பகுதி 38

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


Hello அருண் Call பண்ணிட்டு பேசாம இருக்க? டேய் Lineல இருக்கியா இல்லையா?

ம்ம் இருக்கேன் இருக்கேன்.

என்ன ரொம்ப சூடா இருக்குற மாரி தெரியுது, Officeல எதாச்சும் Problemஆ?

Officeல இல்ல, எல்லாம் வீட்ல தான் .

ஹஹா அனு எதாச்சும் பண்ணாலா?

எதாவது பண்றதுக்கு மொதல்ல வீட்ல இருக்கனுமே, அவ தான் மாமா வீட்ல போய் உக்காந்துட்டு இந்த பக்கமே வர மாட்டேங்குறாளே!!

வீட்டுக்கு வரலியா? போன வாரம் போனவ இன்னும் வரலியா?

ஆமாடா அதத் தானே பொலம்பிட்டு இருக்கேன். பாவி அங்கருந்தே School எல்லாம் போறா தெரியுமா? நான் வீட்டுக்கே போய் கூப்டும் வர மாட்டேன்னு சொல்லிட்டா!!

அருண் அழாக்குறையாக சொல்ல விக்கி மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

சரிடா விடு, நாளன்னைக்கி கல்யாணம் முடிஞ்சதும் வீட்டுக்கு வந்து தானே ஆகணும் . இவ்ளோ நாள் இருந்துட்ட இன்னும் 2 Days தானே, விடு.

இல்ல டா Phone அ கூட Off பண்ணி வெச்சிருக்கா, என்னமோ எல்லா வேலையையும் அவ தனி ஆளா பாக்குற மாரி Scene போடுறா.

ம்ம் ரொம்ப பாதிக்கப் பட்டிருக்க போல தெரியுது. பேசாம இங்க கெளம்பி வா . அம்மாவும் அப்பாவும் வினோ வீட்டுக்கு போயிருக்காங்க. நானும் சிந்துவும் மட்டும் தான் இருக்கோம். இங்கயே Dinner முடிச்சிட்டு வீட்டுக்கு Late ஆஹ் போய்க்கலாம்.

இல்ல விக்கி எனக்கு சாப்புடவே தோண மாட்டேங்குது. நான் வரல.

டேய் சிந்து YouTube ல பாத்து எதோ புதிய Dish try பண்ணிட்டு இருக்கா. வா சாப்புடலாம்.

இல்லடா நா வேணும்னா நாளக்கி Morning வரேன்.

டேய் அருண், தனியா சாப்புட பயமா இருக்குடா. Please எனக்காக வர மாட்டியா??

ஆஹ் இது தான் Matter ஆஹ்? ரொம்ப பாசமா Dinner க்கு கூப்புடும் போதே நெனச்சேன் எதாவது வில்லங்கம் இருக்கும்னு. உன் பொண்டாட்டி சமச்சத நீயே கொட்டிக்கோ, அடுத்தவங்க உயிரோட விளையாடாத!!

பாவி! பாவி! நீயெல்லாம் ஒரு Friend ஆ! அவனவன் Friend க்காக என்னென்னமோ பண்றான். சாப்புட Company குடுடான்னா ரொம்ப தான் பேசுற!! நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்ட!!!

அதெல்லாம் நல்லா இருப்பேன். இங்க அனு Superஆ சமப்பா.

ஓவரா அலட்டிக்காத அவ தான் அந்த வீட்டுப் பக்கம் வந்து ஒரு வாரத்துக்கு மேல ஆகுதே. நீ இப்டியே அனு அனுன்னு பொலம்பிட்டு இருக்க வேண்டியது தான்.

ஆறுதல் சொல்வான் என்று எதிர்பார்த்து பேசினால் தன் பங்கிற்கு இன்னும் கொஞ்சம் கடுப்பேத்தி விட்டு போனை வைத்தான் விக்கி. வந்த எரிச்சலில் போனை தூக்கி வீச நல்ல வேலை அது சோபாவில் போய் சேபாக விழுந்தது. "Friends ஆ இதுங்கெல்லாம்! விக்கி நல்லாவே இருக்க மாட்டேன்னு சாபம் குடுக்குறான், அந்த அனு பிசாசு போன எடத்துலயே Settle ஆகிட்டா. இங்க ஒருத்தன் தனியா கஷ்டப் பட்றானேன்னு கொஞ்சமாச்சும் Feeling இருக்கா "

கட்டிலில் இருந்த Laptopஐ Shut down செய்து மேசையில் எடுத்து வைத்தான். அப்படியே Drawer ஐ திறக்க அதில் அனுவுக்கு வாங்கி வைத்த galaxy milk chocolate இருக்க அதை எடுத்துக் கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தான். அதை எடுத்துப் பிரிக்கவும் அனுவுக்கு மீசை வரைந்துவிட்டது ஞாபகம் வர போனை தேடி எடுத்து அந்த போட்டோவை எடுத்துப் பார்த்தான்.

"இப்பெல்லாம் ஒனக்கு என் கூட பேசணும்னு கூட தோண மாட்டேங்குது இல்ல, ஏன் அனு இப்டி பண்ற? " அப்போது லட்சுமி வந்து கதவை தட்டி சாப்பிட அழைக்க சாப்பிடாமல் இருந்து தாத்தாவிடம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்பதால் கீழே போனான்.

அடுத்த நாள் சஞ்சய்-ஸ்வேதாவின் Reception. மண்டபத்துக்கு போன நேரத்தில் இருந்து அருணின் பார்வை அனுவை துரத்த, அவளோ முடிந்த வரை அவனிடம் இருந்து விலகி ஓடினாள். வீட்டுக்கு வர மாட்டாளா, பேச மாட்டாளா என்ற நிலை மாறி ஒரு பார்வை பார்க்க மாட்டாளா என்று ஏங்கிக் கொண்டிருந்தான் அவன். இது வரை யாரும் அவனை இப்படி வதைத்ததில்லை, குழந்தை பருவத்திலிருந்து அவனை சுற்றிச் சுற்றி வந்தவள், இன்று அவனை ஒரு கடைவிழிப் பார்வைக்காக பித்து பிடித்து அலைய விட்டிருந்தாள்.

Function முடிந்து வீட்டுக்கு வந்த பின்னும் அவள் நினைப்பாகவே இருந்தது. உண்மையில் ப்ரியா அவனை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து போனது கூட அவனை இந்த அளவுக்கு பாதிக்கவில்லை, அனுவின் தற்காலிகப் பிரிவில் இருப்புக் கொள்ளாமல் தவித்தான் அருண். மண்டபத்தில் இருந்து வந்ததும் குளியலறைக்குப் போய் Fresh ஆகி உடைமாற்றி விட்டு வந்தவன் உறக்கம் வராமல் அறையின் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தான். இளம் சிவப்பு நிற Lehengaவில் லேசான ஒப்பனையுடன் இருந்தவள் ஏன் அவன் கண்களுக்கு அத்தனை அழகாய் தெரிந்தாள்? ராட்சசி!! மண்டபத்துக்குள் நுழைந்த போது எங்கிருந்தோ வந்து " வாங்க தாத்தா, வா அருண்" என்றாள், Gift கொடுக்கப் போக அருணை வந்து அழைத்தாள், அவ்வளவு தான் அதன் பின் அருண் இருந்த பக்கமே வரவில்லை அவள்.

இரவு 12 மணி தாண்டியும் தூக்கம் வராமல் கட்டிலில் புரண்டான் அருண், அதற்கு மேல் முடியாமல் போர்வையையும் தலையணையையும் எடுத்துக் கொண்டு போய் சோபாவில் படுத்தான்.அவள் பக்கத்தில் இருந்து தலையை வருடுவது போல் தோன்ற சிறிது நேரத்தில் உறங்கியும் போனான்.

இங்கே இவனை தவிக்க வைத்துவிட்டு அங்கே சத்தமின்றி தன் பங்கிற்கு கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள் அனு. அவளுக்காகத் தான் ஏங்கிக் கொண்டிருக்கிறான் என்று தெரியாமல் அவனை விட்டுப் போக வேண்டும் என தன்னையே வதைத்துக் கொண்டிருந்தாள் அவள்.


Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro