உறவு 13

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ரதி காட்டிய திசையில் பலத்த எதிர்பார்ப்புடன் திரும்பிப் பார்க்க அங்கே எழில் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் வெட்கத்தில் உடனே தலைகுனிந்து கொண்டாள்.. அவன் தன்னை தான் பார்க்கிறானா என சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.. அவள் வரம்புமீறி நடந்து கொள்பவள் அல்ல. இருப்பினும் அவள் வயதும் ஹார்மோன்களும் அவள் செய்வது சரியே என எடுத்துக் கூறின..

அவனிடம் இருந்து பதில் புன்னகை வந்ததும் எல்லையில்லா ஆனந்தம் அவளுக்கு உண்டானது.. அவள் காதல் வானில் தன் சிறகுகளை விரித்துப் பறக்கத் துவங்கினாள். அந்த நேரம் ரக்ஷ்னா மற்றும் ரதியுடன் அவளது வகுப்புத் தோழர்கள் சிலரும் கேக்குடன் வந்தனர்..

" ஹேப்பி பர்த்டே கனி. நம்ம காலேஜ் ஸ்டார்ட் ஆனதுலருந்து வந்த பர்ஸ்ட் பர்த்டே உனக்கு தான். அதை செலிபிரேட் பண்ணாம விடலாமா.. வா வந்து கேக் கட் பண்ணு" என ரக்சு அழைக்க அவள் கண்கள் தானாக துளசியை தேடின..

" ஓ மேடம் துளசி இல்லைனா வெட்ட மாட்டிங்களா.. அவ ஒன்னும் நினைக்க மாட்டா.. சீக்கிரம்டி கிளாஸ் ஸ்டார்ட் ஆகப் போகுது " என ரதி அவசரப்படுத்த மனமே இல்லாமல் வெட்டி ரதிக்கு ஊட்டினாள்.

காலையில் மிகுந்த மனவருத்ததில் இருந்த துளசி மன அமைதிக்காக கல்லூரியின் உள்ளே இருந்த சிறு விநாயகர் கோவிலுக்கு சென்று அமர்ந்திருந்தவள் கனி தனக்காக சாப்பிடாமல் காத்திருப்பாள் என எண்ணி அவசரமாக கேண்டினுக்கு வந்தாள்.. அவள் வந்தததும் அவள் கண்ணில் பட்டது சிரித்தபடியே நண்பர்களுக்கு கேக் ஊட்டிக் கொண்டிருந்த கனியும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த எழிலும்தான்..

அவள் எதுவும் பேசாமல் எழிலை மறைத்தவாறு கனிக்கு முன்பாக வந்து நிற்க கனியோ அதை யாரென்று பாராமல் அவளை சிறிது தள்ளி நகர்த்தி எழிலைப் பார்த்தாள்.. அதற்குமேல் துளசியால் அங்கே நிற்க முடியவில்லை.. யாருக்கும் தெரியாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்..

வகுப்பில் அவள் தனியாக அமர்ந்திருக்க " ஏய் துளசி நாங்க எவ்ளோ ஜாலியா என்ஜாய் பண்ணோம் தெரியுமா. எங்கடி போன.. " என்ற ரதி கேட்க

அவள் " சும்மா தான்டி .. ஆமா கனி எங்க நீ தனியா வர "

" நாங்க எல்லாரும் கேக்க முகத்துல தடவி விளையாண்டோம்.. அத வாஸ் பண்ண தான் ஹாஸ்டல் போயிருக்கா.. "

" ஓஒ "

" நீ இவ்ளோ கெட்டவனு நான் நினைக்கவே இல்ல துளசி.. கனி பாவம் உன்னை போய் நம்பறா "

அவள் அவ்வாறு கூறியதும் " புரியல ரதி.. நான் என்ன பண்ணேன் " என கேட்க

" என்ன பண்ணியா. நீ அவள அடிமை மாறி இத்தனை நாள் நடத்திருக்க.. எப்போ பாரு படி படின்னு டார்ச்சர் பன்ற.. உனக்கு பொறாமை..அவ எங்ககிட்ட குளோசா இருந்தா உனக்கு பிடிக்கல.. அதான் நாங்க அவ பர்த்டேவ செலிபிரேட் பண்ணப்ப கூட நீ வரல.. " என்று கோபமாக சொல்ல

" ஹேய்.. ரதி நான் அப்படிலா நினைக்கலடி.. எனக்கு நிஜமாவே தெரியாது.. நீ ஏன் பிரிச்சு பேசற ரதி.. அவ சந்தோசமா எல்லோர்டயும் ஜாலியா இருந்தா எனக்கு சந்தோசம்தான்.. அவ ஸ்கூல் டேஸ்ல கூட என்னை தவிர வேற யார்டயும் பழக மாட்டா.. அது எனக்கு ரொம்ப கஸ்டமா இருக்கும்..அவளுக்கு நீங்களா பிரண்டானதுல நான் சந்தோசந்தான் படறேன்.. இதுல நான் ஏன் பொறாமை படனும் ? " என தெளிவாக சொல்ல

ரதி சிரித்தவாறே
"அப்போ சரி.. நான் எதார்த்தமாக தான் கேட்டேன்.. அதை அவகிட்ட சொல்லாத.." என்றதும்

பதிலுக்கு பொய்யாக புன்னகைத்தவள் " சரி சொல்லல. ஆனா எங்கிட்ட சொன்னதையே அவகிட்டயும் சொல்லாத.. " என்றாள்..

" ஏன் "

" ஏன்னா அவ என்னை மாறி கிடையாது.. பொறுமைக்கும் அவளுக்கும் ஏணி வெச்சாலும் எட்டாது. என்னைப் பத்தி குறை சொல்றவுங்களா ஓங்கி அறைஞ்சிட்டு
தான் திட்டவே ஆரம்பிப்பா " என்றதும் ரதியின் முகத்தில் ஈயாடவில்லை..

" அப்ரோ ரதி.. என்னை ஏன் உனக்கு பிடிக்கலன்னு தெரியல. ஆனா கனிக்கிட்ட நீ நல்லபடியா நடந்துக்கறதால உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. கடைசியா சொல்றேன் அவ மனச கொளப்புற மாறி தப்பான கைடன்ஸ் எதும் கொடுக்காத. அப்படி எதும் தெரிஞ்சுது இந்த துளசி யார்னு உனக்கு தெரியவரும் " என்று மிரட்டிவிட்டு கடைசி வரிசையில் சென்று அமர்ந்தாள்..

ஆரம்பத்தில் நன்றாகவே இருந்த ரதி துளசியின் மதிப்பெண்களைப் பார்த்து பொறாமை கொண்டாள்.. பள்ளியில் எப்போதும் முதல் மதிப்பெண் பெறுபவளை சாதாரண கிராமத்து பள்ளியில் படித்த பெண் கல்லூரியில் இரண்டாம் இடத்திற்கு தள்ளியதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. துளசியின் பலமே கனிதான்.. அதனாலே கனியைத் தன்னுடைய உயிர்த்தோழி ஆக்கிக் கொள்ள முயற்சித்தாள்.. அதற்கு கனிக்கும் துளசிக்கும் இடையே உள்ள சிறு விரிசல் பேருதவியாக அமைந்தது.. எந்நேரமும் கனியுடனே இருந்து துளசியை வெறுப்பேற்ற முயற்சித்தாள்.. அதன் வெளிப்பாடே கனியின் பிறந்த நாள் கொண்டாட்டம்..
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

முதலில் கோவிலுக்கு அழைத்துச் சென்றவன் அடுத்து துணிக்கடைக்கு அழைத்துச் சென்றான் ..

பார்க்கும் ஒவ்வொரு புடவையையும் குறை கூறியவன் ஓயாமல் தன் புடவை வேட்டையை ஆரம்பிக்க ஐசு கடுப்பாகி போனாள்..

" அசோக்..இது நல்லாதான இருக்கு.. "

" நீ சும்மா இரு ஐசு.. இந்த கலர்ல உங்கிட்ட 4 சாரி இருக்கு.. வேற கலர் பாரு.. "

" உன்னை கொல்ல போறேன் பாரு " என்றவள் அடுத்த புடவையைக் காட்ட,

" ஐசு.. இந்த பார்டர் டிசைன் உன்கிட்ட இருக்கு.. வேற டிசைன் பாரு.. " என்று அதையும் தட்டிக் கழித்தான்.

" அதெப்டி டா.. என்கிட்ட இருக்க டிசைன்ன நானே மறந்துட்டேன்.. உன்னால எப்படி நியாபகம் வெச்சுக்க முடியுது.. என்மேல அவ்ளோ பாசமா " என காதலாய் அவன்விழி பார்த்துக் கேட்க அவனும் அவள்முகம் நோக்கி குனிந்து அவள் மூக்கைப் பிடித்து மேலும் கீழுமாய் ஆட்டியவன் " ஆஹான்.. ரொம்ப கனவு காணாதீங்க மகாராணி.. அந்த புடவைலதான் மோகினி மாறி இருந்த..சரி இந்த புடவைலயாவது அழகா இருப்பியோனு நட்பாசைல தான் " என்றான் பொறுப்பாக..

" உன்னை... என்ன பண்றேன் பாரு.. " என்று சொன்னதோடும் இல்லாமல் நறுக்கென்று கிள்ளி வைக்க ஆரம்பித்தாள்.. அவள் கிள்ளல்கள் அவனுக்கு வலிப்பதற்கு பதிலாக கூச்சத்தை ஏற்படுத்த நெளிய ஆரம்பித்தான்.

" ஐசு.. ப்ளீஸ்.. கூல்..கூல்.. நான் சரெண்டராயிடறேன் " என கெஞ்ச

" அந்த பயம் இருக்கட்டும் " என கெத்துக் காட்டியவள் வேறு புடவையைப் பார்க்க ஆரம்பிக்க அவனும் அதற்கு உதவி செய்தான்.

வந்ததிலிருந்தே இவர்களைக் கவனித்த
கடையில் வேலை செய்யும் நடுத்தர வயதுடைய மனிதர் " மேடம் உங்க கலருக்கு இந்த சாரி சூட் ஆகும் " என்று அவளிடம் சாரியைக் காட்ட அவளும் அதைப் பிரித்துக் காட்டுமாறு சொன்னாள்.. அவள் புடவையைப் பார்க்க அவனோ ஐசுவை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்க ஆரம்பித்தான்..

" மேம் டிரஸ்ஸிங் ரூம்ல போய் கட்டிப் பாருங்க.. " என்று ஒரு மாதிரியாக சொல்ல அசோக்கிற்கு அது தவறாக பட்டது..

" ஐசு இந்த சாரி வேணா.. வா நாம வேற கடைக்குப் போலாம் " என அவள் கைப்பிடித்து இழுத்து சென்றான். ஆனால் இளமஞ்சள் நிறத்தில் இருந்த அந்த புடவை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது..

" அசோக் எனக்கு அந்த சாரி வேணும் " என சொல்லிட அதைக் காது கொடுத்துக் கேட்காமல் கார் பார்க்கிங்கிற்கு அழைத்துச் சென்றான்.

" அசோக் இப்போ என்ன நடந்துச்சு.. ஏன் இப்படி பிகேவ் பண்ற.. "

" ஐசு சொன்னா புரிஞ்சுக்கோ..அந்த ஆள் பார்வையே சரியில்ல.. "

" அவன் பார்வை சரியில்லைனா என்ன அசோக்.. அப்படி பார்த்தா நாம எங்கேயும் வெளிய போக முடியாது.. உனக்கு தப்புனு தோனுச்சுனா அவன் சட்டைய பிடிச்சு சண்டை போட வேண்டியது தான.. ஏன் கோழை மாறி இழுத்துட்டு வந்த " என அவள் பொரிய

" ஜஸ்ட் ஷட்அப் ஐசு. நான் கோழைதான் போதுமா. அதான் உனக்கு எதுமாகிடக் கூடாதுன்னு பயப்படறேன்.. " என அவனும் எரிச்சலுடன் சொல்ல

அவன் கோபத்தின் காரணம் புரிந்தவள் " அசோக்.. நான் அப்படி சொல்ல வரல.. அவன தண்டிச்சாதானா மத்த பொண்ணுங்களுக்கும் நல்லது.. அதான் " என இழுக்க..

" எனக்கு நீ என்னை நினைச்சாலும் பரவால.. எனக்கு நீ மட்டும்தான் முக்கியம்.. ஒருவேளை நான் அவன அடிச்சதால உன்னை பழிவாங்க அவன் நினைச்சு எதும் பண்ணிட்டானா.. என்னால அத தாங்க முடியாது ஐசு.. உனக்கு எதும் நடக்க விட மாட்டேன்.. " என அவன் உணர்ச்சி வசப்பட அவளுக்கு தலை வெடிப்பதை போல உணர்ந்தாள்.. அவன் கோபக்காரன் என்பது தெரியும்.. ஆனால் சுயநலக்காரன் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. இதில் அவனது சந்தேக குணமும் தெரிந்தாள் பேதையவளின் நிலைமையாதோ..
.
.
.
.
.
சந்தோசமாக கிளம்பி மனதில் வருத்தத்துடன் வீடு வந்து சேர்ந்தனர்.

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

விடுதிக்கு சென்று வகுப்புக்கு வேகமாக கனி வந்து கொண்டிருக்க அவளை வழிமறித்தான் எழில்...அவனைப் பார்த்ததும் முகம் அந்திவானமாய் சிவக்க வேகமாய் அவனைக் கடக்க முயன்றாள்..

" கனிமொழி "

' இவருக்கு எப்படி என்பேரு தெரியும்.. அதுகூட தெரியாமலா ரோஸெல்லாம் தருவாங்க.. ' என நினைத்தவள் அப்படியே நின்றாள்.

அவள் பேசாமல் அவர்களையேப் பார்க்கவும்
" கனிமொழி.. நில்லுங்க.. உங்களுக்கு இன்னைக்கு பர்த்டேன்னு எனக்குத் தெரியும்.. அதான் உங்களுக்கு விஸ் பண்ணலாம்னு நினைச்சோம்.. இல்லடா.." என்று அருகிலிருந்த தேவாவைப் பார்த்து கூறவும் அவனும்
" ஆமா சிஸ்டர்.. வேற எதுவுமில்லை.. நீங்க தப்பா நினைக்காதீங்க.. அப்ரோ
இந்த காலேஜ்ல எதாவது காரியமாகுனும்னா சொல்லுங்க.. இந்த அண்ணன் நான் செஞ்சுதரேன்.. நான் உங்கள காயப்படுத்திருந்தா மன்னிச்சிருங்க " என்றதும்

" நான் உங்கள இப்பதான் பார்க்கிறேன்.. ஏன் நீங்க என்னமோ செய்யக் கூடாத தப்ப செஞ்ச மாறி சாரி கேட்கிறீ்ங்க.. " என்க

எழில் அவன் உளறியதை எண்ணி காலை மிதிக்க " சும்மா தான் சிஸ்டர்.. ஹேப்பி பர்த்டே.. மச்சான் போலாமா.. " என்றதும்

" நான் விஸ் பண்ணவே இல்லையே " என்றவன் அவளருகே வந்து கைநீட்டி " பர்த்டே அன்னைக்கு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க.. கோபத்த மட்டும் குறைச்சுக்கோங்க.. சரிங்களா " என்றதும் சரி என்று தலையாட்டி " உங்க பேரு சொல்லவே இல்லையே " என்றாள்..

அதற்குள் தூரத்தில் பிரின்சி வருவதைப் பார்த்தவன் " நெக்ஸ்ட் டைம் பார்க்கிறப்ப சொல்றேன்.. அப்படியே உங்க பிரண்ட் துளசியையும் கேட்டதா சொல்லுங்க.. பாய்.. " என்று நகர்ந்துவிட்டான்..
அவன் கை நீட்டிய இடத்தில் கை கொடுப்பது போல தன் கைகளை மடக்கி " தேங்ஸ்ங்க " என சொல்லிப் பார்த்தவள்
இதைக் கண்டிப்பாக துளசியிடம் சொல்லியே ஆக வேண்டும் என நினைத்துக் கொண்டே வகுப்பறையை நோக்கி நடந்தாள்..

💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
ஹலோ நட்பூஷ்.... 😊😊😊
கதை ரொம்ப மொக்கையா போகுதா..
நீங்க என்ன நினைச்சாலும் ஸ்ஸேர் பண்ணுங்கப்பா.. 🙅

நன்றி!!!!

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro