என் உலகம் - 1

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஒரு கார்டூன் கதைமாதிரி கற்பனை பண்ணிக்கோங்க...
- - - - -

சுற்றிலும் எங்கும் அடர் பசுமையாக இருக்க பெரிய பெயர் தெரியாத மரமொன்றின் அடிப்பகுதியில் சிறிய கூரைவீடு ஒன்று உள்ளது... அதன் நுழைவாயில் உயரம் குறைவாகவும் குனிந்து செல்லும் அளவில் இருக்க வீட்டின் உள்பக்கம் ஒரே அறை மட்டும் இருக்கும்.. அறையின் சுவர்களெங்கும் பசுமையான இலைகளும் மங்சள், ஆரஞ்சு வண்ணப்பூக்களும் இருக்கும்.

அறையின் ஒரு மூலையில் ஒரு விறகு அடுப்பும் மறு மூலையில் தூங்குவதற்காக மரத்தால் ஆன ஒரு படுக்கையும் அதில் இலைகளும் இருக்கும். வீட்டின் வெளிப்புறம் புற்களுக்கு மத்தியில் ஒரு அடி அகலம் கொண்ட மண் பாதையின் முடிவில் மூன்றடி அகலம் கொண்ட சிறிய ஆழம் குறைந்த ஆறு ஒன்று இருக்கும்... இந்த உலகில் மனிதர்கள் இருப்பது மிகவும் அரிது.. விலங்குகள், பறவைகள், செடிகள், மரங்கள் என அனைத்தும் பேசும்.. இந்த வீட்டில் வசிப்பவனிற்கு பெயரெதுவும் இல்லை ஆனால் அவனே நமது கதையின் நாயகன்..

நமது நாயகன் ஆறடிக்கும் இன்னும் அதிகமான உயரமும், போர்வீரனைப்போல உடல் அமைப்பும் கொண்டவன்... அவனிற்கு எந்த உணர்வுகளும் இல்லை.. அடிபட்டாலும் வலிக்காது.. பசியும் குறைவாகவே எடுக்கும்.. அவனிற்கு அங்கு நண்பன் என்றால் அவனது குண்டு பாண்டாகரடி மட்டுமே... காட்டில் வேட்டையாடியதை சமைத்து உண்ணும் பொழுது அவனது பேண்டா நண்பனும் சமைக்க உதவி செய்யும்... அவன் அந்த உலகின் ராஜா இல்லை ஆனால் ஏதோ ஒன்று காரணமே தெரியாமல் யாரிடமாவது சண்டையிட்டுக்கொண்டு இருப்பான்.. உயிர்களிடத்தில் மிகவும் அன்புவுன் இருக்கும் அவனிற்கு ஒரு கெட்ட பழக்கம் உள்ளது..

அந்த காட்டில் ஒரு பகுதியில் விசித்திரமான ஒரு செடி இருக்கும்.. அது உடலுக்கு தீங்கு தரும் ஆனால் அவனால் மாதம் ஒரு முறையேனும் அந்த செடியில் இலைகளை உண்ணாமல் இருக்க முடியாது.. ஆனால் அதை உண்ட மறுநாளே அவனே சுவற்றில் அடித்துக்கொண்டு அதை உண்டதை எண்ணி அழுவான்.. அவனழுகும் நேரத்தில் மட்டும் ஒரு பாட்டி அவனை அணைத்து மடியில் தூங்க வைத்து ஆறுதல் கூறுவார்.. அவனழுதால் மட்டுமே அந்த உருவம் தோன்றும்...

வழமையாக ஆற்றில் குளித்துவிட்டு தன்னுடைய பாண்டா நண்பனுடன் காட்டிற்குள் நடந்து சென்றவனிற்கு ஏதோ ஒரு அழுகுரல் கேட்க அந்த குரல் கேட்ட திசையில் சென்றான்... அங்கு ஒரு எட்டு வயது பெண் குழந்தையை காட்டுமிருகங்கள் சூழ்ந்திருக்க அந்த குழந்தை பயத்தில் கத்தி கத்தி அழுதது... அதைக்கண்டவன் தன் பாண்டாவிடம் " யாரு இது.. ஏன் அழுகறாங்க.. மிருகம் வந்தா அடுச்சு தொரத்தாம கத்தறாங்க.." என்க..

அதற்கு பாண்டா " ஆமா அடிக்காம ஏன் கத்துறாங்க.." என்று கூறிக்கொண்டிருந்த வேலையில் ஒரு மிருகம் அவளது கையில் பொறன்ட அந்தக்குழந்தை பயத்தில் இன்னும் அழுது மயங்கி விழுந்தது.. குழந்தை அழுவதைப் பார்த்தவனுக்கு மனதில் ஏதோ தோன்ற உடனே அந்த விலங்குகளை அடித்துவிரட்டிவிட்டு பாண்டாவிடம் " ஏன் இவங்க இவலோ குட்டியா இருக்காங்க?? ஏன் இங்க வந்தாங்க " என்று கேட்க

பாண்டாவோ "தெரியல" என்று கூறும்போது அந்த பாட்டி தோன்றி அவனிடம்

" தம்பி இங்க பாரு பா இது ஒரு கொழந்த அதுனாலதான் குட்டியா இருக்கு... இந்த கொழந்த உன்னவிட சின்ன பொன்னு அவளுக்கு இருட்டு, மிருகங்கள்னா பயம் நீ தான் அதபோக்கனும்.. இது உனக்குனு இறைவன் ஒதுக்கிவெச்ச ஒரு பணி.. நீ அந்த கொழந்தைக்கு அப்பா மாதிரி எல்லாம் சொல்லிக்குடு" என்க..

அவனோ பாட்டியிடம் " நா எப்படி இவளுக்கு அப்பா ஆக முடியும் எனக்கு அவ்லோ வயசு இல்லையே " என்க..

பாட்டியோ " போகப்போக நீயே அவகிட்ட உன்ன அப்பானு கூப்பிட சொல்லுவ " என்று கூறி மறைய அவனோ குழந்தையை தன்னுடைய வீட்டிற்கு எடுத்து வந்து தூங்க வைத்து தன் பாண்டா நண்பனுடன் சமைக்கும் பொழுது திடீரென்று விழித்த அந்த குழந்தை அழுக ...

அவனோ அருகில் சென்று " ஏன் அழுகற.. பசிக்குதா.." என்க..

அவளோ எதுவும் கூறாமல் பயத்தில் அழுது கொண்டே இருந்தாள்.. அவனோ செய்வதறியாது அவளது அழுகையை நிறுத்த என்ன என்னவோ கதை சொல்லியும் அவள் பயத்தில் அழுது கொண்டே இருந்தாள்.. காட்டிற்குள் சென்று ஒரு அழகிய முயல் குட்டியை பிடித்து வந்து அவளது கையில் தரவும் அவள் அதை தடவிப்பார்க்க அது அவளிடம் அழகாக சிரித்தது..

அவளோ முயலிடம் " உன் பேர் என்ன??" என்க முயலோ தனக்கு பெயர் இல்லை என்றதும் அவளோ முயலிடம் " என் பேர் சோனா... நா இந்த உலகத்தோட வடதிசைல இருக்க.. காட்டுல விளையாடும் போது மிருகம் தொரத்துச்சுனு வேகமா ஓடிவந்த.. எனக்கு இருட்டுனா பயம் திரும்பி போக பயமா இருக்கு.." என் தன்போக்கில் முயலிடம் புலம்ப

முயல் அவளிடம் " சரி நீ பயப்படாத.. நம்ம வெளையாடலாம்.. " என்று சமாதானம் சொல்லி வீட்டிற்குள்ளேயே விளையாட அவனும் அவளது நடவடிக்கையை பார்த்துக்கொண்டு இருந்தான்..

உணவு சமைத்து அவளிடம் கொடுத்து உண்ண சொல்ல அவளோ முழிக்க.. அவனோ " ஏன் மா முழிக்கற.. உனக்கு இது பிடிக்கலையா " என்க.. அவளோ தான் பழம் மட்டுமே உண்பேன் என்று கூறவும் அவன் சென்று பழங்களை பறித்து வந்து அவளிடம் தர அவளும் உண்டாள்..

மெது மெதுவாக தயங்கியபடி அவனிடம் வந்து " உன் பேர் என்ன?? " என்க.. அவனோ

" எனக்கு பேர் இல்ல மா.." என்க.. அவளோ உனக்கு பேர் இல்லனா உன்ன நான் எப்படி கூப்டனும் என்க.. அவனோ

" உனக்கு பிடுச்ச மாதிரி கூப்டு " என்க.. அவளோ " சரி சும்மா வா, போ னே சொல்லற.. ஆமா நீ ஏன் இவ்லோ உயரமா இருக்க... பாரு அதுனால தான் நீ உள்ள வரும்போதெல்லாம் உனக்கு தல இடிக்கிது... " என்க அவனிற்கோ சிரிப்பு வந்தது.. பாண்டாவும் சிரித்தது... மீண்டும் சோனா

" உனக்கு ஏன் பெரிய தாடி இருக்கு... நீ ஏன் இத சாப்பட்ற.." என்று கேள்விமேல் கேள்விகேட்க.. அவனும் பதில்கூறினான்.. பின்பு அவளிடம்

" பாப்பா நீ எங்க இருந்து வந்த.. உங்க வீடு எங்க இருக்கு " என்க அவளோ மறந்துவிட்டது என்று அழுக அவனோ

" சரி உனக்கு ஞாபகம் வர வரைக்கும் என்கூடவே இரு " என்க சிறுமியும் அழகாக தலையசைத்தாள்.. பகலில் நடந்தவையாவும் அவளுக்கு இரவில் மறந்துவிடும்.. இருட்டு பயத்தில் அழுதுகொண்டே இருப்பாள்... அவன் சமாதானம் செய்யச்சென்றாலும் பயத்தில் கையில் கிடைத்ததை எடுத்து அவனை காயப்படுத்தி விடுவாள்.. ஆனாலும் அவனிற்கு கோவம் வராது... காலை விடிந்ததும் அவளே அவனிடம் யார் காயம் செய்தது.. எப்படி அடிபட்டது என்று மருந்துபோட்டு அவனிற்கு அடிபட்டதிற்காக அழுவாள்..

இவ்வாறு நாட்கள் நகர அவளிற்கு இருட்டின்மீதும், மிருகங்களின் மீதும் பயமின்றி போனது... அவனின் மீது அளவுகடந்த அன்பு வைக்க, அவன் மற்ற உயிரினங்களிடம் பேசினாலும் அவளிற்கு கோவம் வரும்..முயல் அவனது மடியில் தூங்கினாலும் முயலை தள்ளிவிட்டு அவளே மடியில் தூங்குவாள்.. அவளிற்கு ஒன்றுமட்டும் புரியாமல் இருந்தது மாதம் ஒரு நாள் அவன் எங்கு செல்கிறான் என்று.. ஒரு நாள் அவனிடம் கேட்க அவனே அந்த செடியைப்பற்றியும், அவனது பழக்கம் பற்றியும் கூற பாட்டிபோல் அறிவுரை கூறினாள்... ஆனாலும் அவனிற்கு அடிக்கடி ஞாபகம் வரும் இருந்தாலும் அதை மறக்க முயற்சித்தான்...

நாட்கள் நகர அவளை தன் குழந்தையென அன்பு காட்டி வளர்த்தான்... அவளிற்கு இருப்பிடம் குறித்த நினைவு வந்தாள் தன்னைவிட்டு சென்றுவிடுவாள் என்று நினைக்கும் போதே அவனிற்கு கண்கலங்கும்.. அந்த உலகில் குறிப்பிட்ட ஒரு நாளில் அனைத்து உயிரினங்களும் அவனிற்கு பிடித்த அனைத்தையும் கொண்டு வந்து அவனை வாழ்த்தி செல்லும்... அந்த நாள் அவன் அந்த உலகிற்கு வந்த நாள்.. ஆனால் அந்த நாள் குறித்து அவளிற்கு எதுவும் தெரியாமல் இருக்கும் போது அந்த உலகின் அனைத்து உயிரினங்களும் வாழ்த்து சொல்ல அதை சோனா அறிந்து வாழ்த்து சொல்லாததிற்கு அழுகத்தொடங்கினாள்..

அவன் சென்று சமாதானம் செய்ய அவளோ " இல்ல எனக்கு இதகூட தெருஞ்சுவெச்சுக்கல அப்போ எனக்கு உன்மேல பாசம் இல்லனு அர்த்தமா.. நீ அப்படி தானு நெனப்ப.." என்க..

அவனோ சிரித்துக்கொண்டே " வாழ்த்தினாதான் அன்புனு இல்ல சோனா... ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி அன்ப வெளிப்படுத்துவாங்க... " என்க..

அவளோ நெடுநேரம் சிந்தித்துவிட்டு அவனிடம் சென்று அவனது துண்டின் நுனியை இழுக்க அவனோ அவளின் உயரத்திற்கு முட்டிபோட்டு " என்ன டா" என்க..

அவளோ அவனின் நெற்றியில் முத்தமிட்டு " நானும் வாழ்த்துறேன்.." என்க.. அவனோ கண்கலங்கி " என்ன அப்பானு சொல்லேன்.." என்க..

அவள் மீண்டும் நெற்றியில் முத்தமிட்டு " அப்பா.... " என்க.. கண்களை மூடியவாறு அந்த சொல்லை கேட்டுக்கொண்டு இருக்க... 

ஒரு குரல் அவனை கழைத்தது... " அப்பா எழுந்திரி பா.. இன்னைக்கு உனக்கு ஹேப்பி பர்த் டே தானு... அப்பா... " என்க... கண்களைத்திறந்து போர்வையை விலக்கிப்பார்க்க... தனது மூன்று வயது குட்டி மகள் அவனை அனைத்து " ஹேப்பி பர்த் டே பா..." என்று நெற்றியில் முத்தமிட்டது... அவனோ " சோனா...." என்று மீண்டும் கண்களை மூடித்திறக்க மீண்டும் அவளது குட்டி மகளே நிற்க...

அவனோ " அடடே கனவா..... " என்று சிரித்துக்கொண்டே எழுந்து சென்றான்....

- - - - -

அந்த உலகில் சோனா " இவன் எங்க போனான்... சரி அப்பா வரட்டும் " என்று பாண்டாவுடன் விளையாடச்சென்றாள்...

- - - - -

Enna frnds onum puriyalaya 😂😂 puriya vendiyavangalukku puriuthaa... Sari Sari nanum Namma story hero ku wish pannikaran... Epoum anda hero nalla irukanum... Mokkaiya irukkooo 🤔 Sari paravala... Tc all ta ta 👋 ethu 1 part story than...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro