கனவு

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கடிகாரத்தில் மணிக்கு ஒரு முறை நகரும் சிறு முள் அவள் கனவு !
ஒரு மணித்துளியும் ஓயாது நகரும் நொடிமுள் அவன் கனவு !

கண்களில் கண்டு உணற முடியாது அவள் கனவு !
கண்கள் மட்டுமே பருகும் கானல் நீர் அவன் கனவு !

நேற்றைய செய்திகளை கொண்ட வெறும் தாள் அவள் கனவு !
கடைசிக்கு துண்டு செய்தியாக மட்டுமாவது மாற வேண்டும் என்பது அவன் கனவு !

எட்டா உயரம் அவள் கனவு ..
எட்டியும் சுவைக்க முடியாது அவன் கனவு !! ..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro