21.என்னை மறந்தாயோ கண்ணம்மா

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

காலை எழுந்ததும் அந்தக் கண் கொள்ளா காட்சியில் தன் கவலைகளை மறந்து வாய்விட்டுச் சிரித்தான் விசாகன்.

அவன் கேலிச் சிரிப்பை கண்டு ரோகிணியின் காதுக்குள் மெதுவாக சண்முகம்

" ஸ்டாரு.. ஸ்டார் ஸ்கொய்ட சிரிக்க வேணானு சொல்லு.. அவர் சிரிக்கிறத பார்த்தா நான் என்னமோ கொரலி வித்தக்காரன்னோன்னு எனக்கே ப்பீல் ஆகுது..ஏதோ உன்னை கட்டிக்கப் போற ஒரு காரணத்துக்காக நான் சும்மா இருக்கேன் "என்றான்.

" நீயேன்டா ப்பீல் பண்ற.. அவர சண்டைக்கு கூப்டு நீ யாருன்னு காமி..நம்ம பெரிய குளத்து சிங்கம்டா நீயி ",

அவளோ நேற்று விசாகன் தன்னை கேலி செய்த கோபத்தில் இருந்தாள்.

" என்னது சிங்கம்மா.  ஸ்டாரு..உனைய காலங்காத்தால நாலு ரவுண்டு நம்பூர ஓட வுட்டதுக்கு எனைய பழி வாங்கலியே... அவர பார்த்தியா.. நல்லா ஜிம்முக்குலாம் போயி ஜம்முனு பாடிய வெச்சிருக்காரு.. வீனா அவருட்ட வம்பிழுந்து இந்த பஞ்சு பாடிய பஞ்சர் பண்ண சொல்றீயா "..

" டேய் சும்மா இரு.. நீ தான்டா  நம்ம ஸ்கூல்ல கராத்தே சேம்பியன்னு..கலெக்டர் கையால பிரசைல்லா வாங்குனேன்னு சொன்னியே.. அப்ரோ என்னடா.. அதை நம்பிதான உனைய குருவா ஏத்துக்கிட்டேன்.. நீ அவரோட சண்டை போட்டு உன் திறமைய காமி "

அவள் முகபாவத்தை எந்த ஆங்கிள் வெச்சுப் பார்த்தாலும் அவள் கலாய்ப்பது போல தெரியல.. ஆனா சண்முகம் ஏன் ஜகா வாங்குறான்..

' அடியே லூசு ஸ்டாரு.. அந்த பரிசுலாம் சும்மா எங்க ஸ்கூலயும் எல்லா கத்து தரோம்னு பீடீ மாஸ்டர் உலகத்த ஏமாத்த கொடுத்தது..நீயேம்மா எனைய நேரங்காலந்த தெரியாம அந்த பாடி பில்டரோட கோத்து விடற.. நான் ஏதோ உனைய வெச்சு நல்லா என்டர்டெயின் பண்லானு நினைச்சா கடைசில எனக்கே பாடை கட்ட வெச்சிருவ போல இருக்கே' என பாவமாக பார்த்து வைத்தான்..

அவன் மனதுக்குள் அவளை திட்டி முடிப்பதற்குள் அவள் விசாகனை சண்டைக்குத் தயார் படுத்தியிருந்தாள்..

"நான் என்னவோ சண்டை போட்டு ஜெயிக்கனும்னு சொன்னிங்களே.. மொதல்ல என் தம்பி கூட சண்டை போட்டு நீங்க ஜெயிங்க.. அப்ரோ வேணா எங்கிட்ட சவடால் விடலாம் "

அவள் குரலில் அவ்வளவு தைரியம்..

" சீதா தேவி அவர்களே..காலங்காத்தால அனுமாரோட சேர்ந்துகிட்டு எங்கிட்ட மோதலாம்னு முடிவு பண்ணிட்டிங்க போல.."

அவன் குரலிலிலும் அவ்வளவு நக்கல்..

இதனைக் கேட்ட ரோகிணி சும்மா இருப்பாளா..அதி காலையில் அவளோடிய ஓட்டம், எடுத்த பத்து புஸ்ஸப்ஸ்..பதினஞ்சு ஸ்குவாட்ஸ்.. இதுலாம் அவள சும்மா இருக்க விடுமா.. அவளே களத்தில இறங்கிருப்பா தான்..ஆனா ஏன் அவன தன்னோட ஸ்டீல்பாடி கையால்ல காயப்படுத்தனும்னு ஒதுங்கி தன்னோட சங்கத்து ஆள இறக்கிருக்கா..

" ஹலோ பேசறது யார் வேணா பேசலாம்.. அதை செயல்ல காமீங்க "

அவள் கண்களில் தெரிந்த திமிருக்கே ஒத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது அவனுக்கு...

" ஹூம் விதி யார விட்டது.. நான் சண்டைக்கு ரெடி பா.. ஆனா என்ன பந்தயம் "

" அதை தோக்கறவங்க தான் முடிவு பண்ணனும் .. நீங்களே சொல்லுங்க  "

" அம்மோடியோவ்..பெரிய ஆளுங்க தான்பா நீங்க.. ஜெயிக்கறவுங்க என்ன சொன்னாலும் தோக்கறவுங்க இந்த நாள் புல்லா கேட்கனும் .. டீலா..நோ டீலா "

"டீல் "

அந்த ஒப்பந்தத்தில் அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.. அவனை எப்படி ஆட்டி வைக்கலாம் என கோட்டை கட்ட ஆரம்பித்தாள்.

" டேய் சண்முகா.. எனக்காக எப்படியாச்சும் ஜெயிச்சிருடா.. என் தங்கம்ல "

அவளுக்கு அவள் தம்பியின் மீது பலத்த நம்பிக்கை.. அவளுக்காகவாது சண்டை போட வேண்டும் என தன்னை தயார் படுத்திக் கொண்டான் சண்முகம்..

( ஏம்மா நீ பாட்டுக்கு புள்ள பூச்சியாதான இருந்த.. அப்ரோ ஏமா..  சாது மிரண்டா சண்முகத்துக்கு ஆகாதுன்னு சொல்றது சரியாத்தான் இருக்கு.. அடேய் சண்முகா..

இவ்வளவு நாள் உனக்கு கொடுத்த பில்டப்புலா டோட்டலா காலியாகப் போகுதுடா..என்னை மன்னிச்சு..)

பாஹீ கூட இவர்கள் விளையாட்டை மன்னிக்கவும் சண்டையை திண்ணையில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டு ஆர்வமாக பார்க்கலானார்.. ரோகிணி தான் நடுவராக்கும்..

விசாகனும் சண்முகனும் சண்டைக்குத் தயாராகினர்.. சண்முகம் தன் குலசாமியை எல்லாம் வேண்டிக் கொண்டு தயாராக, விசாகனோ எடுத்த எடுப்பிலே சண்முகத்தின் இரண்டு  கையையும் தன் ஒரே கைக்குள் கொண்டு வந்தான்..

ஒரே தூக்கலில் விசாகன் சண்முகனைத் தூக்கி முதுகில் போட்டுக் கொண்டு கேம் ஓவர் என்பது போல காட்சியளித்தான்..  அனுமார் சிரஞ்சீவி மலையைத் தூக்கியது போல,  அந்த அனுமாரையே தூக்கி விட்டான் இந்த இராவணன்..

'ஐயோ..இவனுங்கள சண்டை போடதான சொன்னோம்.. எதுக்குடா அவன தூக்குன.. இறக்கிவிட்டு சண்டைபோடுடா.. அடேய் சண்முகா வாயி மட்டும் ஏழுருக்கு பேசறல்ல.. உன்னைய நம்புனதுக்கு... நல்லவேளை நான் சண்டை போட போகல்ல.. அவனையே அப்படி தூக்கி வெச்சிருக்கான்..நாம போயிருந்தோம் 'என சண்முகத்திற்கு பதிலாக அவன் தோளில் தன்னை பொறுத்தி, நினைக்கும்போதே கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்..

"மிஸ்டர் ராவணா..தயவு செஞ்சு என்னை இறக்கி விடறீங்களா..எனக்கு ஹைட்டுனா ரொம்ப பயம்.. ப்ளீஷ் " என்று சண்முகம் கெஞ்ச ,  அவனை இறக்கிவிட்டவன் முதுகில் ஒரு அடியைப் போட்டு " உங்க அக்காவுக்கு இன்னும் நல்லா டிரெயினிங் கொடு " என்க,

ரோகிணி தான் அவன் முதுகை நீவி விட்டு

" அவருக்கு சண்டை போடவே தெரில சண்முகா..அவர விடு.. நீ சொல்லிக் கொடுத்த மாறியே தெனமும் பண்றேன் சரியா.. " என்க,

' லூசு ஸ்டாரு.. எனைய இன்னுமா நீ நம்புற ' என்பது போல பார்த்தான்..

" சரி சரி பந்தயத்துல தோத்துட்டீங்க ரெண்டு பேரும்.. இன்னைக்கு புல்லா நான் சொல்றததான் செய்யனும் புரியுதா "

" இது போங்காட்டம்.. நான் இதை ஒத்துக்க மாட்டேன் " ரோகிணி அடம்பிடிக்க,

" அப்போ ஒன்னும் பிரச்சனை இல்ல.. நாம இன்னொரு ரவுண்டு கூட வெச்சிக்கலாம்.. சம்பு இந்த தடவையும் நீயே வரியா..இல்ல உங்க தலைவியோட சண்டை போடட்டுமா.. "

அவன் சீரியஸாக கேட்க,

" அடச்சே.. காலங்காத்தால என்ன விளையாட்டு வேண்டி கிடக்கு உங்களுக்கு.. அங்கன என் பிம்பிள் செல்லம் காய் வெட்டி கொடுக்க ஆளில்லாம சிரமப்படுது.. நான் போயி என் செல்லத்துக்கு ஹெல்ப் பண்றேன்.. நீங்க உங்க செல்லத்தோட சண்டை போட்டுக்கோங்க " அவன் தப்பிக்க ரோகிணியிடம் விசாகனை தள்ளிவிட்டு உள்ளே சென்று விட்டான்..

பாஹீதான் அவர்கள் விளையாட்டைக் கண்டு வாய் விட்டு சிரிக்கத் துவங்கினார்.. வயிற்றில் கைவைத்துக் கொண்டு விழுந்து விழுந்து அவள் சிரிக்கும் அழகினைக் காண நெஞ்சம் நிறைந்தது அனைவருக்கும்..

தோட்டத்திற்குச் சென்று தற்போதுதான் வீடு திரும்பிய வாசு கூட தன் மனையாளின் சிரிப்பில் மதி மயங்கித்தான் போனான்..

மனிதன் எவ்வளவு சிரிக்கின்றானோ அவ்வளவு ஆரோக்கியமாக இருப்பான்.. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என சும்மாவா சொல்லி வைத்தார்கள்.. பாஹீ மனதார சந்தோசமாக இருந்தாலே அவரது கோபம் அதிகபட்ச அளவை அடையாது என்று ரஞ்சித் கூறியிருந்தான்.

ஏனோ பாஹீ இரண்டு நாட்களாக சோகமாக இருக்க, மற்றவர்களும் அவர்நிலையை எண்ணி பயந்துதான் போயினர்..ஆனால் இன்று பிரண்ட்ஸ் படத்தில் வரும் தளபதியைப் போல விடாது சிரிக்கறார் என்றால் அவர்களுக்கு அதுபெரும் சாதனையே..

வாசு தன் மனையாளை நெருங்கி

" என்னடீ காலங்காத்தால இப்படி சிரிக்கிற..சொன்னா நாங்களும் சிரிப்போம்ல "

" ஐயோ..வாசு.. இவனுங்க சண்டை போட்டத நீ பார்த்தனு வெச்சிக்கோ.. முடியலடா.. எனக்காக நீயும் சண்டை போடறீயா. உன் சண்டைய பார்த்து எத்தனை வருசமாச்சு " என்றதும்,

அவரருகே அமர்ந்து

" அப்போ உனக்கு சண்டை போடறத பார்க்கனும் அப்படிதான.  எங்க அந்த சண்முகப் பையன்..ஓடிட்டானா. அப்போ நான் யாரோட சண்டை போடறது " எனும்போதுதான் ரோகிணியைப் பார்த்தான்..

" என்னம்மா இது கோலம் "

" அப்பா நானும் போட்டில ஜெயிக்கனும்லபா.. அதான் சண்முகமும் நானும் பிராக்டிஸ் பண்ணிட்டு இருந்தோம்.  இதா இவருதான் அதை கெடுத்து விட்டாரு.. " என்க,

'

சூப்பர்மேன்.  எங்கிட்ட சண்டை போட கூடாதுன்னு அந்த சம்பு பையன தேடறீயா நீயி..எங்கூட எப்படி சண்டை போட வைக்கறேன்னு பாரு ' என உள்ளுக்குள் கூறிக் கொண்டு உள்ளே சென்று விட்டான்..

ரோகிணி காபி கலந்து அவனுக்கு கொடுத்துவிட்டு அவன் குடித்து முடிக்கும் வரை தன் துப்பட்டாவின் நுனியை  கசக்கிக் கொண்டிருந்தாள்..

" என்ன சீதா தேவி அவர்களே.. நான் சொல்றத கேட்கறீங்களா..இல்லை ஒரு மேட்ச் வெச்சிக்கலாமா "

அவனிடம் ஜெயிக்க முடியாது என்கிற காரணத்தால் தோல்வியை ஒற்றுக் கொண்டாள்.

" நீங்க சொல்றத கேட்கறேன் "

அவள் குரல் அவன் செவிகளில் விழவில்லை..

" கேட்கல .. சத்தமா "

அவள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு " நீங்க தான வார்த்தைக்கு வார்த்தை அத்தைக்காக ஒத்துக்கறேன்னு சொல்லி கஷ்டப்படுத்துறீங்க.. அதான் நான் நீங்க சொன்ன போட்டில கலந்து ஜெயிச்சிட்டா எனக்காக என்னைய கல்யாணம் பண்ணிப்பீங்கள்ள.. அதான் சண்டை போட கத்துக்க முயற்சி பண்ணேன்.. அது தப்பா.. நீங்க அதையும் கிண்டல் பண்ணா " கிட்டத்தட்ட அழும் நிலைக்கு போய்விட்டாள்..

தான் விளையாட்டாக சொன்னதை அவள் இவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்வாள் என நினைக்கவில்லை அவன்.. அங்கே பத்தடி தூரத்தில் பருவதம் மட்டும் இல்லையென்றால் தன் கைவளைவுக்குள் அவளை கொண்டு வந்து மன்னிப்பு கேட்டிருப்பான் அவன்..

" ஏஞ்சல் "

அவன் கேலி செய்யும் நேரத்தில் சீதா தேவி என்றழைத்தாலும் பாசமாக பேசும்போது ஏஞ்சல் என்றுதான் அழைப்பான்.

" சாரிடாம்மா.. நான் உங்கிட்ட விளையாடதான் அப்படி சொன்னேன்.. என்னை மன்னிச்சிடுமா "

" அத்தைக்காக கல்யாணம்னு சொன்னது உண்மைதான்.. ஆனா பொண்ணா நீ இருக்க பட்சத்துலதான் நான் யோசிக்காமலே ஒத்துக்கிட்டேன்.. நான் உனைய பிடிச்சுத்தான் சம்மதிச்சேன்..  அதுனால இந்த விசாகன் ஏஞ்சலோட அடிமைன்னு சொல்லிக்கறதுல சந்தோசம்தான் படறேன்.. சரியா... சோ நீ எந்தக் காரணத்தைக் கொண்டும் எனக்கு உன்னை பிடிக்காதுன்னு அஸ்ஸூயும் பண்ணிக்காத புரியுதா.. "

அவள் தலை சம்மதமாக ஆடியதும்தான் ஏனோ நிம்மதியாக இருந்தது அவனுக்கு..

" இனிமே நானே உனக்கு தற்காப்புக் கலை பத்தி சொல்லித் தரேன் சரியா "

அவள் பதில் சொல்லவில்லை.. ஆனால் அவன் அடிமை என்றதும்ய கன்னங்கள் மட்டும் செந்நிறத்தை பூசிக் கொண்டன..

" என்ன ஏஞ்சல் உனக்கு ஓகே தானே "

சிவந்த முகத்தை மறைக்க அவள்

முகத்தை திருப்பிக் கொள்ள, அவள் தன்னிடம் விளையாடுகிறாள் என நினைத்துக்  கொண்டவன் " ஹேய்..நீ நான் சொன்னத கேட்டே ஆகனும்னு தான கோபமா இருக்க மாதிரி நடிக்கற போல.. உனக்கு டஃப் ஆன டாஸ்க் கொடுக்கனுமே.. நீ என்ன பண்றனா உங்க அப்பாவ..அந்த விருமாண்டிய எங்கூட ப்பைட் பண்ண கூப்பிடற ..சரியா " என்றான்.

" எங்கப்பாவ மரியாதையா பேசுங்க "

தந்தையின் பேச்சை எடுத்ததும் அவள் வழக்கம்போல சீற,

" ம்.. இப்போ உனக்கு நல்லா பேச்சு வருதே..சொன்ன சொல்ல காப்பாத்தனும்னு உங்கப்பா உனக்கு சொல்லித் தரல போல.. போ..போம்மா ..போயி..உங்கப்பாவ கூட்டிட்டு வா.. "

அந்தக் கோழி குண்டு விழிகள் வெளியே தெரியுமளவிற்கு வெறித்துப் பார்த்தவள் ஒரு எட்டி முன் வைத்த பின், மறுபடியும் அவன்புறம் திரும்பி பாவமாக

" வேணாம்ங்க ப்ளீஸ் " என கெஞ்ச, அதில் உறுகினாலும்,

" போ ஏஞ்சல்.. " என அனுப்பி வைத்தான்.

அங்கே பாஹீயும் வாசுவை நச்சரிக்க, ரோகிணி சொன்னதும் ஒத்துக் கொண்டான்.. எப்படியோ விசாகனின் ஆசை பாஹீயின் மூலம் நிறைவேறியது..

வாசுவின் அணியில்  ரோகிணியும், சண்முகனும் இருக்க,

விசாகனின்  அணியில் பாஹீயும் பருவதமும் இருந்தனர். 

சண்முகத்தின் சத்தம் கேட்டு ஊர் மக்களும் பாதி திரண்டிருந்தனர்.. விளையாட்டாக ஆரம்பித்த சண்டை, ஏதோ பார்வையாளர்கள் முன்னிலையில் உண்மையான மல்யுத்தப் போர் போல காட்சியளித்தது..

" சூப்பர்மேன்.. உனக்கு வயசாகிடுச்சு அதை மனசுல வெச்சிட்டு எங்கிட்ட மோது புரியுதா"

வயதைப் பற்றி பேசியதும் வாசுவுக்கும் ரோசம் வர " அதையும் பார்க்கலாம் டா .. நானும் சின்னப் பையன்னு பாவம் பார்ப்பேன்னு நினைக்காத " என்கவும் விசாகனும் ஒரு ஏளன புன்னகையை தவழ விட்டான்.

மொத்தம் மூன்று சுற்று..

முதல் சுற்று தொடங்கியது.. விசாகன் வாசுவைத் தாக்க, அவனிடமிருந்து இலாவகமாக தப்பித்து கொண்டிருந்தான் வாசு.. இருவரும் ஒருவருக்கொருவர் காயம்

ஏற்படுத்தாதவாறு பொறுமையாக சண்டையிட்டார்கள்.. சிலசமயம் மண்ணில் உருண்டு புரண்டு சண்டையிட்டனர்.. பாஹீ சந்தோசமாக பார்த்துக் கொண்டிருக்க, ரோகிணி தான் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பார்த்திருந்தாள்..

வாசு பாஹீயின் முகத்தில் தெரியும் சந்தோசத்தைக் கண்டு கன நேரம் தன் கவனத்தை அவள்புறம் சிதறவிட, அந்த முதல் சுற்றில் விசாகன் வாசுவின் தோள்பட்டைகளை மண்ணில் நிலைபெறச் செய்து ஒரு புள்ளியை பெற்றுவிட்டான்..

ஊர்மக்கள் அனைவரும் விசாகனுக்காக கரவொலி எழுப்ப ரோகிணியின்  முகம்தான் வாடிப் போய்விட்டது.. பாஹீயும் சற்று சோர்ந்தாலும் வென்றது விசாகன் அல்லவா..அதனால் தன்னை சமன்படுத்திக் கொண்டான்.. பருவதம் விட்டால் கங்கம் டான்ஸ் ஆடியிருப்பார்..ஜெயித்தது அவர்கள் அணி அல்லவா.. சண்முகன் தான் வாசுவை முரைத்துத் தள்ளினான்..

மகளின் வாடிய முகத்தினை கண்டு அடுத்த சுற்றில் உடனே விசாகனை வீழ்த்தியிருந்தான் வாசு.. ஆனால் இந்த முறையும் ரோகிணிக்கு முழு சந்தோசம் ஏற்படவில்லை.. அவளுக்கு இருவருமே ஜெயித்தால்தானே வெற்றி..அதில் யாரைப் பிரித்து அவள் பார்க்க.. பாஹீ விளையாட்டை விளையாட்டாய் பார்க்க அவளோ வாழ்க்கையாய் பார்த்தாள்..

இம்முறை இருவருமே அவள் முகத்திற்காக தீவிரமாக  விளையாட நகத்தைக் கடித்துக் கொண்டு பார்த்திருந்தாள்.. வாசு நினைத்தால் விசாகனை வீழ்த்தியிருக்க முடியும்.. ஆனால் பல இடங்களில் விட்டுக் கொடுத்தான்.. அதேதான் விசாகனும்.. அவனும் ஏனோதானோவென்றே விளையாடினான்..

பார்ப்பவர்களுக்கு வேண்டும் என்றால் அவர்கள் கடினமாக போரிடுவது போல தெரியும்..அதனை கண்டுகொண்டது பாஹீ மட்டுமே..பொறுத்திருந்து பார்த்தவர் சண்முகனிடம் சொல்லி ஊர் மக்களைத் துரத்திவிடச் செய்தார்..

அடுத்து பருவதத்திடம் சொல்லி இரண்டு பருத்தி மூட்டைகளை எடுத்து வரச் சொன்னவர் இருவரையும் பிரித்துவிட்டு,

ஆளுக்கொரு மூட்டையை தந்து பஞ்சிலிருந்து கொட்டையை பிரித்தெடுத்த பின்னரே வீட்டுக்குள் வரமுடியும் என்று கூறிவிட்டுச் சென்றார்..

சண்டை போட்டு அலுப்பிலுருந்தவர்கள் மாறி மாறி இருவரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு தங்கள் வேலையை ஆரம்பித்தனர்.. அத்தோடு ' உன்னால நான் கெட்டேன்.என்னால நீ கெட்ட ' என்ற வசனம் வேறு..

வாசு கூட அந்த வேலை செய்து பழக்கமிருக்க சடசடவென்று வேலையை முடித்திருக்க, விசாகன் தான் திணறிக் கொண்டிருந்தான்.. விசாகனது பங்கில் வாசு கை வைக்கப் போக, பாஹீ வைத்திருந்த வானர உளவாளி 'சண்முகன் நாட் நாட் செவன்' தன் கடமையைச் செய்ய, வாசுவிற்கு கூடுதலாக இரண்டு பருத்தி மூட்டைகள் தரப்பட்டது.. அவர்கள் இருவரும் எதற்குத் தான் இந்தச் சண்டையிட்டோம் என நொந்து கொண்டே வேலையைத் தொடர்ந்தனர்..பாஹீயின் முகத்தில் இருக்கும் அந்த ஒற்றைப் புன்னகைக்காக மலையையே தூக்கி வர நினைப்பவர்கள் இந்த பருத்திக் கொட்டை புண்ணாக்கு வியாபாரம் செய்ய மாட்டார்களா என்ன?

ரோகிணி தான் வீட்டின் சன்னலிலிருந்து விசாகனையும் வாசுவையும் அடிக்கடி எட்டிப் பார்த்த வண்ணம் இருந்தாள்.. விசாகன் அவள் பார்ப்பது தெரிந்ததும் அவளைப் பார்த்து கண்ணடிக்க, அவள்தான் பயந்து உள்ளே மறைந்து கொள்வாள்.. அடுத்த கொஞ்ச நேரத்தில் மறுபடியும் எட்டிப் பார்க்க இந்த முறை பறக்கும் முத்தத்தை அவன் தெறிக்க விட, மறுபடியும் அவள் எட்டிப் பார்க்கவே இல்லை..

வாசு இவர்களின் பக்கம் திரும்பவே இல்லை..கருமமே கண்ணாக இருந்தார்.. எங்கே இவனிடம் வாய் கொடுத்து மீதமிருக்கும் அனைத்து மூட்டையையும் இவன் தலையிலே கொண்டு வந்து போடவா..தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தான்..

இங்கே இவர்கள் சந்தோசமாக பொழுதைக் கழிக்க, அங்கே உதயனோ நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தான்.. ரகுபதி தற்போது வெளிநாட்டில் தங்கியிருப்பது தெரியவர அங்கே அவனை விசாரிப்பதற்கும் ஆளை அனுப்பி வைத்தான்..

உத்ரா வேறு உதயனை சந்திக்க வேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்ப, அப்படியே ஊருக்கு செல்வதைப் பற்றி அவளிடம் விவாதித்து விடலாம் என்று ஆசையாக அவன் உணவு விடுதிக்கு கிளம்பி வந்தான்..

" ரொம்ப லேட் ஆயிடிச்சா உத்தி..என்னாச்சு ஒரு மாதிரியா இருக்க " என்றபடியே அவன் அவள் அருகில் அமர,

" எனக்கு ரொம்ப பயமா இருக்கு உத்தீ.. கே.எஸ்.ஆர் இன்னைக்கு டாக்டர் ரஞ்சித் பத்தி விசாரிச்சி்ட்டு இருந்தாரு.. "

நிலைமையின் தீவிரம் புரிந்து " பயப்படாத உத்தீ..ரஞ்சித் சேஃபா தான் இருக்கான்.." என ஆறுதல் படுத்த முயல, அதேசமயம்
" அவன் ரஞ்சித் பத்தி விசாரிச்சதே அது தேவா தான்னு தான அர்த்தம்..அப்போ நம்ம வேளை ஈசி தான உத்தி " என்றான் ஒரு நம்பிக்கையோடு..

அவர்கள் பேச்சில் இடையில் புகுந்த தேவா காலியாக இருந்த இன்னொரு இருக்கையில் அமர்ந்து
" வாரே வா..வாட் அ பிளானிங் மிஸ்டர் உதயன்.. என்னை சாய்க்க என் ராஜ்ஜியத்துக்குள்ளயே ஆள அனுப்பிட்டீங்க போல " என்றான்.. அவன் சிரி்த்துக் கொண்டு பேசினாலும் கோபத்தை கட்டுப் படுத்திக் கொண்டு பேசுகிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது.. அத்தோடு அவன் பின்புறம் இரண்டு அடியாள்கள் ரஞ்சித்தை கைத்தாங்கலாக வைத்திருப்பதும் தெரிந்தது..

😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

அன்பு நட்புக்களே.. அனைவரும் மிகுந்த பாதுகாப்போடு இருப்பீர்கள் என நம்புகிறேன்..

என்னை மறந்தாயோ கண்ணம்மா தொடர்கதை இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.. இன்னும் 4 அல்லது 5 அத்தியாயங்களில் முடிந்து விடும்.. அதுனால் என்ன பண்ணுறீங்கனா..இதுவரை அமைதியான முறையில் ஆதரவு அளித்த   சைலன்ட் ரீடர்ஸ்லாம் கதை எப்படி இருக்குனு இனியாச்சும் சொல்லுங்க மக்களே.. பாவமில்லையா நான்னு.. 😭😭😭

உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் நட்பூக்களே..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro