொல்லகூடாது. அதுக்காக நம்ப வீட்டு பொண்ண கேட்டாலும் குடுத்துடுவீங்கலா? அதுவும் நம்ப பரம்பரை எதிரிக்கு. நம்ப குடும்பத்து மேல இருக்கும் கோவத்தை அவன் சசி மீது காட்ட மாட்டான்னு என்ன நிச்சயம்? அதெல்லாம் நீங்க எங்க யோசிக்க போறீங்க. உங்களுக்கு உங்க மானம் மரியாதை முக்கியம்" என்று மீனு கூற பதில் ஏதும் கூறாமல் நின்றார் வீரபத்ரன்.
பார்வதியிடம் திரும்பியவர்," அம்மா. உனக்கு கூட உன் பொண்ணுங்க மேல அக்கறை இல்லல்ல. அவ எவ்வளவு நாள் உன் கிட்ட கெஞ்சியிருப்பா. இந்ந கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு. உனக்கும் உன் பொண்ணு வாழ்க்கையை விட, உன் புருஷன் ஓட மரியாதை முக்கியமா போச்சு. ஆனா எனக்கு அப்படி இல்லை. என் தங்கச்சி வாழ்க்கை மட்டும் தான் முக்கியம். அதான், அவ யார காதலிச்சாலோ, யாரு அவளை கண்கலங்காம பாத்துப்பாங்களோ, அவங்க கூட அனுப்பி வச்சிட்டேன்" என்று சபையினர் முன் தயக்கம் இல்லாமல் கூறினார் மீனு.

இன்று திருமணம் நடக்காது என்று ஊர் மக்கள் கலைந்து செல்ல," நல்லா கூப்டு வச்சி அசிங்கப்படுத்திட்டல்ல" என்று வீரபத்ரனின் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சி விட்டு தன் மகனுடன் அங்கிருந்து புறப்பட்டார் தங்கதுரை.

Meedhi kadhai naalaiku solren.. Paadhile vitutu poradhuku thitadheengo...

Marakaama vote and comment pannitu ponga.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro