உறவு 17

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அனைவரும் கதிரின் வீட்டிற்கு வந்து இரு மணித்திலாயங்கள் ஆகியிருந்தது.. இரண்டு படுக்கையறைகள் மட்டுமே கொண்டிருந்த வீடு என்றாலும் கலை இரசனையுடன் கதிர் அலங்கரித்திருந்ததால் மிகவும் அழகாக காட்சியளித்தது..செல்வராஜ், கந்தன், அசோக், கதிர் மற்றும் எழில் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, ஐசுவும் தேவியும் சமையலறையில் தங்களை புகுத்திக் கொண்டிருந்தனர். கனி அவர்களுக்கு
நல்ல பிள்ளையாக உதவுவதாக கூறிவிட்டு ஏதோ கனவு கண்டு கொண்டிருந்தாள்..
சாரதா மட்டும் தனது கணவருடனே அமர்ந்துவிட்டார்.

பார்வதி இவர்களுக்கு இடைஞ்சலாக இருக்க வேண்டாமென நினைத்து அபி மற்றும் துளசியுடன் கோவிலுக்கு சென்று வருவதாக கூறி சென்றுவிட்டார்.

தேவியும் ஐசுவும் கனி இருப்பதால் எப்படி பேசுவதென்று முழித்துக் கொண்டிருக்க " ஹேய் என்னை பார்த்தா சீரியல் வில்லி மாறி தெரியுதா.. அம்மாவும் பிள்ளையும் நல்லா மனசுல வெச்சிக்கோங்க.. இன்னைக்கு நீங்க இப்படி ஒற்றுமையா இருக்கிங்கனா.. அது நான் போட்ட பிளானாலதா. நான் நினைச்சா இப்பவும் உங்கள பிரிக்க முடியும்.. அதுனால என்னை பகைச்சிக்காம ஒழுங்கா இத்தனை நாள் பேசாத சொந்த கதை சோகக் கதை எல்லாத்தையும் பேச ஆரம்பிச்சிடுங்க.. அப்ரோ என் மனசு எப்ப வேணா மாறிடும் " என்று திமிராக கூறவும் " ஐயோ குண்டு மாங்கா.. கொல்றடி.. அப்படியே உன் கன்னத்த கடிச்சு திங்கனும் போல இருக்கு.. " என்று கூறியதோடு நில்லாமல் அவள் இரண்டு கன்னத்திலும் மாறி மாறி முத்தங்கள் கொடுத்தாள்..

தனது கன்னத்தை கைகளால் துடைத்தவள்
" ச்சி..விடுடி.. இதெலாம் அந்த ஆங்கிரி பேட்கு கொடு.. கன்றாவி.. இப்படிலாம் பண்ணி எனக்கு ஐஸ் வெக்கலாம்னு நினைக்காத.. அதுக்கு இந்தக் கனி மயங்கமாட்டா.. போய் எனக்கு பிடிச்ச கத்திரிக்கா புளிக் குழம்பு வை.. " என்று முகத்தை திருப்பிக் கொண்டாள். ஐசுவும் சிரித்துக் கொண்டே சமைக்க ஆரம்பித்தாள்.

" ஆமா லூசாடி நீ.. எதுக்குடி வடை பஜ்ஜினு ரெண்டையும் சுடற.. எங்க மாமா சொத்த சமைச்சே தீர்க்கனும்னு முடிவு பண்ணிட்டிங்களா " என்று மிக்சர் பாக்கெட்டை காலிப் பண்ணிக் கொண்டே ஐசுவைக் கேட்கவும் " உனக்கு வாழக்கா பஜ்ஜினா உசிரு... ஆனா உனக்கு வடைய எப்படி சாப்பிடனும்னே தெரியாது. ஆனா எழில் தெரியும்ல என்னோட கொழுந்தன்.. அவனுக்கு பஜ்ஜி சுத்தமா பிடிக்காது.. அதான்" என்று அவள் வேலையைத் தொடரவும் ' என்னது அவருக்கு பஜ்ஜி பிடிக்காதா..
அப்போ நானும் அவரும் மாறி மாறி ஊட்டிக்கிட்டே பஜ்ஜி சாப்பிட முடியாதா.. என்னால் பஜ்ஜி இல்லைனா வாழவே முடியாதே. கடவுளே.. என்னைக் கொடுமை இது ' என தனக்குள்ளே புலம்ப ஆரம்பித்தாள்.

செல்வராஜ் ஒவ்வொரு பேச்சிலும் கதிரை வழக்கம்போல உயர்வாக கூற அங்கே ஒரு ஜீவனிற்கு வயிறு எரியத் துவங்கியது.. கனியோ எழிலைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தேவியிடம் அடம்பிடித்து அவர் செய்த பலகாரங்களைத் தான் தான் கொடுப்பேன் என்று கூறி அனைவருக்கும் கொடுக்க வந்தாள்..

"சம்மந்தி கதிர் வயசுல நானெல்லாம் வாடகை வீ்ட்ல தான் தங்கியிருந்தேன்.இவன் என் வயசுல பாருங்க என்னை விட பெரியாளா இருக்கப் போறான் " என்று செல்வராஜ் கந்தனிடம் கூற அதற்கு அவர் பதிலளிக்கும் முன்னரே

" அதுக்கெல்லாம் காரணம் அவர் மட்டுமில்ல மாமானார் சார்.. அவரோட லக்கி சார்ம் நான் பக்கத்துல இருக்கறதால தான் " என்றவாரே தட்டுகளை அனைவருக்கும் கொடுத்தவள் கதிரைப் பார்த்து " அப்படி தான மாமா " என்றதும் அவளைத் தன்னருகே அமர்த்திக் கொண்டவன் " அப்படியே தான்டா கனிம்மா " என்று கூறி வடையில் உள்ள பச்சை மிளகாயினை மட்டும் கலைந்துவிட்டு அவள் கையில் கொடுக்கவும் அவளும் அதனை சாப்பிட ஆரம்பித்தாள்.

அவர்கள் ஒற்றுமையினை மனதில் குறித்துக் கொண்ட சாரதா
" அதென்னமா என் வீட்டுக் காரார மாமனார் சார்ங்கிற.. உங்க அக்கா மாறியே நீயும் மாமான்னே அவர கூப்பிடலாமே " என்று சற்று எரிச்சலாக கூறவும்

" அது வந்து ஆன்ட்டி எங்க மாமாவ மட்டும்தான் நான் மாமானு கூப்பிடனும்னு எங்க மாமா நினைக்கும். அதுக்கு என்மேல ஓவர் பொசசிவ்.. அப்படி இல்லைன்னா ரொம்ப பீல் பண்ணும்.. அதான் நான் யாரையும் மாமான்னு கூப்பிடறது இல்ல.. அங்கிள்னு கூட கூப்பிடலாம் தான்.. ஆனா
அங்க பாருங்களேன் மாமனார் சார் எவ்ளோ ஸ்டைலா இருக்காரு.. அவரப் போய் அங்கிள்ன்னு கூப்பிட மனசு ஒத்துக்கல.. அதான்.. " என்று கூறவும் செல்வராஜைத் தவிர அனைவரும் முறைக்கும் போதுதான் தான் தனது வருங்கால மாமியாரிடமே
திமிராக அதுவும் அவரது கணவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது..

" இஇஇஇஇஇ.. அது வந்து ஆண்ட்டி..நான் என்ன சொல்ல வரன்னா... சார விட நீங்க தான் ரொம்ப யங்கா குறிப்பா சொல்னும்னா எம்.குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி படத்துல வர நதியா மேம் மாறியே இருக்கிங்க.. நீங்க குடும்பத்தோட வெளிய போனா கண்டிப்பா ஒருத்தராவது மாமனார் சாரப் பார்த்து உங்களுக்கு ரெண்டு பையன் ஒரு பொண்ணானு தான் கேட்பாங்க.. நானே உங்கள ஆன்டினு சொல்லிட்டேனு ப்பீல் பண்ண ஆரம்பிச்சிட்டேன்னா பார்த்துக்கோங்களேன்.. " என்றவள் அவர் முகம் வெட்கத்தில் சிவக்க ஆரம்பிப்பதைப் பார்த்ததும் " நான் வேணா உங்கள சாரு பேபின்னு கூப்டவா.ப்ளீஸ் " எனக் கெஞ்சினாள்..

இதுவரை ஐசு கூட கரைக்க முடியாதிருந்த சாரதாவின் மனதை பெரிய ஐசாக தூக்கி தலையில் வைத்து நதியாக கரைத்து ஓடவிட்டு விட்டாள்..

உள்ளேயிருந்த தேவி " கனி பெரியவுங்க பேசிட்டு இருக்கும்போது மரியாதை இல்லாம அவுங்களுக்கு இணையா உட்கார்ந்திட்டு என்னை பண்ற " என்று அதட்டவும் அமைதியாக உள்ளே சென்று விட்டாள்..

கந்தன்
" சம்பந்தி கதிர் தான் அவள சின்ன வயசிலிருந்து தூக்கி வளர்த்ததால விளையாட்டுத் தனமா பேசிட்டா.. எதையும் மனசுல வெச்சுக்காதீங்க.. " என்றதும் " ஐயோ நான் தப்பால எடுத்துக்கவே இல்லைங்க.. அவ சொன்னது பொய் ஒன்னுமில்லயே.." என அவரும் கேலியாக கூறவும் மற்றவர்களும் நகைத்து விட்டனர்..

" சம்பந்தி நாங்க இப்போ இங்க வந்த மாறி.நாளைக்கு எங்க வீட்டுக்கு நீங்களும் வந்தேதான் ஆகனும்..உங்க பொண்ண நாங்க எப்படி பார்த்துக்கரோம்னு தெரிஞ்சிக்க வேணாமா. " என்றதும் சரி என்று சம்மதித்தார்.
ஆனால் அவர் மனதில் வந்ததிலிருந்து மாமானார் என்ற வகையில் கூட தன்னுடன் பேசாமல் இருந்த அசோக்கின் மீது பெரிய வருத்தம் இருந்தது.. அசோக்கிற்கும் தனது மாப்பிள்ளையை விட கதிரை முக்கியமாக நினைத்திருக்கும் கந்தனின் மீது சற்று வருத்தம் இருந்தது..

அந்த நேரம் எழிலுக்கு அலைபேசி அழைப்பு வர பேசுவதற்காக வெளியே சென்றான்.. எடுத்தவுடன்
" நானே செம கடுப்புல இருக்கேன்.. என்னனு சீக்கரமா சொல்லுடா "

" டேய் மச்சான் என்னடா நம்ப துளசி தங்கச்சி கோயிலுக்கு வந்திருக்கு.. அங்க என்ன பண்ற " என்று எதிர்புறம் தேவா கூறவும்
" தேவா உனக்கு எத்தனை தடவை சொல்றது நான் துளசிய விரும்பல..அது வெறும் அட்ரேக்சன் தானு. அவள பிடிக்கும்டா.. ஆனா நல்ல பொண்ணுங்கற எண்ணத்தால தானே தவிர லவ்வரா இல்ல " என்று சளிப்புடன் கூறவும்

" இதை என்னை நம்ப சொல்றியா..சரி இப்ப வராம இருக்குலாம்.. புயூச்சர்ல " என அவனிழுக்கவும்

" அவ வேறொருத்தர் கிட்ட லவ் புரோபோஸ் பண்றத நேர்ல பார்த்த பிறகும் அப்படி தோணுச்சுனா நான் மனுசனே இல்லடா.. ராஸ்கல் " என்று கோபமாக கூறவும் , அவனது கவனத்தை திசை திருப்புவதற்காக " ஆமா அங்க என்னாச்சுடா " என்றான் தேவா..

அவனும் சிறிது நிதானமாகி
" என்ன ஆச்சா.. என்னவெல்லாம் ஆகிருச்சுடா.. பெரிய பிரச்சினை ஆகிடும்னு நினைச்சி நாங்க பயந்துட்டு இருந்தா அந்த திம்ஷு ஒரே நிமிசத்துல சேர்த்தி வெச்சிட்டாடா. அவ என்ன மாய மந்திரம் பண்னானே தெரியல எங்க அம்மாவையும் அப்பாவையும் பேச்சால மயக்கிட்டாடா... உனக்கேத் தெரியும்ல அண்ணா முன்னாடி யாராச்சும் குரல உயர்த்தி பேசுனா அவருக்கு எப்படி கோபம் வரும்னு.. ஆனா அவர் அவளப் பார்த்து சிரிச்சிட்டே நிக்கறாருடா..
அவகிட்ட ஏதோ ஒன்னு இருக்குடா.. " என்று அவன் பாட்டிற்கு தொடர்ந்து கொண்டே போக
" டேய்..டேய்.. திம்ஸுனா யார சொல்ற.. அந்த கனியவா.. அவளத்தான் நீ அவாய்ட் பண்ணனும்னு மதியம் சொன்னியேடா. "

" சொன்னான் தான் நான் இல்லைன்னு சொல்லலியே.. ஆனா அவள போகப் போக ரொம்ப பிடிக்குதடா.. அதும் அவளோட மாமா கூட ரொம்ப சந்தோசமா செல்லங் கொஞ்சும்போது எனக்கு காரணமே இல்லாம செம கோபம் வருதுடா.. அவுங்க மாமாவ மூக்குலயே குத்தனும் போல இருக்குதுடா.. "

" ஏன்டா "

" பின்ன என்னடா.. அவ அவர மட்டும்தான் மாமானு கூப்பிடுவாளாம் " என்றதும் " அடேய் காதல் மன்னா..உங்க குடும்பம் இப்போதான்டா ஒன்னு சேர்ந்திருக்கு.. பார்த்து பண்ணுடா.. "

" அதெல்லாம் நாங்க பார்த்துப்போம்.. நீ காலைல வீட்டுக்கு வந்து சேரு " என்று கூறிவிட்டு அழைப்பினைத் துண்டித்தான்.

வீட்டிற்குள் செல்லலாம் என திரும்பும் போது வாசலில் கையில் காபியுடன் கொலைவெறியில் அவனை முறைத்தவரே கனி நின்றிருந்தாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro