பகுதி 26

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


ஹேய் அருண் நீ Evening என்ன கூட்டிட்டு போக வர வேணாம். நான் இன்னைக்கு Half day போட்டுட்டு மாமா வீட்டுக்கு போறேன்.

தெரியும், Uncle எனக்கு Phone பண்ணாரு. நீ கெளம்புறதுக்கு 30 minutes முன்னாடி எனக்கு Phone பண்ணு. நான் வந்து கூட்டிட்டு போறேன்.

ஒனக்கு இன்னிக்கு meeting இருக்கே, நீ Busy, வரமாட்டேன்னு நா Already சொல்லிட்டேன்.

அது இல்ல அனு, மாமாவே Call பண்ணி Invite பண்ணாரு. போகலனா நல்லா இருக்காது. Suppliers கூட Meeting தாத்தாவே பாத்துக்குறேன்னு சொல்லிட்டாரு. So நாம சேந்தே போலாம்.

சரி, Bye.

ஸ்வேதாவுக்கு ஒரு வரண் வந்திருந்தது. அவளை இன்று பெண் பார்க்க வருவதால் தான்இருவரையும் மாமா வீட்டுக்கு அழைத்திருந்தார். சந்திரன் -திலகா தம்பதியினரின் மூத்த மகன் சஞ்சய், Doctor. அவன் ஏற்கனவே ஒரு திருமண வீட்டில் ஸ்வேதாவை பார்த்து பிடித்துப் போயிருந்தது. அவன் வீட்டிலிருந்து ஏற்கனவே பெற்றோர் வந்து ராஜசேகர் வீட்டில் முறைப்படி பெண் கேட்டனர். அவர்கள் குடும்பம் பற்றியும் சஞ்சய் பற்றியும் விசாரித்ததில் எல்லோரும் நல்ல விதமாகவே சொன்னதால் ஸ்வேதாவின் வீட்டினரும் திருமணத்திற்கு சம்மதித்து விட்டார்கள். இன்று ஒரு Formalityக்காகத் தான் இந்த பெண் பார்க்கும் உற்சவம்.

"என்னடா Life ஒரே Boaring ஆஹ்இருக்கேன்னு போன வாரம் தான் நெனச்சேன். அதுக்குள்ள பாரு ஸ்வேதா Marriage Topic Start ஆகிடுச்சி. நிச்சயதார்த்தம், கல்யாணம், Shopping னு நெறய வேல இருக்கு. செம்ம ஜாலி இல்ல. "

மாமா வீட்டுக்கு போகும் வரை உற்சாகம் பொங்க பேசிக்கொண்டே வந்தாள் அனு.

"ஸ்வேதா ரொம்ப நல்ல பொண்ணுடா, அவ நல்ல மனசுக்கு தான் அவளுக்கு ரொம்ப நல்ல வாழ்க்க அமயப் போகுது. அத்த கூட ரொம்ப சந்தோஷப் பட்டாங்க. இருக்காதா பின்ன அவங்க மருமகன் Neurologist ன்னா சும்மாவா!"

இதற்கிடையில் அருண் Radio வை On செய்ய, " அதான் பேசிட்டு இருக்கேன்ல " என்று முறைத்துக் கொண்டே அதை Off செய்து விட்டு மீண்டும் பேசத்தொடங்கினாள். " கொஞ்சம் விட்டா காதுல இருந்து Blood வந்துடும் அனு " என்று அருண் அழாக்குறையாக சொல்லவும் அவனை முறைத்துவிட்டு அடுத்த பக்கம் திரும்பிக் கொண்டு இருந்தாள். ஆனால் இரண்டு நிமிடம் கூட அமைதியாக இருக்க முடியாமல் அவள் மீண்டும் ஸ்வேதா, சஞ்சய் என்று தொடங்க இம்முறை அருணுக்கு அழுகைக்கு பதில் சிரிப்பு தான் வந்தது.

இருவரும் வீட்டை அடைந்தனர். வாசலுக்கே வந்து வரவேற்றார் ராஜசேகர். "நீ மாமா கூட பேசிட்டு இரு, நான் ஸ்வேதாவ பாத்துட்டு வந்துடறேன். " சொல்லிவிட்டு ஸ்வேதா அறைக்கு போனாள். அங்கே ஸ்வேதாவுக்கு அலங்காரம் செய்ய உதவிக் கொண்டிருந்தாள் சுஜி.

"ஆஹா, பொண்ணு என்னமா அழகா இருக்கா, பாக்க வர்ரவங்க இன்னைக்கே தூக்கிட்டுப் போயிடாம இருந்தா சரி. " அனு ஸ்வேதாவை பார்த்துவிட்டு சொல்ல "இருக்காதா பின்ன, அலங்காரம் பண்ணது சுஜி இல்ல! " என சுஜி பெருமை பட்டுக் கொண்டாள்.

"ஏன் ஸ்வேதா, சஞ்சய்க்கு தம்பி யாரும் இல்லையா? இருந்தா நம்ம சுஜி கல்யாணத்தையும் சேத்து முடிச்சிடலாம் "

"இல்ல அனு, நானும் அந்த Idea ல தான் இருந்தேன். ஆனா மாமாக்கு ஒரு தங்கச்சி மட்டும் தானாம். " ஸ்வேதா பதில் சொல்வதற்கு முன்பே சோகமாக சொன்னாள் சுஜி.

"ஏய் எல்லாரும் வந்துட்டாங்க, Ready ஆகாம இன்னும் பேசிட்டு தான் இருக்கீங்களா " சுதா வந்து சொல்ல " பொண்ணு எப்பவோ Ready மாப்பிள்ளை தான் Late " சுஜி சொல்லிவிட்டு சிரித்தாள். ஸ்வேதாவின் முகமோ வெட்கத்தில் சிவந்திருக்க " ஸ்வேதா ஒனக்கு வெட்கப் படவும் தெரியுமா? " அனு ஆச்சரியமாய் கேட்க "பொண்ணா பொறந்ததுக்கு அவளாச்சும் கொஞ்சம் வெக்கப் படட்டும் " என்று அனுவையும் சுஜியையும் பார்த்து சிரித்துவிட்டு ஸ்வேதாவின் கையில் காபி கொடுத்து அனுப்பினார் சுதா.

அன்றே பேச்சுவார்த்தைகள் முடிய தட்டும் மாற்றிக் கொண்டார்கள். சஞ்யின் தங்கை சஞ்சனா தன் கணவனுடன் வெளிநாட்டில் இருப்பதால் அவர்கள் விடுமுறைக்கு இந்தியா வருவதையும் கவனத்திற் கொண்டு அடுத்த இரண்டு மாதங்களில் திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது.

வீட்டிற்கு திரும்பிய பின்னும் வாய் மூடாமல் சஞ்சய் புராணம் பாடிக்கொண்டிருந்தாள் அனு.

"இருந்தாலும் அனு, ஸ்வேதாக்கு Marriage னு ஸ்வேதா கூட இந்தளவு Excite ஆகிருக்க மாட்டா. "

ஹ ஹா, உண்மதான் இல்ல, ஆனா இப்டி யாராவது கல்யாணம் பண்ணிக்கிட்டே இருந்தா தான் Life Bore அடிக்காம இருக்கும்.

ஹ்ம் ஒனக்கு Bore அடிக்காம இருக்க தான் அங்க விக்கி வீட்ல நிச்சயதார்த்தத்துக்கு நாள் பாக்குறாங்கலாம்.

"உண்மையா?" என்று புன்னகை பூத்தவள் "அவன் ஏன் என்கிட்ட சொல்லல " என்று முறைத்தாள்.

"ஐயோ, என்ன பாத்து எதுக்கு மொறக்கிற? அவன் ஏன் சொல்லலனு அவன்கிட்ட கேளு " என்று அருண் சொல்லவும் "ம்ம், கேக்குறேன் " என்ற படி விக்கிக்கு போன் செய்த படி Balcony க்கு போனாள். "அப்பாடா தப்பிச்சோம், அவ வரும் போது தூங்கிட்ட மாதிரி Scene போடணும் " என்ற யோசித்துக்கொண்டே கட்டிலில் போய் படுத்தவன் அவள் வரும் போது உண்மையிலேயே தூங்கிவிட்டிருந்தான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro