2

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மதியின் நினைவலைகள் முன்னோக்கி செல்ல...

வேகமாக கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவனுக்கு முதுகுகாட்டி படுத்திருப்பவளின் அருகில் மெதுவாய் அமர்ந்தான்.

களைப்பில் முகமெங்கும் வாடி இருக்க, அதிலும் ஒரு அழகு தெரிந்தது அவனுக்கு. மெல்ல அவளின் தலையை வருடி "மதி" என்றான்.

உறங்காமல் அசதியில் முழித்தவாறு கண்களை மட்டும் மூடி இருந்தவள் அவனின் குரலில் வெடுக்கென எழுந்து அமர்ந்தாள்.

"ஹேய்!! மெதுவா எதுக்கு இப்டி வேகமா எந்திரிக்கிற?" என்று அவளை செல்லமாய் கண்டிப்பவனை காணமுடியாமல் அவன் நெஞ்சினில் சரணடைந்தாள்.

"மதி! எனக்கு என்னை சுத்தி இருக்குற எல்லாமே மாயை மாதிரி இருக்கு வார்த்தைகளால வர்ணிக்க முடியாத அளவுக்கு என் நெஞ்சமெல்லாம் சந்தோஷத்துல நிறைஞ்சிருக்கு. ப்ளீஸ் இன்னும் பத்து மாசம் ஆகுமா?? இப்பயே பெத்துகுடுத்திடேன் என் குட்டி மதியை." என்றான் கெஞ்சலின் கொஞ்சலாய்.

"ஹ்ம்ம் ஆசை தான். தன் பிஞ்சு கைகளோட குட்டி கால்களால் உதைத்து கொண்டு சிரிக்கும் சின்ன சிறு குழந்தை அதுவும் நீங்களும் நானும் காதலாய் ரசித்து உருவாகின ஒரு பொக்கிஷம் அதை பார்க்கணும்ன்னு இப்பவே மனசு ஏங்குது ஆனா எல்லாத்துக்கும் ஒரு நேரம் இருக்குள்ள?? சோ நாம வெயிட் பண்ணி தான் ஆகணும்." என்றாள் மதி.

அவளின் முகத்தை நிமிர்த்தி இமைமூடாமல் அவளையே பார்க்க "என்ன ஏன் அப்படி பார்க்கின்றீர்கள்?" என்றாள்.

"இல்ல... ஒரு வார்த்தை கேட்க ஒராயிரம் தடவை நான் கெஞ்ச வேண்டும். அப்படிப்பட்ட என்னோட மதியா இவ்ளோ பேசறதுன்னு வாயடைச்சு போய் அதிர்ச்சியா நிக்கிறேன்." என்றதும் மீண்டும் வெட்கத்தில் அவன் நெஞ்சத்தில் சரணடைந்தாள் மதி.

மதிகரனின் அளவு கடந்த காதலும் அக்கறையும் சேர்த்து அவளை தரையில் கால் பதியாமல் செல்லமாய் பார்த்துகொண்டான்.

இருந்தாலும் அவன் வேலைக்கு சென்ற பின் அவனுக்கு போக்கு காட்டி விட்டு எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிடுவாள் மதி.

அதனால் சுகப்பிரசவத்தில் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள் மதி.

அவனின் தோளை தொட்டு உலுக்கினார் மதி.

"என்னடா மதி?" என்றார் மதிகரன்.

"ஒன்னுமில்ல... எனக்கு ஒரு சந்தேகம்" என்றார் தயங்கியபடி.

"என்கிட்டே கேட்க என்ன தயக்கம்? சொல்லு?" என்று நரைத்த அவளின் வேல்லிகம்பிகளை காதோரத்தில் ஒதுக்கி விட்டு அவளின் முக அழகை ரசித்து கொண்டிருந்தார் மதிகரன்.

"இல்ல... நம்ம கலயாணத்துக்கு ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே நீங்க என்னை காதலிச்சதா சொன்னாங்க அம்மா. அப்போ ஏன் அந்த ரெண்டு வருஷத்துல ஒரு நாள் கூட பேசவில்லை. ஏன் ரெண்டு வருஷம் வரைக்கும் வெயிட் பண்ணிங்க?" என்றார் சிறு குழந்தை போல்.

"அடி மண்டு. நீயென்ன படிச்ச? அப்போ நீ காலேஜ் செகண்ட் இயர் படிச்சிட்டு இருந்த நான் விசாரிச்சதுல உங்க அக்காங்க ரெண்டு பெரும் பன்னிரெண்டாம் வகுப்போடு நிறுத்திட்டு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க ஆனா நீ மட்டும் படிக்கணும்னு ரொம்ப அடம் பிடிச்சு காலேஜ் சேர்ந்து படிச்சிட்டு இருக்க. படிப்பிலையும் ரொம்ப கெட்டிகாரின்னு. சோ, நான் வந்து உன்கிட்ட என் காதலை சொன்னா? படிப்புல உன் கவனம் சிதறும்... அப்புறம் ஒழுங்கா படிக்கலைன்னா படிச்சது போதும்னு உன்னை உங்க வீட்ல காலேஜ்ச விட்டு நிறுத்திடுவாங்க. கடைசியா அந்த கோபம் என் மேல தான் திரும்பும் அஹ்டான் நீ படிச்சி முடிக்கற வரைக்கு உன்னை தொந்தரவு செய்ய கூடாதுன்னு தள்ளி இருந்து உன்னை தினமும் பார்த்து மட்டும் இருந்தேன். உன் படிப்பு முடிஞ்சதும் உன்னை பெண் கேட்டு வந்துட்டேன்." என்று சிரித்தார்.

"போங்க" என்று வெட்கம் கொள்ள.

"தொ பாருடா வயசானாலும் என் பொண்டாட்டிக்கு வெட்கம் குறையலை.." என்று சீண்டினார்.

வாசலில் இரு குழந்தைகள் நின்றிருப்பதை கவனித மதிகரன் "என்ன வேணும் குட்டி பசங்களா?" என்பர் கேட்ட வுடன் "தாத்தா.. பால் உள்ள விழுந்துடுச்சு" என்று தயங்கினார்கள்.

"பால் தானே இருங்க நான் எடுத்து தரேன்" என்று உள்ளே சென்று மாடியில் இருந்த பந்தை எடுத்து வந்து கொடுத்தார்.

"தேங்க்ஸ் தாத்தா" என்று அங்கேயே நின்றனர்.

"இன்னும் என்னப்பா?" என்று கேட்டார் மகி.

"இல்ல.. தாத்தா.. ரொம்ப நல்லா டான்ஸ் ஆடுவாராமே?? ஒரே ஒரு தடவை ஆடுங்களேன்" சிறு குழந்தைகள் கெஞ்ச மதிகரனும் ஒரு பாட்டிற்கு நடனம் ஆட அவர்களும் அவர் ஆடுவதை பார்த்து கட்டரு கொண்டு ஆடினார்.

நடனம் ஆடி முடிந்தவுடன். "சூப்பர் தாத்தா" என்று ஓடி விட்டனர் குழந்தைகள்.

மெல்ல எழுந்து இருவரும் வெளியே போடபட்டிருந்த இரும்பு அஒடா போன்ற சாய்வான பெஞ்சில் உட்ட்கார்ந்தனர்.

அவரின் தோளில் சாய்ந்தபடியே மதி உறங்கி விட, எங்கோ குரல் கேட்டது. "அம்மா! அம்மா!" என்று.

கண்விழித்து பார்த்த மதி மதிகரன் இல்லாமல் தான் மட்டும் தனியாக அமர்ந்திருப்பதை என்னை சுற்றும் முற்றும் தேடினார்.

"அம்மா! என்னம்மா தேடுறிங்க? வாங்க வீட்டுக்கு போலாம் எதுக்கு இங்க வந்து படுத்துருக்கிங்க? வாங்க நம்ம வீட்டுக்கு போலாம்" என்று அவரின் கைகளை பிடித்து மெல்ல நடத்தி கூடி சென்றான் மதிகரன் சாயலில் இருந்த அவரின் மகன் தீரன்.

இருந்தாலும் தன்னுடன் பேசிகொண்டிருந்த அவர எங்கே என்று விழிகளில் தவிப்பாய் தேட அவளின் விழிகளுக்கு கிடைத்தார மதிகரன் அந்த பழைய அவர்கள் வாழ்ந்த வீட்டுவாசலில் சிரித்தபடி அவளுக்கு கையசைத்து.

"அப்போ அவர் என் கூட பேசினது எல்லாம் வெறும் கனவா...??? .

சற்று நேரம் கழித்து தான் சுயத்திற்கு வந்தவர் உணர்ந்தார். 'ஆமாம் அவர் இன்றோடு இறந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டது.'

***நிறைவு*** 

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro