💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-17

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"அதெல்லாம் ஒன்னுமில்லையே. நான் போட்டுக்குறேன்... ஆனா, நீ முதல்ல ஷர்ட் போட்டு காட்டு... அப்புறம் நான் போட்டுக்குறேன்." என்றான்.

"நான் எப்படிடா போட முடியும்?" என்றாள் பதட்டமாக.

"அதெல்லாம் எனக்கு தெரியாது சும்மா ட்ரெஸ் மேலயே போட்டு காட்டு. அப்புறம் நான் போடறேன்." என்று சிரித்தான் குறும்பாக.

"டேய்.. ரொம்ப தான் பண்ற? அதெல்லாம் போட முடியாது. ஒழுங்கா போடு." என்று மிரட்டினாள்.

"சரி விடு. நீ போடலைனா நான் போட்டுக்க மாட்டேன். என்னைக்கு நீ போட்றயோ அப்போ நான் போட்டுக்குறேன். அதுவரைக்கும் பத்திரமா வச்சுக்குறேன்." என்றான் வருண்.

"அடேய். ரொம்ப படுத்துறடா நீ. இன்னைக்கு உன் பிறந்த நாளாச்சேன்னு பார்க்குறேன். இல்லைன்னு வை. அவளோ தான். கொடுத்து தொலை. என் உசுரை வாங்குற?" என்று அவனை வசைபாடிக் கொண்டே அவள் அணிந்திருந்த சுடிதாரின் மேலே சட்டையை போடும் அழகை ரசித்து கொண்டிருந்தான் வருண்.

"ஹேய் உன் கலருக்கு இந்த ஷர்ட் ரொம்ப நல்லாருக்கு. எத்தனை நாள் ஷர்ட் போடுன்னு சொல்லிருக்கேன்? நீ கேட்கவே இல்லை. உன்னை ஷர்ட்ல பார்க்கணும்னு ரொம்ப நாளா ஆசை. அதான் இன்னைக்கு பார்த்துட்டேன். சரி சரி. சீக்கிரம் கழட்டி கொடு. நான் போட்டு காட்றேன்." என்றவனை பிறந்தநாள் என்றும் பாராமல்  போட்டு தள்ளும் அளவுக்கு கோவம் வந்தாலும் எதுவும் செய்யாமல், "நல்லா தான இருக்க? எல்லா எங்கையாவது கீழ விழுந்துட்டு வந்துட்டியா டா லூசு பயலே. இதுக்கு ஏன்டா இவ்வல்வு நேரம் என் உசுரை வாங்கின? போட்டு ரெண்டு செக்கண்ட் கூட ஆகலை அறிவுக்கெட்டவனே." என்று திட்டிக்கொண்டே கழட்டி கொடுத்தாள்.

"சரி சரி. ரொம்ப திட்டாத பாப்பா. மாமா பாவம்." என்றான் பாவமாக.

"யாரு பாப்பா? யாரு பாவம்?" என்றாள் ஒன்றும் புரியாமல்.

"அதிலென்னடி உனக்கு சந்தேகம்? நீ என் செல்லக்குட்டி மட்டும் தான் எனக்கு பாப்பா. நான் தான் உன்னை கட்டிக்க போற மாமா." என்றான் விழிகளை சிமிட்டிக்கொண்டே.

அவனை ஒரு பார்வை பார்த்தவள், "கன்பார்மா எங்கயோ விழுந்து வாரி மண்டைய உடைச்சுகிட்டு தான்டா வந்துருக்க. இந்தா இப்பயாவது ஷர்ட்ட போட போறியா இல்லையா?" என்றாள் கடுப்பாக.

"அதெப்படி போடாமல் இருப்பேன்." என்று ஷர்ட்டை போட போனவன்.

என்ன நினைத்தானோ தெரியவில்லை.

"செல்வா ஒரு பத்து நிமிஷம் மட்டும் இங்க வெய்ட் பன்றியா?" என்றான் ஆர்வமாக.

"எதுக்குடா?" என்றாள் எதுவும் புரியாமல்.

"இருடி வரேன்." என்று வேகமாய் சட்டையோடு ஓடினான்.

"அய்யோ பிறந்தநாள் அதுவுமா இந்த பிள்ளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே?" என்று தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள் தாரணி.

சொன்னது போல பத்து நிமிடம் கழித்து அவளிடம் வந்து கொண்டிருந்தான் வருண்.

"டேய் ஷர்ட் சூப்பரா இருக்குடா. ஆனா, நீ முதல்ல இந்த பேண்ட் போடலையே?" என்றாள் சந்தேகமாய்.

"அப்போ மாமாவை முழுசா சைட் அடிச்சுருக்க?" என்று குறும்பாய் சிரித்தான்.

"அடேய் நல்லவனே, முடியலை இன்னைக்கு என்னவோ ஆகிடுச்சு உனக்கு." என்று தலையில் அடித்து கொண்டாள் அவனின் செல்லமான செல்வதாரணி.

"ஹ்ம் அது ஒண்ணுமில்லை செல்லம். என் ஃப்ரெண்ட் இங்க ஹாஸ்டல்ல தான் இருக்கான். அதான் அவன் ரூம்கு போய்ட்டு கொஞ்சம் ஃபிரெஷ் ஆகிட்டு வந்தேன். பேண்ட் அவனுக்கு நான் வாங்கி கொடுத்ததுல ஒண்ணு. சொன்னா கேட்கவே இல்லை. இன்னும் இத நான் போடவே இல்லை. புதுசு தான். இந்த ஷர்ட்கு இது தான் நல்லா இருக்கும்னு தொல்லை செஞ்சு போட வச்சுட்டான்." என்று சிரித்தான் வருண்.

"ஓஹ் அப்படியா? இதுவும் நல்லா இருக்குடா." என்றாள் தாரணி. 

"சரிடி. போலாமா?" என்றான் வருண்.

"இருடா." என்று தான் பையில் இருந்த சிறு பெட்டியை எடுத்து கொடுத்தாள்.

"நான் இப்போ தான் படிக்கிறேன். சோ என்னால முடிஞ்ச சின்ன பரிசு. அடுத்த வருஷம் பாரு வேற பெரிய பரிசு தரேன்." என்றவளை விழுங்குவது போல் பார்த்து வைத்தான் வருண்.

"என்னடா அப்படி பார்க்கிற? பிரிச்சு பாரு." என்றாள் தாரணி.

"இப்போ மட்டும் ஏன் பொண்டாட்டியா இருந்த உனக்கு என்னவெல்லாமோ பரிசு கொடுத்திருப்பேன்." என்று பெருமூச்சு விட்டான்.

"அதனாலென்னடா எப்போ நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சேனோ... அந்த நிமிஷத்துலர்ந்து நான் உன்னோட வைப் தான் டா.  இப்ப எதுக்கு அதெல்லாம்.? முதல்ல அதை பிரிச்சு பாரு." என்று சிரித்தாள்.

ஆசையாய் பிரித்து பார்த்தவன் விழிகள் மின்ன தொடங்கின.

"ரொம்ப அழகா இருக்குடி." என்றான் உற்சாகமாக.

"சரி போட்டுக்கோ." என்றாள்.

"ஹம்... நீ தான்டி போட்டு விடனும். " வெள்ளி மோதிரத்தை அவளிடம் தந்தான்.

அது ஒரு ஆன்டிக் வெள்ளி ஒற்றை கல் மோதிரம். மிக அழகான கலைநயத்துடன் செய்திருந்தார்கள்.

அவனின் மோதிர விரலை பிடித்து மெதுவாய் போட்டு விட்டாள். அவனின் விழிகள் அவளையும் அவளின் விழிகள் அவன் கரத்தில் இருந்த மோதிரத்தையும் பருகின.

"எனக்கு எவ்ளோ காஸ்ட்லியா கொடுத்திருந்தால் இவ்ளோ ஹாஃபியா இருந்திருக்காது குட்டிமா. அவ்ளோ சந்தோஷமா இருக்குடி. ஐ லவ் யூ." என்று அகமகிழ சிரித்தான்.

"சரி உன் சுடிதாரும் என் ஷர்ட் கலர்லயே இருக்கே?" என்றான் குறும்பாக.

"உன் ஷர்ட் எடுக்கும் போது அதுக்கு மாட்சிங்கா எனக்கு சுடியும் எடுத்துகிட்டேன்." என்று புன்னகைத்தாள்.

"இந்த ட்ரெஸ்ல ஆள கொல்றடி. வேணும்னே என்னை டெம்ப்ட் பண்ண தானே போட்டுட்டு வந்த?" என்றான் விழிகளில் குறும்பு மின்ன.

"என்னது உன்னை டெம்ப்ட் பன்னவா? திமிரா? என்னைக்கும் அதுமாறியெல்லாம் யோசிக்க மாட்டேன். ஒருவேளை, " என்று நிறுத்தினாள்.

"ஒருவேளை..." அவளோடு அவனும் இழுக்க.

"ஒரு வேளை உன் மனைவியா இருக்கும்போது வேணா செய்வேன்னு நினைக்கிறேன்." என்றாள் வெட்கம் கலந்த குரலில் தலை குனிந்தபடி.

"செல்வா... இங்கிருந்து நேரா கோவிலுக்கு போய் உங்கழுத்தில தாலி கட்டினாலும் கட்டிடுவேண்டி மாமாவை இம்ச பண்ணாத..." என்றான் குழைவாக.

சத்தமாக சிரித்தவள், "சரி போலாமா?" என்று கொண்டவள் கரத்துடன் தன் கரத்தை கோர்த்து கொண்டு நடக்க தொடங்கினான்.

அவள் எவ்வளவு கூறியும் கேட்காமல் ஒரு துணி கடையின் முன் வண்டியை நிறுத்தினான் வருண்.

"இப்போ இங்க எதுக்கு வந்து இருக்கோம்னு சொல்றியா?" என்றாள் கடுப்பாக.

"ஹம் நம்ம கல்யாணத்துக்கு ட்ரெஸ் எடுக்க." என்றான் ஸ்டைலாக.

"என்னது?" என்றாள் தாரணி அதிர்ச்சியாக.

   

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro