special update <3

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

💕படிகளில் அமர்ந்திருந்த சனாவின் தங்கைக்கும் அவளின் மாமன் மகளுக்கும் அரையும் சத்தம் கேட்க... திவ்யாவை(சனாவின் தங்கை)இருவரும் கேள்வியுடன் பார்த்தனர்...

எப்பவும் போல தீபக் அண்ணா  அவள ஏதாவது டென்ஷன் பண்ணிருப்பாரு அதா இப்போ  நல்ல வாங்குறாரு என்று அவள் சொன்னதை கேட்டு இருவரும் சிரித்தனர்...

சரி வாங்க நம்ப என் ரூம்ல போய் கேரம் விளையாடலாம் என்றபடி திவ்யா அவர்களை உள்ளே அழைத்து சென்றால்(நம்ப ஆளுங்களுக்கு ப்ரைவசி வேணும்லா😋)

தான் வந்ததை பார்த்தும் தன் புறம் திரும்பாமல் வேண்டும் என்றே ஏங்கோ பார்த்து கொண்டு இருந்த சனாவின் கன்னத்தை பற்றி மன்னிப்பு கேட்ட தீபக்கே இப்போது அரை வாங்கிய கன்னத்தை தேய்த்தபடி நின்றிருந்தான்...

அவனை ஒரு பார்வை பார்த்த சனா மீண்டும் அவனை அடிக்க துவங்கினால்....

ஒரு ஒரு அடிக்கும் அவள் ஐ ஹேட் யூ சொல்ல...அடித்த அவள் கரத்தை பற்றி முத்தமிட்டவாறு அவன் ஐ லவ் யூ சொன்னான்...

அவன் நெஞ்சில் அழுதபடி அடித்துக் கொண்டிருந்தவள் "ஐ ஹேட் யூ இடியட்" என அழுத்தமாக சொல்ல...அவளை இழுத்து கட்டியணைத்தவன் "ஐ லவ் யூ பேபி" என்றான்...

சில நிமிடங்கள் தன்னிலை மறந்து அணைத்தபடியே இருந்தனர்...

சனா அவனை தள்ளி நிற்க வைத்து...நான் கொஞ்சம் பேசனும் எனச் சொல்ல அதை அப்படியே கூட சொல்லலாமே என்றபடி மீண்டும் அவளை அணைக்க நெருங்கினான்...

டேய் அங்கயே நில்லு!அவனை எச்சரித்தவள் மீண்டும் தொடர்ந்தால்...இந்த முறையும் நம்ப நடந்த வாக்குவாதத்தையும்,சண்டையையும் மறந்துட்டு சேர்ந்தோனா அது இன்னும் கொஞ்ச நாளுல ஒரு சண்டையா வந்து நிக்கும்...சோ இப்போவே அதெல்லாம் பேசி ஒரு முடிவு எடுத்துடலாம் என்றாள்...

அவன் சரி என்றவாறு தலையசைக்க...அவள் நான் மேரேஜ்கு அப்பறம் கண்டிப்பா வர்க் பண்ணுவ எனக் கூற உன்னோட விருப்பம் என்றான்...

ஹா தென் இப்படிதா ட்ரஸ் பண்ணணும்,இப்படியெல்லாம் பண்ண கூடாதுனு கண்டிஷன் போட கூடாது என்றவளை பார்த்து சிரித்தவன்...நீ ஷாட்ஸ் கூட போடு பேபி உன்னை பார்க்குறவ கழுத்த திருப்பிடுற என்றவனை அவள் முறைக்க,அவன் பைன் நெக்ஷ்ட் என்ன என்றான்??

சிறிது நேரம் யோசித்தவள்...ம்ம் எனக்கான எல்லாம் முடிவையும் நீயே எடுக்கக் கூடாது,ஒரு லைப் பாட்னரா தாராளமா எனக்கு எது நல்லது கெட்டதுனு சொல்லலாம்,பட் பைனல் டிஷிஷன் நான் எடுத்துகுற என்றாள்... அவன் ஓகே எனக்கு புரியுது பேபி..பைன்!என்றான்

அதன் பின் அவள் அமைதியாக இருக்க,அவள் முக மாற்றத்தை வைத்து அவள் தங்களுக்குள் நடந்த கடைசி வாக்குவாதத்தை பற்றி எண்ணுகிறாள் என்று அறிந்தவன்...அவள் முகத்தை கையில் ஏந்தி அன்னைக்கு பேசுனது எதுவும் மனசால பேசலடா😞ஏதோ கோவத்துல பேசிட்ட..ஐம் சோ சாரி டா என்றான்...

அதற்கும் அமைதியாக இருந்தவளை பார்த்து...இப்போ என்னடி பேசுனதுலாம் தப்புதானு கால்ல விழனுமா எனக் கேட்டவாறு கீழே குனிந்தான்...

அவன் தொடுவதற்குள் கால்களை நகர்த்தியவள் கையை அவனிடம் நீட்டினாள்...

அவன் குழப்பமாய் அவளை பார்க்க...கையை காலா நெனச்சி மன்னிப்பு கேக்குறது கேள்வி பட்டது இல்ல??அவள் சிரிப்பை மறைத்தபடி கேட்க...

அவளிடத்தில் மண்டியிட்டவன் அவள் கரத்தை பற்றி முத்தம் கொடுத்தான்...அவனின் தலையை தட்டியவள்,மன்னிப்பு கேட்க சொன்ன😛என்று அவனுக்கு நினைவூட்ட ரொம்ப நாளைக்கு அப்பறம் கையை பிடிச்சதுனால கன்ட்ரோல் மிஸ் ஆயிடிச்சு என்று உதடு சுளித்தபடி மனதார தான் பேசிய அனைத்திற்கும் மன்னிப்பு கேட்டான்...

பெரிய மனதுடன் சரி சரி மன்னிச்சிட்ட😂என்றவளின் கண்ணத்தில் முத்தம் பதித்தான்..

நான் இன்னைக்கு வரலைனா உண்மையாவே இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருப்பியாடி??கண்களில் வலியுடன் அவன் கேட்க,பின்ன பையன் செம்ம க்யூட் தெரியுமா என்று அவள் அவனை வெறுப்பேற்ற முயல விரல்களால் அவள் உதட்டில் அடித்தான்...

ஆஆ எரும வலிக்குதுடா!என அவள் கத்த அவள் மூக்கின் நுனியில் முத்தம் கொடுத்து சாரி பேபி!!நீ சொல்றத கேட்க எனக்கும்தா வலிக்குது என்றவாறு அங்கிருந்த இடத்தில் அமர்ந்தவாறு அவளை பின்னிருந்து கட்டியணைத்தான்..

சரிடி அவன் க்யூட்தான?என்ற அவன் கேட்க...அவள் ஆம் என்று சொல்ல..சரி அவன் எப்படி இருப்பான் சொல்லு??அவன் கேள்வியில் சற்று தடுமாறியவள்..

ஆ அவன் பார்க்க நல்லா இருப்பான்...மாநிறம்,பார்த்த உடனே ஈர்க்குற கண்கள் அதுக்கு தகுந்த அடர்த்தியான சேர்ந்த புருவம் அவள் சொல்லிக் கொண்டே போக சிரித்தபடி அவளை மேலும் இறுக்கக்கட்டி பிடித்தவன் அவன் பெயர் என்னடா என்று கேட்க சனா திணறினாள்...

அவளை தன் புறம் திருப்பி தீபக்கா??என்று கேட்க சனா குழப்பமாய் அவனை பார்க்க...இல்லடா செல்லம் நீங்க உங்களுக்கு பாத்திருக்க பையன் எப்படி இருப்பானு கேட்டா என்ன அடையாளம் சொல்லிட்டு இருந்தீங்க பாரு அப்போ கூட எனக்கு கொஞ்சம் சந்தேகம்தா ஆனா அவன் பெயரே தெரியாம தடுமாறுற பாரு அப்போயே நான் கேட்ட கேள்விக்கு பதில் கிடச்சிடுச்சி என்றபடி அவள் கன்னங்களில் முத்தத்தை பதித்தான்...

என்ன கேள்விடா??

இந்த கல்யாணம் பண்ணிருப்பியானு கேட்டது...

ஹே ஹலோ ஓவர் கான்பிடன்ஸ் வேண்டாபா...இப்ப கூட ஒன்னும் இல்ல அவன் இன்னைக்கு வரான்ல ஓகே சொல்லிடுற...என்றபடி கீழே இறங்க போனவளை இழுத்து இதழை சிறை செய்தான்...

அவன் அணைப்பில் உருகியவளை இடை பற்றி விலக்கி...இப்போவும் அவனுக்கு ஓகே சொல்லுவியா??

சனா சிரித்தவாரே ஆமா என்று சொல்ல..

அவளை மீண்டும் நெருங்கி...இப்போ சொல்லு என்றவனை பார்த்து சிரித்தபடி இம்முறை அவள் முத்தம் கொடுக்க துவங்க தீபக் தன்னிலை மறந்து கண்கள் மூடினான்...

விலகியவளை கண்களால் இன்னொன்று கேட்டு கெஞ்சியவனை விரல்களை காட்டி எச்சரித்தாள்...

கொல்றியேடி😕என்றவனின் தோள்களில் கைப் போட்டு இந்த முக பாவனைலா எப்பவும் வர்க் அவுட் ஆகாதுடா ப்ராடு என்றால்...

அப்போ நானே எடுத்துக்குற...என்று அவன் அவள் முகத்தை கையில் எந்திய நேரம்..

திவ்யா கீழே இருந்து அக்கா!!!அப்பா கூப்பிட்றாரு என்று கூப்பிட 

உங்கப்பாக்கு விவஸ்தையே இல்லடி என்றவனின் காதுகளை பிடித்து திருகினாள்...

பின் இருவரும் சேர்ந்தபடி ஒன்றாய் கீழே இறங்கினர்...

             

                *முற்றும்*...

Thax a lot for ur support dears!!keep supporting me...

Keep smiling

Saranya..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro