11. ராமின் செயல்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மீரா சந்தோசத்தில் நிலாவுக்கு ராமின் காதலைத் தெரிவித்து விட, நிலாவோ அதற்கு ஒருபடி மேலே சென்று தனுவுக்கே அலைபேசியில் சொல்லிவிட்டாள்..

தனுவிற்கும் அவன்மீது கோபம்
இருந்தாலும் வீட்டிற்கு வந்தால் தனது தாய் ரேவதி அவனை அவமானப் படுத்தி விடுவார்களோ என பயந்தாள்.. அவன் என்ன செய்வானோ என பயத்தில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள்..

வீட்டின் காலிங் பெல் அடிக்கவும் மாடியிலிருந்து கீழே வந்தாள். அவனை ரேவதி பார்க்குமுன்பே தோட்டத்திற்கு அழைத்து சென்றாள்..

தைரியமாக அவனை அழைத்து வந்திருந்தாலும்
அவன் கண்களை பார்க்க அவளுக்கு தைரியம் இல்லை என்பதே உண்மை..
ஆனாலும் பேசியே ஆக வேண்டும் என்ற காரணத்தால்
" எங்க வீட்டுக்கு நீ எதுக்கு வந்தனு தெரியும் ராம்.. ப்ளீஷ் என்னைத் தொல்லைப் பண்ணாம போயிடு.. என்னால இனிமே பொறுமையா இருக்க முடியாது.. " என அவள் கோபமாக கூறவும்,

" தனுசுயா.. நான் என்ன சொல்ல வரனு கேளுங்க " என்று மரியாதையாக அவன் பேசவும் ' இவனெலாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருந்தவே மாட்டான்' என நினைத்தவள் அவளும் அதையே பாணியைக் கையிலெடுத்தாள்.

" மன்னிச்சுக்கோங்க மிஸ்டர். ராமச்சந்திரன்.. உங்களோட புலம்பல கேட்க எனக்கு டைம் இல்லைங்க "

அவளும் வேற்றார்போல தனது முழுப்பெயரை சொல்லும் போது தான் தான் எவ்வளவுதூரம் அவளைக் காயப்படுத்துகிறோம் என்பதை உணர்ந்தான்.. அதை சரிசெய்யும் பொருட்டு
" என் காதல சொன்னாலும் இப்படித்தான் பேசுவியா தனு" என்றான்.

ஒருநொடி அதிர்ந்தாலும் " ஒ உங்க பின்னாடி இத்தனை வருசம் நாய் மாறி சுத்துனனால நாய்க்கு பிஸ்கட்ட தூக்கிப் போடறமாறி உங்க காதல போடறீங்களா. அப்படிப்பட்ட காதல் எனக்குத் தேவையில்லை.. உங்களுக்கு பார்த்த உடனே பிடிச்சமாறி
ரொம்ப அழகான ஒரு டாக்டர் காத்துகி்ட்டு இருக்கும்போது எங்கிட்ட ஏன் வரீங்க " என்றாள் நக்கலாக

" ஐயோ தனு தயவு செஞ்சு அவள மட்டும் நமக்குள்ள கொண்டு வராத..நான் பண்ணது தப்புதான் இல்லைனு சொல்லல. ஆனா
எனக்கொரு சான்ஸ் கொடும்மா.. நான் உனக்கேத்த மாறி என்னை மாத்திக்கிறேன்.." என்றான் பாவமாக

" எது நீங்க மாறிக்கிறீங்களா. இத்தனை வருசம் உனக்கு அது பிடிக்கும்.. அது பிடிக்கும்னு என்னையவே நான் மாத்திக்கிட்டு உனக்கு பிடிச்சமாறியே நடந்துக்கிட்டனே.. அதெலாத்தையும் பார்த்துட்டு பார்க்காத மாறிதான போனா.. ஏன்னா உனக்குத் தலைக்கனம்.. உங்க அக்கா தங்கை மட்டும் சந்தோசமா இருந்தா போதும்.. மத்த யாரு என்ன கஷ்டப்பட்டா உனக்கென்னனு சுயநலம் .. இல்லைனா அப்பவே என்னை நீ திட்டிருப்ப.. நானும் அமைதியா போயிருப்ப.. நானும் நீ அமைதியா இருக்கறத பார்த்துதான நீ ஒரு நாள் என்னை ஏத்துப்பனு காத்திட்டு இருந்தேன்.. என்னை நீ மனுசியாவது நினைச்சிருந்தீனா நான் கஷ்டப்படுவனு தெரிஞ்சு அவள இங்க கூட்டிட்டு வந்து இருக்க மாட்ட.. ஆனா அப்பவும் அதைக்கூட புரிஞ்சிக்காம
என்னை ஏத்துக்க ராம்னு உங்கிட்ட கெஞ்சுனனே அப்பக்கூட எதாவது சொன்னியா.. நீ வந்து என்னை காதலிக்கறனு சொல்லியிருக்க வேணா அட்லீஸ்ட் ஒரு சாரியாவது கேட்டியா..என்னை எல்லாரும் சந்தேகப்பட்டப்ப ஒரு வார்த்தை எனக்கு ஆறுதலா பேசுனியா. இல்ல எங்க வீட்டுக்கு வந்தப்பிறகு சாரினு ஒரு மெசேஜாவாது அனுப்பனியா.. ஆனா அதெலாம் பண்ணாம விட்டுட்டு
இப்பவந்து
எனக்கு வாழ்க்கை பிச்சை போடறேனு சொன்ன உடனே நான் உன்னை ஏத்துக்கனுமா.. நான் ஒன்னும் ஜடம் கிடையாது.. நானும் உங்க மீராக்கா மாறி பொண்ணுதான். எனக்கும் உணர்ச்சிலா இருக்கு.
அது ஏன் உனக்கு புரிய மாட்டிங்குது.." என்றவள் தனது உள்ளங்கைகளால் முகத்தை மூடியபடியே அழுக ஆரம்பித்தாள்..

" தனு ப்ளீஸ் அழுகாத.. உன்னை இவ்ளோ கஷ்டப்படுத்திருக்கேனு நினைக்கும் போதே எனக்கே என்மேல வெறுப்பா இருக்கு..இப்போ
உன்னை நான் புரிஞ்சுக்கிட்டேன் தனு.. நான் விரும்பாத வரைக்கும் எனக்காக காத்துட்டு இருந்த நீ நான் காதலிக்கும் போது ஏன் விலகிப்போற. நான் சொல்றத ஒரு நிமிசம் கேளும்மா..
என்னைப் பார்த்தாலே உங்கம்மாக்கு பிடிக்காது.. இதுல நான் உங்கிட்ட பேசுனாலோ இல்ல நீ எங்கிட்ட பேசுனாலோ உன்னை எப்படித் திட்டுவாங்கனும்னு தெரிஞ்சிருந்தும் எப்படி உங்கிட்ட என்னால சிரிச்சு பேச சொல்ற.. அதனால தான் உன்னை பிரண்டா கூட ஏத்துக்காம ஒதுங்கியிருந்தேன்..
ஆனா இப்ப என்ன நடந்தாலும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன் தனு" எனக் கெஞ்ச

அவன் கூறிய காரணத்தில் இன்னும் கோபமானவள்
தனது கண்களைத் துடைத்துக் கொண்டு
" இதோ பாருங்க மிஸ்டர் ராமச்சந்திரன்.. .. நான் எங்கம்மா பார்க்குற பையனத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்.. நான் இப்போ உங்கள காதலிக்கறனு சொன்னா இப்பக்கூடதான் எங்கம்மா உங்கள ஏத்துக்க மாட்டாங்க.. அதுனால வீணா உங்க அக்காவுக்கும் உங்க அக்கா குடும்பத்துக்கும் எங்க மேல கோபம் வந்து சண்டை போடுவீங்க.. அதெலாம் நடக்காம இருக்கனும்னா மரியாதையா போயிடுங்க.. இல்லைனா உங்க மொத்த குடும்பமும் என்மேலதான் பழியத் தூக்கிப் போடுவாங்க. ஏன்னா நீங்க "ராம்".. ரொம்ப நல்லவரு.. உங்கள ஒன்னும் சொல்லவே மாட்டாங்க.. ஏன்னா உங்களுக்கு தப்பு பண்ணவே தெரியாதுல.. ஆனா நான் வில்லிங்க..கொலை பண்ண கூட அஞ்ச மாட்டேன்.. அப்படிதான ராமச்சந்திரன்.." என்றவன் அவனைப் பார்க்காமல் தலையைக் குனிந்து வாறே

" நீங்க என் காதல புரிஞ்சிக்கிட்ட மாறி அந்த சிவானியையும் புரிஞ்சுக்கோங்க.. என்ன அவுங்க நீங்க ஆசப்பட்டமாறி இல்ல..அப்படிப்பார்த்தா
நீங்க கூட நான் ஸ்கூல் படிக்கறப்ப இருந்த ராமா இல்லையே.
சிவானிகூட இப்ப முழுசா திருந்தி நல்லவங்களா மாறிட்டாங்க.. இது ஒன்னும் கட்டளைலா இல்ல.. ரெக்யுஸ்ட் தான்.. எனக்காக யாரும் அப்போ பரிஞ்சு பேச இல்ல.. அட்லீஸ்ட் நானாவது சிவானிக்காக பேசறனே..
சரி ரொம்ப டைம் ஆயிடுச்சுல.. நீங்க வீட்டுக்கு போங்க.. எனக்கும் வேலை இருக்கு..இன்னொருக்கா என் வீட்டுப் பக்கம் வராதீங்க.. நானே உங்கள மறக்கனும்னு டிரை பண்ணிட்டு இருக்கிறேன்.." என்றவள் அவனது பதிலுக்கு கூட காத்திராமல் உள்ளே சென்றாள்..

தான் தனுவை சிரமப் படுத்தி இருக்கிறோம் எனத் தெரியும்.. ஆனால் இந்தளவுக்கு அவள் மனதை நோகடித்து விட்டோம் என அவன் நினைத்து பார்க்கவேயில்லை. அவளிடம் ஒதுங்கிப் போக நினைத்தவன் ஏன் அவள் சொன்னது போல நேரடியாக அவளிடம் தனது விருப்பமின்மையை தெரிவிக்க நினைக்கவில்லை..
மற்ற பெண்கள் பார்வை தன்மேல் பட்டாலே அவர்களை எரித்து விடுவதுபோல நடந்துகொள்பவன் ஏன் தனுவிடம் தனது எரிக்கும் பார்வையை காட்ட மறந்தான்.. ஏன் ?
அவன்மீது தனது மீரா அக்காவிற்கும் நிலாவிற்கும் அடுத்து தன்னை உண்மையாக நேசித்ததற்காகவா?
இல்லை உறவினள் என்பதனாலவா ?
எதற்காக என்று புரியவில்லை..
ஆனால் தனுவிற்காகத் தான் வெளியூர் சென்று படித்தது. விடுதியில் தங்கியது என எல்லாம். ஆனால் இவையும் எதற்காக ?
குடும்பத்தில் பிரச்சினை வந்துவிடும் என்று பயந்தா? இல்லை அவளை விரும்பிவிடுவானோ என்கிற பயத்தாலா ? இதையெலாம் சொன்னால் அவள் புரிந்து கொள்வாளா ?
கையில் இருந்த முத்தை மீண்டும் கடலுக்குள் தூக்கியெறிந்து விட்டான்.. ஆனால் மீண்டும் அதே முத்து கிடைக்குமா.. ?
முன்புபோல இன்றும் பின் வாங்காமல் அவளை எப்படியாவது சமாதனப்படுத்தி இழந்த அவளது காதலையும் தன்மேல் அவள் வைத்திருந்த நம்பிக்கையையும் மீண்டும் அடைந்தே தீர வேண்டும் என முடிவெடுத்தவன் எவவளவு அவமானப் பட்டாலும் பரவாயில்லை என்று ரேவதியிடம் பேசலாம் என முடிவெடுத்தான்..

ராமினது இந்த செயலால் தனு அவனை ஏற்றக் கொள்வாளா? என்று விதி அவனைக் கேலி செய்தது அவன் காதுகளுக்கு கேட்கவில்லை..



Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro