📳அலைபேசி💌

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

என் அன்பிற்குரிய எனதுயிரே, தினமும் என மனம் ஆனது விடியலை எண்ணி விடிந்ததா என்று எனக்கு நினைவுகள் இல்லையடி... ஆனால் உன்னருடைய குறுந்செய்திக்காகவே என் விடியல் ஆனது விடிந்தது அன்பே....


நாம் நேரில் பேசிக்கொண்டதை விட குறுந்செய்திகள் மூலமாக நம்மை அறிந்து கொண்டதே அதிகமாகும்... இந்த குறுந்செய்திகள் என்னிடத்தில் உன் உணர்வுகளை வெளிப்படுத்தியதை விட உன் இரு விழி பார்வைகள் உன் ஒரு ஒரு உணர்வுகளையும் என்னிடத்தில் வெளிப்படுத்தியதே அதிகமடி....


எனது வாழ்க்கையில் நன் மிகவும் நேசித்தவற்றில் அலைபேசியும் ஒன்று... ஆனால் அதையே நான் வெறுப்பேன் என்று ஒருநாளும் சிந்தித்தது அல்ல....


உனது முகம் காண எண்ணியபொழுதெல்லாம் உன் முகம் காண வைத்த எனது அலைபேசி ஏனோ இன்று உனது அழைப்பிற்காகவே காத்துக்கொண்டு ஏங்கிக்கொண்டு இருக்கின்றன....


தூங்கா விழிகள் நம் இருவர் வாழ்வில் வர இந்த அலைபேசியே காரணமோ என்று எண்ணுகிறேன்.... உனது மௌனமும் புன்னகையும் மறைமுகமாக சங்கமிக்கும் தருணத்தில் எல்லாம் எனது மனம் தானாக உணர்ந்து கொள்ள எவ்வாறு முடிந்தது.....


இந்த அலைபேசியையும் தாண்டி எனது மனம் உன்னை மட்டுமே அல்லவா சுற்றி கொண்டு இருந்து உள்ளது என்று அன்று தான் நான் அறிந்தேனடி....


உனது விழிகள் கலங்கிய தருணத்தில் எல்லாம் எனக்கு பதிலாக எனது குறுந்செய்திகள் உன் விழிகளின் கண்ணீரை துடைத்து உள்ளது.....


வாழ்வில் நமது முக்கிய பங்காக நமக்கு இந்த அலைபேசியே அமைந்துள்ளது.... நம்மை பற்றி நாம் அறிந்து கொண்டதை விட நம் இருவரின் மனமும் அலைபேசியும் அறிந்து கொண்டதே அதிகமடி....


என்றென்றும் உனது அழைப்பிற்காக
காத்திருக்கும் எனது மனம் என்ற

அலைபேசி ஆகிய (நான்)

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro