பாகம் 21

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

✴✴✴✴

சில வருடங்கள் முன்

"ஏன் அஜ்ஜு, நமக்கு கல்யாணம் ஆச்சுனா பூ குட்டியை இதே மாதிரி பாத்துக்க முடியுமா?" வாடிய முகத்தோடு அவன் தோள் சாய்ந்தவளை குழப்பமாக நோக்கினான். அருகே பூரணி மருத்தவமனை படுக்கையில் மயக்கத்தில் இருக்க கையில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது.

"இல்லைடா, கல்யாணம் ஆனா நமக்குன்னு சில பொறுப்பு கடமைன்னு இருக்கு. நான் நம்ம பிரைவஸிங்கற ஆங்கிள்ள (angle) சொல்லலை, பொதுவான கடமைகள், குடும்பத்தோட எதிர்பார்ப்புகள், வேலை.. அப்ப பூகுட்டியை நாம கவனிக்காம விட முடியாதுல்ல. அதோட அவ இப்படி கஷ்டபடும் போது நான்.. நாம... எப்படி அஜ்ஜு சந்தோஷமா..." விசும்பலை கட்டுபடுத்த முயன்றாள் உறங்கும் தோழியை பார்த்தபடி.

"நானே உன்கிட்ட பேசணும்னு இருந்தேன் டி." அவள் தோள் தழுவி தன்னோடு சேர்த்தணைத்து கொண்டான். "அப்பா அம்மாவோட இதை பத்தி பேசினேன். எப்படி பாத்தாலும் இருபத்தியாறு வயசுக்குள்ள கல்யாணம் பண்ணி ஆகணும். வேற ஆப்ஷன் இல்லையே மா. அதுக்குள்ள அவ சீக்கிரம் குணமாகணும்னு வேண்டிக்குவோம். அப்படி இல்லைனா கூட என்ன அவளை விட்டுருவேனா? நீங்க ரெண்டு பேரும் எனக்கு உசிரு உங்கள்ள யாரையும் விட்டு கொடுக்க முடியாது அழகிமா. கல்யாணம் ஆனா என்ன அவளை பாத்துக்க முடியாதா? இந்த பிரச்சினை மத்தவங்களுக்கு வரலாம், ஆனா இவ நம்ம ரெண்டு பேருக்கும் சிஸ்டர் டி, அவளை விலக்கி வைக்க முடியுமா நம்மால?" அவள் உச்சியில் முத்தமிட்டு ஆழ்ந்து மூச்செடுத்து தன்னை சமன் படுத்திகொண்டான்.

இவர்கள் காதல் விவகாரம் தெரிந்த பின்னர் திருமணத்தை பற்றிய முடிவு எடுக்க அர்ஜுனின் சொந்த ஊருக்கு இரு குடும்பங்களும் சென்றிருந்தனர். குல தெய்வ கோவிலில் இருக்கும் சித்தரை சந்திக்க.

அவர் அர்ஜனின் இருபத்தி ஆறாம் வயதுக்குள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விடவேண்டும், ஏனெனில் அர்ஜுனுக்கு ஆயுள் கண்டம் இருக்கிறது என்றும் அதை தவிர்க்க கூடிய வகையில் மாங்கல்ய பாக்கியம் சுகந்தியின் ஜாதகத்தில் இருப்பதாகவும் கூறினார். அவரிடம் மூர்த்திக்கு அதிக பக்தியும் நம்பிக்கையும் உண்டு.

அன்றும் பூஜை ஒன்றை செய்யும் படி பணித்தவர். திருமணம் முடிந்த கையோடு குல தெய்வ கோவிலிலும் பின் வேறு ஒரு கோவிலிலும் பரிகார பூஜை ஒன்றை செய்ய சொல்லியிருந்தார். சொல்லி வைத்தாற்போல சென்னைக்கு திரும்பிய பின் அர்ஜுன் வேலைக்கு சேரும் ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்திட்டு விட்டு வீடு வரும் போது ஒரு சாலை விபத்திலிருந்து லேசான காயத்தோடு தப்பினான்.

மருந்துவமனையில் மகனை பார்த்த மூர்த்திக்கு சித்தர் தனிமையில் தன்னிடம் கூறிய வார்த்தைகள் நினைவிலாடின.

"அஞ்சு தலைமுறைக்கு முன்ன ஏற்பட்ட பெண் சாபம் ஒண்ணு தான் பரம்பரை பரம்பரையா துரத்துது. பெண் குழந்தைங்க பிறக்காததுக்கும், ஆம்பிளை புள்ளைங்கள்ள மூத்த புள்ளை சந்நியாசியா போகுறதுக்கும் இதுதான் காரணம். என்ன பாக்குற? உனக்கு பெரியப்பன் ஒருத்தன் இருந்தான் நினைவு இருக்கா? அவன் சந்நியாசி, உன் அப்பன் சம்சாரி. உன் அத்தையும் சொந்த மக இல்லை வளர்ப்பு தான். உன் அப்பாவுக்கு ஒண்ணு விட்ட சகோதரி அவ. நீ சம்சாரி உன் அண்ணன் சந்நியாசி..." அவர் இழுத்து நிறுத்த மூர்த்தி அதிர்ந்தார்.

"சாமி அப்ப என் அண்ணன் மவன் விஸ்வநாதன்?"

மர்ம சிரிப்போடு நிறுத்திய சித்தர் சற்று பொறுத்து,
"அவன் சிக்கலுக்கு வழி இருக்கு ஆனா சொல்ற நேரம் இன்னும் வரலை. முதல்ல உன் மகன் கல்யாண ஏற்பாட்டை கவனி. இந்த தலைமுறையில சாபவிமோசனம் ஆகுற நேரம் தான், அதுக்கு வழியும் இருக்கு அதனால தடங்கலும் நிறைய இருக்கு. நான் சொல்லியிருக்குற பரிகாரங்களை விடாத செய்துட்டு வாங்க. அந்த ஈசன் உன் குடும்பத்துக்கு துணையா இருப்பான். ஆமா உன் பர்மபரையில ஆம்பிளை புள்ளைக்கு அவன் பேரை வைக்கணும்னு தானே நேந்துகிட்டிருக்கு? அதென்ன அர்ஜுன்?" ஒன்றும் தெரியாதவர் போல அந்த சித்தர் கேட்க,

"ஸ்ரீசைலத்துல இருக்குற ஈசனுக்கு மல்லிகார்ஜுனன் அப்படீன்னு பேரு. யாத்திரை போய்ட்டு வந்த மாமியாருக்கு பேரனுக்கு அந்த பேரு வைக்கணும்னு ஆசை, நாங்களும் வச்சோம். ஆனா ஸ்கூல்ல ஆம்பிளை பையன் என்னடா மல்லினு பேருன்னு பசங்க கிண்டல் பண்ணவும் இவன் அர்ஜுன் மட்டும் வச்சிக்கறேன்னு ஒரே அடம். அதனால எதுவும்?"
தந்தையாய் அவர் சிறு பதட்டத்தோடு வினவ, சித்தரின் புன்சிரிப்பும் தலையசைப்பும் அவருக்கு நிம்மதியை தந்தது.

Flashback ends

✴✴✴✴

பெட்ரூம் பரணில் மேலே வைக்கபட்டிருந்த பழைய சாமான்களை இறக்கி வேண்டியவை வேண்டாதவை என பார்த்து சுத்தபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாள் பூரணி.

வழக்கமாக கிடக்கும் பழைய, அதிகம் உபயோகப்படாத பொருட்கள், சில புத்தம் புதிய பாத்திரங்கள், போட்டோ ஆல்பம், பரந்தாமனின் சில அலுவலக கோப்புகள் என எல்லாம் கிடைத்தன. வேலையில் கவனத்தை திருப்பி மனதை அரித்து கொண்டிருந்த வருத்தத்தை ஒதுக்க முயன்றாள். பழைய சாமான்களோடு பழைய நினைவுகளும் சில கிளர்ந்து வலியை தந்தது. அவள் உடைமைகளோடு ஒரு புகைப்பட ஆல்பம் மற்றும் அவளின் டைரி இரண்டும் கைக்கு கிட்ட, ஒரு விரக்தியில் ஒதுக்கி வைத்தவள் அதை திறந்து பார்த்திருந்தால் சில விடைகள் கிடைத்திருக்கலாம் வருத்தம் தீர வழி பிறந்திருக்கலாம்!

கடந்த சில வருடங்களில் அவள் வாழ்க்கையில் எத்தனை வினோதமாக விதி விளையாடியிருக்கிறது? பரதநாட்டிய கலைஞராக ஆக உத்தேசித்திருந்தவள், அந்த பயிற்சியை விட காரணம் கடன் தொல்லைகளுக்கு மத்தியில் வகுப்பிற்கான ஃபீஸ் கட்ட கோகிலா மிக சிரமப்பட்டதனால். மனதை தேற்றி படிப்பில் முழு கவனம் செலுத்தினாள்.

தன் வாழ்க்கையின் ஒரு பகுதி, பெரிய புதிராகவே இருந்து வருகிறது பூரணிக்கு இத்தனை காலமாய். வாழ்க்கையின் ஒரு சில வருடங்கள் சுவடில்லாமல் மறந்து போனதும், அதன் விளைவாக சில மன மாற்றங்களுக்கு ஆளாகி அவள் பல நாட்கள் வீட்டில் முடங்கி கிடக்கும்படி ஆனது.

தன் சுய அடையாளத்தையே சந்தேகிக்கும் அளவு இருந்த நிலையில், படிப்பும் பாதிக்கப்பட்டது. அத்தனை வேதனையான கட்டத்திலும் அவளுக்கும் அவள் அன்னைக்கும் தோள்கொடுத்து நின்றது சுகந்தியும், அர்ஜுனும் அவர்கள் இருவரின் குடும்பங்களும் தான்.

அதிலும் சுகந்தியின் பங்கு மிக அதிகம். நியாயப்படி பார்த்தால் இவர்கள் இருவரும் பட்டப்படிப்பை சென்ற ஆண்டு முடித்திருக்க வேண்டும். இடையில் பூரணியின் உடல் மற்றும் உளவியல் பாதிப்பினால் தொடரமுடயாமல் போக பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வையே இருவரும் ஒரு வருடம் தாமதமாக தான் எழுதினர். வகுப்பில் முதல் ரேங்கில் சுகந்தியும் பத்து அல்லது பன்னிரண்டு ரேங்கில் பூரணியும் தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளி காலத்தில். இடைப்பட்ட காலத்தில் பள்ளி பாடம், நடனம் என எல்லாவற்றையும் கற்று கொடுத்து அவள் இயல்புக்கு மீட்டெடுக்கும் பொறுப்பை அவளைச்சுற்றி இருந்த அனைவரும் ஏற்று கொண்டனர்.

ட்ரீட்மென்ட், கௌன்சலிங்க் அனைத்து முயற்சிகளும் எடுத்து பழைய தன்னம்பிக்கையோடு மீண்டு வந்து பூரணி கல்லூரியில் சேரும் பொழுது தானும் சேர்ந்து கொள்வதாய் தீர்மானமாய் கூறிவிட்டாள் சுகந்தி, அவளுக்கு இரண்டாவது அன்னை அவள் தான்.

வாழ்க்கை தொடர்பில்லாமல் இடையில் அறுபட்ட சங்கிலி போல இருக்க, பல பொழுது பயத்திலும், குழப்பத்திலும் கழிந்தது.

"என் வாழ்க்கை jig saw puzzle) மாதிரி இருக்கு சுகி, ரொம்ப முக்கியமான puzzle piece காணாம போனா அந்த முழு படமும் அர்ததமில்லாம முழுமையடையாம போயிடுமே அந்த மாதிரி இருக்கு டி. I feel incomplete" என மௌனமாகவும் பல நேரங்களில் வாய்விட்டும் கதறியதுண்டு.

விபத்து நடப்பதற்கு சமீப காலங்களில் நடந்த சம்பவங்களை எல்லாம் அவள் மறந்து போயிருந்தாள். அவள் ஒரு சில முறை நிர்பந்தமாக முயற்சி செய்ததன் விளைவாக தலைவலியும், மயக்கமும் மட்டுமே பின் விளைவாக கிட்டியது. அதனாலேயே விஷ்வாவிடம் காதல் வயப்பட்டதும் அவனோடு பழகிய தருணங்களும் அவளிடம் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு மன ஆழத்தில் புதைந்து போயிருந்தது. சோதனையாக அதே காலகட்டத்தில் அவன் சென்னையை விட்டு டெல்லிக்கு செல்ல, முற்றிலுமாக இருவருக்கும் இடையே ஆன தொடர்பு அற்று போயிருந்தது. மிகுந்த மன அழுத்ததில் உறங்க சென்றாள் பூரணி. விஷ்வாவிடமிருந்து விலகியிருக்க சொல்லி விதி வலியுறுத்தவது போல தோன்றியது அவளுக்கு.

✴✴✴✴

காலையில் அடித்து பிடித்து எழுந்தவள் "அம்மு காலேஜுக்கு டைம் ஆயிடுச்சு ஏன் எழுப்பல?" என அலறி அடித்து துணியை கையில் சுருட்டி கொண்டு பாத்ருமை நோக்கி ஓட, வழியில் இருந்த அட்டை பெட்டியில் தடுக்கி விழப்போகவும் சுதாரித்தவள், பின்னர் நினைவு வந்தவளாக திரும்பி அன்னையை பார்த்தாள். அவர் அமைதியாக உட்கார்ந்து பேப்பர் படித்து கொண்டே காபி அருந்தி கொண்டிருந்தார்.

"ஆஆஆஆ... அம்மு! என்ன நீங்க ஸ்டைலா காபி குடிச்சுட்டு இருக்கீங்க? நான் எவ்வளவு பதறிட்டேன், விழுந்து ஏதா ஆகியிருந்தா?" காலை தரையில் உதைத்து சிறு பிள்ளை தனமாக அவள் சிணுங்க, அவர் நமுட்டு சிரிப்பை அடக்கினார்.

"நீ தடுக்கி விழுந்தா அட்டைபெட்டி தான் டேமேஜ் ஆகியிருக்கும், எனக்கு காசு வேஸ்ட். ஒரு பெட்டிக்கு இருபது ரூபானு காசு வாங்கிட்டான்" என்றார் உதடு பிதுக்கி சீரியஸாக.

"கோகிலா இதெல்லாம் ரொம்ப ஓவர், நல்லாயில்லை பாத்துக்க. பச்சை புள்ளையை விட பத்து ரூவா அட்டைபெட்டி பெருசா போச்சோ"?
அவிழ்ந்த கூந்தலோடு அவள் சிலிர்த்து நிற்க.

"அடி! குட்டி கழுதை! இது என் பாட்டி பேரு...எங்க வீட்டுலயே யாரும் கூப்பிட்டதில்லை, என் வீட்டுகாரர் கூட கூப்பிட்டதில்லை. நீ என்ன பேரு சொல்லி கூப்பிடுறது? நல்லா பத்ரகாளி மாதிரி நிக்கிற, ஆனா பயம் தான் வரலை" செய்தி தாளை சுருட்டி அதை வைத்து பெண்ணை செல்லமாக தலையில் அடித்து, "போய் குளி. இன்னிக்கு லீவு தான? நீ டிபன் சாப்பிட்டு வீட்டுல வேலையை பாரு. சுகந்தியும் ஷர்மிளாவும் வருவாங்கனு சொன்ன இல்ல? நானும் அப்பாவும் வேலைக்கு கிளம்புறோம்" என்று கிச்சனுக்குள் போய்விட்டார். பெற்றோர் இருவரும் வேலைக்கு புறப்பட, ஷர்மிளாவை அழைத்தாள்.

"ஹாய் அக்கா! எப்ப வரீங்க?"

"ஒரு பதினைஞ்சு நிமிஷத்துல ஃப்ளவர் பேபி. சுகி வரலை, அவளை சும்மா வெளிய சுத்த கூடாதுனு ஆன்ட்டி சொல்லிட்டாங்களாம். அதுவும் இல்லாம ஆன்ட்டிஸ் மூணு பேரும் எதோ பர்சேஸ் போறாங்க யாரோ அர்ஜுன் கஸின் ஒரு பொண்ணு இந்த ஸிஸ்டர் ஃபார்மாலிட்டிலாம் பண்ண போறாளாமே அவளுக்கு ரிடர்ன் கிப்ட் குடுக்க. ஸோ என் ரெண்டு செல்ல பேபிஸையும் ( அவர்கள் இருவரையும் தான்) நான் இன்னைக்கு பேபிஸிட் பண்ணனும். ரெடியா இரு. ஓகே!" என்று விட்டு வைத்துவிட்டாள்.

✴✴✴✴

அதே நேரம் அர்ஜுன் விஷ்வா இருவரும் பதட்டத்தோடு ஆபிஸ் பஸ்ஸில் பயணித்து கொண்டிருந்தனர்.

ஷம்முவிடம் பேசிமுடித்த பூரணி அப்போது தான் தனக்கு வந்த வாட்ஸ்அப் தகவல்களை திறந்தாள். ஏன் லீவ் என்ற கல்லூரி தோழிகளுக்கு பதில் அனுப்பியவள், விஷ்வாவின் மெஸேஜ் இருப்பதை கண்டாள்.

ஸ்டேடஸில் ஒரு சினிமா பாடலின் வரிகளை அவள் பதிவு செய்திருக்க அதை குறிப்பிட்டு வாட்ஸ்அப் அரட்டை தொடங்கியது.

🎶மிக மிகக்
கூர்மையாய் என்னை
ரசித்தது உன் கண்கள்தான்
மிருதுவாய் பேசியே என்னுள்
வசித்தது உன் வாா்த்தை தான்
கண்களைக் காணவே இமைகளை
மறுப்பதா வெந்நீர் வெண்ணிலா
கண்ணீர் கண்ணிலா நானும்
வெறும் கானலா

யாரோ மனதிலே
ஏனோ கனவிலே நீயா
உயிரிலே தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில்
என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை
இல்லை ஊமை ஆகின்றதோ🎶

வி: இது என்ன பாட்டு? என்ன காரணம்?

பூ: எனக்கு பிடித்த பாடல்.
உனக்கு பிடித்த பாட்டு?

அவளிடமிருந்து பதில் வந்ததில் அவனின் இறுக்கம் தளர்ந்தது.

வி: உலகே மாயம் வாழ்வே மாயம்..

பூ: எப்பொழுதும் இது தானா? இல்லை சிச்சுவேஷன் சாங்கா?

வி: சிச்சுவேஷன் சாங்க்!

'பூ: ஏன் அழுகாச்சி?

வி: வர்க் சைட்டுல ஒரு பிரச்சினை...

அதற்குள் அவர்கள் சைட்டை அடைந்திருந்தனர்.
வி: see you later..
கைபேசியை பேண்ட் பாக்கெட்டில் வைத்து விட்டு உள்ளே சென்றான்.

சில நிமிட இடைவெளியில், ஆட்கள் வரத் தொடங்கினர். நகரின் முக்கிய பகுதியில் கட்டபட்ட புதிய வணிக வளாகம், (shopping mall). அரசு அதிகாரிகளை அர்ஜுன் சைட்(site office) ஆபிஸில் அழைத்து போய் அமர வைத்தான். முதலில் enquiry, பின்னர் கள ஆய்வு (inspection) என அறிவிக்கபட்டது.

அந்த ப்ராஜக்டில் ஆரம்ப காலத்திலிருந்தே ஈடுபட்டிருந்த பணியாளர்கள் எல்லாரும் அமர்ந்திருக்க. அவர்களை அடுத்து, க்ளையண்ட் கம்பெனி - அதாவது ஜே. என் க்ரூப்பின் முக்கியஸ்தர்கள், அவர்களின் வக்கீல், என அந்த அறை மூச்சு முட்டும் அளவிற்கு ஆட்களால் நிரம்பியிருந்தது.

விஷ்வாவும் இன்னும் சில புதிய பணியாளர்களும் அறையின் ஒரு ஓரமாக நின்று பேச்சுவார்த்தையை கவனித்தனர். மீண்டும் விஷ்வாவின் போன் சப்தம் எழுப்பாமல் அதிர, கையில் எடுத்தான்.

பூ: என்ன ஆச்சு? பெரிய பிரச்சினையா? கவலை படாத விஷ்வா சரியாகிடும்

வி: நான் அதனால அப்ஸெட்டா ஆகலை.'
அவளை கலவர படுத்தவேண்டாம் என எண்ணினான். பின் யாரும் அறியாமல் அங்கு அமர்ந்திருந்த அவர்கள் அலுவலக ஆட்களை மட்டும் போட்டோ எடுத்து அவளுக்கு அனுப்பிவிட்டு

வி: இதெல்லாம் காலைல பாக்குற முகமா"?

அவன் பதிலில் ஓரு பிரபல சினிமா காமெடி நினைவுக்கு வர பெரிதாக சிரித்தாள்.

பூ: சரி வேற எந்த முகம் காலைல பாக்கலாம்'?

சற்றும் தயங்காமல்,
வி: 'உன் முகம் தான், காலைல நான் பாக்குற முதல் முகம் உன்னோடதாகவும், ராத்திரி தூங்கும் முன்னாடி பாக்குற கடைசி முகம் உன்னோடதாவும் இருக்கணும், என்றைக்கும், எப்போதும், ஆயுள் முழுசும்!நடக்குமா செல்லம்மா?

உச்சந்தலையில் பனிக்கட்டி உருகிவிழுந்த உணர்வு, அது உள்ளே உயிர் நாடி வரை சென்று சில்லென்று சிலிர்த்திட, இருதயம் கூட்டை விட்டு துள்ளி குதித்து அவனிடம் ஓடிவிட ஆவல் கொண்டது போல வேகமெடுத்தது. இன்ப அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்திருந்தாள் பூரணி.

https://www.youtube.com/watch?v=BSA0G5WH-2M

Word count: 1358
Date Published: 30 Nov 2021

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro