12

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"பார்ப்போம் பார்ப்போம்" என்று கூறியவள் கண்கள் மூடி படுத்திருந்தாலும் தூக்கம் மட்டும் தொலைவில் இருந்தது.

தன் வாழ்வில் எதிர்பார்க்காததெல்லாம்  நடந்துவிட்டதை எண்ணி தூக்கம் வர மறுத்தது.

எவ்வளவு சந்தோஷமாய் தன் அண்ணனுடனும் அம்மா அப்பாவுடனும் தன் வீட்டில் இருந்தோம். ஆனால் ஒரே நாளில் இவ்வாறு தலை கீழாகும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.

விட்டதை வெறித்து கொண்டிருக்க மனம் மட்டும் தன் அன்னை தன்னை நம்பாமல் யார் யாரோ பேசியதை உண்மை என்று நம்பி கூறிய வார்த்தைகள் அம்பாய் குத்தியது. அவளையுமறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட தொடங்கியது.

படுத்துவிட்டாலும் அவளை பற்றி நன்கு அறிந்தவன் அவள் எண்ண ஓட்டங்களை சரியாக கணித்து உறங்க மாட்டாள் என்று இருட்டிலும் அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான்.

"அழகிம்மா" என்றான் மிக மெதுவாய்.

அந்த குரலில் காந்தத்தை உணர்ந்தாளோ என்னவோ கட்டுண்டது போல் சிவாவை பார்க்க, இரு கரம் விரித்து அன்னையாய் அழைக்க எதுவும் யோசிக்காமல் அவன் கரங்களுக்குள் சிறைப்பட்டாள்.

அந்த அணைப்பில் காதல் இல்லை... மோகம் இல்ல... தூய அன்பு மட்டுமே இருந்தது.

எந்த வார்த்தைகளும் பேச தேவையில்லாமல் மௌனமே ஆட்சி புரிய, அவளின் தலையை மட்டும் மெதுவாய் வருடி கொண்டே இருந்தான் ஷிவா.

எவ்வளவு நேரம் கண்ணீர் வழிந்ததோ தெரியாது... இன்று வரை யாரோவாக இருந்த ஒருத்தனின் நெஞ்சத்தில் இந்நொடி தஞ்சம் கொண்டுள்ளோமே அதை பற்றியும் சிந்திக்க தோன்றவில்லை... இதயத்தை பிளக்கும் வலி மட்டும் கொஞ்சம் குறைந்தால் நன்றாயிருக்கும் என்று தோன்ற எதை பற்றியும் யோசிக்கவில்லை ஏதோ ஒரு உருவில் கிடைத்த அன்பின் வருடலில் வெகு நேரம் கழித்து உறங்கி போனாள்.

அறிவு உறங்குகிறாள் என்பதை உறுதி செய்தவன் மெதுவாய் அவளிடம் இருந்து விலகி, போர்த்திவிட்டு தங்கள் அறையை விட்டு வெளியேறினான்.

கண்ணனுக்கு அழைத்து அங்கே நிலைமையை பற்றி விசாரித்தான்.

"கண்ணா! சாப்பிட்டியா?" என்றான் ஷிவா.

பதில் கூறாமல் அமைதியாக இருக்க, மீண்டும் "சாப்டயாடா?" என்றான்.

"இல்லடா." என்றான் மெதுவாய்.

"அம்மா அப்பா சாப்பிட்டாங்களா?" என்றான்.

"யாரும் சாப்பிடலை? பாப்பா எப்படி இருக்கா? சாப்பிட்டாளாடா? ரொம்ப அழுதாளா?" என்றான் வேதனையாய்.

"மொதல்ல சாப்பிடலை. ரொம்ப முரண்டு பண்ணா. அம்மா தான் வற்புறுத்தி சாப்பிட வச்சாங்க. ஹ்ம்ம்... கொஞ்ச நேரம் அழுத்துட்டே இருந்தா... இப்போ தான் தூங்கினா. டேய் நீ அவங்களை சாப்பிட வைக்க வேண்டியது தானே?" என்று அதட்டினான்.

"எங்கடா? நீங்க போன பிறகு உள்ள போனவர் தான் அப்பா வெளிய வரவே இல்லை. நான் போய் கூப்பிட்டு பார்த்தேன். எனக்கு எதுவும் வேணாம்னு படுத்துட்டார். அம்மா நிலைமை அதைவிட மோசம்... பாப்பா போனப்ப எந்த இடத்துல நின்னாங்களோ அதே இடத்துல உட்கார்ந்தவங்க தான் இன்னும் எழும்பவே இல்லை. எவ்ளோ வற்புறுத்தியும் சாப்பிடலை. எனக்கும் பசிக்கலைடா. பாப்பா இல்லாம வீடு மாதிரியே தெரியலைடா. எந்நேரமும் யாரையாவது வம்பு இழுத்துட்டே இருப்பா. வீடு கலகலப்பா இருக்கும். இப்போ ஏதோ எழவு விழுந்த இடம் மாதிரி இருக்கு." என்றான் லேசான கரகரப்பான குரலில்.

"டேய் நீயே இப்படி இருந்தா எப்படிடா. நடக்கும்னு இருக்கு. நடந்துருச்சு. விடு. இப்போ என்ன பண்ண முடியும்? நடந்ததை மாத்த முடியுமா? இனி என்ன செய்யலாம்னு யோசி. காலைல வரேன்." என்று வைத்தான் ஷிவா.

தன் அறைக்குள் நுழைந்து உறங்கும் மனைவியின் அருகில் அமர்ந்தான்.

சிறிது நேரம் அவளையே பார்த்திருந்தவன்.

"ஒரே நாள்ல எல்லாம் தலகிழாகிடுச்சு அழகிம்மா. நீ என்னை பார்ப்பியான்னு எத்தனை நாள் ஏங்கிருக்கேன். இன்னைக்கு என் மனைவியா என் ரூம்ல இருக்க நீ. இருந்தும் முழுசா சந்தோஷ பட முடியலை. இந்த மாதிரி... உன்னை இந்த வீட்டுக்குள்ள கூட்டிட்டு வரணும்னு நான் நினைக்கலை.

என்ன இருந்தாலும் என்னோட காதல் மட்டும் போதும் நாம ரெண்டு பேருக்கும்... ஆனாலும் இப்போ வரைக்கும் நான் மட்டும் தான் உன்னை விரும்புறேன். நேத்து வரைக்கும் நான் யார்னு கூட உனக்கு தெரியாது.

அதனால இந்த சூழநிலைய எனக்கு சாதகமா பயன்படுத்திக்க எனக்கு விருப்பமும் இல்ல. உன் படிப்பு முடிக்கும் வரைக்கும் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன். எனக்கும் ஒரு பேராசை இருக்குடி. என்ன தெரியுமா? உன்னோட அளவில்லாத முழு அன்பும் எனக்கு மட்டுமே வேணும் அழகிம்மா. எப்போ கிடைக்கும்னு ஆசையா இருக்கு. படிப்புலர்ந்து உன் கவனம் கலையாம இருக்க முடிஞ்ச வரை முயற்சி பண்றேன்." என்று அவளின் நெற்றியில் மெதுவாய் முத்தமிட்டவன் கீழே இறங்கி ஒரு போர்வையை விரித்து படுத்து கொண்டு மனைவியை ரசிக்க தொடங்கினான்.

மனம் அவளை ரசித்த முதல் நாளிருக்கு சென்றது.

*****
என்ன ஆச்சு கதை நல்லா இல்லையோ... ஒரு கமெண்ட்சுமே இல்லையே... படிச்சுட்டு எப்படி இருக்கு சொல்லுங்க குட்டிஸ்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro