💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-10

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

தாரணியின் நினைவுகளில் இருந்து மீட்டெடுத்தது அவளது அலைபேசியின் ஒலி.

வருணாக இருக்குமோ என்று நடுங்கும் கரத்தினில் எடுக்க மேலும் அதிர்ச்சியோடு வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

அலைபேசியில் எந்த எண்ணுமே இல்லை ஆனால் அழைப்பொலி வந்திருந்தது.

சுற்றி முற்றி பயத்தோடு பார்க்க, அவளின் கையில் இருந்த தாலியை யாரோ வாங்குவது போல் இருக்க, விடாமல் இறுக பிடித்து கொண்டாள்.

"கட்டியவன் வேண்டாம் எனும்பொழுது எதற்கு இது...?" என்று குரல் மட்டும் வர, உள்ளுக்குள் பயமிருந்தாலும் வெளிக்காட்டாமல், "இது எனக்கு வேணும் இல்ல வேணாம் அது நான் முடிவு பண்ணனும்... நீ என்ன கொன்னே போட்டாலும் என்னோட தாலியை தரமாட்டேன்." என்று இன்னும் இறுக பற்றிக்கொண்டாள்.

"வேற ஒருத்தனை கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லியாச்சு. கல்யாணம் முடிச்சு போகும்போதும் உன்கூட எடுத்துட்டு போவியா? இல்ல அதற்கு பிறகு இதுக்கு என்ன மதிப்பு? எப்போ கல்யாணம் பண்ணிக்க போறேன்ன்னு சொன்னியோ அப்பவே இதுக்கு எந்த மதிப்பும் இல்ல. இனி இது உன்கிட்ட இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதை அழிச்சுடு" என்று பிடுங்கியது.

ஒரு நொடி ஸ்தம்பித்து போனாள். 'அது கூறியது எல்லாம் உண்மை தானே...? மதனுடன் திருமணம் முடிந்து போக நேர்ந்தால் இதற்கு எந்த அர்த்தமும் இல்லையே? அவள் வருணின் மீது கொண்ட காதலும் சமாதியாக வேண்டுமல்லவா?' என்று கண்ணீரில் கரைந்தவள் வெகுநேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.

அலைபேசியில் தன் பெற்றோர்களை அழைத்து இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை. இதோடு இந்த பேச்சை நிறுத்த வேண்டும் என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாள்.

காரணங்கள் எவ்வளவு கேட்டும் கூறவில்லை. தங்கள் இருவருக்குள்ளும் சரி வராது. அப்படியே திருமணம் நடத்தி வைத்தாலும் இருவரும் மகிழ்ச்சியாக வாழமாட்டோம் அதனால் வற்புறுத்த வேண்டாம் என்றாள்.

அதற்கு மேல் அவர்களால் மகளை வற்புறுத்த முடியவில்லை.

"சரி இந்த மாப்பிள்ளை வேண்டாம். ஆனா உனக்கும் வயசு ஏறிட்டே போகுது. உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சு கொடுக்கணும்னு எங்களுக்கு ஆசை இருக்காதா?" என்று கண்கலங்கினர்.

அவளின் அம்மாவோ, "இங்க பாருடி. இவ்ளோ நாள் நீ சொன்னதுக்கெல்லாம் ஆடினோம். ஆனா இனி அப்படியெல்லாம் விட முடியாது. ஒண்ணு உனக்கு கல்யாணம் நடக்கணும் இல்ல எங்களுக்கு கருமாதி நடக்கணும். உனக்கு மூணு மாசம் தான் டைம். அதுக்குள்ள உனக்கு கல்யாணம் நடக்கணும். நீ யாரைவது விரும்பினாலும் பையன் நல்லவனா இருக்கும் பட்சத்தில் எங்களுக்கு ஒகே தான்.  எதுவா இருந்தாலும் சீக்கிரம் முடிவெடு... அவ்ளோ தான் சொல்லிட்டேன்." என்று போனை வைத்தார்.

அன்னையின் பேச்சில் அதிர்ந்து நின்றவள். "என்னால வேற ஒரு வாழ்க்கையை ஏத்துக்க முடியுமா?.... முடியவே முடியாது...  முடியாது... அவர் வேணா எனக்கு துரோகம் செஞ்சுருக்கலாம். ஆனா நான் உண்மையா தானே விரும்பினேன். இந்த தாலியையும் ஆசையாசையா  கட்டிக்கிட்டேன். என்னால அவரை மறக்கவும் முடியலை வேறு ஒரு வாழ்க்கையை ஏத்துக்கவும் முடியலை. வாழற ஆசையே போயிடுச்சு... என் அம்மா அப்பாவுக்காக தான் இந்த உயிரை வச்சுட்டு நடைபிணமா சுத்திட்டு இருக்கேன்" என்று தரையில் சரிந்து அமர்ந்து முகம் புதைத்து அழுதாள்.

"அப்போ அவரோடவே வாழ்க்கையை அமைச்சுக்கோ" என்றது அக்குரல்.

"உனக்கு என்ன தெரியம் என்னை பத்தி. யாரு நீ முதல்ல என் வாழ்க்கைக்கு வழி சொல்ல... எனக்கு துரோகம் செஞ்சுருக்கார். அவரோட எப்படி நான் வாழமுடியும்? ஒரு முறை வாழ்ந்திருந்தா தானே திரும்பி வாழறத்துக்கு... அதுக்கு நீ என்னை கொன்னே போடலாம்" என்று கத்தினாள்.

"உன்னையே உயிரா நேசிச்சிருக்கார்... என்ன சூழ்நிலை என்ன நடந்திருக்கும் எதுவுமே கேட்க தோணலையா உனக்கு... உனக்கு ஒரு முறை தான் வாழ்க்கை வழி காட்டும். நல்லா யோசிச்சு அதை நல்ல விதமா அமைச்சுக்குறதும் அமைச்சுக்காததும் உன் கிட்ட தான் இருக்கு." என்ற குரலின் வார்த்தைகளில் கோபமும் ஆற்றாமையும் சேர்ந்து சோர்ந்து போனாள்.

எதுவும் பேசாமல் அமைதியாய் அழத்தொடங்கினாள். அப்படியே தரையில் உறங்கியும் போனாள்.

மறுநாள் காலை பத்து மணி ஆகியும் எழாமல் உறங்கிக் கொண்டிருந்தவளை அவளின் அலைபேசி ஒலி தான் எழுப்பியது.

எழுந்தவள் போனில் யார் என்று பார்க்க, மதன் என்ற பெயரை பார்த்ததும் புரிந்து போனது எதற்காக கூப்பிடுகிறான் என்று??

அவன் என்ன பேசப்போகிறான் என்றும் தெரியும். எடுக்க பிடிக்காமல் எழுந்து சென்று அலுவலகம் செல்ல தயாரானாள்.

ஏற்கனவே இன்று தாமதமாகியதால் அவசர அவசரமாக கிளம்பினாள்.

நெஞ்சை அழுத்தும் பாரத்தில் பசித்தாலும் சாப்பிட தோன்றாமல் வீட்டை பூட்டிக்கொண்டு வேகமாய் வெளியேறினாள்.

பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றவள் பேருந்திற்காக காத்திருக்க... தூரத்தில் மதனின் கார் அவளை நோக்கி வருவதை கண்டவள் பதட்டமானாள்.

வேகமாய் அருகில் வந்த ஆட்டோவில் ஏறினாள்.

அலுவலக வாசலில் ஆட்டோ நிறுத்தியதும் வேகமாய் இறங்கியவள் ஒரு நொடியும் தாமதியாது உள்ளே நுழைந்தாள்.

எதிரே வந்த மேனேஜர், "தாரணி மா... என்னம்மா இது வரைக்கும் நீ லேட்டா வந்ததில்லையே?? உடம்பு இன்னும் சரியாகலையா?" என்று அக்கறையாய் விசாரிக்க, லேசாய் புன்னகைத்து, "அதெல்லாம் இப்போ பரவால்ல சார். கொஞ்சம் டயர்டா இருக்கு. அவ்ளோ தான்.." என்றாள்.

"சரிம்மா... நாம போய் பார்த்துட்டு வந்த இன்வெஸ்டரெ நம்ம கம்பனிய வாங்க முடிவு பண்ணிட்டார்" என்று சிரித்தார்.

"என்ன சார் சொல்றிங்க?" என்றாள் அதிர்ச்சியாக.

"ஆமாம்மா. அந்த இன்வெஸ்டர் ஓகே சொல்லிட்டார்டா நம்ம கம்பெனி சேர்ஸ் வாங்க" என்றார் மகிழ்ச்சியாய்.

ஏற்கெனவே இது அவள் யூகித்தது தான். எனவே அவள் முடிவெடுத்ததை வேகமாய் செயல்படுத்த தொடங்கினாள்.

"அதுவுமில்லம்மா... நம்ம கம்பெனியோட 90% ஷேர அவரே வாங்கிக்கிறேன்னு சொல்லி இன்னைக்கு காலைல சைன் ஆகிடுச்சும்மா" என்று பெரிய இடியாய் இறக்கினார்.

'வருண் நான் நினைச்சித விட  நீங்க ரொம்ப வேகமா போறீங்க...' என்று நினைத்தவள்.

"சந்தோஷம் சார்" என்று நடந்தாள்.

'என்ன நடந்தாலும் என்கிட்ட வரமுடியாது உன்னால... வரவும் விடமாட்டேன்' என்று மனதிற்குள் புழுங்கியவள் வேகமாய் தன் அறைக்கு சென்று வெள்ளை காகிதம் ஒன்றை எடுத்து ராஜினாமா கடிதத்தை எழுத தொடங்கினாள்.

எழுதி முடித்ததும், உள்ளே எப்படி செல்வது என்று குழப்பமாய் இருந்தது. 'எப்படியும் போயிருக்க மாட்டான்... இப்போ என்ன பண்றது?' என்று யோசித்தாள்.

வருண் உள்ளே இருக்கும் பொழுது எப்படி பழைய முதலாளியிடம் கடிதத்தை கொடுப்பது என்று யோசித்தாள்.

கொடுக்க முடியாது என்று முடிவெடுத்தவள் உடல்நிலை சரியில்லை என்று மீண்டும் விடுமுறையில் வெளியேறினாள்.

எப்படியும் மதன் இருக்க மாட்டான் என்று முடிவு செய்து வீட்டிற்கு சென்றவள் தன் துணி மணிகளை சூட்கேஸில் அடுக்கி வீட்லிருக்கும் பொருட்களை ஏற கட்டினாள்.

*******

"எவ்ளோ திமிர் இருக்கும் அந்த கழுதைக்கு அவ என்னை வேணாம்னு சொல்றதுகா இவ்ளோ வேலை செஞ்சு இத்தனை வருஷம் காத்திருந்தேன். விடமாட்டேன். நான் என்ன நினைச்சு அவங்க குடும்பத்தோட உறவாடி அவளை கட்டிக்க நினைச்சேனோ அது நடந்தே ஆகணும். நீ தான்டி என் பொண்டாட்டி கைக்கு கிடைச்ச பொக்கிஷத்தை அவ்ளோ சீக்கிரம் விட்ருவேனா??

உனக்கு பிடிக்கலைன்னாலும் உன்னை கடத்தியாவது எனக்கு சொந்தமாக்கிக்குவேன்டி." என்று அடிபட்ட புலியாய் உருமிக் கொண்டிருந்தான் மதன்.

"டேய் அவங்க பெரிய இடம் வேண்டாம்டா" என்று கூறிய நண்பனை எரித்துவிடுவது போல் முறைத்தான்.

"அதுக்காகவா டா மூணு வருஷத்துக்கு முன்ன அந்த ஊருக்கு போனேன். அவ அண்ணன்கூட கஷ்டப்பட்டு பிரென்ட்  ஆனேன். அவன் நம்புற மாதிரி நல்லவனா நடிச்சேன். அவங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு அவ அண்ணனுக்கு தான் பெஸ்ட் பிரென்ட் னு காட்டிக்கிட்டேன்." என்று அங்கிருந்த டேபிளில் ஓங்கி குத்தினான்.

கண்ணாடி துண்டுகள் அந்த அறை முழுவதும் சிதறி சுவற்றில் தெறிக்க, அவன் கரத்தில் கண்ணாடி துண்டு கிழித்து குருதி கிழே கொட்டிக் கொண்டிருந்தது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro