29

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

Sorry for late update

அடுத்த நாள் காலை அழகாய் விடிய வீட்டில் உள்ள அனைவரும் தயாராகி வரவேர்ப்பரையில் வந்து நின்றனர் .

மாறனும் ராஜாவும் வழக்கம்  போல் pant shirtடில் வர அவர்களை ஏற இறங்க பார்த்தார் கருப்பத்தேவர்.அவர் மேலும் கீழும் இருவரையும் பார்ப்பதை உணர்ந்த ராஜா மாறனின் காதில் திரும்பி "என்ன அண்ணே பெரியப்பா இப்டி பாக்குறாரு ?"என்க

மாறனோ" தெரியலயே டா "என்று கூறியபடி கீழே இறங்கி வந்துவிட

கருப்பத்தேவரோ அவர்களை பார்த்தவர் "ஏன்டா மகனுங்களா ஒருத்தன் புதுசா கல்யாணம் ஆகி இருக்கான் இன்னொருத்தனுக்கு கல்யாணம் ஆக போகுது இப்டியா உடுத்துறது?நல்லா வேட்டி சட்டை போட்டுட்டு மதுர வீரன் கணக்கா மடிச்சு விட்டு நடக்கிறது இல்லையா ?"என்று கேட்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முழிதனர் .

ராஜா"அது....பெரியப்பா நாங்க வேட்டி எடுத்துட்டு வரல "என்க

அவர்"அட இது ஒரு பிரச்சனையா ?"என்றவர்"  சிவகாமி" என்று குரல் கொடுக்க

சிவகாமி ஓடி வந்தவர் "என்ன ஜயா"என்று கேட்க

அவரோ"தம்பி ரெண்டு பேருக்கும் புது வேட்டி எடுத்து குடு மா "என்க மாறனும் ராஜாவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி வேரு வழியின்றி சிவகாமியை பின் தொடர்ந்தனர்.

சிவகாமி இருவருக்கும் பட்டு கரை இட்ட வேட்டியை எடுத்து கொடுத்து விட்டு வெளியே சென்று விட ராஜா அந்த வேட்டியை பார்த்தவன்"யோவ் அண்ணா என் இடுப்புல இது நிக்காதுனு தானயா நான் இத எடுத்துட்டு வரல .பெரியப்பா இப்டி சொல்லிட்டு போய்ட்டாரு "என்க மாறனோ அவன் புலம்பி முடிப்பதற்குள் வேட்டியை கட்டி முடித்து இருந்தான் பெல்ட்டுடன்.

ராஜா வாயை பிளந்தவன்"அண்ணே கட்டி விடு அண்ணே "என்க மாறனும் கட்டி விட்டான்.எனில் அது என்னவோ நழுவிய படி தான் இருந்தது.ராஜா மாறனைப் போல் அதில் பெல்ட் இட்டு வெளியே சென்று விட மாறன் தன்னை ஆளுயரக்கண்ணாடியில் பார்க்க அந்த சந்தன நிற சட்டையும்  பட்டுக்கரை இட்டிருந்த வேஷ்டியும் அவனின் நிறத்திற்கு கம்பீரமாக தோன்ற தனது பிம்பத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

பின்னே திடீரென்று இலக்கியாவின் பிம்பம் தோன்றி Super என்று கை அசைத்து கூறுவதை போல் தோன்ற மாறன் சட்டென்று பின்னால் திரும்ப அவளின் பிம்பமும் மறைந்திருந்தது.

தன் தலையில் சிரித்தபடி"முத்திப் போச்சு மாறா"என்று  தட்டிக்கொண்டவன் வெளியே வர அனைவரும் அவர்களின் குல தெய்வக் கோவிலிற்கு கருப்பத்தேவரின் மகிழுந்தில் ஏறினர்.

ராஜா தனது வேட்டியுடன் பொராடியபடி வந்தவன் கண்கள் அடர் பச்சை வண்ண பட்டுசேலையில் இடை தாண்டி இருந்த முடியை பின்னலிட்டு தோளில் உரசுமாரு மல்லிகை பூவுடன் வகிட்டில் நிறைந்த குங்குமத்துடன் அவள் அந்த மகிழுந்தின் அருகில் மகதியுடன் நின்று சிரித்து பேசிக்கொண்டிருக்க கண்கள் இமைக்கவும் மறந்து அவளை வேறொரு கோணத்தில் ரசிக்க வைத்தது .

மஹதி எதேற்ச்சையாய் அவனை கண்டவள்  அவனின் பார்வையின் அர்த்தம் புரியாது"அக்கா உன் புருஷன் ஏன் இப்டி பல நாள் பட்னி கிடந்தவன் பிரியாணி பொட்டலத்த பாக்குற மாறி பாத்துட்டு இருக்காரு"என்க

இளவரசி ராஜாவின் புறம் திரும்பி என்ன என்று ஒற்றைப்புருவம் தூக்க அதில் தெளிந்தவன் ஒன்றுமில்லை என்று வேக வேகமாய் தலை ஆட்டிவிட்டு வேட்டி நழுவுவதைப் போல் தோன்ற உள்ளே மீண்டும் அறையை நோக்கி ஓடினான்.மனம் ஒரு நிலையில் இல்லாமல் பட படவென்று அடித்துக் கொண்டிருந்தது.

மனதில்"கடவுளே இவ்வளவு நாளா  இதே கண்ணுல தான அவள பாத்தேன் அப்பொலாம் இவ்வளவு அழகாக தெரிஞ்சது இல்லயே இப்போ மட்டும் ஏன் இப்டி என்று தன்னை தானே நொந்து கொண்டு வெளியே வர அதற்குள் அனைவரும் மகிழுந்தில் ஏறி இருந்தனர்.

கருப்பத்தேவர்"செய் மகனே என்னடா கனவு கண்டுகிட்டு நிக்குற ஏரு என்க அந்த மகிழுந்தில் அனைத்து இடமும் நிரம்பி இருந்தது.ராஜா அப்பொழுதே வந்து சேர கருப்பதேவரோ " இடம் இல்லையே மகனே நீ bulletla வந்துருறியா "என்க

ராஜாவோ மகாவின் முகத்தை பார்த்தவன் அவளை வம்பிழுக்க வேண்டி "அவசியம் இல்லை பெரியப்பா நானும் இதிலேயே வரேன்"என்க

அனைவரும் குழப்பமாய் பார்க்க ராஜா கதவை திறந்து ஜன்னல் புறம் அமர்ந்திருந்த இளவரசியை"இறங்குடி"என்க அவளோ குழப்பத்துடன் இறங்கினாள்.

பின் அவள் அமர்ந்து இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டவன் அவளை பார்த்து"ஹே என்ன என்னையே பாத்துட்டு இருக்க உக்காருடி "என்று தன் மடியை காட்ட அவளோ அதிர்ந்து விழித்தாள்.

அவன் செய்கையை கண்டு அனைவரும் கேலிப்புண்ணகை சிந்த மகாவோ"அறிவு கெட்டவன்  வயசு பொண்ண மடியில உக்கார வைக்கிற"என்று சூழல் மறந்து கத்திவிட

அவனோ அவளை லூசா நீ என்பதை பொல் பார்த்தவன்"I have license மாமியாரே. tension ஆகாத பிபி வந்து போது"என்று மடியில் அமர்ந்தவன் இடையை seat belt போல் வளைத்து அவளை பிடித்து கொள்ள இளவரசியோ நெளிந்தபடி அமர்ந்து இருந்தாள்.

ராஜா அவள் காதில் குனிந்தவன்"நாகினி மாதிரி ஆடாம உக்காரு டி. சும்மாவே வேட்டி நிக்க மாட்ங்குதுனு பெல்ட் வச்சு கட்டி இருக்கேன் "என்றதும் அவள் முறைக்க அவனோ மனதில்"கொஞ்சம் ஓவரா தான் போரோமோ"என்று நினைத்தவன் மகாவின் எரிச்சல் நிறைந்த முகத்தை பார்த்து சிரித்தபடி" போவோம் என்னா பண்ணிருவானுங்க" என்று நினைத்து அமர்ந்திருந்தான்.மாறனோ ராஜாவின் சேட்டைகளைக் கண்டு வாய்மூடி சிரித்துக் கொண்டான்.

இளவட்டங்கள் சேர்ந்து இவர்களை ஒட்டி தள்ள கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.அங்கே பல பல வாகனங்களில் பற்பல வண்ண சேலைகளிலும் தாவணியிலும் பெண்கள் பூஜைப்பொருட்களுடன் வந்து நிற்க ஆண்கள் வேட்டி சட்டையில் வந்திருந்த தனது அங்காளி பங்காளிகளுடன் வம்பலந்தபடி நின்றிருந்தனர்.

இவர்கள் குடும்பம் வந்து இறங்கவும் சரியாய் அங்கு மேளம் கொட்டப் பட்டது பூஜை வேளை ஆரம்பிக்க போகும் அடையாளமாய்.பதினெட்டாம் படி கருப்பு ஒரு புறமும் அம்மன் இன்னொரு புறமும் இருக்க அய்யனார் சிலை நெடிந்து உயர்ந்து நின்றது(கற்பனை கோவில்).

அங்கே மேலங்கி அணியாது பெரிய மீசை வைத்து கழுத்து நிறைய பாசி மணிகள் அணிந்து நெற்றி நிறைய திரு நீரை பட்டையாய் பூசிய பூசாரி இருவர் காவி வேஷ்டி அணிந்து அதை மடித்துக் கட்டிக்கொண்டு இருந்தனர் .
அபிஷேகங்கள் செய்து முடித்தவர்கள் ஆயிரத்தெட்டு எலுமிச்சம் பழங்களால் ஆன மாலையை அய்யனார் சாமிக்கு சாற்றிவிட்டு ஒரு பெரிய தாம்பூலத்தில் தீப ஆராதனை எடுக்க சுற்றி இருந்த பெண்களின் குலவைச்சத்தம் எட்டுத்திக்கும் ஒலித்தது .

அதன் பின் அம்மனுக்கும் கருப்பருக்கும் ஆராதனை நடந்தது.புதுமண தம்பதிகள் அனைவரையும் வரிசையாக வர அவர்களுக்கு அந்த ஊரிலேயே மரியாதைக்கு உரிய பூசாரியின் கையால் மஞ்சள் கயிறு,ரவிக்கை துணி,பழம் தேங்காய் போன்ற வற்றை வைத்து ஒரு கூடையை அவர் கையால் கொடுக்க கறுப்பர் சன்னதியின் முன்னே தம்பதியர் விழுந்து கும்பிட்டு திருநீர் பூசிக்கொண்டு கணவர் கைகளால் வகுட்டில் குங்குமம் வைத்துக் கொள்வார்கள்.

இளவரசியும் ராஜாவும் கறுப்பர் சன்னதியில் விழுந்து எழுந்தவர்கள் அவரிடம் திருநீறை பூசிக்கொள்ள அவரோ அவர்களை பார்த்து சிரித்தவர்"அந்த கறுப்பர் உனக்கு புள்ளையா பொறப்பாரு தாயி"என்று கூற ராஜா அவளை புன்னகையுடன் பார்க்க அவளோ வெட்கப்புன்னகையுடன் வேறுபுரம் திரும்பி கொண்டாள்.

பின் அவள் வகிட்டில் குங்குமத்தை வைத்தவன் அவள் நெற்றியில் இதழ் பதிக்க வேண்டுமென்று எழுந்த உணர்வை சிரமப்பட்டு அடக்கியவன் அவள் கைகளோடு தன் கைகளை கோர்த்தபடி அங்கிருந்து நகர்ந்தான். 

அதன் பின் ஒரு இடத்தில் அங்கே குழுமியிருந்த குடும்பத்தினர் செங்கலை அடுப்பு போல் ஆக்கி விறகுகளிலு தீ மூட்டி அங்கிருந்த வேப்ப மரத்து நிழலின் அடியில் சமைக்க துவங்கினர்.

இளவரசிக்கு பாட்டி முறை உள்ள ஒரு பெண்மணி அங்கே நின்று இருந்த சாந்தியின் அருகில் வந்தவர் "என்ன சாந்தி பேத்திய வெளிய கட்டிக் கொடுக்க பயந்துட்டு மகனுக்கு  கட்டிக் குடுதுட்டியாக்கும் "என்க

சாந்தியோ மலுப்பலாய் சிரிக்க அவரோ இளவரசி பொங்கல் கிண்ட அவள் பின்னே நின்று கரண்டியை கொடு கொடு என்று அடம்பிடித்து கொண்டிருந்த ராஜாவையும் அவர்களை கிண்டல் அடித்துக் கொண்டு இந்த ஷிவா,மகதியயும் பார்த்தவர் சிறு சிரிப்புடன்" சோடி பொருத்தம் கண்ணுக்கு நிறைவாக இருக்கு"

என்று கூறி விடைபெற சாந்தியோ அவர்களை கண்டவர் தானும் புன்னகைத்து"முதல்ல இந்த கூறுகெட்ட சிறுக்கி காலடி மண்ணெடுத்து சுத்தி போடணும் புள்ளைங்களுக்கு "என்று நினைத்துக் கொண்டார்.பின் அனைவரும் வேப்பமரத்து நிழலில் மந்தரையில் வாழை இலையில் கிராமத்து சமயலால் மணக்க மணக்க காலை உணவை முடித்தவர்கள் மணி பண்ணிரண்டை நெருங்கும் சமயம் ஒரு ஆலமரத்தின் நிழலில் கூடினர்.

அங்கிருந்த விசாலமான பழமையான ஆலமரம் தன் விழுதுகளை பரப்பி இருக்க அங்கே அதன் அடையில் மேடை பொல் அமைந்திருந்த இடத்தில் கீழ் அனைவரும் அமர்ந்தனர் குறி கேட்பதற்காக.

அங்கே ஒரு மேஜை போல் புலித்தோல் போர்த்தி இருக்க அதில் தலைப்பாகை கட்டி உடலெங்கும் சந்தனம் தடவி வெள்ளை வேட்டியில் ஓர் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவரின் கையில் அரிவாளுடன் அமர வைத்தனர்.

அவரோ அந்த அரிவாளுடன் பத்து நிமிடம் கண்களை மூடி இருந்தவர் அதன் பின்  உடல் சிறிது சிறிதாய் ஆட துவங்க அரிவாளை கெட்டியாய் பிடித்தவர் கண்ணை திறக்க அதுவோ ரத்த சிவப்பாய் இருந்தது.

அதை கண்ட மூதாட்டிகள் இருவர் குலவை இட ஒவ்வொரு குடும்பமாய் சென்று குறி கேட்டனர்.நான்காவதாக மாறனும் சத்தியமூர்த்தியின் செல்ல அவரோ அவர்களை பார்க்க சத்யமூர்த்தி"ஐயா இது என் மூத்த மகன் இவனுக்கு கல்யாணம் எப்போ வைக்கலாம்?"என்று கேட்க

அவரோ  மாறனை பார்த்தவர்"ராம ஜாதகம் உள்ளவன் தா உன் புள்ள அவனுக்கான ஜானகிய அந்த ராம சீதா கல்யாண வைபோகத்தப்போ நடத்து"என்று கூற அவரோ மகிழ்ச்சியுடன் தலை ஆடாடி விடைபெற அவரோ மாறனை பார்த்தவர் ஒரு சிரிப்பை சிந்தினார்.

அனைவரும் நிம்மதி உற கருப்பதேவர் அந்த குறி சொல் பவர் கூறிய ராம ஜாதகம் உடையவன் என்பதில் சற்று குழப்பம் அடைந்தார்.

குறி கேட்டால் என்றும் அவர்கள் உவமையாய் கூறும் அவதாரத்தின் வாழ்கையை போல தான் அவர்கள் கூறியவரின் வாழ்க்கை இருக்கும்.ராமனோ சொந்தத்தாலே வஞ்சிக்கப்பட்டு,வாழ்வையே சோதனைகளால் கடத்திய கடவுள் .மாறனை இராமரின் வாழ்வுடன் ஒப்பிட்டால் அவனும் சொந்ததால் வஞ்சிக படுவானா? எனில் யாரால் என்று அவர் யோசிக்க அவர் சிந்தனையை இடை வெட்டியது மகாவின் "பெரியப்பா நேரமாச்சு கிளம்பலாம்"என்ற குரல்.

அடுத்த update மாறன் இலக்கிய கல்யாணம் தான் எல்லாரும் வந்திருங்க.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro