உயிரானவன் 6

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அனைவரும் அமைதியாக இருக்க, ஜெகதீஸ் மற்றும் மீரா உள்ளே சென்றனர்..

எப்பொழுதும் சிரித்த உதடுகள் இன்று சிறிதும் வீரியாமல் இருந்தது.. அவளை சிறிது நொடிகள் பார்த்த மீரா, யோசனையில் ஆழ்ந்தாள்..

********** கல்லூரி நாட்கள் ********

மீரா மற்றும் ரம்யா வகுப்பு முடிந்து வெளியில் வந்தனர்.. "ஹோய் சீயக்காய்" என்று ரம்யா அழைக்க அவளை முறைத்தாள் மீரா..

"எத்தனை தடவ சொல்லிருக்கேன் சீயக்காய்னு கூப்பிடாதான்னு" என்று மீரா கடுப்புடன் கேட்க, "அதுக்கு நான் முதல்ல மீரானு கூப்பிடுறப்போ திரும்பிருக்கனும்.. அப்போல்லாம் என்னமோ வெங்காயத்துல எப்புடி கரண்ட் எடுக்குறதுனு தீவிர ஆராய்ச்சி பண்றவ மாதிரி வந்தா.. அதான் இப்டி கூப்பிட்டேன்.." என்று அவள் தலையை சிலுப்பி கூறினாள் ரம்யா..

"வெங்காயத்துல கரண்ட்டா.. ஏன் டி இப்படி பேசுற.. உன்ன எப்படி இப்டி வளர்த்து வச்சுருக்காங்க.. பாவம் டி வீட்ல இருக்கவங்க" என்று மீரா சொல்ல அவளை புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருந்த ரம்யா திடீரென தனது முகத்தை பாவமாக மாற்றி வைத்துக்கொண்டு அவளை பார்க்க மீரா சிரித்துவிட்டாள்..

"ஐயோ சும்மா பாவமா பாத்து ஏமாத்த பாக்காத.. எனக்கு சிரிப்பா வருது" என்று மீண்டும் சிரித்தாள்.. அவளை பார்த்த ரம்யா, "இப்போ பாக்க என் அண்ணாக்கு ஏத்த ஜோடி மாரி அழகா இருக்க.. முன்னாடி ஏதோ சாப்பிட்ட எதுவோ மாறி இருந்த" என்று அவள் சொல்ல, அவளை காதை பிடித்து திருகி, "அப்படியே என்ன கொரங்குனு சொல்றியா" என்று அவள் கேட்க, "கிடைக்குற கேப்ப ( gap ) விடக்கூடாதுனு செத்து போன பாட்டி அவங்களோட பேத்தி கனவுல வந்து சொன்னதா என் பாட்டி வந்து அவங்க பேத்தியான என்கிட்ட சொன்னாங்க.. புரியுதா" என்று கேட்டாள் ரம்யா..

திரு திருவென முழித்த மீராவை பார்த்த ரம்யா, "என்ன டி புரியலையா.. சரி நா தெளிவா சொல்றேன்" என்று அவள் ஆரம்பிக்க "ஐயோ தெய்வமே வேணவே வேணாம்" என்று மீரா கை எடுத்து கும்பிட, தனது கைகளை எடுத்து ஆசீர்வாதம் செய்வது போல கையை வைத்துக்கொண்டு, "வரம் தருகிறேன் மகளே" என்று ரம்யா சொல்ல, "தராம விடமாட்ட போல.. சரி தந்து தொலையும்" வாயில் கை வைத்து குனிந்து நின்று மீரா சிரித்துக்கொண்டே சொன்னாள்..

"எப்போவும் ரம்யாக்கு பிரண்ட்டா இருந்து சாக்லேட் ஐஸ் கிரீம் வாங்கி குடுத்து உன் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவாயாக.." என்று ரம்யா சொல்ல அவளின் காதை பிடித்து, "வரம் குடுக்குறேனு சாபமா குடுக்குற.. உன்ன" என்று பொய் கோபத்துடன் மெதுவாக அவள் காதை திருக அவள் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு, "என்கூட இருக்குறது உனக்கு சாபமா" என்று கேட்க அவள் அவளை பார்த்து, "பின்ன இல்லையா" என்று கேட்டு உடனே சிரித்துவிட்டாள்..

அவளின் சிரிப்பை பார்த்த ரம்யா, "ஹ்ம்ம் சிரிச்சிட்டியா.. இப்போ சொல்லு ஏன் சோகமா இருந்த" என்று கேட்க அவளை பார்த்து விழித்தவள், "ஹேய் அதே மறந்துட்டு சிரிச்சுட்டேன் டி.. உன் அண்ணா என்கிட்ட பேசவே மாடேங்குறான் டி.. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. சும்மா சின்ன பிரச்னை தான்.. 3 நாள் ஆச்சு பேசி.. அதான் பெருசா போய்டுமோனு பயமா இருக்கு" என்றாள் கலக்கத்துடன்..

"என்ன பிரச்சனைனு கேக்க மாட்டேன்.. ஆனா அத நீங்க ரெண்டு பேரும் பேசாம இருந்தா எப்படி சரி ஆகும்.. எப்பவுமே ரெண்டு பேருக்குள்ள பிரச்னை வந்தா அப்போவே பேசுனா பெருசா ஆகும் கோவத்துல.. கொஞ்சம் கேப் விடணும்.. அதுக்காக நாள் கணக்குல சொல்லல.. சும்மா கொஞ்ச நேரம்.. இல்லனா காலையில சண்டை வந்தா நைட் வரைக்கும் கேப் விடலாம்.. ஆனா அன்னைக்கே முடிச்சுட்டு தான் தூங்கணும்.. ரெண்டு பேருமே பேசாம இருக்குறதுனால பீல் பண்ணிட்டே தான் இருப்பீங்க.. அந்த பீல் பண்ற டயம்ல பொறுமையா பேசுனா எல்லாமே சரி ஆயிடும்.. இதுல நீ மொதல்ல பேசு நான் மொதல்ல பேசு அப்படினு யோசிக்காம யாராவது ஒருத்தர் பேச ஸ்டார்ட் பண்ணுங்க.. கண்டிப்பா சண்டையா தான் ஆரம்பிக்கும்.. அப்றம் பாரு புரிஞ்சுபிங்க ரெண்டு பேருமே.. இனி இப்டி முகத்தை வச்சுக்காம ஒழுங்கா போய் பேசி சரி பண்ற வழிய பாரு.." என்று ரம்யா புன்னகையுடன் சொல்ல அவளை கை நீட்டி அழைத்து அணைத்துக்கொண்டாள் மீரா..


"என் மீரா டார்லிங் எப்போவும் சிரிச்சிட்டே இருக்கனும் 😍" என்று சொல்லி அவளை அணைத்துக்கொண்டாள் ரம்யா..

**********************************

கண்களில் நீருடன் ஜெகதீஸ் புறம் திரும்பி பார்த்தாள் மீரா.. அவனும் எதையோ நினைத்து கலங்கி நிற்பது புரிய அமைதியாக நின்றாள் மீரா..

ஜெகதீஷின் கண்கள் ரம்யாவை பார்க்க அவனின் நினைவுகள் அவர்களின் முதல் சண்டை மற்றும் சமாதானம் அடைந்த தருணத்தை நோக்கி நின்றது..

*********6 ஆண்டுகள் முன்பு********

ரம்யா தனது இரண்டாம் ஆண்டு இறுதி தேர்வு முடிந்த நாள்.. அவள் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து இருக்க அவளின் அருகில் வந்து அமர்ந்தாள் அபி..

( அபி : ஜெகதீஸ் என்றால் அபிக்கு மிகவும் பிடிக்கும்.. இரண்டு ஆண்டுகளாக அவனை பின் தொடர்பவள்.. மீரா ஜெகதீஸ் இருவரும் காதலை வெளிப்படுத்திக்கொள்ளாத தருணம் அது.. ஆதலால் யாருக்குமே அவர்களின் காதல் கதை தெரியாது.. அபியும் அதில் ஒருவள்.. ஜெகதீஸ் பெண்களிடம் பேசாதவன் இல்லை.. அவனிடம் வந்து பேசுபவர்களிடம் அவனும் இனிதாக பேசுவான் நட்புனர்வுடன்.. ரம்யாவிடம் அதிகமாக அவன் பேசுவதால் அபி ரம்யாவிடம் பேச தொடங்கி இருந்தாள்.. ஆனாலும் ரம்யாவின் மீது அவளுக்கு சிறிது [ சிறியதா பெரியதா தெரியலயே 🙄 ] அளவு பொறாமை.. )

மறுநாள் வீட்டிற்கு செல்ல வேண்டும்.. ஒரு மாத விடுமுறை அங்கே இருக்க வேண்டும்.. ஜெகதீஸ் கல்லூரி முடிந்துவிட்டதால் இனி நினைத்த நேரம் அவனை பார்க்க இயலாது என்று சிறிது வருத்தத்துடன் அமர்ந்து இருந்த நேரம் அபி அவளின் அருகில் வந்து அமர்ந்தாள்..

"என்ன ரம்யா ஒரு மாதிரி இருக்க.. ஜெகதீஸ் ஒழுங்கா பேசலையா.. என்கிட்டையும் ரொம்ப சண்டை போடுறான்.. முன்னாடி மாதிரி பாசமா பேசமாட்டேங்குறான்.. சின்ன சின்ன விஷ்யத்துக்குலாம் சண்டை.. பாசம் கொறஞ்சுடுச்சு.. அவன் ப்ரொபோஸ் பண்ணுனதும் ஓகே சொன்னது என் தப்பு.. கொஞ்சம் அலைய விட்ருந்தா தான் என் அருமை தெரிஞ்சுருக்கும்.. சும்மா படத்துக்கு வரல சொல்றதுக்குல்லாம் சண்டை போட்டா எப்படி.. ஓகே சொல்ற வரைக்கும் நம்ம பின்னாடி சுத்திட்டு ஓகே சொன்னதும் நம்மள சுத்த விடுறாங்க" என்று அவள் பேசிக்கொண்டே போக அவளின் கன்னத்தில் ஒரு அரை விழுந்தது.. நிமிர்ந்து பார்க்க கொலைவெறியை கண்களில் தேக்கி நின்றாள் ரம்யா..

"இனி ஏதாவது அவனை பத்தி பேசுன உன்ன கொலை பண்ண தயங்க மாட்டேன்.. என் மூஞ்சி முன்னாடி கூட வந்துறாத.." என்று சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள் ரம்யா..

இந்த கோவம் அத்தனையும் ஜெகதீஸ் புறம் திருப்பினாள் ரம்யா.. ( ஐயோ ஒன்னும் தெரியாத ஜீவன் மாட்டிக்கிச்சே 😂 )

எதுவும் அறிந்திராத ஜெகதீஸ் எப்பொழுதும் போல ரம்யாவிற்கு மெசேஜ் அனுப்பினான்..

📲

ஜெகதீஸ் : ஹாய் குட்டிமா..

ரம்யா : ஹாய்

ஜெகதீஸ் : என்ன பண்ற.. எப்போ கிளம்புற ஊருக்கு??

ரம்யா : நாளைக்கு காலையில அப்பா வராங்க..

ஜெகதீஸ் : ஹ்ம்ம் சாப்டியா

ரம்யா : இல்ல

ஜெகதீஸ் : ஹேய் எவ்ளோ தடவ சொல்லிருக்கேன் சாப்பிடாம இருக்காதனு.. ஒழுங்கா போய் சாப்பிடு போ

ரம்யா : ம்ம்ம்

ஜெகதீஸ் : என்ன ம்ம்ம் போ போய் சாப்பிடு முதல்ல

ரம்யா : எனக்கு வேணாம்.. இப்போ எனக்கு சாப்பாடு மட்டும் தான் பிரச்சனையா 😠

ஜெகதீஸ் : இப்போ நீ சாப்பிடணும் அது தான் எனக்கு பிரச்சனை.. போ ஒழுங்கா..

ரம்யா : எனக்கு பசிக்கல.. தேவை இல்லாம சாப்பிடு போனு சொல்லிட்டு இருக்காத.. அந்த அபி கிட்ட உனக்கு என்ன பேச்சு.. உன்ன யாரு அவ கிட்ட பாசமா பேச சொன்னது 😠😠

ஜெகதீஸ் : உன் கிளாஸ் அபி கிட்டையா.. நான் ஒன்னும் அவ்ளோவா பேசலையே..

ரம்யா : அவ அவளோட இஷ்டத்துக்கு பேசுறா.. நீ ப்ரொபோஸ் பண்ணுணியாம்.. இப்போல்லாம் கண்டுக்குறது இல்லையாம்.. அவளை எதுக்கு நீ படத்துக்கு கூப்பிட்ட 😠

ஜெகதீஸ் : லூசு மாதிரி பேசாத ரம்யா.. உனக்கு என்மேல நம்பிக்கை இல்லாம போச்சுல்ல??? 😠😠😠😠😠

ரம்யா : அப்படி இல்ல.. டேய் அண்ணா..

ஜெகதீஸ் : பேசாத.. உன் அண்ணா செத்து போயிட்டான்..

ரம்யா : ஹேய் 😠

ஜெகதீஸ் : ( ofln )

##

ஐயோ ரொம்ப பேசிட்டோம் போலையே.. ஆனா அவன் எப்படி அப்படி செத்து போய்ட்டான்னு சொல்லலாம்.. என்று யோசித்து அழுதுக்கொண்டு அவளையும் அறியாமல் உறங்கி போனாள்..

மறுநாள் பாண்டியன் அவளை அழைத்து செல்ல வந்திருந்தார்.. அப்பொழுது அங்கே ஜெகதீஸ் வந்திருந்தான்.. ஆனால் ரம்யாவை அவன் பார்க்கவில்லை.. அவளும் அவனை பார்க்கவில்லை..

பாண்டியனிடம், "அப்பா பாத்து போங்க.. ஊருக்கு போய்ட்டு எனக்கு கால் பண்ணி சொல்லிடுங்க.. அம்மாவை கேட்டதா சொல்லுங்க.. நான் கிளம்புறேன்" என்று சொல்லி விட்டு சென்றான்..

ரம்யா வீட்டிற்கு சென்று 3 நாட்கள் சென்றது.. அவன் ஆன்லைன் வராததால் இவளும் வாட்சப் uninstall செய்திருந்தாள்..

ஒரு வாரம் கடந்த நிலையில் வைஷு ( வைஷுவை யாரும் மறந்துருக்க மாடீங்கனு நம்புறேன் ) ரம்யாவின் வீட்டிற்கு வந்திருந்தாள்.. மதிய வேளையில் இருவரும் அருகில் இருந்த மால் சென்றனர்.. அங்கே இருந்தா ஐஸ் கிரீம் கடைக்கு சென்றவர்கள் 4 பேர் உக்காரும் இடத்தில் இருவரும் எதிர் எதிரில் அமர்ந்து இருந்தனர்..

சிறிது நேரத்தில் தனது அருகில் இருந்த காலி நாற்காலியில் யாரோ அமர்வது தெரிந்து பயந்து திரும்பி பார்த்தாள் ரம்யா.. அங்கே ஜெகதீஸ் அமர்ந்து இருந்தான்.. அவனை பார்த்ததும் விழி விரித்து அதிர்ச்சியுடன் விழித்தாள்..

"சாரி நான் அப்படி பேசியிருக்க கூடாது.. வேற கோவம்.. ஆனா உன்மேல காட்டிட்டேன்.. சாரி" என்றாள் ரம்யா வருத்தத்துடன்.. அவனும் "சாரி நானும் அப்படி சொல்லிருக்க கூடாது.. நம்பிக்கை இல்லாம பேசிட்டனு கொஞ்சம் கோவம் வந்துருச்சு.. விடு" என்று சொல்ல அவளும் அமைதியாக இருந்தாள்..

முகம் முழுதும் தெளியாமல் இருந்தாலும் ஜெகதீஷிடம் பொதுவாக பேசிக்கொண்டு இருந்தாள் ரம்யா.. அவளை பார்த்த வைஷு அவனிடம் கண்களை காட்டிவிட்டு, "நான் போய் ஐஸ் கிரீம் வாங்கிட்டு வரேன்" என்று அவர்களுக்கு தனிமை குடுத்து எழுந்து சென்றாள்..

ரம்யாவின் புறம் திரும்பிய ஜெகதீஸ், "ஏன் இப்போ இப்படி இருக்க" என்று கேட்க அவளும் அவனை நிமிர்ந்து பார்த்து, "நான் கொஞ்சம் பேசணும்.. கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு.." என்று சொல்ல என்ன என்பதை போல அவன் பார்த்தான்..

"அபி உன்ன லவ் பண்ரா போல.. உனக்கு தெரியுமா" என்று கேட்க, "ஆமா இப்போதான் 2 நாள் முன்னாடி சொன்னா.. நான் ரிஜெக்ட் பண்ணிட்டேன்" என்றான் சாதாரணமாக.. "ஏன்" என்று அவள் கேட்க அவன் புரியாமல் விழிக்க, "ஏன் நோ சொன்ன" என்று அவள் மீண்டும் கேட்க, "நீ என்ன கேக்கணுமோ அத மட்டும் தெளிவா கேளு ரம்யா" என்றான் சற்று எரிச்சலுடன்..

"சரி அபினு இல்ல.. உன் மனைவியா வரபோறவங்க யார இருந்தாலும் அவங்களுக்கு என்ன புடிக்கலனா என்ன பண்றது.." என்று கேட்டாள் தயங்கி தயங்கி.. அவளை கூர்ந்து நோக்கியவன், "என்ன பண்ணுவீங்க" என்று கேட்க, "என்ன இருந்தாலும் மனைவி தான உன் லைப்க்கு முக்கியம்.. அப்போ நான் விலகி" என்று அவள் கீழே குனிந்து சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவன், "உங்களுக்கும் கல்யாணம் ஆகும்.. உங்க கணவர்க்கு புடிக்கலைனு நான் விலகிடவா?" என்று அவன் கேட்க சட்டென்று நிமிர்ந்து அவனை பார்த்தாள்..

"அது எப்படி அவனுக்காக என்ன விட்டு விலகி போவியா.. அப்போ நீ வேற தங்கச்சி பாத்துக்கலாம்னு பிளான் வச்சுருக்கியா.. உன்ன சும்மா யாராவது அண்ணா சொன்னாலே எனக்கு புடிக்காது.. இதுல எனக்கு வரபோற இளிச்சவாயனுக்கு உன்ன புடிக்கலைனு என்ன விட்டுட்டு நீ யாரையாவது தங்கச்சினு சொன்ன அதோட உன்ன கொன்றுவேன்.. எப்படி எப்படி?? அவனுக்கு உன்ன புடிக்காம போகுமா.. அப்படி உன்ன புடிக்காதவன் என்ன கல்யாணம் பண்ணிக்க வேணாம்" என்று பேசிக்கொண்டே போக அவளை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தான் ஜெகதீஸ்..

அவன் சிரித்துக்கொண்டே, "முதல்ல தண்ணி குடி" என்றான் வாட்டர் பாட்டில் ஒன்றை அவள் புறம் நீட்டி.. அவள் அவனை பார்த்து முறைக்க அவன் அவளின் தலையில் கொட்டி, "நீ விலகி போனா நான் சும்மா இருக்கனும்.. நான் விலகி போனா நீ என்னை கொன்றுவியா.. உனக்கு வந்த ரத்தம் எனக்கு வந்த அதுக்கு பேர் ரெட் பெயிண்ட்டா" என்று அவன் கேட்க அவள் சிரித்துவிட்டாள்.. அவனும் அவளின் சிரிப்பில் இனைந்துகொண்டான்..

"அண்ணா சாரி டா.. நிஜமா உன்மேல நம்பிக்கை இல்லாம அப்டி பேசல.. உன்ன யாராவது ஏதாவது தப்பு சொன்னா எனக்கு புடிக்காதுனு உனக்கே தெரியும்ல.. அவ உன்ன ரொம்ப திட்டிட்டே போனா.. என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.. அதான் அவளை திட்டிட்டு வந்தேன்.. ஆனாலும் என்னால அமைதியா இருக்க முடியல.. அவ போய் உன்ன குறை சொல்றாலேனு ரொம்ப கோவம்.. அதான் அவ கிட்ட பேசுனா உன்மேல அப்படியே கோவத்த காட்டிட்டேன்.." என்றாள் வருத்தமாக.. அவனும் அவளை தோளில் சாய்த்து அவளின் தலையை தடவி விட்டு, "பரவலா புரியுது விடு" என்றான்..


************************************

"என்ன யாராவது திட்டுனா உன்னால தாங்கிக்க முடியாது சொல்லுவியே, இப்போ நான் உன்ன பத்திரமா பாத்துக்கலைனு நானே என்ன திட்டிட்டு இருக்கேன் குட்டிமா.." என்று மனதுக்குள்ளே படுத்திருக்கும் ரம்யாவிடம் பேசியவன் அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் கண்களில் கண்ணீருடன் அறையை விட்டு வெளியே வந்தான்.. அவனின் பின்னே மீராவும் வெளியே வந்தாள்..

அப்பொழுது அங்கே வந்தாள் கௌஷிக்கா..

"சீப் டாக்டர் ஆஸ்திரேலியா போய்ட்டாரு.. அவரோட ஆலோசனை கேட்டு இனிமே ரம்யாவை பாத்துக்க இந்த டாக்டர் ஹெல்ப் பண்ணுவாரு.. எல்லாரும் தைரியமா இருங்க.. கண்டிப்பா சீக்ரம் ரம்யா வந்துருவா" என்று சொல்லிவிட்டு சென்றாள்..


அனைவரும் அமைதியாக இருந்தனர்.. பாலா அந்த பார்க்கில் இருந்தான்.. அவனின் முன்னே சென்று நின்றாள் ஷாலினி..


அவன் சற்றும் அவளை கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தான்..  அவள் அவனை அழைக்க அவன் நிமிர்ந்து பார்த்தான்..

"என்ன சோகமே உருவமா இருக்கீங்க.. ரம்யா கண்டிப்பா எந்திரிச்சு வந்துருவானு நம்புங்க எல்லாரும்.. அப்போ தான் அவ வருவா.. உங்களுக்கு இப்போ என்ன..Q இப்போதான் உண்மையா நீங்க வச்ச பாசம் எல்லாம் உணர்றீங்களா.." என்று அவள் கேட்க அவன் கண்கள் கலங்கியது.. பதில் சொல்லாமல் குனிந்துக்கொண்டான்..

அவனின் அருகில் சென்று அவன் தோளை தொட்டாள்.. அவன் அமைதியாக இருக்க, "புரியுது பாலா.. ஆனா இப்படியே இருந்தா எப்படி.. அப்பா அம்மா வருண் ஜெகதீஸ் திலிப் அவங்க குடும்பம்னு எல்லாருமே ஒழுங்கா சாப்பிடாம இருகாங்க.. வாங்கலாம் அவ மேல முன்னாடி இருந்தே பாசமா உயிரா இருந்தவங்க.." என்று அவள் சொல்ல அவனின் மனதில் பெரிய வேதனை உண்டானது.. அவளை நிமிர்ந்து பார்த்தான் கண்களில் வலியுடன்.. 

"அவங்களாம் சாப்பிடாம இருந்தா ரம்யாக்கு புடிக்காது தான.. போய் அவங்கள சாப்பிட வைங்க.. இனிமேல் ரம்யாவை புரிஞ்சு நடந்துக்கோங்க" என்று கூறிவிட்டு நகர்ந்தாள் ஷாலினி..

அவள் சென்ற சிறிது நேரத்தில் அவனும் எழுந்து ரம்யா இருந்த icu முன் சென்று அனைவரிடமும் தைரியமாக பேசி அவர்களை உணவு உண்ண வைத்தான்.. ஆனால் அவன் சாப்பிடவில்லை.. அதை யாரும் கவனிக்கவும் இல்லை..

சிறிது நேரத்தில் உணவுடன் அவன் முன் வந்து நின்றாள் ஷாலினி.. அவனிடம் உணவை நீட்ட அவன் அதனை வாங்க மறுத்தான்.. அவள் அவனிற்கு ஊட்டிவிட்டாள்..

"நீங்க சாப்பிடாம இருந்தா ரம்யா எந்திரிச்சு வரப்போ நீங்க பக்கத்து பெட்ல இருப்பிங்க.. அப்றம் எப்படி அவ கிட்ட மன்னிப்பு கேட்பிங்க.. சாப்பிடுங்க" என்று சொல்லி அவனை உண்ண வைத்துவிட்டு எழுந்து சென்றாள்..

----------------------------------------------------------

Update potuten potuten.. yarum thitadhenga.. story ah marandhuruka matenganu namburen.. Sry for the delay

Keep supporting..... 🙃

Share ur votes and comments...

Tata all my dr family members... seekrame next ud la pakalam... 🙂

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro