2

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வீட்டிற்கு அந்த அர்விந்துக்கு பல தரப்பட்ட எண்ண ஓட்டங்கள். ப்ரியா எப்டி அங்கே.தன்னை தெரியாதவள் போல் ஏன் நடந்து கொள்ள வேண்டும்.படிக்கும் காலத்தில் அவளுடன் அதிகம் பேசியதில்லைதான். இருந்தாலும் ரம்யாவுடன் அவர் வீட்டில் அடிக்கடி கண்டிருக்காலே.ஒருவேல மறந்திருப்பாலோ?தான் மைதிலியை திருமணம் முடித்து தென் ஆபிரிக்கா சென்று வந்து சரியாக ஆறு மாதம்.இந்த ஒரு வருடத்தில் என்னென்னமோ நடந்து போய்விட்டது.

நம் கதாநாயகன் அர்விந்த் பற்றி பார்ப்போம்.அர்விந்தின் அப்பா சந்திரகுமார்ஒரு நிறுவனத்தில் சீனியர் ரெக்ருட்மண்ட் ஒபீசராகா வேலை பார்த்தவர்.நல்ல மனிதர்.வசதிக்கு பஞ்சமில்லை. Upper Middle Class. கேன்சர் வந்து ஆறு மாதம் முன்னால்தான் இயற்கை எய்தினார்.
அம்மா அம்சவேனி. கணவரின் சொல் தட்டாத டிபிக்கள் தமிழ் மனைவி. ஒரே ஒரு அக்கா அபினயா. அவர் திருமணம் முடித்து யுஎஸ் இல் உள்ளார்.

அர்விந்த் படித்தது விஸ்கொம்.அதன் பிறகு அப்பாவின் வேண்டுகோளுக்கு இனங்க MBA முடித்தான். அது இன்று அவனுக்கு நல்ல ஒரு தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தள்ளது.அப்பாவின் வைத்திய செலவுக்கு வைத்திருந்த சேமிப்பில் அதிகம் செலவானதால் அவர் இறந்த பிறகு குடும்பத்திற்கு அர்விந்த் ஒருவனின் வருமானம் போதுமானதாக இருக்கவில்லை.கடைசியாக அவன் மைதிலியையும் அம்மாவையும் அழைத்துக்கொண்டு தென்னாபிரிக்காவுக்கு வேலைக்கு சென்று கொஞ்சம் குடும்ப நிலையை சீர்படுத்தினான்.

அர்விந்தை பற்றிய தகவல்களை நாம் பார்க்கும் வேலை, கிட்சனில் சமைத்துக்கொண்டிருந்த அம்சவேனி "அர்விந்த் நிஷா அழுதுப்பா , டேபிள்ள பால் வைத்திருக்கின்றேன். எடுத்துக் கொடு "என்றார். அம்மாவின் அழைப்பால் ப்ரியா பற்றிய யோசனையில் இருந்து விடுபட்டு தன் அன்பு மகள் நிஷாவை பார்க்க பால் புட்டியை எடுத்துக்கொண்டு சென்றான். மூன்று மாதமே ஆன தன் மகளை மடியில் வைத்து அர்விந்த் பால் ஊட்டினான்.அர்விந்தைக் கண்டதும் அந்த பிஞ்சு தேவதை சிரித்தது.அவளின் சிரிப்பில் மெய் மறந்தவன்

'இதை எல்லாம் பார்க்க நீ இல்லையே மைதிலி'
என்று கவலையோடு மகளுக்கு பால் கொடுக்க ஆரம்பித்தான்.
நிஷா பால் குடித்து முடித்ததும் அவளுக்கு மட்டுமே தெரியும் மொழியால் அர்விந்துடன் பேச ஆரம்பித்துவிட்டால்.நிஷாவுக்கும் மைதிலி போலவே மேல் உதட்டின் வலது பக்கம் ஒரு சிறிய மச்சம் உண்டு. நிஷா சிரிக்கும் போது அது அவளுக்கு மேலும் அழகூட்டியது.

தன் செல்ல மகளுடன் விளையாடிக்கொண்டிருந்தவன் தன் செல்போன் சினுங்க அதை எடுத்தவன் unknown நம்பரில் இருந்து கால் வருவதை பார்த்தவன் யாரக இருக்கும் என்று யோசித்த வண்னம் "ஹலோ" என்றான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro