நிழல் மூன்று

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

என்ன தான் நான் தைரியமா கிளம்பி வந்துட்டாலும் என் கையே டான்சாடி என்னைக் காட்டிக் கொடுத்துறும் போல.. பயந்துக்கிட்டே உள்ளே போனேன்..

அவளும் உள்ள இருந்தா.. இப்போலாம் அதிக வேலை இல்ல போல தகதகன்னு தங்கம் மாறி ஜொலிக்கறா.. கொஞ்சம் பூசுனாப்புல வேற தெரியுது.. இவ பக்கத்துல நம்ப பர்சானாலிட்டி கொஞ்சம் இடிக்குறமாறி இருக்குதே.. சரி சரி நானும் கருப்பு பேரழகன்தான்.. அதுனால பிரச்சினை இல்லன்னு மனச தேத்திக்கிட்டேன்..

நான் யாரோ மாறி கேசுவலா ஒரு சேர்ல உக்கார்ந்து ஒரு மாசா ஜூஸ் சொன்னேன்.. ( இனி இவ கடைல இவள நம்பி பச்சைத் தண்ணி கூட குடிக்ககூடாதுனு)..

ஒரு நடுத்தர வயசுள்ளவரு இந்த மழைக்காலத்துல காலங்காத்தால ஜுஸ் கேட்கறானேனு ஒரு மாதிரி பார்த்துட்டு கொண்டு வந்து கொடுத்தாங்க.. என்னோட உயிர்பயம் அவருக்கு எங்க தெரிய போகுது..சிரிச்சிக்கிட்டே வாங்குனேன்..

அவ நான் வந்தத கண்டுக்காம கூட ஏதோ புக்கு படிச்சிட்டு இருந்தா.. என்ன புக்னு பார்த்த உடனே எனக்கு செம கோபம் வந்திருச்சு.. என்னை கட்டுப்படுத்திட்டு ஜூஸ் குடிக்க ஆரம்பிச்சேன்..
ஏன்னா அவ படிச்சது பார்த்திபன் கனவு.. ஸ்கூல் படிக்கும் போதே இதை படிச்சு முடிச்சிட்டாளே.. இன்னுமா அதைப்  படிக்குறா.. அந்தக் கதைல என்ன இருக்குமோ தெரியல.. எல்லாரும் ஹீரோவ பத்தி பேசுனா இவ மட்டும் ஹீரோயினோட அப்பா நரசிம்மவர்மன என் ஆளுன்னு கத்தி கத்தி சொல்லிட்டு இருப்பா.. அப்போ எனக்கு பெரிசா தோணல.. ஆனா இப்போ வெறுப்பேத்தி  என்னை புலிகேசியா மாத்தாம
இவ விடமாட்டா போலயே..

நானும் என்னால முடிஞ்சளவுக்கு ஸ்டைலா அவ முன்னாடி நின்னு 20 ரூபாய எடுத்துக் கொடுத்தேன்... அவ இப்போதான் என்னைப் பார்த்தா..

நான்தான்னு தெரிஞ்ச உடனே சுத்தி முத்தியும் பார்த்துட்டு " உள்ள உக்காரு.. உங்கிட்ட பேசனும் " னா..
என் காதலா அவ சொல்லாமலே புரிஞ்சிட்டாளா.. இல்லை அவளுக்கும் என்மேல காதலான்னு நினைக்கும்போது ஜிவ்வுனு இருந்துச்சு..

முதல்ல எங்கம்மாக்கிட்ட சொல்லி கல்யாணத்துக்கு நாள் பார்க்க சொல்னும்.. அடுத்து எங்க ஆபிஸ்ல சைட் இன்ஜினியர் வேலைய விட்டுட்டு ஆபிஸ்லயே வொர்க் பண்றமாறி பர்மிசன் வாங்கனும்.. அப்போதான் கல்யாணத்தப்ப பார்க்க நல்லார்க்க முடியும்.. இப்படி ஏதேதோ யோசனைல இருந்த என்னை டங்குன்னு ஒரு சத்தம் கலைச்சுது..

ஒரு உண்டியல்ல கொண்டு வந்து முன்னாடி வெச்சா..

என்ன இது - நான்

கொஞ்சம் பொறுன்னு சொல்லிட்டு அதைத் திறந்து அதுல இருந்த பணத்தை வரிசையா அடுக்க ஆரம்பிச்சா.. அதுவும் என்னைப் பார்த்து மொரைச்சிக்கிட்டே..

ஒருவேளை அவ ரொமான்டிக்கா டிரை பண்றதுதான் எனக்கு முரைக்கிற மாறி இருக்கோன்னு அவளப் பார்த்து ஸ்மைல்  பண்ணேன்.. ஆனா அவ அதை கவனிக்காம பணத்தை எண்ணிட்டு இருந்தா..

இப்போ எதுக்கு திரும்பத்திரும்ப அதையே எண்ணிட்டு இருக்க.. எவ்ளோ எண்ணாலும் நோட்டு உன்னோட மயிலு மாறி குட்டிலாம் போடாது..

இப்போதான் என்னை எப்பவும் போல பாசமா மொரச்சுப்பார்க்கற மாறி தெரியுது.. இந்த பார்வைக்காக என்ன வேணா செய்யலாமே..

இப்போ சொல்லப்போறியா இல்லையா.. நான் கொஞ்சம் அதட்டுனேன்..

ஒன்னுமில்ல.. இதெலாம் உன் காசுதான்.. ஆனா நான் கணக்கு போட்டதுல்ல லட்ச ரூபா வரும்னு நினைச்சேன்.. ஆனா இப்போ 10 ஆயிரத்து சில்லறை தான் இருக்குன்னு குழந்தை மாறி சொல்லிட்டு
இந்தக்காசு எப்படி வந்துச்சுனு கதை சொன்னா..

நான் கேவலமா மாட்னது அப்பட்டமா தெரிஞ்சாலும் அதை விட அவளோட கணக்கு போடுற திறமைதான் பெரிசா தெரிஞ்சது.. இவ என்னதான் படிப்புல எங்கூட போட்டி போட்டாலும் கணக்குல மட்டும் எப்பவும் பார்டர்ல தான் பாஸ் பண்ணுவா. தெரியாம ஒரு சைபர எங்காச்சும் மிஸ் பண்ணி புல் கணக்கையும் சொதப்பிருவா.. அதே மாறி தான் இப்பவும் பண்ணிட்டா..பத்தாயிரத்துக்கும் லடசத்துக்கும் எவ்ளோ சைபர்னு அவளுக்கு உண்மையா தெரிலயா.. இது மட்டும் எங்கம்மாக்கு தெரிஞ்சது என்னை உப்புக்கண்டம் போட்டுட்டுதான் மறுவேளை பார்க்கும்.. நானே  ஒரு நிமிசத்துல ஒரு லட்சமான்னு வாயப் பொழந்துட்டனே.

இதை அவகிட்ட சொன்னா சண்டைக்கு வருவா..காதல சொல்ல வந்த எனக்கு
எதுக்கு வீண்வம்பு.. பணத்த உண்டியலயே போட்டுட்டு நேரா அவ கண்ண பார்த்தேன்..

அவ என்னை முரைக்கிறது தெரிஞ்சாலும் அவளப் பார்த்துக்கிட்டே..

அடி பெண்ணே உன்மீது  
நான் கொண்ட 
காதலுக்கு காரணம் ஏதும் 
இல்லையடி  

உன் இமை  மூடி திறக்கையில்  
தான் எனக்கு 
உயிர் இருப்பதே   நினைவில் 
வருகிறதடி

என் காதலை உன்னிடம்  
உணர்த்திட 
காதல் வசனத்தோடு  
வருகிறேனடி..

ஆனால் உன்னை பார்த்ததும் 
மௌனமே  என்  மொழிகளாய் 
மாறுவதேனடி...

பெண்ணே  என்றும் என்னவளாய்
எனக்குள் ஆட்சி செய்கிறாய் 
அதுபோல்  உனக்குள் நான் சிம்மாசனம் 
இட இதயம் துடிக்கிறதடி  

உன்னை கட்டளை  இட அல்ல
உன் கட்டளைகள்  
ஏற்று உனக்கான தேவைகளை
நான் நிறைவேற்ற  
ஆசையடி  

உன் முகம் பார்த்து பேச தவம்
இருக்கிறேன் 
வரமாய் என்னுடன் வந்து 
சேரடி

உன்னை சுற்றி  நீ போட்டு
கொண்ட முள்   
வேலியை என் காதல் கொண்டு தகர்தெறிவேனடி  

ரோஜாவுக்கு  ஆசைப்பட்டால்  முட்களுக்கு  பயம்கொள்ள  முடியாது 
பெண்ணே 

உன்னை பறித்து  கொள்ள நினைக்கவில்லை  
எனக்குள் பாதுகாக்க  நினைக்கிறன் 
என் கை வந்து   சேரடி

உன் சுமை  இறக்க  என் தோள்களை
  தர ஆசையடி

காலம் முழுவதும் உன்னை சுமக்க  
என் இதய கூட்டிற்கு  
ஆசையடி 

இன்று என் காதல் உன்னிடத்தில் 
தஞ்சம்  அடைய  துடிக்கிறது  
என்னை ஏற்று கொள்வாயா  
என் ஆசை காதலியே 
( இது நான் எழுதுல.. கவிதை ராணி arunlovely யோட படைப்பு .. நன்றி சொல்ல மாட்டேன்.. 😘)

" என்னை கல்யாணம் பண்ணிக்கிறியாடி " ன்னேன்..

" என்னடா வாழ்க்கை பிச்சை போடறியா.. இல்ல என்னை குத்திக் காமிச்சு பேசுறியா "
அவ என்னை சொல்றான்னு எனக்கு புரியாம அவள பார்த்தேன்..

அதுக்கு  " என்னடி பேசற.. பைத்தியமாறி "

நான் என்னமோ தீவிரவாதிங்கற மாதிரி கேவலமா ஒரு லுக் விட்டா..
ஆனா அதுக்குள்ள அவ கடைல வேலை செய்யற ரெண்டு  பேர்
எங்கிட்ட வந்து
" பாப்பா என்னடா எதும் பிரச்சனையா.. " ன்னு அவகிட்ட கேட்டாங்க..

அவ என்னைப் பார்த்து ஆமான்னு தலையாட்டுனா..

" தம்பி உங்க அப்பாவுக்காக பார்க்கிறோம்.. மரியாதையா வெளிய போயிடு " னு சொன்னாங்க..

நானும்
என் காதல அவகிட்ட சொன்ன  சந்தோசத்துல கடைய விட்டு வெளிய வந்தேன்.

.ஆனா என் சந்தோசம் நிலைக்கல. என் காதலுக்கு இவ்ளோ பெரிய ஆபத்து காதல சொன்ன உடனே வரும்னு நான் நினைச்சுக் கூட பார்க்கல.
கொலைகாரி நான் வரது முன்னாடியே இவளுக்கு  தெரிஞ்சிருக்குமோ.. கடைசில இப்படி பண்ணிட்டாளே..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro