பாகம் 19

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"மொட்டை மாடியும் வானர சேனையும, வழங்குபவர்கள், லால்சந்த் அங்கிள் ஹோம்மேட் குல்பி! டொட்ட டொய்ங்..."

என தொலைகாட்சி தொடர் அறிவிப்பாளர் போல ஏற்ற இறக்கத்துடன் அறிவித்தபடி கையில் டிரேயோடு (tray) மாடி ஏறி வந்தாள் ஷர்மிளா. டிரேயில் மண்பாண்ட கிண்ணங்களில் குல்பி ஐஸ்கிரீம். தரையில் பெரிய பாய் விரித்து, பெண்கள் ஒரு பக்கமும் ஆண்கள் ஒரு பக்கமும் அமர்ந்திருந்தனர்.

"ஓகே ஆல் செட்? கேம் ஸ்டார்ட பண்ணலாமா?"

சந்தீப் கேட்டதும் அனைவரும் அமோதித்தனர். விஷ்வா மட்டும் குல்பி உண்ணவில்லை என்பதை ஷம்மு, அர்ஜுன் தவிர யாரும் கவனிக்கவில்லை. சென்னையை விட்டு சென்றது முதல் இனிப்பு பதார்த்தங்களை அறவே உண்பதில்லை அவன். யாரேனும் கேட்டால் பரம்பரை நீரிழிவு நோய் (diabetes) என்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பதாக பொய் கூறுவான்.

அவனை பொறுத்த வரை, 'இனிமை/இனிப்பு ஈக்வல் டூ என் செல்லம்மா. நாம ஒண்ணு சேந்த பிறகு உன் கையால தான் இனி நான் ஸ்வீட் சாப்பிடுவேன்'. அவன் தனக்கு தானே செய்து கொண்ட தீர்மானம். 

□□

"I will explain the rules once more. இந்த கேம் பேரு Dumb Charades. சினிமாவோட பேரை ஆக்ஷன்ல ஒரு டீம் சொல்லணும் நெக்ஸ்ட் டீம் கெஸ் பண்ணணும், வாயை திறந்து பேச கூடாது. நாம தமிழ் அண்ட் ஹிந்தி படம் ரெண்டுமே விளையாடுறோம் பிகாஸ், என் அண்ணன் அண்ணி ரெண்டு பேருக்கும் தமிழ் படம் தெரியாது, அமன் கொஞ்சம் ஓகே ஆனா அண்ணி நோ."

"தீபு நீ பேசறதே ஹிந்தி ஹீரோயின் தமிழ் பேசற மாதிரி தான் இருக்குது. சுப் கர்!" (Chup kar)

ஷம்மு அவனை கிண்டலடித்ததும் அவன் பஞ்சாபியில் முணுமுணுக்க அவள் பதில் சொல்ல, என்று ஐந்து நிமிடங்கள் கடந்தது.

"ஏய் உங்க ஆகாஷ்வாணியை கொஞ்சம் ஆப் பண்ணுங்கடா. சபையில இருக்கும் போது எல்லாருக்கும் புரியற மாதிரி பேசணும் இதுதான் நம்ம கேங்கோட ரூல். அப்புறம் என்ன ரெண்டு பேரும் பரோட்டா போடுறீங்க தனியா? பிச்சிபுடுவேன். ப்ளடி பக்கர்ஸ்!" அர்ஜுன் ஆவேசமாக எழுந்து பேச.

"ஏய் ரூல்ஸ் ரங்கநாதா பொத்திட்டு உக்காரு டா. உணர்ச்சி வசப்படாத!" விஷ்வா அவனை இழுத்து உட்கார வைத்து விளையாட்டின் மீதி விதிமுறைகளை எடுத்து உரைத்தான்.

"நாம ரெண்டு லாங்குவேஜ் படமும் விளையாடுறதுனால பர்ஸ்ட் எந்த லாங்குவேஜ் படம்ன்னு சொல்லிடணும். அப்புறம் எவ்வளவு வார்த்தைகள்ன்னும் சொல்லிடணும். சரியா கெஸ் (guess) பண்ண பத்து நிமிஷம் டைம், கரெக்ட் ஆன்ஸர்க்கு பத்து பாயிண்ட்ஸ் தப்பா ஆன்ஸர் ப்ணணா.."

"இரு டா வி" ஷர்மிளா குறுக்கிட்டாள் "ராங்க் ஆன்ஸர்க்கு பனிஷ்மெண்டு. அப்போஸிட் டீம் சொல்றதை செய்யணும். ஓகே ரூல்ஸ் க்ளியர்? ஷால் வீ ஸ்டார்ட்?"

டாஸ் போட்டு பார்த்து விட்டு  முதலில் ஆண்கள் அணி தொடங்கியது. கூடிப்பேசி தீர்மானித்து, ஆதர்ஷ் முதலில் எழுந்து வந்தான். நடுவில் வந்து நின்றவன் பார்வை இயல்பாக அனிதாவிடம் போனதும், முகத்தில் ஒரு மலர்ச்சி, கைகள் தலையை கோதியது வெட்கத்தோடு.

"என்ன டாக்டரே பொண்டாட்டிக்கு சிக்னலா?கலக்கற டா, நடத்து நடத்து.." ஷர்மிளா ஆரம்பித்து வைக்க,

சுகந்தி, அனிதாவிடம் திரும்பி, "அண்ணி நீங்களே ஆன்ஸர் பண்ணுங்க" என்றதும் அவள் முகம் லேசாக நாணத்தை பூசி கொண்டது.

"ஓகே, தமிழ் படம். ரெண்டு வார்த்தை" என கூறிவிட்டு அவன் சைகை செய்ய தொடங்கினான், உதட்டில் விரல் வைத்து காண்பித்தான்.

"அமைதி, சைலன்ஸ், வாயை மூடி" பேசவும்" என என்னவெல்லாமோ பதில் வர இல்லை என தலையசைத்தான்.

"அண்ணா நெக்ஸ்ட் வேர்ட் என்ன?" பூரணி கேட்டதும், தாளம் போடுவது போல சைகை செய்தான். மேலும் குழம்பினர். அவர்களுக்குள் பேசி விவாதித்தனர்.

"உங்க டைம் முடிய போகுது.. பனிஷ்மெண்டுக்கு ரெடி.."

"மௌன ராகம்" அனிதா பதில் கூறினாள்.

"யெஸ், சூப்பர்" என ஆதர்ஷ் குதூகலித்தான்.

"ஏஏஏ... டென் பாய்ண்ட்ஸ்" என பெண்கள் ஆரவாரம் செய்தனர். 

தனது அணியை நோக்கி அவன் திரும்ப, நண்பர்கள் கொலை வெறியுடன் முறைத்தனர். தன் தவறை உணர்ந்ததும், அசடு வழிந்தான்.

இடத்தில் உட்கார்ந்ததும் "எங்க போன வாரம் வரை சாமியார் வேஷம் போட்ட அந்த மூஞ்சிய காட்டு! அது எப்படி மச்சான் ஒரே நாளுல?" அர்ஜுன் வினவியதும் அவன் தலையில் நறுக்கென குட்டு விழுந்தது. "ஆஆ" தலையை தேய்த்து விட்டு கொண்டான்.

அமன்தீப் "அவன் அட்லீஸ்ட், அவங்க கரெக்ட் ஆன்ஸர் சொன்னதும் செலிப்ரேட் தான்  பண்ணான். நீ, சுகந்திக்கு பிட் பேப்பர் (bit paper) குடுத்திட்டு வருவ. பேசாத டா ரோமியோ!"

மற்றவர்கள் சிரிக்க, "இது உனக்கு தேவையா சொல்லு?" விஷ்வா உசுப்பேத்தினான்.

சுகந்தியின் முறை வர, அவள் சைகை செய்ததை எளிதாக கண்டுபிடித்தான் அமன்தீப். இப்படியே ஒவ்வொருவராய் விளையாட புதியவர்கள் என்ற உணர்வே தோன்றாமல்  அனிதாவும் வீணாவும் இந்த வானர கூட்டத்தில் ஐக்கியமாகி போனார்கள்.

அடுத்து பெண்கள் அணி, ஷர்மிளா எழுந்து வந்து "ஹிந்தி படம், இது சந்தீப் தான் ஆன்ஸர் பண்ணணும்."


அவன் முதுகில் தட்டி, "மாப்பிளை நீ இன்னைக்கு கைமா தான்டீ. மை ஹார்ட் ஃபெல்ட் கண்டோலன்ஸஸ் (my heartfelt condolences)" என்று முகத்தை சோகமாக வைத்து கொண்டு விஷ்வா பேசியதும், அவன் பரிதாபமாக முகத்தை வைத்துகொண்டு

"நான் இன்னிக்கு ஒண்ணுமே பண்ணலை டா. காப்பாத்து மச்சி, உனக்கு என் சொந்த காசுல லேட்டஸ்ட் மாடல் ராயல் என்ஃபீல்ட் வாங்கி தரேன் டா விஷ்வா" ரகசிய குரலில் கெஞ்சினான்.

அவனையும் மீறி சந்தோசத்தில்  கண்கள் மின்ன
"சரி நீ சீக்கிரம் அவ கூட பாத்த படத்துதையெல்லாம் ஞாபகப் படுத்திபாரு. நான் எனக்கு எதாவது புரியுதா பாக்கறேன்." அவனிடம் கூறிவிட்டு  'இவ காரணம் இல்லாம இப்படி டார்கெட் பண்ண மாட்டாளே. என்னமோ ப்ளான் பண்ணிட்டா' என மனதில் நினைத்தவன் அவளை கூர்ந்து கவனித்தான். அவள் செய்த சைகை யாருக்கும் புரியவில்லை, எத்தனை யோசித்தும்.


"ஓகே! Pass மிலி, படம் பேரு சொல்லு."
அவள் பதில கூற, அப்படி ஒரு படமே வந்ததில்லை என தர்க்கம் நடந்தது.

எதையோ உணர்ந்தவனாக
"மிலி, வாட் இஸ் மை பனிஷ்மெண்ட்?" தோல்வியை ஒப்புக் கொண்டான் சந்தீப்.


"Say sorry to Aman bhai sahab".


அனைவரும் திடுக்கிட்டனர். "ஏ  ஷம்ஸ்.. அக்கா.. ஷர்மிளா.." எதிர்ப்பு குரல்கள் எழவும்

"எல்லாரும் வாயை மூடுங்க. என்னை பத்தி தெரியும் தான?" எச்சரித்தாள், சந்தீப் தலைகுனிந்தான்.

"சந்தீப் இவங்க நம்ம பெஸ்ட் ஃபிரண்ட்ஸ் தான் நம்மோட பெஸ்ட் அண்ட் வர்ஸ்ட் சைட், இந்த குரூப்புக்கு தெரியும். கமான் அப்பாலஜைஸ் டு ஹிம்.  தயங்க வேண்டாம்."

"ஏய் குள்ஸ் வேணாம் டீ" விஷ்வா லேசான கோவத்தில் எச்சரித்தான்.

"நீ வாயை மூடு டா வி. அவனுக்கு தெரியும் அவன் செஞ்சது தப்புன்னு. ஸப்போர்ட் பண்ணுன உன்னையும் மன்னிப்பு கேட்க வைப்பேன்" தீர்மானமாய் இருந்தாள்.

"தீபு ரெண்டு நிமிஷம் டைம்" காட்டமாக முறைத்தாள் அவனை.


"ஸாரி வீர் ஜி" (veerji) எழுந்து சென்று சகோதரனை அணைத்து கொண்டு மன்னிப்பு கேட்டான் சந்தீப். அவனும் சமாதானம் செய்யதான். வீணா கண்கலங்க, ஷர்மிளா அவளை அணைத்து கொண்டாள் "ஸாரி bhabi".


அதன்பின்னர் சந்தீப்பிடம் ஆங்கிலத்தில் அவள் பேசி புரிய வைத்தாள்.

"தீபு ஒண்ணு புரிஞ்சுக்கோ, உன் அண்ணனை நீ என்ன வேணும்னாலும் சொல்லாம் ஆனா எங்கே, யாரு முன்னால பேசுறன்னு யோசிச்சு பேசு. இப்ப அவரு தனி ஆளு இல்லை. என்ன தான் நம்ம ரெண்டு குடும்பமும் க்ளோஸ் ஃபிரண்டுனாலும், சில விஷயங்கள் இங்கிதம் தெரிஞ்சு நட. எங்க வீட்டு ஆளுங்க எதிர்ல அவரை வாய்க்கு வந்ததை பேசுற அதுவும் அண்ணி இருக்கும் போது. நீங்க சின்னப் பிள்ளைலேருந்து சண்டை போட்டதெல்லாம் எங்க  எல்லாருக்கும் தெரியும். ஆனா இப்ப அவரு கல்யாணம் ஆனவரு, கணவனுக்கு வெளி இடத்துல அவமானம்ன்னா ஒரு பொண்ணும் தாங்கமாட்டா. தெரிஞ்சுக்கோ. அது அண்ணியையும் சேத்து அவமதிக்கிற மாதிரி. சொல்லப்போனா இந்த அட்வைஸ் எல்லாருக்கும் தான் நம்ம எல்லாருமே குடும்பஸ்தர் ஆகுற ஸ்டேஜ்ல இருக்கோம்".


சந்தீப் தவறை உணர்ந்து அண்ணியிடமும் ஷர்மிளாவிடமும் மன்னிப்பு கேட்டான். சிறிது நேரம் அங்கே ஒரு சங்கடமான சூழல் நிலவியது. ஆனால் நண்பர்கள் மனதிற்குள் ஷர்மிளாவை நினைத்து பெருமையாகவே உணர்ந்தனர்.


"ஓகே! கமான் கேம் கன்டின்யூ பண்ணுங்க. கைய்ஸ் நம்ம டர்ன் தான?" என அமன்தீப் அனைவரையும் உற்சாக படுத்தினான். ஹேய் விஷ்வா என் டர்ன் இப்ப" அவனை தோளில் தட்டவும் அவன் நிமிர்ந்து பார்த்ததும் ஜாடை காட்டினான் அமன். அனைவரையும் உற்சாகமூட்ட அவன் முயற்சிப்பது புரிந்து சம்மதித்தான். படத்தின் பெயரை தீர்மானித்து அவன் சைகை செய்ததும் சிறிது உற்சாக குறைவாக இருந்த நண்பர்கள் மெல்ல இயல்பாக தொடங்கினர். வீணா தவறான பதிலை சொல்ல, அவளை பாட சொல்லி கேட்டனர், அவள் மறுத்ததும்.

"வீணா, நல்லா இமிடேட் பண்ணுவா." அவள் கூச்சத்தில் மறுக்க, "கமான் வீணா. ப்ளீஸ் என்னை மாதிரி ஆக்ட் பண்ணு" அவனின் கெஞ்சலான காதல்  பார்வையில் அவள் சம்மதித்து அவனைப் போலவே செய்து காட்டியதும் அவன் ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொண்டான்.

"ஊஹூ..ஓஓஓ.." என கூச்சலும் கலகலப்புமாக அவர்களை கிண்டலடித்து ஓய்தனர். அமன், வீணா திருமணம் முடிந்து எட்டு மாதங்களே ஆகியிருந்தது. ஸோ, டெக்னிகலி அவங்க புதுமண தம்பதி தான்.

அடுத்து, பெண்கள் அணி.  தியாகராஜ பாகவதர் படத்தை தேர்வு செய்து பூரணிக்கு சொன்னாள் சுகந்தி, "பூரி நாம ஸ்கோர் பண்ணணும். மறந்திறாத".

பூரணி சைகை செய்ததை புரிந்து கொள்ளமுடியாமல் அனைவரும் விழித்தனர். "ஓகே  பாஸ்! ஆன்ஸர் சொல்லு பூரணி" ஆதர்ஷ் கேட்டதும்

"அமரகவி இதை தான நான் ஆக்ஷன்ல சொன்னேன்."

"ஆமா டீ நீ டான்ஸ் அபிநயம் புடிச்சா யாருக்கு புரியுது?" அர்ஜுன் சலித்து கொண்டான்.

"டேய் அண்ணா ரொம்ப ஓப்பனா இப்படி ஜொள்ளு
விடாத டா" ரகசியமாக விஷ்வா காதை கடித்தான்.

"எனக்கு ஆன்ஸர் தெரியும். அவ அபிநயம் பிடிச்சப்பவே கண்டு பிடிச்சிட்டேன், ஆனா பதில் பேச வாயே வரலை. அவ ஆடுற அழகை பாத்திட்டே இருக்கணும் போல இருந்தது." அவன் காதலாய் கசிந்துருக, அர்ஜுன் கண்களுக்கு விஷ்வா புதிதாக தெரிந்தான்.

"ஷம்ஸு இந்த பனிஷ்மென்டு அண்ணாத்தைக்கு" என்று  கோர்த்துவிட்டான் அர்ஜுன். அவளும் புரிந்து கொண்டதன் அடையாளமாய் சிரித்தாள்.

"பனிஷ்மெண்டனா அப்போஸிட் டீம் தான் குடுக்கலாமா? நான் ஒரு ரிக்வெஸ்ட் வச்சிருக்கேன்" ஆதர்ஷ் கேட்டுவிட்டு விஷ்வாவிடம், "மச்சான் பாரதியார் பாட்டு டா. ரொம்ப வருஷம் ஆச்சு டா மச்சான்."

"டேய் நான் என்ன பாடும் நிலா பாலு வா? இல்ல ஜேசுதாஸா? போடா" விஷ்வா நழுவ முயற்சித்தான்.

அனைவரும் கட்டாயப்படுத்தினர். "விச்சு நல்ல ஆப்பர்ச்சூனிட்டி உன் ஆளை இம்ப்ரஸ் பண்ண." அர்ஜுன் கிசுகிசுத்தான்.

வீணாவிற்கு சிறிய விளக்கம் கொடுத்தாள் ஷர்மிளா. சிறிது அமைதி நிலவியது. பூரணியின் இதயத்துடிப்பு மெல்ல அதிகரித்தது.
அவனை பாரதியார் பாடல் பாட சொன்னதுமே ஆர்வமானவள், அவன் ஒப்புக்கொண்டதும் அதீத ஆர்வத்தோடும் படபடக்கும் இதயத்தோடும் காத்திருந்தாள்.


மேகங்களற்ற இரவு வானிலிருந்து அன்று நிலவும் ஓய்வெடுத்து சற்று ஒதுங்கியிருக்க, வானில் விண்மீன்கள் ஆக்கிரமப்பு செய்திருந்தன.

மின் விளக்குகள் இல்லாத பகுதிகளில் மட்டுமே இந்த நட்சத்திரங்கள் நடத்தும் ஒளி கண்காட்சியை ரசிக்கமுடியும்.
அப்படி பட்ட ஒரு பின் இரவில் ஒலித்தது பாரதியின் பாடல்.

                       

🎶🎶பச்சைக் குழந்தை யடி!-கண்ணிற்
பாவை யடி சந்திரமதி!
இச்சைக் கினிய மது! -என்தன்
இருவிழிக்குத் தே நிலவு;
நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே-நல்ல
நாகமணி யுள்ளதென்பார்;
துச்சப்படு நெஞ்சி லே-நின்தன்
சோதி வளரு தடீ!

பேச்சுக் கிடமே தடி!-நீ
பெண்குலத்தின் வெற்றி யடி!
ஆச்சர்ய மாயை யடி!-என்தன்
ஆசைக் குமாரி யடி!
நீச்சு நிலை கடந்த-வெள்ள
நீருக் குள்ளே வீழ்ந்தவர்போல்,
தீச்சுடரை வென்ற வொளி-கொண்ட
தேவி!நினை விழந்தேனடி!

நீலக் கடலினிலே-நின்தன்
நீண்ட குழல் தோன்றுதடி!
கோல மதியினி லே-நின்தன்
குளிர்ந்த முகங் காணுதடி!
ஞால வெளியினி லே-நின்தன்
ஞான வொளி வீசுதடி!
கால நடையினி லே-நின்தன்
காதல் விளங்குதடி! 🎶🎶

தேர்ந்த பாடகன் போல அற்புதமான குரல் வளம் கொண்டவன் இல்லை,  ஆனால் பாரதியின் காதல் வரிகள் அனைவரையும் கட்டி வைத்தது, அதோடு விஷ்வா  பாடியவிதமும். அதில் ஒரு உயிரோட்டமும், உண்மையும் நிறைந்திருந்தது மறுக்கமுடியாதது. யாரோ கை தட்டியதும் உறைந்த நிலையில் இருந்து மீண்டாள் பூரணி. அனைவரும் அவனை பாராட்டி முடித்தனர்.

"ஓகே! குட் நைட். ஸீ யூ இன் தி மார்னிஙக். நேரமாகுது படுக்கபோங்க எல்லாரும்" அமன் அனைவரையும் விரட்டினான்.


உறங்க சென்றாலும் உறக்கமின்றி யோசனையில் ஆழ்ந்திருந்தாள் பூரணி.
'விஷ்வா, பாரதியார் கவிதைகள் ஒரு dejavu feeling!
ஏன் இந்த சம்பவம் ஏற்கனவே பார்த்தமாதிரி ஒரு உணர்ச்சி"?

பல்வேறு விதமாய் குழம்பி கொண்டிருந்தவளை கைபேசியின் சன்னமான ஒலி ஈர்த்தது.

'உன்கிட்ட பேசணும். நாளைக்கு காலைல மாடிக்கு வரமுடியுமா?' -விஷ்வா.  




https://www.youtube.com/watch?v=3vmt1814CnI

□□□

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro