உறவு 6

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வகுப்புக்கு தாமதமானதால் வேகமாக வந்த துளசியை வழிமறித்து ஒருவன் "
உங்க ஐசு அக்கா பத்தி நான் சொல்வேன் " என்றதும் ஒரு நிமிடம் சந்தோசத்தில் திளைத்தவள் அவன் ஒருவேளை பொய் சொல்வானோ
என நினைத்து அவனை மேலுங்கீழுமாக பார்த்தாள்..

அவனது முழியே திருட்டு விழியாக இருக்க
ஒரு கேவலமான பார்வையை வீசிவிட்டு
" உங்கள நான் எப்படி நம்பறது " என வினவ

புதியவன் உடனே ஐசு அசோக் வரவேற்பு விழாவின் போது அவர்களுடன் எடுத்த புகைப்படத்தைக் காட்டினான்..

அதைப் பார்த்து மிகுந்த உற்சாகத்துடன் " அப்போ அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமாகிடுச்சா.. ரொம்ப நன்றிண்ணா.. இதைக் கண்டிப்பா கனிக்கிட்ட சொல்லியே ஆகனுமே.. எனக்கு வேற கிளாஸ்க்கு டைம் ஆச்சுண்ணா... நான் கிளம்புறேன் " என அவனது கேள்விக்கு பதிலளிக்காமலே அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள்..

" என்னது அண்ணனா " என வாயைப் பிளந்தவாறே நின்றவனை முதுகிலே பெரிய தட்டாக தட்டி " ஏன்டா நான் என்ன சொன்னேன்.. நீ என்ன பண்ணி வெச்சிருக்க.. ஒரு பொண்ணுக்கிட்ட உண்மைய வாங்க முடியல.. வாயை மட்டும் ஆவ்வுன்னு திறந்துட்டு நிக்கற " என கோவமாக கேட்டான் இதுவரை இவர்கள் பேசியதை மறைவாக நின்று கேட்டுக் கொண்டிருந்த எழில்..

அதில் சுய நினைவடைந்த அவனது நண்பன் தேவா " ஹூம் நீ ஏன்டா இப்படி கேட்க மாட்ட.. நம்ம காலேஜ்ல பொண்ணுங்க கிட்ட வம்பு பண்ணா அந்த பிரின்சி ஈவு இரக்கமே பார்க்காம டீசிய கிளிச்சு வீட்டுக்கு பார்சல் பண்ணிரும்னு தெரிஞ்சே ஆருயிர் நண்பனுக்காக ரிஸ்க் எடுத்து அந்தப் பொண்ணுக்குட்ட பேசுனேன்ல.. இதும் கேட்ப.. இதுக்கு மேலயும் கேட்ப.. அதைக் கோட நான் தாங்கிக்வேன்டா.. ஆனா எல்லாப் பொண்ணுங்களும் சொல்லி வெச்ச மாறி என்னையவே அண்ணா அண்ணானு கலாய்க்கிறாங்களே அதைத் தான்டா என்னால தாங்க முடியல.. " என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டான்..

இதைக் கேட்டு அவன் கோபம் மறந்து சற்று புன்னகைக்கவும் அதில் கடுப்பானவன் " அப்போ அதுனாலதான் என்னை போயி பேச சொன்னியாடா.. " என்றதும்

" மென்டல் நான் இதுல டேரக்டா நான் எதாச்சும் செஞ்சனா நமக்கே பெரிய ஆபத்தா போயிடும்..கொஞ்சம் பொறுத்துத் தான் எதுவும் பண்ணியாகனும்..
போகப் போகப் பாரேன் உனக்கே இதெலாம் ஈசியா புரியும் " என தீவிரமாக சொல்ல தேவாவிற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது..

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

கனியை விடுதியில் விட்டு வந்த பின்னர் ஐசுவிற்காக வாங்கிய அனைத்து பொருட்களையும் புடவைகளையும் பெரிய பெட்டிக்குள் வைத்து அதை ஸ்டோர் ரூமில் போட்டுவிட்டான்.. அபியையும் அவன் தங்கியிருந்த அறையிலிருந்து காலி செய்து கதிரின் வீட்டிலே தங்க வைத்துக் கொண்டான்..

மூன்று படுக்கையறை கொண்ட தனிவீடு அவர்க்ளுக்கு தாராளமாகவே இருந்தது.. அடுத்த நாள் தனது வழக்கமான துள்ளலுடன் அலுவலகத்திற்கு சென்றான்.. அவன் திருமணத்திற்கு பத்து நாட்கள் மருத்துவ விடுப்பே விடுத்திருந்ததால்
அவனது திருமணம் நின்று போனது அபியைத் தவிர வேறு யார்க்கும் தெரியவில்லை..

அதிக விடுப்பு எடுத்ததால் அவனுக்காக வேலை மலை போல குவிந்திருந்தது.. வேலையில் மூழ்கியிருந்தவனை எம்டி அசோக் அழைப்பதாக கூற அவனது கேபினுக்குள் சென்றான்..

இந்நேரம் துவண்டு கொடி போலவாடிக் கொண்டிருப்பான் என நினைத்தவன் அதேக் கம்பீரத்தோடு வந்து நிற்க சற்று ஏமாற்றம் அடைந்தவன் " என்ன மிஸ்டர் கதிர். இதென்ன உங்கப்பா ஆபிஸ்ன்னு நினைச்சீங்களா.. நீங்க நினைச்ச வரதுக்கும் நினைச்சா போறதுக்கும்.. இதுக்கா நான் சம்பளங்கொடுத்துட்டு இருக்கேன்.. எல்லாம் எங்கப்பாவ சொல்லனும் ரொம்ப நம்பிக்கையான ஆளுன்னு நிறைய அதிகாரத்த உங்ககிட்ட கொடுத்ததுக்கு.. " என கோபமாக வார்த்தைகளை தூக்கி எறிந்தான்..

கதிருக்கு இதுவொன்றும் புதிதல்ல.. அனைவரும் அவனது திறமைகளைப் புரிந்து அவனை மதிக்க, அசோக் மட்டுமே மாறாக பொறாமை கொண்டு இல்லாத குற்றத்தை இருப்பதாக கூறி மட்டம் தட்டுவான்.. செல்வராஜ் மட்டும் அடிக்கடி அலுவலகம் வராமல் இருந்திருந்தால் இ்ந்நேரம் கதிரை வேலையை விட்டே நீக்கியிருப்பான்..
அதனால் கடினமான முடிக்கமுடியாத வேலைகளை அவன் தலையில் மட்டும் கட்டி அதை கதிர் செய்ய திணருவதைப் பார்த்து உள்ளுக்குள் மகிழ்ந்து கொள்வான்..அவனுக்கு தன் முன்னே அவனைத் தவிர வேறு யாரையும் புகழ்ந்து பேச கூடாது.. மீறி யாராவது பேசினால் கதிருக்கு வந்த நிலைதான் அவர்களுக்கும் ...
பாவம் இதையறியாத செல்வராஜ் வரும்போதெல்லாம் கதிரையே புகழ, அது எறியும் நெருப்பில் எண்ணையையும் அத்துடன் மிளகாயையும் சேர்த்து வீசியது போல கொடூரமாக வேலையைக் காட்டும்..

ஆனால் அவனது அத்தனை கொடுமைகளுக்கும் கதிரின் பதில்
" சாரி சார்.. இந்த தப்பு அடுத்த தடவை நடக்காம பார்த்துக்கிறேன் " என்பதுதான்..
அதையே தான் இன்றும் கூறினான்..

அவனை கோபப்படுத்திப் பார்க்க நினைத்த அசோக்கிற்கு அது முடியாமல் போக அவனை இன்னும் நசுக்க " மிஸ்டர் கதிர் நீங்க என்னோட ரிசப்சனுக்கு கூட வரலைன்னு அப்பா ரொம்ப ஃபீல் பண்ணார்.. டைம் இருந்தா கண்டிப்பா கம்மிங் சன்டே வீட்டுக்கு லன்ச்சுக்கு வாங்களேன்.. " என்றான் சிரித்த முகத்தோடு..

கதிரை ஐசுவின் முன்னால் அவமானப்படுத்த வேண்டும் என்பது அவனது நீண்டநாள் ஆசை.
அங்கே நடக்கப் போவதை அறியாமல் தனக்குத்தானே குழி தோண்டிக் கொள்ளப் பார்க்கிறான்..

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

துளசி கனியை விட்டுவிட்டு லைப்ரரிக்குள் புகுந்துகொள்ள ரக்ஷ்னாவும் அவளும் அவளுக்காக மரத்தடியில் காத்திருந்தனர்..

அந்நேரம் " நம்ம காலேஜ்ல படிச்ச சீனியர் அசோக் ஐஸ்வர்யாவோட ரிசப்சனுக்கு நம்ம தேவி மேடம் வந்தாங்களாமேடா " என்றான் ஒருவன்.

" வராம இருப்பாங்களா.. ஐஸ்வர்யா தான் நம்ம காலேஜ் டாப்பர்.. அவங்களோட பெஸ்ட் ஸ்டூடன்ட்காக, வேலைய விட்டு போயும் கூட பேங்களூர்ல இருந்து வந்தாங்கனா பார்த்துக்க " என்றான் இரண்டாமவன்..

காலேஜ் டாப்பர் என்றதும் அது உறுதியாக ஐசுதான் என்பதால் அவர்கள் பேசுவதை நன்றாக காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தாள்.

" அசோக் அண்ணன் அவுங்க சார்பா வர சன்டே நமக்கு **** ஹோட்டல்ல பார்ட்டீ கொடுக்கறாங்க.. இதை நம்ம பிரண்ட்ஸ் கிட்ட சொல்லிரு " என்று பேசியவாரே அந்த இடத்தை விட்டு கடந்து சென்றனர் ...

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

இரவு உணவு வேளையில் ஐசு எதையோ நினைத்து சோகமாக இருந்தாள்.. அதை பார்க்க எழிலுக்கு பாவமாக இருந்தது..
அவள் சாப்பிடாமல் சாதத்தை கிளறிக் கொண்டே இருப்பதை பார்த்தவன்
அவளது அருகே நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவன்
" அண்ணி இப்போ நீங்க சாப்பிடலைனா நானும் சாப்பிட மாட்டேன் " என தட்டை ஓரங்கட்டி வைத்தான்..

ஏற்கனவே தந்தை நினைப்பில்
வாடி இருந்தவளுக்கு இதுவும் அவளது தந்தையின் செய்கையையே நினைவுப்படுத்த கண்களில் கண்ணீர் தேங்கியது..

அவளிடம் காரணம் கேட்டாலும் சொல்ல மாட்டாள் என தெரிந்த எழில் கோபமாக எழுந்து கைக் கழுவினான்.. அவன் எழுந்ததால் சுயநினைவை அடைந்தவள் அப்போதுதான் பாதியில் எழில் சாப்பிடாமல் எழுந்ததை உணர்ந்து அவன் தட்டை எடுத்துக் கொண்டு தனது தந்தைக்கு ஊட்டி விடுவதைப் போல அவனுக்கும் ஊட்டி விட்டாள்..

பணம் சம்பாரிக்கும் வயதில் வேலை வேலை என ஓட்டம்.. சம்பாதித்த பிறகு நவநாகரீக மோகத்தால் கிளப், பியூட்டி பார்லர், மகளிர் சங்கம் என ஆகிவி்ட்டதால்
ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் சாரதாவே அவர்களுக்கு ஊட்டி விட்டதில்லை.. ஆனால் தற்போது தனது அண்ணி தனக்காக ஊட்டி விடுகிறாள் என்பதால் மிகவும் சந்தோசமாகத் இருந்தது. அவனும் மறுக்காமல் அதை சாப்பிட்டு அவளுக்கும் அதேபோல ஊட்டிவிட்டான்..
செல்வராஜுற்கு இதைப் பார்த்த போது ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது..

சாரதாவிற்கோ ' இப்ப என்ன நடந்துச்சுன்னு ...எல்லாரும் இவ்ளோ உணர்ச்சி வசப்படறாங்க ' என நினைத்துக் கொண்டார்..

வெளியே ஒரு மீட்டிங் இருந்ததால் தாமதமாக வந்து சேர்ந்த அசோக்கிற்கோ ' அண்ணியும் அன்னையும் ஒன்று ' என்பது மறந்து போய் அனைத்துமே வேறு விதமாகத் தெரிந்தது.. அன்று எழில் எதார்த்தமாக ஐசுவை அழகாக இருக்கிறாள் என்று கூறியது கூட இன்று தவறாகத் தோன்றியது.

கனிக்கு ஏதேனும் ஆபத்து நடக்குமா?
எழில் தனது அண்ணனின் உண்மை முகத்தை அறிந்து கொள்வானா ? என்பதை அடுத்த அத்தியாயங்களில் காண்போம்.. தாமதத்திற்கு மன்னிக்கவும் நண்பர்களே..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro