பாகம் 35

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

டாக்டர் சிவநேசன், அறுபது சொச்சம் வயது, சென்னை மாநகரின் மிக பிரபலமான மருத்துவர்களில் ஒருவர், சமூக ஆர்வலர், பல தொண்டு நிறுவனங்களாலும், அரசாங்கத்தாலும் பாராட்டுக்களையும், கௌரவங்களையும் பெற்ற நல்ல உள்ளம் படைத்த மனிதர்.

"கோகிலா உங்க பொண்ணுக்கு கை காயத்துக்கு தையல் போட்டிருக்கு, கொஞ்சம் ஆழம் தான். காலுல ரெண்டு விரலுல ஹேர்லைன் ஃபிராக்ச்சர். ஸப்போர்ட் குடுத்து கட்டு போட்டிருக்கு. விரலை அசைக்க கூடாது. ரெண்டு காயமுமே கவனமா இருக்கணும். மருந்து எழுதி குடுக்கறேன். மீதி விஷயம் கொஞ்சம் பேசணும்.."

"நாங்க வெளிய இருக்கோம்" நகர எத்தனித்த ஷர்மிளாவை கோகிலா தடுத்தார்.

"டாக்டர் இவங்கள்ளாமும் என்
பிள்ளைங்க தான். நீங்க சொல்லுங்க" ஷர்மிளாவை தோளோடு அணைத்துக்கொண்டார் கோகிலா.

"நீங்க பயப்பட ஒண்ணும் இல்லை ஷீ இஸ் ஃபைன். இன்னைக்கு ஏற்பட்ட காயங்கள் அதிக படியா ஒன் ஆர் டூ மன்த்துல ஆறிடும். ஆனா நான் சொல்ல வேண்டியது அவங்களோட பழைய பிரச்சினை பத்தி. இன்றைய சம்பவம் ஏற்படுத்தின அதிர்ச்சியால இருக்கலாம், கடந்த சில நாட்களா கொஞ்சம் கொஞ்சமா பழைய நினைவுகளை தூண்டும் விதமா சில சம்பவங்கள் நடந்ததாக சொல்றாங்க. அதுவும் இருக்கலாம். ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்ல இருந்து அன்னபூரணி ரிலீவ் ஆகிட்டு" வராங்க."
அனைவரும் நிம்மதி பெருமூச்செறிந்தனர்.
கோகிலாவக்கு சந்தோஷத்தில் லேசாக விம்மினார்.

"உங்க அப்பாவும் நல்லா இருக்காரு மா. நாங்க எதிர்பார்த்ததை விட டிரீட்மெண்டுக்கு நல்லா ஒத்துழைக்கிறாரு. கூடிய சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆயிடுவாரு. டோண்ட் வொரி. மெடிசன்ஸ் கரெக்டா எடு, நல்லா ஓய்வெடு. ஓகே!"

பின் செவிலியரிடம்,
"சிஸ்டர் பூரணியை டிஸ்சார்ஜ் பண்ண ஏற்பாடு பண்ணுங்க" மருத்துவ குறிப்பேட்டில் கையெழுத்திட்டு அவரிடம் கொடுத்துவிட்டு வெளியேறினார்.

~~~~

"இப்போவாவது என்ன நடந்துச்சுனு சொல்லு அன்னம்." கோகிலா மகள் அருகே உட்கார்ந்து கையை பிடித்துக் கொண்டார்.
அனைவரும் ஆர்வத்தோடும் பதட்டத்தோடும் அவளை பார்த்திருந்தனர்.

"மா நாம கிளம்பலாம். எங்கேஜ்மெண்டுக்கு லேட் ஆயிரும். போற வழியில நான் சொல்றேன்."

எல்லோரும் எதிர்ப்பு தெரிவிக்க,
"அக்கா நீங்களாச்சு புரிஞ்சுக்கோங்க.."
ஷர்மிளாவிடம் கெஞ்சினாள்.
வேறு வழியில்லாமல் எல்லோரும் புறப்பட்டனர்.

மருத்துவமனையை விட்டு வெளியேறும் முன், பிரகாஷ் எதிர்ப்பட்டான்.

"சார் நீங்க இங்க எப்படி?"
தங்கள் கல்லூரி சேர்மனை அடையாளம் கண்டு கொண்டாள் பூரணி. "மா சார் தான் எங்க காலேஜ் சேர்மன். சார் இவங்க என் அம்மா."

பிரகாஷ் அவருக்கு வணக்கம் தெரிவித்தான், மனதிற்குள்ளாக ஆயிரம் முறை மன்னிப்பு கோரியபடி.

"ஒன்ஸ் மோர், தாங்க்யூ வெரி மச் மிஸ்டர் பிரகாஷ்". விஷ்வா கைகுலுக்கி நன்றி தெரிவித்தான். இருவரும் பார்வையில் ஏதோ பரிமாறி கொண்டனர்.

"இவரு பிரகாஷ் நந்தகோபால், இளம் தொழிலதிபர். இவரோட மால் ப்ராஜக்ட்ல தான் அர்ஜுன் வர்க் பண்ணான். அன்னிக்கு சைட்ல நடந்த கலவரத்துல இவரு அர்ஜுனையும் காப்பாத்தி என்னையும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயி ஹெல்ப் பண்ணினார்."
விஷ்வா அறிமுகம் செய்து வைத்தான்.

"பிரகாஷ் சார் தாங்க்யூ. இவங்க ரெண்டுபேரையும் காப்பாத்தினதுக்கு."
பூரணி கரம் குவித்தாள்.

"நன்றிலாம் எதுக்கு? சக மனுஷனுக்கு உதவுறது மனுஷத்தன்மை."

"ஆக்ச்சுவலி, இவரு உனக்கு பிரதர் ஸோ அண்ணானு கூப்பிடு" விஷ்வாவை நோக்கி அத்தனை தலைகளும் திரும்பியது அதிர்ச்சியில்.

"பேபி உனக்கு அடிபட்டதுல பய மெண்டல் ஆயிட்டனோ?" வீல்சேரை தள்ளிக்கொண்டு வந்த ஷர்மிளா குனிந்து பூரணியின் காதில் கிசுகிசுத்தாள்.

"என்னடா வி மண்டையில அடி பட்ருச்சா?"

"இல்லடி குள்ஸு இன்னைக்கு பிரகாஷ் தான ப்ளட் டொனேட் பண்ணி பூரணியை காப்பாத்தினாரு"
திடுக்கிட்ட பூரணி இருவரையும் மாறி மாறி பார்த்தாள். ஆம் என தலையசைத்து அவளது ஐயத்தை போக்கினான் விஷ்வா.

"பிரகாஷ் அப்ப ரத்த சொந்தமாகிட்டாரு தான? அதான் அண்ணன்னு சொன்னேன்."

பிரகாஷ் ஓசையெழுப்பாமல் நிம்மதி பெருமூச்செறிந்தான்.

"அர்ஜுன் இல்லாத குறையை தீர்த்துட்டான்டி ஷம்ஸ். அவன் மூஞ்சியை பாரு, ஒரு நிமிஷம் எல்லாரையும் குழப்பிட்டான்."
சலிப்போடு தலையிலடித்துக் கொண்டு ஆதர்ஷ் அங்கலாய்க்க விஷ்வா பெருமையாக சிரித்தான்.

"நீ சொல்றது கரெக்ட். தாங்க்யூ பிரகாஷ் அண்ணா.
நான் உங்களை அண்ணானு கூப்பிடலமா சார்?"

வீல் சேரில் அமர்ந்திருந்த பூரணி கேட்டதும் அவள் அருகே புன்னகைத்தபடி குனிந்தான் பிரகாஷ். அவன் முகத்தில் அதுவரை நிறைந்திருந்த வெறுமை விலகி ஒரு ஆனந்தம் குடிகொண்டதை விஷ்வா உணர்ந்தான்.

"நான் தான் காலேஜ் பங்ஷன்ல சொல்லிட்டேனே அன்னபூரணி நீங்க எல்லாரும் என் சிஸ்டர்ஸ்னு. ஸோ தாராளமா கூப்பிடலாம். God Bless you and get well soon. இப்ப எப்படி இருக்கு?

"பெட்டர் சார்" நாக்கை கடித்துக்கொண்டு "சாரி அண்ணா"

"தாங்க்ஸ் மிஸ்டர் பிரகாஷ்" கோகிலா கரம் குவித்து நன்றி தெரிவிக்க

"ஐயோ மா நீங்க வயசுல பெரியவங்க என்ன இது..." அவர் கையை கீழே இறக்கினான். பிரகாஷ் புன்னகைத்தபடி நன்றியுடன் பார்த்தான் விஷ்வாவை.

"ஆமா எப்படி ரிட்டர்ன் போறீங்க? நானும் அர்ஜுன் எங்கேஜ்மென்ட்க்கு தான் வரேன். Any help? டிரைவர் இருக்காரு, டிராப் பண்ண சொல்லவா?"

"இல்லை பிரகாஷ், ஷர்மிளா வண்டி இருக்கு. தாங்கஸ்."

"ஓகே! அன்னபூரணி கவனமா இரு. என்ன? கொஞ்ச நேரத்துல மீட் பண்ணுவோம். வரேன் ஆன்டி.." கோகிலாவிற்கு வணக்கம் தெரிவித்தான்.

"தாங்க்ஸ் பிரகாஷண்ணா. Bye" புன்னகைத்து அவர்களிடமிருந்து விடைபெற்றான்.

⚜⚜⚜

காரில் பயணிக்கும்போது தனக்கு விபத்து நேர்ந்த விபரத்தை கூறினாள் பூரணி.

"எனக்கு அடிபட காரணம் ஷ்ரவன்."
விஷ்வா முணுமுணுப்பாக அவனை கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்தான்.

"என்ன ஃப்ளவர் பேபி சொல்ற?
அந்த dog என்ன பண்ணிச்சு? சீக்கிரம் சொல்லு.
அவனையெல்லாம் சங்கீதாவை அடிச்சான் பாரு அப்பவே சுட்டு தள்கொன்னுருக்கணும்."

"ஏய் ரிவால்வர் ரீட்டா கம்முனு இருடி." விஷ்வா அவளை அதட்டினான்.
"நீ சொல்லு பூரணி"

"அம்மா மதியம் அப்பாவை பத்தி உங்ககிட்ட பேசிட்டு திரும்பினப்ப ஷ்ரவன் அங்க நின்னுட்டு இருந்தான். என்கிட்ட பேசணும்னு காலைலேருந்தே சுத்தி சுத்தி வந்தான்."

~~~மதியம் நடந்தவை~~~

டைனிங்க் ஹால் பின்புறம் கைகழுவும் இடம் அருகே நின்று அன்னையுடன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள் பூரணி. பேசி முடித்து திரும்பவும் ஷ்ரவன் நின்றிருந்தான்.

"டோண்ட் வொரி, நான் நீ பேசினதை கேக்கலை" என்றான். "ப்ளீஸ் டென் மினிட்ஸ் ஆப் யுவர் டைம் பூரணி. கெஞ்சி கேக்கறேன்".

"என்ன விஷயம் ஷ்ரவன்?" கைபேசியை kurti பாக்கெட்டில் வைத்தபடி. "சொல்லு"
இயல்பாகவே பெண்களுக்கு தலைதூக்கும் பாதுகாப்பு உணர்வின் உந்துதலால் இரண்டடி விலகி நின்றாள்.

"Ahhh.. Thank God! பூரணி நான் டைரக்டா கேக்றேன், வில் யு மேரி மீ?" என்றான் பொட்டில் அடித்தாற்போல்.

"வாட்?" என அதிர்ந்தவள் "நோ, நோ, இல்லை முடியாது. இதை பத்தி தான் என்கிட்ட பேசணும்னு சொன்னியா நேத்துலேருந்து..."
அவன் ஆமோதிப்பாய் தலையாட்ட, நம்ப முடியாமல் திகைத்தாள்.

"உனக்கு என்னை பத்தி என்ன தெரியும்? எதை வச்சு நான் உன் லைஃப் பார்ட்னரா வரணும்னு முடிவு பண்ணின?"

"நீ அழகா இருக்க, படிச்சிருக்க. உன்னோட traditional and calm nature எனக்கு பிடிச்சிருக்கு. என் ஃபேமிலில எல்லாருக்கும் உன்னை பிடிச்சிருக்கு. நான் எதாவது ஃபாரினரை கல்யாணம் பண்ணிடுவேனு என் வீட்டுல பயந்தாங்க. எனக்கும் அங்க இருக்கற கேர்ள்ஸ் பிடிக்கலை, அங்க உள்ள இந்தியன்ஸ் கூட ரொம்ப அந்த கல்ச்சர்ல மாறி போயிட்டாங்க, independant, feminist... blah, blah, too much shit you know." அசட்டையாக தோளை குலுக்கினான்.

"இங்க கேர்ள்ஸ் நிறைய பேர், நான் என்.ஆர்.ஐ., அப்படீன்னவுடனே அவங்க பிஹேவியர் மாறுது. ரொம்ப ஓவர் மாடர்னா காமிச்சுக்குறது, ஆர் ஜஸ்ட் வெறுத்து ஒதுக்குறது. நீ வித்தியாசமா இருக்க...."

சைகை காட்டி அவனை நிறுத்த சொல்லி ஆழ்ந்து பெருமூச்செறிந்தாள்.
"அப்ப ரெண்டு நாளா நான் உன்னை அவாய்ட் பண்றது உனக்கு புரியலையா?"

"You don't have boyfriends so you felt shy and uncomfortable near me. It's ok. நோ ப்ராப்ளம்."
மீண்டும் அசட்டையாக தோளை குலுக்கினான்.
"பூரணி டேக் யுவர் டைம். யோசிச்சு பதில் சொல்லு."

"நீ புரிஞ்சும் புரியாத போல நடிக்கிறியா இல்ல உண்மையிலேயே அத்தனை முட்டாளா?"

கூர்மையாக அவனை பார்த்தாள், அவனது திமிரான உடல் மொழி எரிச்சலை தந்தது.

"எனக்கு boyfriends இல்லாம இருக்கலாம். ஆனால் நல்ல கண்ணியமான ஆண்கள் நண்பர்களா இருக்காங்க." அர்த்தம் விளங்காமல் விழித்தான்.

"I have male friends who are gentlemen." சுரீரென்றது அவனுக்கு.

"எனக்கு டைம் வேண்டாம் ஷ்ரவன். உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது. எனக்கு உன்னை பிடிக்கலை. ஒரு நண்பனா கூட உன்னை ஏத்துக்க முடியாது. ஏன் தெரியுமா? நீ பெண்களை மதிக்க தெரியாதவன். உன்னை விட சின்னவ, உன் சொந்த தங்கச்சி அவளையே நீ மோசமா நடத்துறியே அப்ப உன் மனைவியா வரப் போற பொண்ணை எப்படி நடத்துவ?"

முகம் இறுகி, கண்களில் கோபம் குடியேறியது பூரணிக்கு.
"You are a bloody chauvinist. நான் அடி, திட்டு வாங்கிட்டு அடங்கி போற மெகா சீரியல் ஹீரோயின் இல்லை. ஒரு வேளை நீ அதை தான் என்கிட்ட எதிர்பார்த்தியோ? உன் கேரக்டரும் என் கேரக்டரும் வேற. இதை மறந்துரு".

அதற்குமேல் பேச எதுவும் இல்லை என்பதாக திரும்பி நின்றாள். இதயம் படபடத்து கொண்டிருந்தது. சினம் தலைக்கேற, அவனை கன்னம் வீங்க அறைந்தால் என்ன என்று தோன்றியது. கல்யாணி பாட்டி நிச்சயம் அமர்க்களப்படுத்தி நிச்சயதார்த்த விழாவை நிறுத்திவிடுவார். அர்ஜுன் சுகந்திக்காகவேனும் பொறுமை காக்கவேண்டும்.
அங்கிருந்து செல்ல வேண்டுமெனில் அவனை கடந்து தான் செல்ல வேண்டும்.

"பாட்டி உன் பேரன்ட்ஸ் கிட்ட பொண்ணு கேக்க போறாங்க. அவங்க ஒத்துகிட்டா, அப்ப நீ என்ன பண்ணுவ? Middle class Indian parents dream to have NRI மாப்பிள்ளை, அந்த luxury, money green card etc etc.. "

அவன் குரலில் இருந்த ஏளனம் அவளுக்கு சினமூட்டியது.

இப்போது அறைந்தால் தவறே இல்லை என தோன்றியது.

"என்னை பெத்தவங்க பத்தி நீ எப்படி இவ்வளவு கீழ் தரமா எடை போடலாம்? அவங்க மட்டும் இல்லை, மிடில் க்ளாஸ் ஃபேமிலினா பணத்துக்காக எதுவும் செய்வாங்கன்னு நினைப்பா உனக்கு?"

உதட்டில் ஒரு பரிகாச புன்முறுவலோடு "அப்படின்னா உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் மிஸ்டர் ஷ்ரவன், என் விருப்பம் தான் முக்கியம் என் பேரன்ட்ஸ்ஸுக்கு. அவங்க மட்டுமில்லை இந்த மூணு வீட்டுல எல்லாருமே பசங்களோட நியாயமான விருப்பத்துக்கு தான் முக்கியத்துவம் குடுப்பாங்க. ஸோ நீயோ உன் பாட்டியோ, இல்லை அந்த அமெரிக்கன் பிரெஸிடெண்ட்டே வந்து பொண்ணு கேட்டா கூட எங்க வீட்டுல என் விருப்பத்தை மீறி எதுவும் நடக்காது. இந்த பேச்சை இதோடு விட்டுட்டா நல்லது. வழி விடு"

அவனை தவிர்த்துவிட்டு கடந்து செல்ல முயன்றாள், அவளது தோளைப்பற்றி தடுத்தான் ஷ்ரவன்.
"பூரணி நில்லு"

நெருப்பு பட்டது போல் துள்ளினாள் பூரணி. அவன் கையையை தட்டிவிட்டு கோபம் கொப்பளிக்க, விரலை நீட்டி எச்சரித்தாள்.

"Behave yourself Shravan! தொடாதேனு சொன்னேன்ல? உனக்கு அறிவில்லை? படிச்சவன் தானே? இவ்வளவு மோசமாக நடக்கறே? Get lost!"

வெறுப்பையும், கசப்பையும் உமிழந்தாள், ஆயினும் வார்த்தை வரம்பு மீறி வில்லை.

நிராகரிப்பை ஏற்கும் மனப்பக்குவமற்ற ஆண்களில் ஷ்ரவனும் ஒருவன். இதோடு அகம்பாவமும் பணத்திமிரும் இணைந்தால்?

அவளின் உதாசீனத்தில் அவன் தன்மானம் காயப்பட, அவள் கைப்பிடித்து இழுத்து பலவந்தமாக தன் அருகே கொண்டு வந்தான்.

இதயத்தில் அச்சம் நிறைந்து தேகமெங்கும் பரவி, நடுக்கம் எடுத்தது பூரணிக்கு.

"ஷ்ரவன் என்ன பண்ற? How dare you? விடு டா என்னை..."

அவள் திமிர, அவன் பிடி இறுகியது. அவன் உதட்டில் வக்கிரமான சிரிப்பு ஒன்று ஒட்டிக்கொண்ட அதே நேரம் தன் துப்பட்டா நழுவி தரையில் விழுவதை உணர்ந்து பதைபதைத்தாள் பூரணி. விழி விரிய அச்சத்தில் அவள் உடல் சில்லிட்டு உறைந்தது.

"உன் சம்மதம் எப்படி வேணா வாங்குவேன், புரியுதா?"

இரட்டை அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் வந்து விழுந்தன. அவளை இரண்டு கைகளாலும் பற்றி மேலும் அருகில் இழுத்தான், அவன் பார்வை அத்து மீறுவதை உணர்ந்தாள்.
அண்மையில் தெரிந்த அவனது முகம் வினாடி நேரத்தில் விகாரமானது.

Dejavu!

இதேபோல அத்துமீறி யாரோ தன்னை தொட்டதும், களங்கம் ஏற்படுத்த முயற்சித்ததும், நினைவு அடுக்குகளில் சேகரித்த படக்காட்சி போல ஓடியது பூரணியின் நினைவில். மிரள மிரள விழித்தாள்.
ஸ்தம்பித்தாள். செயலிழந்தாள்.

இடியென இறங்கியது தலைவலி, கண்பார்வையை மறைத்தது பூரணிக்கு.
தலையை சிலுப்பி, கண்ணை சிமிட்டி மீண்டும் பார்த்த பொழுது ஷ்ரவன் இருந்த இடத்தில் இப்போது அந்த நாற்பது வயது ஆண் நின்றிருந்தான். குழப்பத்தில் ஆழ்ந்தாள் பூரணி.

~~~~
Flashback ( ஐந்து வருடங்கள் முன் பூரணி தாக்கப்பட்ட சம்பவம்)

'என் உயிர் நண்பன்' என வாய்க்கு வாய் பரந்தாமனை சொன்ன அவர் தொழில் முறை நண்பன் பழிவாங்க எண்ணி அவளை சீரழிக்க முனைந்து விட்டான் குடி போதையில்.

'உன் பொண்ணை என் புள்ளைக்கு கட்டி வைடான்னு சொன்னா, மாட்டானாம். ரெண்டாந்தாரமா இருந்தா என்னடீ நீ குறைஞ்சா போயிடுவ?'

வலுக்கட்டாயமாக அவளை பிடித்து உலுக்கி கன்னத்தில் அறைந்தான்.

'சும்மா கேக்கலை. அவன் என்கிட்ட வாங்கின கடனுக்கு ஈடா தான் கேட்டேன். முடியாதாம். ஆம்பிளைடி என் புள்ளை. அவனை கட்டின மூதேவி, செத்து தொலைஞ்சிட்டா ஒரு புள்ளையை பெத்துட்டு. சொத்து பத்தோட அவனை கட்டிக்க கசக்குதா உனக்கு? ம்ம்ம்? உனக்கு பதினாறு, அவனுக்கு முப்பது.. எங்க ஆத்தா அப்பத்தாலாம் இப்படி தான கண்ணாலம கட்னாங்க? கொறைஞ்சா போய்ட்டாங்க? '

மீண்டும பளீரென அறைந்தான். தடுமாறினாள் பூரணி.

'அங்கிள் ப்ளீஸ்.. வேணாம் விட்ருங்க...'

'கட்டிகிறேனு சொல்டி. அவன் புள்ளையோட காதுகுத்துக்கு வந்தப்ப உன்னை பாத்து இஷ்டபட்டான். அதான் கெஞ்சினுருக்கேன்.'

பகீரென்றது அவளுக்கு.
அவள் கூந்தலை பற்றி உலுக்கினான்.

'என்ன ஹீரோயின் மாதிரி ஆக்டிங்க் குடுக்கற?'

வலியிலும் வேதனையிலும் அலறினாள் 'அப்பா.. பா ஹெலப் பண்ணுப்பா. பா... பா..'

பரந்தாமன் தடுமாறினார்.

'அந்த துரோகிக்கு சரக்கோட கொஞ்சம் போதை மருந்தை குடுத்திட்டேன். அவனால ஒரு ***ம் பு**க முடியாது' பெருமையாக இளித்தான். நாராசமாய் இருந்தது கேட்க.

'ஒழுங்கா மருவாதையா கட்டிவைனு சொன்னேன் பரந்தாமா... இப்பவும் ஒண்ணும் கெட்டு போவலை டி. என் மவனை கட்டிக்க. இல்லை உங்க எல்லாரையும் கொளுத்திடுவேன்.'

விஷ்வாவின் முகம் வந்து போனது அவளது மனதில். அவன் வந்துவிட மாட்டானா தன்னை காப்பாற்ற என ஏங்கினாள், பரிதவித்தாள்.

'இல்லை. மாட்டேன்.'

'சரி அப்ப இன்னொரு சாய்ஸ்..
இப்ப எனக்கும், அப்பறம் என் புள்ளைக்கு, ரெண்டு பேருக்கும் நீ *****யா இரு'!

விகாரமான பற்களை காட்டி சிரித்தான்.

எரிமலை குழம்பை அள்ளி அந்த பதின் பருவபெண்ணின் மீது ஊற்றியது போல துடித்தாள். அவளது துப்பட்டாவை களைந்து எறிந்தான்.

'ப்ளீஸ்... ப்ளீஸ் என்னை விடு' ஈனஸ்வரத்தில் அவள் கெஞ்சுகிறாள். அவன் நெருங்கி வந்துவிட்டான். போதையின் நெடியும், அவனது அருகாமையும் குமட்டியது. தன்னை விடுவித்துகொள்ள போராடினாள்.

அவளை காப்பாற்ற யாரும் இல்லை, பரந்தாமன் எழ முடியாமல் தடுமாறினார்.

யாரோ பின்னாலிருந்து அவனை தாக்குகிறார்கள், சராமாரியாக அடித்து துரத்திவிட்டது அந்த நிழல் உருவம். செய்வதறியாது சிலையாய் நின்றிருக்கிறாள். ஒரு வினாடி தாமதமாகியிருந்தால்...

'ஜானு.. ஜானு மா..' அவளை உலுக்கியது அந்த பரிச்சயமான முகம். செயலிழந்து நின்றவளை கன்னத்தில் தட்டி 'செல்லம்மா இங்க பாரு ஒண்ணும் இல்ல. நான் தான் டா உன் சிவா. இங்க பாரு மா...'

அவள் முகத்தை கைகுட்டையால் துடைத்து, அவளை தன்னோடு அணைத்து கொண்டான் ஒரு சில வினாடிகள்.

'வா அப்பவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம். வா சீக்கிரம்'.

இருவரும் பரந்தாமனை ஆளுக்கு ஒரு கையை பிடித்து தூக்கி நிறுத்தினர். அவர் ஏதோ சொல்ல முனைந்தார் அது புரியும் முன் பூரணியின் தலையில் ஒரு பலமான அடி. கண்கள் இருள, உலகம் படுவேகமாய் சுழன்றது.

~~~~ flashback ends~~~~

பளீரென அவள் கன்னத்தில் அறை விழுந்தது. சுதாரித்தவள் முன் ஷ்ரவன்.

"என்ன பயம் வந்துடுச்சா? அப்படியே freeze ஆகிட்ட? எல்லாம் சும்மா வாயடிக்க தான் லாயக்கு பொம்பளைங்க. ஒன்ஸ் ஒரு ஆம்பிளை தொட்டா அவ்வளவு தான்டி நீங்கள்ளாம், ஜஸ்ட் வேஸ்ட் மெட்டீரியல்".

இகழ்ந்து பேசும் போது பெண்கள் என்ற பொதுப்படையில் அன்னை, உடன்பிறந்தவள், தன் குடும்பத்து பெண்களும் அடக்கம் என்பது ஏனோ இந்த ஜென்மங்களுக்கு உறைப்பதில்லை?

அவளது செயலற்ற நிலையை தனக்கு சாதகமாக நினைத்த ஷ்ரவன், அவளை நெருங்கினான். அவளிடம் நெருக்கமாக நின்று, முகத்தில் முத்தம் வைப்பது போல பாவனை செய்து அதை கைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டான். அவனது எண்ண ஓட்டம் புரிவது போல் இருந்தது பூரணிக்கு.

"இந்த ஃபோட்டோ பப்ளிசிட்டி பண்ணா..." உரக்க சிரித்தான்.

'இல்லை பூரணி, இந்த முறை அவன் ஜெயிக்க கூடாது. இன்னொரு தரம் நீ உன் வாழ்க்கையை இழக்க கூடாது. தப்பிக்கணும். எப்படியாவது..'

அவளது உள்ளுணர்வு விழித்துக் கொள்ள, நெருக்கமான நிலையில் நின்றிருந்ததை தனக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்ள மூளை கட்டளை இட்டது. அவன் எதிர்பாரத போது தலையால் அவன் மூக்கில் இடித்து விட்டு, அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு, அவனை தள்ளி விட்டு, அவனது கைபேசியையும் தட்டிவிட்டு ஓடினாள். சில வினாடிகள் அவனுக்கு சித்தம் கலங்கியது போல் இருந்தது, தன்னை சுதாரித்து கொண்டவனது கைபேசி தூணில் மோதி சிதறியிருந்தது. ஆத்திரத்தில் இருக்கும் இடம் மறந்து அவளை விரட்டினான்.

பதட்டத்தில் உறவினர்கள் கூடியிருக்கும் ஹால் பக்கம் போகாமல் எதிர் திசையில், சமையல் மற்றும் டைனிங்க் ஹால் பின்புறம் ஓடினாள். பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தேங்கியிருந்த, நீரில் வழுக்கி கீழே விழ, வலது கணுக்கால் மடங்கி கொண்டது. அவளை நோக்கி வந்தான் ஷ்ரவன்.

"ஆ.ஆ..அம்மா" வலியில் துடித்தாள்.

"நான் உன்னை ஒண்ணும் பண்ணலை, என் கையை பிடிச்சு எழுந்திரு" அவள் முன் தன் கரத்தை நீட்டியபடி நின்றான். அவனை நிச்சயம் நம்புவதாக இல்லை அவள்.

இரண்டடி முன்னே வந்து, "ம்ம்.... கமான்."

மீண்டும் அவளருகே கையை நீட்டி பிடித்துக் கொள்ள வலியுருத்தினான்.

"இப்போ புரியுதா? Women are weak and stupid. என்னை எதிர்த்துகிட்டு ஓடுன என்ன ஆச்சு? என்னை மேரேஜ் பண்ணிக்கறேன்னு சொல்லு உன்னை நானே தூக்கிட்டு போய் என் செலவுல டிரீட்மெண்டு பண்றேன். இல்லைனா இங்கேயே கிட.." நக்கலாக தோளை குலுக்கினான்.

"ச்சீ..எவ்வளவு கேவலமான ஜென்மம் நீ. என்னை நீ காப்பாத்த வேண்டாம். முதல்ல போய் தொலை இங்கிருந்து"
ஆங்காரமாய் சீறினாள். காலில் வலி உயிர் பறிப்பதாய் இருந்தது.

அவளருகே மண்டியிட்டு அமர்ந்தான் அவளது கணுக்காலை பற்றினான்.
"இப்ப கூட உன்னை..."

அடுத்து பேச இயலாமல் வலியிலும் எரிச்சலிலும் அலற மட்டுமே முடிந்தது அவனால்.

"ஷிட்.. ஆ...ஆ.. ஐயோ... ஷிட் ஷிட்... என்னடி பண்ண? ஐயோ கண்ணு எரியுது".

பித்தளை பாத்திரம் துலக்க வைத்திருந்த சாம்பல், அரப்பு தூள் கலவையை அள்ளி அவன் முகத்தில் வீசியிருந்தாள் பூரணி.
அவன் வலியிலும் எரிச்சலிலும் துடிக்க, உட்கார்ந்தபடியே மெல்ல பின்னோக்கி நகர்ந்து சுவற்றை பற்றிகொண்டு எழுந்து நின்றாள். ஓசைபடாமல் அவனிடமிருந்து தப்பிக்க வழி தேட, ஸ்டோர் ரூம் கண்ணில் பட்டது. வலது கால் பாதம் வீங்க தொடங்கியிருந்தது. வலியை பொறுத்து கொண்டு வேகமாக ஸ்டோர் ரூமை அடைந்தாள்.
வேகமாய் உள்ளே ஒடிசென்று கதவை தாழிட, இருட்டில் எதன் மீதோ தடுக்கிவிட, கூரான முனையில் இடித்து கையில் காயம் ஆக, அவளது குர்தியும் மாட்டிக் கொண்டது. அதை விடுவிக்க போராடி இறுதியில் கிழிந்தது ஆடை. எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை.

சுவரோரமாய் சரிந்து அமர்ந்தாள். அயற்சியும் தாகமும் வாட்ட தலை சுற்றியது. ஷ்ரவன் விடாமல் அந்த அறை கதவை தட்டினான். பயந்து மூலையில் ஒடுங்கினாள் பூரணி ஓசைபடாமல் அழுதபடி. வியர்வையா, கண்ணீரா எதனால் என சொல்ல முடியாத அளவு ஆடை நனைந்து போயிருந்தது.

சற்று நேரத்தில் கதவு தட்டும் ஓசை அடங்கிவிட, வெளியே செல்வதா வேண்டாமா என யோசித்தபடி அமர்ந்திருந்தாள். கைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான அறிகுறியாக கிணுகிணுத்தது. சட்டென தைரியம் வந்தவளாய் குர்தியின் பாக்கெட்டிலிருந்து கேபேசியை எடுத்தாள்.

⚜⚜⚜

கார் மண்டபத்தை அடைந்த பொழுது, சரியாக மணி ஐந்து, ஆறு முப்பதுக்கு நிச்சயதார்த்தம். பரபரப்பாக தயாராகி கொண்டிருந்தனர் இரு வீட்டாரும்.

பூரணி லிஃப்டில் ஏறும் முன் அவர்களிடம் சில விஷயங்களை பேசினாள். மற்றவர்கள் மத்தியில் இந்த சம்பவத்தை பேசுவது உசிதமாகாது என்பதால் விஷ்வாவின் யோசனை படி இவர்கள் குடும்பத்தினர் உபயோகிக்காத ஒரு அறை இருந்தது அங்கே அனைவரையும் அழைத்து போய் உட்கார வைத்தான்.

இரண்டு குடும்பங்களும் அந்த அறையை குழப்பத்துடனே எட்டினர். அவர்கள் அந்த அறையில் நுழையும் போது பூரணியை சக்கர நாற்காலியில் பார்த்ததுமே அதிர்ந்தனர். அனைவரும் அவளை பதட்டமாய் சூழ்ந்து கொண்டு கேள்விகளால் துளைத்து எடுக்க, அதே நேரம் அவளை கண்டதும் அறையை விட்டு வெளியேற முயன்ற ஷ்ரவனை பிடித்து நிறுத்தினர் விஷ்வாவும் ஆதர்ஷும், அங்கே சலசலப்பு ஏற்பட்டதும் அனைவரின் கவனமும் அங்கே திரும்பியது.

ஷ்ரவனின் தந்தை குமார் "என்ன பா பண்றீங்க? அவனை விடுங்க, உங்க குடும்பத்து பிரச்சினைல எங்களுக்கு என்ன வேலை"?

"பிரச்சினை ஆனதே உங்க பையனால தான் அங்கிள்" பூரணியின் குரல் கேட்டு அனைவரும் அவளை பார்த்தனர்.

"என்ன சொல்ற நீ? அவன் என்ன செஞ்சான்?"

தன் காயங்களை காண்பித்து, "நான் இப்படி உட்கார்ந்திருக்க காரணமே ஷ்ரவன் தான்". அர்ஜுனும் சுகந்தியும் பூரணியின் இருபக்கமும் நின்றிருந்தனர்.

"உன்னை அவனுக்கு பொண்ணு கேட்க சொல்லி எங்க அம்மா சொன்னாங்க. உன்கிட்ட யாரும் பேச கூட இல்லை நீ என்னன்மோ அபாண்டமா சொல்ற?" என அவன் தந்தை பேச தொடங்கினார். ஷ்ரவனின் அன்னை பதிலேதும் பேசவில்லை.

"அவ பொய் சொல்றா, நான் அவகிட்ட பேசவே இல்லை இன்னிக்கு" ஷ்ரவன் நழுவ முயன்றான். அர்ஜுன் கோபத்தில் ஒரு அடி வைத்து முன்னே வர, பூரணி அவன் கைபற்றி தடுத்தாள்.

சங்கீதா முன் வந்து, "don't lie Shrav. நீ அக்காவை past two days ரொம்ப disturb பண்றே. இன்னிக்கு பூஜை finish பண்ணிட்டு, நீ அக்காகூட பேசின எனக்கு தெரியும். அக்கா டிஸ்டர்ப் பண்ணாத சொல்லியும் நீ கேக்கலை." தாவணியை கையில் முறுக்கி திருகியபடி தலையை கள்ளம் கபடமில்லாமல் சங்கீதா உண்மையை உறைத்தாள்.

அவள் பூரணிக்கு ஆதரவாய் பேசியதும் கல்யாணி அத்தை அவளை அடக்க முற்பட்டார்.
"ஏய் கழுதை பெரியவங்க பேசற இடத்துல நீ வாயை திறக்க கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல?"

சங்கீதாவிற்க்கு ஆதரவாய் அவள் அன்னை பேச, கல்யாணி அத்தை அவரை வசைபாடினார்.

"என்ன மூர்த்தி அத்தை குடும்பத்துக்கு இது தான் நீ மரியாதை தர்ற லட்சணமா?" அவரிடம் சீறினார்.

ஒவ்வொருவராய் இடை புகுந்து நியாயம் கேட்க, பூட்டிய அறையில் குழப்பமும் சப்தமும் ஓங்கி நின்றது.

"வாயை மூடுங்க எல்லாரும்" மூர்த்தியின் அதட்டலில் அறையே அதிர்ந்தது, அங்கு குழுமியிருந்த அனைவரையும் பார்வையால் அளந்தார்.

அந்த பார்வையில் இருந்த ஆளுமை, சினம் பல வருடங்கள் முன்பு வானர சேனை சிறு வயதில் கண்டது.

"என் சொல்லை மீறி யாராவது வாயை திறந்தீங்க.."

சரேலென இடுப்புவாரை உருவினார். (அதே பச்சை கலர் பட்டை வார் belt தான்)
அத்தனை பேருக்கும் சுவாசம் தொண்டைக்குள் அகப்பட்டது. பூரணி அர்ஜுன் கையை பயத்தில் இறுக பற்றிகொண்டாள்.

"அப்பறம் யாரு எவங்கன்னு பாக்க மாட்டேன்."
பெலட்டை சுருட்டிக்கொண்டு பூரணியின் அருகே வந்தார்.

"அன்னபூரணி என்ன நடந்தது? நீ பொய் சொல்லமாட்டேனு நான் நம்பறேன் தைரியமா சொல்லு".

எப்பொழுதும் அவரை கண்டு சிறிது பயம் கலந்த மரியாதை காரணமாக தயங்குபவள், தங்கு தடையின்றி நடந்த சம்பவத்தை தெளிவாக உரைத்தாள்.

"நோ! பொய்! அவ தான் என்கிட்ட ஃபிரண்ட்ஸா இருக்கணும்னு கேட்டா. நான் எதுவும் பண்ணலை. அமெரிக்கா மாப்பிள்ளை கட்டிக்கணும்னா என்ன வேணா பண்ணுவாங்க பொண்ணுங்கனு தெரியும் இவளும்..."
அவன் முடிக்கும் முன்பே "அம்மா" என்ற அவன் அலறல் கேட்டது.

அர்ஜுன் அவனை சராமாரியாக அறைந்து கொண்டிருந்தான்.

"யாரை பாத்து என்ன பேசறே, பொறுக்கி நாயே. அவ தங்கம் டா"

யாரும் அவனை தடுக்கவில்லை.

"உன்னையெல்லாம் வெட்டி போடணும் ராஸ்கல். கேக்க ஆளில்லைனு நினைப்பா? என் தங்கச்சிடா அவ. குழி தோண்டி புதைச்சிடுவேன். Bloody rogue!"

"அர்ச்சுணா..." வெறும் காற்றாக மட்டுமே வெளிவந்தது பூரணியின் குரல். சுகந்தியின் கைப்பற்றி இழுத்தாள் ஏதும் பேச இயலாமல்.

"அவன் அடிக்கட்டும் விடு. அவனோட இத்தனை வருஷத்து கோபம், இயலாமை எல்லாம் சேந்து வெளிய வருது."

அவளுக்கு நேர்ந்த ஆபத்தை அறிந்தது முதல் தன்னால் அதை தடுக்க இயலாமல் போனதை அவன் குற்ற உணர்ச்சியாகவே கருதி மருகி வந்தான்.

அதிர்ந்து போய் வாயடைத்து நின்றிருந்தனர் அனைவரும். அர்ஜுனுக்கு கோபப்பட தெரியும் என்பதை இதுவரை யாரும் அறிந்திருக்கவில்லை. சுதாரித்த ஷ்ரவனின் தந்தை அவனை தடுத்து விலக்கினார். விஷ்வா கோபத்தை கட்டுபடுத்தி கொண்டிருந்தான் மிகுந்த சிரமத்தோடு. தன்னவளை பார்த்தான், அவள் வேண்டாம் என மறுக்க கட்டுபடுத்தியபடி அமைதியாக நின்றான்.

கல்யாணி அத்தை ஆங்காரமாக, "மூர்த்தி என்ன இது கூப்பிட்டு வச்சு உன் அத்தையை அவமான படுத்தறியா? அதுவும் யாரோ ஊர் பேர் தெரியாதவளுக்காக".

"ஒரு பொண்ணுகிட்ட உங்க பேரன் நடந்துகிட்ட விதம் தவறா தோணாத நீங்க மானம் அவமானம் பத்தி பேசுறது வினோதமா இருக்கு."
காவேரி அவரை ஆழ்ந்து நோக்கினார்.

"மொதல்ல வயசு பொண்ணுங்க இருக்கற வீட்டுக்கு ஒரு பையனை அழைச்சிட்டு வரோமே அவனுக்கு நல்லது கெட்டது சொல்லி அழைச்சிட்டு வரணும்னு உங்களுக்கு தெரியாது?" யமுனா புகைந்தார்.
"ஏன் எங்க கார்த்தி கூட தான் இருக்கான் வீட்டுல அவனை பத்மா வைரமா வளத்துருக்கா அதான் உங்க பேத்தி இதுபோல குத்தம் சொல்ற நிலைமை வரலை. புரிஞ்சுக்கோங்க. செல்லம் குடுக்கறது வேற. நல்ல ஆம்பிளையா வளக்கறது வேற. உங்க ஈகோவால இன்னும் எத்தனை பேர் பாதிக்கபடணும்?"

"அவ யாரோ இல்லை மா, ஊரு பேரு தெரியாதவளும் இல்லை. பூரணி எங்க குடும்பத்து பொண்ணு. என் நண்பனோட பொண்ணு, நாலு வயசுலேருந்து அந்த பிள்ளை எங்க கண்ணு முன்னாடி வளர்ந்தவ, என் மகளுக்கும் அவளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எந்த பொண்ணுமே தன்னோட மானம் சம்பந்த பட்ட விஷயத்துல பொய் செல்லாது. அவளை பத்தி அனாவசியமா பேசாதீங்க. அதுவும் இல்லாம உங்க வீட்டு பையன் ரெண்டு நாளா அதிகபிரசங்கி தனமா நடந்துக்குறதை என் பொண்ணு சுகந்தி சொன்னா. நாங்க தான் சம்பந்தி வீட்டுகாரங்க, அதுவும் வெளிநாட்டுல இருந்த பையன் அந்த நாகரீகப்படி இருக்கான். நாசூக்காக சொன்னா புரிஞ்சுப்பான்னு பொறுமையா இருந்தோம். ஆனா இவ்வளவு கீழ்தரமா நடப்பான்னு நாங்க நினைக்கலை" என்றார் சுரேஷ்.

கல்யாணி அத்தை பதில் பேச வாயெடுத்தார்

"அத்தை நீங்க கொஞ்சம் பேசாம இருக்கீங்களா? என் பையனோட வாழ்க்கையை நான் பாத்துக்கறேன்" என முதல் முறையாக பேசினார் ஷ்ரவனின் அம்மா.

"உங்க எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கறேன்" கையெடுத்து கும்பிட்டார்.
ஷ்ரவன் அருகில் சென்றார்.

"பாட்டி உன் கிட்ட கல்யாணத்தை பத்தி என்ன சொன்னாங்க ஷ்ரவன்? உண்மையை பேசு" என்றவர் அவன் கையை பற்றி தன் தலையில் வைத்தார்.

"மா" என அதிர்ந்து கையை எடுத்தான்.

தலையை குனிந்தவன், "அவங்க சொல்ற பொண்ணை நான் கல்யாணம் பண்ணினா தான் எனக்கு சொத்து குடுக்கலாம்னு தாத்தா உயில் எழுதியிருக்கார்னு சொன்னாங்க. அந்த பொண்ணை மீட் பண்ணு அவளை எப்படியாவது சம்மதிக்க வை. இல்லைனா சொத்து இல்லைனு சொன்னாங்க. அப்பாவுக்கு ஆல்ரெடி பிஸினஸ் லாஸ்ல இருக்கு. அந்த பணம் வந்தா தான் அப்பா பிராப்ளத்துலேந்து தப்பிக்க முடியும். அதனால நான் அவ கிட்ட பேசி கன்வின்ஸ் பண்ண முயற்சி பண்ணேன். ஆனா அவ என்னை அவாய்ட் பண்ணிட்டே இருந்தா. அவ என்னை ரிஜெக்ட் பண்ணினா, என்னை திட்டினா, she insulted me mom. எனக்கு கோவம் வந்தது. அதனால ஜஸ்ட் அவளை பயமுறுத்த தான் அப்படி பண்ண டிரை பண்ணேன்..."

அடுத்த வார்த்தை அவன் பேசும் முன் அவனை அறைந்தார்.

அத்தையிடம் திரும்பி,
"சொத்து உங்க பிள்ளைக்கே குடுங்க, உங்க விருப்பபடி அவருக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிவெச்சிட்டு. நான் அவரை விவாகரத்து பண்றேன். எனக்கு என் பொண்ணு போதும்"

அத்தனை பேரும் அதிர்ந்தனர்.

"காதலிச்சு கல்யாணம் பண்ண காரணத்தால என்னை இத்தனை வருஷமாகியும் நீங்க ஏத்துக்கலை. உங்க புள்ளை, பேரன் ரெண்டு பேரையும் அகம்பாவத்தின் மொத்த உருவமா வளர்த்து வச்சிருக்கீங்க. என்னை கொடுமைபடுத்தினது போதாதுன்னு இதோ, உங்க ரத்தம், உங்க பேத்தி இவளையும் டார்ச்சர் பண்றீங்க. என் மேல இருக்குற வெறுப்புனால அண்ணன் தங்கைக்குள்ள சண்டையை கிளப்பிவிட்டு இந்த குழந்தையை கஷ்டபடுத்தறீங்க. இதெல்லாம் தப்பனு தெரிஞ்சும் உங்க பையன் வாயை தொறக்காம இருக்காரு இந்த பாழா போன சொத்துக்காக."

அழுது சிவந்த கண்களை துடைத்துக் கொண்டார். கணவனிடம் திரும்பினார்.

"என் பிள்ளை சின்ன தப்பு தான் செய்யறான் திருந்திடுவான்னு நினைச்சேன். ஆனா எப்ப ஒரு பொண்ணோட மானத்தோட விளையாடற அளவுக்கு அவன் கீழ் தரமா இறங்கிட்டானோ, அதுக்கு நீங்களும் தூண்டுகோலா இருக்கீங்களோ அதுக்கு மேல நம்பிக்கை இல்லை. அவன் என் பிள்ளை இல்லை. இனி இந்த வீட்டுல எனக்கும் என் பொண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை."

மகனின் பக்கம் திரும்பியவர் "இன்னைக்கு அந்த பொண்ணுகிட்ட அத்துமீற நினைச்ச நீ நாளைக்கு இந்த குழந்தைகிட்ட இல்லை என்கிட்ட தப்பா நடக்க முயற்சிக்கமாட்டேனு என்ன நிச்சயம்? நாங்களும் பொண்ணு தானே"?

"மாம்" அலறினான் ஷ்ரவன்.

விக்கித்து போயினர் அனைவரும்.
"இத்தனை வருஷம் உங்க குடும்பத்துல நான் பட்டதெல்லாம் போதும். டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பறேன். எனக்கு ஒரு பைசா உங்ககிட்டேந்து வேண்டாம். உங்க தொடர்பே வேண்டாம். நீயும் அம்மானு சொல்லிட்டு வராத என்னை பார்க்க"
ஷ்ரவனிடம் உரைத்துவிட்டு மகளின் கைபற்றிக் கொண்டார்.

பூரணியின் அருகே வந்து மண்டியிட்டு அமர்ந்தவர்,
"நீ ஏன் மா அழற? என்னை மன்னிச்சிரு உன் கஷ்டத்துக்கு நானும் காரணமாயிட்டேன். நீ தைரியத்தை கைவிடாத, இதோ என் கீதா மாதிரி பொண்ணுங்களுக்கு ஒரு எடுத்துகாட்டா இரு". சுகந்தியிடமும் மற்றவர்களிடமும் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு வேண்டினார்.

கோகிலாவிடம், "மன்னிச்சுடுங்கன்னு சொல்லி உங்க வலியை குறைக்க முடியாது ஆனா... வேற எதுவும்.." விம்மினார்.

கோகிலா அவரது கையைப்பற்றினார் ஆதரவாய்.

"ஷ்ரவன் பேர்ல போலீஸ் கேஸ் குடுக்கணும்னா குடுங்க நாங்க ரெண்டு பேரும் வந்து கண்டிப்பா சாட்சி சொல்றோம்"
அங்கிருந்து சங்கீதாவை அழைத்து கொண்டு புறப்பட்டார்.

சற்று நேரத்திற்கெல்லாம் கல்யாணி அத்தை, ஷ்ரவன் அவன் தந்தை அனைவரும் புறப்பட்டனர்.

நடந்த சம்பவத்தின் தாக்கத்திலிருந்து யாராலும் மீள முடியவில்லை. அனைவருமே செய்வதறியாது சிலையாய் சமைந்திருந்தனர்.

"என்னை மன்னிச்சுடுங்க இது இவ்வளவு பெரிய குழப்பமாகி அவங்க குடும்பம் பிரியற அளவுக்கு ஆகும்னு நான் நினைக்கலை. ஆரம்பத்துல நான் பெரிசு படுத்தாததுக்கு காரணம் அர்ச்சுணா இந்த மாதிரி எதாவது பண்ணி நிச்சயதார்த்தம் நின்னுடுமோனு பயந்து தான். ஆனா இப்ப.."

பூரணி பேசமுடியாமல் விசும்பினாள். சுகந்தி அவளை அணைத்து கொண்டாள்.

அவளருகே வந்து நின்ற மூர்த்தி,
"ஏன் பூரணி இத்தனை வருஷத்துல நீ எங்க எல்லாரையும் புரிஞ்சுகிட்டது அவ்வளவு தானா? என்னிக்காச்சும் நம்ம வீட்டுலையோ, சுரேஷ் வீட்டுலையோ பொண்ணுங்க மனசு கஷ்டபடுற மாதிரி நடந்திருக்கோமோ?"

ஆதூரமாய் அவள் கன்னத்தை வருடினார் யமுனா.
"ஏன்டி அப்படி நீ சொல்லி, ரகளையாகி நிச்சயம் நின்னு போனாலும் என்ன? நாங்க யாரும் வருத்தபட மாட்டோம். ஆம்பிளை புள்ளைங்கள சரியா வளர்த்திருக்கோம்னு பெருமை தான் படுவோம். புரியுதா? பைத்தியக்காரி. ஏதோ அந்த அபிராமி புண்ணியத்துல பெருசா எதுவும் நடக்கலை. நினைச்சு பாத்தாவே குலை நடுங்குது."

அவள் தலையை வருடி உடல்நிலை பற்றி விசாரித்தார். அனைவரின் கவனமும் அதில் திரும்பிவிட்டது.

"சித்தப்பா" விஷ்வாவின் குரல் கேட்ட அனைவரும் திரும்ப, "நேரமாகுது, எல்லாரும் ரெடியாகணும். கெஸ்டெல்லாம் வர ஆரம்பிச்சுருவாங்க" என நினைவு படுத்தினான். அனைவரும் கலைந்தனர்.

யமுனா சட்டென நின்றார், "பத்மா பசங்க இங்கேயே ரெடி ஆகட்டும், அந்த ரூம்ல எல்லாம் வம்பு பேசுவாங்க. நீங்க இருங்க, நாங்க போய் உங்க பையை எடுத்துட்டு வரோம். பத்மா, கோகிலா வாங்க."



Date published: 17 Nov 2022
Word count: 3233

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro