prologue

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

" டேய் என்னடா இது கல்யாணக்கோலத்துல ஒரு பொண்ண வீட்டுக்கு அதும் இந்நேரத்துல கூட்டிட்டு வந்திருக்க " என்றார் பையனைப் பெற்றவர்..

" அப்பா எனக்கு வேற வழி தெரியல. உங்களுக்கே தெரியும்ல.. நான் ஒரு பொண்ண 3 வருசமா காதலிக்குறேனு.. அது இவதான். இவளோட சித்தி இவளுக்கு வயசான ஒருத்தர வழுக்கட்டாயம கட்டிவைக்க டிரைப் பண்ணாங்கப்பா.. அதான் இங்க கூட்டிட்டு வரவேண்டியதா போச்சு " என்றான் அவரது மகன்..

" அதெலாம் சரிடா. ஆனா எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நாங்களே கல்யாணம் பண்ணிவெச்சு இருப்போமே.. இப்போ அந்தப் பொண்ணத்தான எல்லாரும் தப்பா பேசுவாங்க.. "

" ஏம்மா புரிஞ்சுக்காம பேசறீங்க.. இவங்க வீட்டாளுங்கெலாம் மனுசங்களே இல்ல.. இவ சின்ன வயசிலிருந்து எவ்ளோ கொடுமை அனுபவிச்சுருக்கானு தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க.. ப்ளீஷ்மா இனி இவள எதும் சொல்லிடாதீங்க.. இனிமே நாமதான் இவளுக்கு எல்லாமே " என்றதும்

" சாரதா போதும் எதும் பேசாத.. நம்ப பையன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. நீ நம்ம மருமகள உள்ள அழைச்சிட்டுப் போ.." என்றார் சிரித்த முகத்தோடு

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

" ஏய் கனி ஏன்டி சோகமா இருக்க.. உன் வாழ்க்கைல நடக்க வேண்டிய கெட்டதெலாம் நடந்து முடிஞ்சிருச்சுனு நினைச்சுக்க.. உங்க அம்மா அப்பாவ விட்டுத் தள்ளு..
இப்போ சந்தோசமா டிரெஸ் பேக் பண்ணு.. இன்னும் ரெண்டு நாள்ள காலேஜுக்கு போனும்ல.. " என்றவாறு துணிகளை பெட்டிக்குள் அடுக்கிக் கொண்டிருந்தாள் கனியின் உயிர்த்தோழி துளசி..

கனியோ " நான் வரலடி.. இனி படிச்சு மட்டும் என்ன ஆகப்போறேன்.. " என்று வருத்தமாக கூற

" கனி மாமா உன்னை சீக்கரமே புரிஞ்சிக்கும்டி.. என்ன இப்போ உன்மேல கொஞ்சம் கோபமா இருக்கும்.. உன்னை விட்டா அதும் யாருகிட்ட கோபத்த காட்டும் " என்று துளசி கூற,

" எனக்கு எம்மாமாவோட சந்தோசம்தான் முக்கியம்..அது எங்க போச்சுனு கூட இன்னும் தெரியல.. அதை தனியா விட்டுட்டு எப்படிடி போக முடியும்.. "

" அவரோட ஆசையே நீ படிச்சு பெரியாளா ஆகனும்னு தான்.உனைய ஒன்னும் வைய மாட்டார்..அப்படி எதாவதுனா எங்கண்ண இருக்கான். அதைப் பார்த்துக்குவான்டி.இப்ப நீ அப்ரோ என்னடி.. நான் மட்டும் உன் இடத்தில இருந்தா இங்க நடக்கற சீனே வேற.. ரொம்பதான் சீரியல் ஹீரோயின் மாறி நல்லவ வேஷம் போடாதடி.. சகிக்கல.. சரி எங்கண்ணா ரொம்ப நேரம் வெளிய வெயிட் பண்றான்.. போயிட்டு நாளைக்கு வரேன்டி..குண்டு மாங்கா" என்று தனது தோழியின் கண்ணத்தில் முத்தம் வைத்துவிட்டு சென்றாள் துளசி.

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
" மச்சான் சத்தியமா இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்லடா. அந்த பிரின்சி நம்மள அத்தனை பொண்ணுங்க முன்னாடி அசிங்கப் படுத்திருச்சேடா"

" விடுடா.. இதெலாம் நமக்கு புதுசா.. எப்பவும் நடக்குறது தாண்டா.."

" டேய் நீ சும்மா இருடா.. இந்த அவமானத்த போக்கியே ஆணும்டா..அதுக்கு நம்ம டிபார்ட்மென்ட் தான் இந்த வருசம் " சாம்பியன்ஸ் ஆப் தி இயர் " டைட்டில வின் பண்ணியே ஆகனும்.. அப்போதான் நாம யாருன்னு இந்த காலேஜ்கு தெரியும்..

" ஆமான்டா இதான் சூப்பர் ஐடியா.. அதுக்கு தேவையான வேலைய இப்பவே ஆரம்பிக்கறோம்.."

" போடாங்.. எனக்கு வீட்ல கல்யாண வேலை ஆயிரம் இருக்கு.. இதுல இது வேறயா..ஒழுங்கா வீட்டுக்கு வந்து ஹெல்ப் பண்ற வேலைய பாருங்க " என்றவாறு அனைவரையும் வழுக்கட்டாயமாக இழுத்துச் சென்றான்

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

நன்றாக குடித்துவிட்டு தள்ளாடியபடியே வந்த கதிர் வாசலில் சுருண்டு விழுந்தான்.. தனது ஆசை காதல் இவ்வளவு நாள் தான் வாழ்ந்த வாழ்க்கை என அனைத்துமே பொய்த்து போனதை எண்ணி கண்ணீர் வடித்தான்.. சிறு ஈ எறும்புக்கு கூட தீங்கு நினைக்காத தனக்கா இந்த நிலை என தன்னையே நொந்து கொண்டிருந்தான்.

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

என் இனிய வாட்பேட் நண்பர்களே.. எல்லாரும் நல்லா இருப்பீங்கனு நம்பறேன்.. ரொம்ப நாள் கழிச்சு உங்கள சந்திக்கறதுல ரொம்ப சந்தோசம்..

உங்ககிட்ட நான் எப்பவும் போல இந்தக் கதைக்கும் ஆதரவை எதிர்பார்க்குறேன்.. உங்களோட கருத்துக்களை பதிவு பண்ணுங்க.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro