கடவுள் ஒருவரா? பலரா?

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கடவுள் ஒருவரா? பலரா?

இக்கேள்விக்கு உலகெங்கும் கருத்துவேறுபாடுகள் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது..ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு,  உள்ளத்தில் , நம்மை படைத்த இறைவன் ஒருவன் தான் இருக்கமுடியும் என்ற நம்பிக்கை இருப்பதை நம்மால் காணமுடிகிறது. ஆனால் சில மக்களே இக்கருத்துக்கு மாற்றமான "பல கடவுள் " நம்பிக்கையில் உள்ளனா். அப்படியெனில் எது சரி?! 

ஒன்றா , பலரா? - ஓா் சிறிய ஆய்வு. 

ஓரு கடவுள் போதாது என்ற சிந்தனை வர முக்கிய காரணம் , கடவுளால் இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை  படைத்து பராமரித்து கண்காணித்து கொள்ள முடியுமா என்ற கேள்வி?? இக்கேள்வி அடிப்படையிலேயே தவறானவை தான், இது போன்ற கேள்வி எழுந்ததன் காரணம், மனிதனை போன்று தான் கடவுள் என்ற எண்ணம் உள்ளத்தில் இருப்பதால்தான், அவ்வாறே நாம் கற்பிக்கப்பட்டதால் தான்... 

"கடவுள்" என்று நாம் கூறுவது, நம்மை படைத்த மாபெரும் சக்தி / பிரபஞ்சத்தின் படைப்பாளன் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.. மாறாக நமது குலசாமியோ,ஊர் சாமியோ அல்ல,  இவர்கள் நமது மூதாதையர்கள்,நமது ஊருக்கு பாதுகாவலர்களாக இருந்தவர்கள் அல்லது சில பல நல்லவைகளை மக்களுக்கு  செய்தவர்கள், அவர்கள் இவ்வுலகை படைக்கவில்லை!! பிரபஞ்சத்தை படைக்கவில்லை!! மனிதனால் எதையும் படைக்கமுடியாது என "ஆற்றல் அழிவில்லா விதியும்" சொல்லிவிட்டது.. ஆக, இவர்களோ நாமோ மாபெரும் சக்தியல்ல!!!   

நம்மையும் ,விண்ணையும் , மண்ணையும் அனைத்தையும் படைத்த அந்த  மாபெரும்  சக்தி தான் கடவுள் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.

பகுத்தறிவை நாம் பயன்படுத்தும் போது இறைவன் எத்தனை என்ற கேள்விக்கு முதலில் விடை கிடைக்கின்றது. ஒன்றிற்கு மேற்பட்ட கடவுள்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொன்றை நினைக்க, அதனை செயல்படுத்த விரும்பினால் - ஒரு கடவுள் ஒருவரை தண்டிக்கவும் மற்றொரு கடவுள் அவரை மேம்படுத்தவும் முனைந்தால்-முடிவு?!எனவே பகுத்தறிவு சொல்கிறது, ஒரே அதிகார மையம், ஒரே சக்தி, ஒரே இறைவன்.

அமெரிக்கா எனும் ஒரு நாடு உலகமுழுக்க சாட்டிலைட்டுகள் மூலம் கண்காணிக்க முடியுமென நம்புகிற நீங்கள்,  ஒரு கடவுளால் நம்மை  கண்காணிக்க முடியாதெனவா நீங்கள் எண்ணுகிறீா்கள்?இப்பிரபஞ்சத்தை நம் பூமியோடு ஒப்பிடுகையில் , கடுகை விட மிக சிறியது தான். ஆப்கான் நாட்டின் பல இடங்களை சாட்டிலைட் மூலம் அமெரிக்கா பார்க்கிறது என்பதை நம்ப முடிகின்ற நமக்கு அகில உலகையும் படைத்தவனின் ஆற்றல் அதை விடவும் குறைவானது என்றும் நினைக்க முடிகிறது என்றால் இது ஆச்சரியமானது,முட்டாள்தனமானது. 

ஓன்றுக்கு மேற்ப்பட்ட கடவுள் இருக்குமென யோசிப்பது, கடவுளை கொச்சைப்படுத்துவதாகிவிடும். ஏனெனில் கடவுளுக்கு, உலகை நிா்வகிக்க இன்னொருவர் தேவையென்றால் அது அவரின் பலவீனத்தை தான் காட்டுகிறது.. எ.க.. நான் ஓரு வியாபாரம் செய்கிறேன் என்றால்,என்னால் நடத்த முடியவில்லையென்றால் தான் நான் பாட்னரை சோ்த்துக்கொள்வேன்.. இது என்னுடைய பலகீனம்; இது போன்று கடவுளும் பலகீனரா?? கடவுள்  ஒருவன் அனைத்தையும் நிர்வகிக்கின்றான் என்ற நம்புவதன் மூலம், அக்கடவுள் சா்வவல்லமையுடைவன் , அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பது அதனுள்ளே ஒளிந்திருப்பதை அறிய முடிகிறது... 

அதுபோவே என்னால் ஓன்று எளிதாக முடியுமென்றால்,நான் இரண்டாவது ஆளை சாாந்து இருக்கமாட்டேன், எனக்கு நிகரான (அல்ல சற்று குறைந்த) ஆளையோ வைத்துக்கொள்ளமாட்டேன். ஓா் அரசன் கூட அவனுக்கு நிகராக இன்னொரு அரசன் இருப்பதை விரும்பமாட்டான்..இன்னும் ஒரு அடியான் ,ஒரு எஜமானுக்கு தான் முழுமையான முறையில் கட்டுபடயிலும்.பல்வேறு  எஜமானருக்கெப்படி? அழிக்கும் கடவுள் நம்மை அழித்துவிடுவாரோ எனவும், காக்கும் கடவுள்,  நம்மை காக்காமல் விட்டுவிடுவாரோ என பயந்துக்கொண்டும்  அவர்களுக்கு மட்டும் அதிகமாக வேண்டுதல் ,தரிசனம் செய்துவருவதை தற்போது கூட நம்மால் பாா்க்கமுடிகிறது, இதனால் படைக்கும் கடவுளுக்கு எப்பவும் மவூஸ் கம்மிதான். சிந்தியுங்கள் அன்பர்களே!!  

இன்னும் பிரபஞ்சத்தின் அமைப்பை (Model-Design of Universe)  உற்றுநோக்கினால், அதில் இருக்கும் ஒவ்வொரு கோள் / கிரகம்  மற்றொன்றை பின்னிபினைந்ததாகவே அமைந்துள்ளது, எ.க., நம் பால்வெளி வீதியிலுள்ள, நம் சூரியகுடும்பத்தை மட்டும் எடுத்து கொள்வோம். அதிலிருக்கும்  ஒவ்வொரு கோள்களும் ஒன்றுக்கொன்று சாா்ந்து இயங்கிவரும்.  பூமியை,  சந்திரன் தன் வட்டப்பாதையில் சுற்றிவருகிறது, ஏதேனும் கோள்களின் விபத்தில் சந்திரன் இல்லாமல் போய்விட்டதென்றால், எல்லா நாளும் நமக்கு அம்மாவாசை தான்.சூாியனும் சரி ,எவ்வித கோளாறுமின்றி பல கோடி ஆண்டுகளாக ஜோலித்துக் கொண்டிருக்கிறது,இதில் மிக முக்கியமாக கவனிக்கவேண்டியவை, நம் பால்வெளி வீதி, லட்சம் கோடி சூாிய குடும்பங்கள் உள்ளன,அவ்வளவு சூரிய குடும்பங்கள் இருந்தாலும், அவை எல்லாமே அதனுடைய பணிகளை சரியாக செய்துவருகிறது, அதனுள் முட்டி மோதிக் கொள்வதில்லை.   இன்னும் பல வீதிகளுக்குமிடையேக்கூட எவ்வித பிரச்சினைகளும் இல்லை..இது போன்ற மாபெரும் பிரபஞ்சத்தை பல கடவுள்கள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, அந்த வீதியை நான் பாா்த்துக் கொள்கிறேன்,  நீ இதை பாா்த்து கொள்,என்றெல்லாம்  ஏாியா பிரித்தால்,  எல்லாமே அழிந்துதான் போகும்.. இதிலிருந்து  கண்டிப்பாக ஓரே மாபெரும் சக்தி தான் நிா்வகிக்கிறதென்பதை அறியமுடியும்.. 

நாம் வாழும் இந்த பூமியில் 800 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வாழ்ந்து மடிந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. இவர்களிடையே நிறத்தால், குணத்தால், அறிவால், மொழியால், உடல் அமைப்பால் இப்படி எத்தனையோ வித்தியாசங்கள் காணப்படுகின்றன. எவ்வளவுதான் வித்தியாசங்களையும் வேறுபாடுகளையும் மனிதர்கள் தமக்குள் ஏற்படுத்திக் கொண்டாலும் இவர்கள் எல்லோருடைய மூலப்பொருளும் ஒன்று தான். அந்த மூலப்பொருளான இந்திரியத்தில் எந்தவித வேறுபாட்டையும் காணமுடியாது. எல்லோருடைய இரத்தமும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. மனிதன் என்ற வட்டத்திற்குள் தான் எல்லோரும் இருக்கிறார்கள். இந்துவை படைத்தது பிரம்மா,  கிறிஸ்தவர்களை படைத்தவர் கா்த்தா்,முஸ்லிம்களை படைத்தது அல்லாஹ் என நீங்கள் நம்பினால்,  அனைத்து மதத்தை சாா்ந்த மனிதனும், ஓரே வரைவிலக்கணத்தோடு தான் உள்ளான், யாரும் மாற்றமான நிலையில் இல்லை. அனைவரையும் ஒரே கடவுள் தான் படைத்திருக்கவேண்டும் என்பது இதிலே தெளிவாகிறது.  தற்போது,  உலகில் 800 கோடி மக்கள் உள்ளனர், இந்தியாவில் 125 கோடி போ், ஒரு 40/50 ஆண்டுகளுக்கு முன்னா்,  இந்தியாவில் 30 கோடி பேர் தான் இருந்தனர், உலகில் 300-400 கோடி மக்களே இருந்தனா், இப்படியே பின்னோக்கி சென்றால், இன்னும்  மனிதன் தோன்றிய வரலாற்றை தலைமுறை தலைமுறையாக ஆராய்ந்து பார்த்தால் கடைசியாக ஒரே ஒரு மனிதனைத்தான் போய் அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த அடிப்படையில் பார்க்கும் போது அகில உலகத்திலுள்ள அத்தனை மனிதர்களும் ஒரே ஒரு தாய் தந்தையிலிருந்து வந்தவர்கள் தான் என்பதை சாதாரண அறிவுடையவர்களும் உணர முடியும். ஆக நம் அனைவருக்கும் மூல பிதா,  மூல தாய் ஓருவர்!!!  அந்த ஜோடி தான் உலகின் முதல் மனித ஜோடி, அந்த ஜோடியை, அவ்விருவரையும் படைக்க ஒரு கடவுள் போதும் தானே!!! இவ்வாறு, ஏக இறைவன் ஓரு ஜோடி மூலம்,  பல மக்களை பல்கி பெருக செய்தானே தவிர, வேறு மாதிரியாக பிறப்பில் ஏற்றத்தாழ்வு ரீதியாக கடவுள் படைக்கமாட்டார். 

பிறப்பு ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் கருதும் மனிதரையே ஜாதி/மத/இன வெறியர்/பாகுபாடு காட்டுபவர் என்கிறோமே, இது போன்ற அநியாயத்தை நம்மை படைத்த இறைவன் செய்வாரா...? 

அனைவருக்கும்  ஓரு கடவுள் என நம்புவதால், சமத்துவம் உருவாகிறது,  மதம் ,ஜாதி,இழிவு ,வேற்றுமை அடிப்பட்டு போகிறது. "ஓன்றே குலம் - ஓருவனே தேவன் " என்பது தான் முற்றிலும் உண்மையானது, பகுத்தறிவுக்கு உகந்தது. ஆக ஒரே இறைவனை வணங்குவதே சாலச்சிறந்தது.  

எல்லா கடவுளும் ஒன்று என்பது உண்மையல்ல..!! எல்லாருக்கும் ஒரே கடவுள் என்பதே உண்மை.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro