பகுதி 16

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

தாத்தாவின் பதிலை ஊகிக்க முடியாமல் அவர் முகத்தை பார்த்தான் அருண். அவர் முகத்திலோ அத்தனை பிரகாசம்.

திருட்டுப்பயலே அனுவ மனசுல நெனச்சிட்டு தான் கல்யாணம் வேணாம் வேணாம்னு சொல்லிட்டு இருந்தியா ? இது தெரியாம நானும் Waste ஆஹ் பொண்ணு தேடிட்டு இருந்திருக்கேன்.

அப்படியே பூரித்துப் போய்விட்டார் அவர்.

புதுசா ஒரு பொண்ணு மருமகளா வர்ரத விட நம்ம அனு குட்டியே வந்துட்டா நல்லா தான் இருக்கும். நா இன்னக்கே Mr ராஜசேகர் (அனுவின் மாமா) வீட்ல பேசிடறேன்.

அவர் பேசும்போது அப்பாடா என்றிருந்தது அவனுக்கு, அப்படியே இன்னொரு பக்கம் தாத்தாவையே ஏமாத்துறியா பாவி என்று மனசாட்சி கேள்வி கேட்க அதற்கு ஏதேதோ பதில் சொல்லிக்கொண்டே சாப்பிட்டு விட்டு Office கிளம்பினான்.

தாத்தா சொன்னது போல அன்றே அவர்களிடம் பேச அவர்களுக்கும் இதில் பூரண சம்மதம்.

நல்ல நாள் பார்த்து நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு வைக்கப்பட்டு எளிமையாக முடிந்ததது நிச்சயதார்த்தம். அடுத்த மாதம் திருமணத்திற்கு நாளும் குறிக்கப்பட்டது.

"இதுக்குத் தான் அனுக்கு கல்யாணம் வேணாம்னு அவளோ பேசினியா? " மாமா கலாய்க்க வேறு வழியின்றி வெட்கப் பட்டு வைத்தான் அருண்.

"வாழ்த்துக்கள் மாப்ள! எப்டியோ எனக்கு முன்னாடியே நீ Marriage பண்ணிக்கப்போற " தன் பங்கிற்கு கடுப்பேத்திவிட்டு போனான் விக்னேஷ்.

அன்றிரவு 9 மணி அனு போன் செய்தாள்.

"யாருன்னே தெரியாத ஒருத்தர் Lifeஅ Spoil பண்ணப் போறேன்னு கவலப்பட்டேன். இப்போ உன் Lifeஐயே Spoil பண்றேன் அருண்"

அவள் வேதனையாய் கூற

அப்டில்லாம் இல்ல அனு , ப்ரியா விஷயத்துல ரொம்ப நொந்து போயிருந்தேன் . நீ இல்லன்னா தாத்தா வேறொரு பொண்ண பாத்து எனக்கு கட்டிவெச்சிருப்பாரு. ஒரு விதத்துல நீ எனக்கு Help தான் பண்ற.

இருவரும் நீண்ட நேரம் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் பேசிக்கொண்டிருந்தார்கள். இருவருக்கும் அது உறங்காத இரவாய்ப் போனது.




Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro