💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-19

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"எனக்கும் அவனுக்கும் இப்போ புதுசா ஒரு கணக்கு முளைச்சிருக்கு மாமா. அதோட மூலகாரணம் நீங்க சொல்ல போறதோட தொடர்பிருக்கலாம்னு எனக்கு சந்தேகம் இருக்கு." என்றான் வருண்.

"என்ன மாப்ள ஏதாவது பிரச்சனையா?" என சாதாரணமாய் விசாரிக்கும் தன் தந்தையை விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தாள் தாரணி.

அவளின் விழி அசைவை கண்டுகொண்டவன் இதழ்கள் இதமாய் பூத்தது.

"அதெல்லாம் ஒன்னுமில்லை. இனி எல்லா பிரச்னையும் நான் பார்த்துக்குறேன். நீங்க கவலைப்படாதீங்க. முதல்ல அந்த மதன் எப்படி உங்களுக்கு அறிமுகம் ஆனான்? சொல்லுங்க." என்றான் வருண்.

அவனின் கேள்வியில் அவரின் விழிகள் கலங்குவதை பார்த்தவன் திடுக்கிட்டு, "என்னாச்சு மாமா? ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?" என்றான்.

"அதெல்லாம் ஒன்னுமில்லை. என் பையன் மூலமா தான் அவன் எனக்கு தெரியும்." என்றார்.

"என்ன அண்ணாவா?" என்றாள் தாரணி உடனே.

"ஹ்ம் ஆமாம்மா. நாலு வருஷத்துக்கு முன்ன ஒருநாள் உங்க அண்ணனோட பிறந்தநாள் அன்னைக்கு அவனோட வீட்டுக்கு வந்தான்.

இவன் என்கூட படிச்சவன் பா. பேரு மதன்னு அறிமுகம் செஞ்சான்.

அதோட மாசத்துக்கு ரெண்டு மூணு தடவை வீட்டுக்கு வருவான் இந்த மதன். பழக்க வழக்கம் எல்லாம் ரொம்ப நல்லவன் மாதிரி மரியாதையோட நடந்துப்பான். எனக்கும் உங்கம்மாக்கும் அவனோட கேரக்டர் பிடிச்சிருந்தது.

ஒரு ஆறு மாசம் போனப்புறம் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பிசினஸ் ஸ்டார்ட் பண்ண போறேன்னு சொன்னாங்க.

ஏற்கனவே நமக்கு இருக்க சொத்துக்களையும் பரம்பரை பிஸினஸை பார்த்துகவுமே நேரம் பத்தலை. அதனால இது சரிவராதுன்னு தோணுச்சு. அதுவும் பார்ட்னர் ஷிப் வச்சு பிஸ்னெஸ் ஆரம்பிக்க இப்போ எந்த அவசியமும் இல்ல.

எனக்கென்னவோ அது சரியா படலை. அதனால வேணாம்னு சொன்னேன்." என்று நிறுத்தினார்.

"அப்பா நான் அதுவரை அவரை பார்த்ததில்லையே?" என்றாள் தாரணி.

"நீ மாஸ்டர் டிகிரி காக சென்னைல இருந்ததால பார்த்துருக்க வாய்பில்லைடா. நடுவில நீ ரெண்டு மூணு முறை நீ வந்தப்போ அவன் வரலை. அப்புறமும் படிப்பு முடிஞ்சு நீ வந்த, ஆனா என்ன நடந்ததுன்னு தெரியலை இங்க இருக்க மாட்டேன்னு அடம் பிடிச்சு சென்னைக்கு வந்துட்ட.

இருந்தாலும் உங்கண்ணன் உன் மேல் ரொம்ப உயிரா இருந்தான் இல்லையா... என்ன பண்ணான் தெரியுமா? இத்தனை நாளா நீ இருந்த வீடை, நீ அங்க போறதுக்கு முன்னாடியே உன் பேர்ல விலைக்கு வாங்கிட்டான். அது தெரிஞ்சா நீ வேற எங்கேயாவது போக போறேன்னு உன்கிட்ட குறைஞ்ச வாடகை வாங்க சொன்னான். நீ வேலை பார்த்த கம்பெனியும் அவன் பிரெண்டோட அப்பாது தான். அதனால தான் உன்னை தைரியமா இங்க தங்க வச்சான். உனக்கு தெரியாமயே உன்னை பாதுகாக்க ஆட்களை போட்டான். எல்லாம் போச்சு... அவன் போனதும் எல்லாமே போச்சு." என்றதும் வருண் தாரணி இருவரின் விழிகளும் ஒரு நொடி தீண்டி சென்றிட, கவனித்தாலும் கண்டு கொள்ளாமல் மேற்கொண்டு கூற தொடங்கினார்.

"நான் வேண்டாம்னு தடுத்ததும் என்னை  எப்படியோ பேசி சமாளிச்சு கம்பெனியும் ஆரம்பிச்சுட்டாங்க. உங்கண்ணன் பேருக்கு தான் பார்ட்னர் ஆனா பிசினஸ் முழுக்க அந்த மதன் கைல தான் இருந்தது.

உங்க அண்ணனோட நடவடிக்கைல திடீர்னு ஏகப்பட்ட மாற்றம். ஆள் எப்பவும் ரொம்ப சோர்வாவே இருந்தான். சோகமாவும் ஏதோ யோசனையாவே இருந்தான்.

என்னன்னு எவ்ளோ கேட்டும் பதில் சொல்லலை. மாசத்துக்கு ரெண்டு, மூணு நாள் மட்டும் வந்துட்டு இருந்த மதன் உங்க அண்ணனை காரணம் காட்டி பதினஞ்சு இருபது நாள் நம்ப வீட்ல தங்க ஆரம்பிச்சான்.

உங்க அண்ணனும் எதுவும் சொல்லலை." என்றார் கண்ணீருடன்.

"என்னப்பா இவ்ளோ நடந்திருக்கு? நான் கேட்டப்ப எதுவுமே சொல்லையே பா." என்றாள் அழுது கொண்டே.

எதுவும் பேசாமல் அவளையே பார்த்திருந்த வருண் தன் நெஞ்சோடு அணைத்து கொண்டு, "அழாதடா.." என்றான் கரகரத்த குரலில்.

எதுவும் பேசாமல் அவனிடம் இருந்து விலகியவள், அவனை முறைத்துக்கொண்டே, "அப்புறம் என்னாச்சு சொல்லுங்கப்பா." என்றாள்.

"திடிர்னு  ஒரு நாள் அவன் வீட்டுக்கு வரவே இழக்க. உங்க அம்மா ரொம்ப பயந்துட்டா. எல்லா இடத்துலையும் தேடி பார்த்தோம் எங்கயுமே காணோம். அவனோட ரூம்ல இந்த லெட்டர் மட்டும் தான் இருந்தது." என்று ஒரு கடிதத்தை கொடுத்தார்.

வேகமாய் வாங்கி அதை படித்தாள்.

"அன்புள்ள அப்பாவுக்கு,

எனக்கு கொஞ்ச நாளவே மனசு சரியில்ல. என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கே தெரியல. அதனால தான் உங்ககிட்ட சொல்லி உங்களையும் அம்மாவையும்  பயமுறுத்த வேணாம்னு சொல்லலை. பாப்பாவை இதுல சேர்க்காதீங்க. மூணு பேரும் ஜாக்கிரதையா இருங்க. நான் போறேன். என்னை தேட வேண்டாம்." என்று இருந்தது.

படித்தவள் துயரம் தாளாமல் வாய்விட்டு அழ, மெதுவாய் அவளை அணைத்துக்கொண்டு முதுகை வருடிவிட்டான் வருண்.

அவளிடம் இருந்த கடிதத்தை மறுபடியும் மறுபடியும் படித்து பார்த்தவன் சில நொடிகள் அதையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான்.

"மாமா.. இந்த லெட்டர் யார்கிட்டையாவது காட்டினிங்களா?" என்றான் சந்தேகமாய்.

"இந்த லெட்டரை அவன் ரூமில் இருந்திய எடுத்து வந்து கொடுத்ததே, மதன் தான்." என்றதும் வேகமாய் எழுந்தவன் குளியாளரைக்கு சென்று அந்த கடிதத்தை தண்ணீரில் நனைத்து வந்தான்.

"என்ன மாப்ள இப்படி பண்ணிட்டீங்க?" என்றார் கோபமாய்.

"அறிவிருக்கா உனக்கு?" என்று கத்தினாள் தாரணி.

"ரெண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருக்கிங்களா?" என்றான் சத்தமாய்.

அந்த கடிதத்தை மேசையின் மேல் வைத்தவன்.

"இங்க பாருங்க அவர் நமக்கு ஏதோ மெஸேஜ் சொல்ல ட்ரை பண்ணிருக்காரு." என்றான்.

இருவரும் ஒன்றும் புரியாமல் பார்க்கவும்,

"இங்க பாருங்க ஒரு சில வார்த்தைக்கு கிழ கோடு கிழிச்சிருக்கு. ஆனா அது சாதாரணமா தெரியாது. ஏன்னா அவர் சோப்ல கோடு கிழிச்சிருக்கார். தண்ணில நனைந்தா தான் தெரியும்." என்று அந்த வார்த்தைகளை படிக்க முயற்சித்தான்.

"அப்பா பாப்பாவை மதன்கிட்ட சேர்க்காதீங்க. மூணு பேரும் ஜாக்கிரதையா இருங்க." என்று படித்தான்.

"மூணு வருஷத்துக்கு முந்தியே எங்களுக்கு சொல்லிருக்கான். எங்களுக்கு தான் தெரியலை." என்றார் கண்ணீரோடு.

"அவன் தான் கடத்திட்டு அவரை மிரட்டி எழுத வச்சிருக்கணும்னு நினைக்கிறேன்." என்றான் வருண்.

"அப்போ அண்ணாக்கு என்ன ஆச்சு? அவர் எங்கேயோ போய்ட்டார்னு மூணு வருஷமா பைத்தியகாரி மாதிரி தேடிட்டு இருக்கேன்." என்றாள் கண்ணீரோடு தாரணி.

"நாம இப்போ எதுவுமே எடுத்தோம் கவுத்தோம்னு செய்ய முடியாது.ஒரு வேளை உங்க அண்ணன் உயிரோட இருந்தா அவன் உயிருக்கே ஆபத்தாகிடும். தாரணி நான் உன்கிட்ட சில விஷயம் சொல்லணும்." என்று சங்கீதாவின் காதல் கதையும் அவளின் காதலன் இந்த மதன் தான் நிஷன் என்ற பெயர் மாற்றி ஆள் மாறாட்டம் செய்தது என்று அனைத்தையும் கூறினான்.

"அப்போ நீ எப்படி அவங்களை..." என்று பேச முடியாமல் நா தழுதழுத்தது.

"சொல்றேன்." என்றதும்.

"மாப்ள கொஞ்ச நேரம் நா வெளிய இருக்கேன்." என்று எழுந்தார் தாரணியின் அப்பா.

"இல்ல மாமா. இருங்க. இன்னும் கொஞ்சம் பேசணும். " என்றான் வருண்.

"பேசுங்க மாப்ள. ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு வரேன்." என்று வெளியேறினார்.

அவர் வெளியே சென்றதும், வேகமாய் தன் மனைவியை இறுக்கமாய் அணைத்து கொண்டவன், "என் வாழ்க்கைலையும் நம்ம எல்லார் வாழ்க்கைலையும் இவ்ளோ நடந்திருக்கு. அதுக்கான டார்கெட் நீ தாண்டி. உன்னை டார்கெட்டா வச்சு தான் இவ்ளோ நடந்திருக்கு தாரு." என்றான்.

"என்ன சொல்ற நீ? நான் என்ன பண்ணேன்?" என்று முறைத்தாள் அவனிடம் இருந்து திமிறிக்கொண்டு.

"ஏய் சண்டைக்கோழி ரெண்டு நிமிஷம் அமைதியா இருடி. மூணு வருஷம் நீ இல்லாம தவிச்சுருக்கேன். அதுக்கு இந்த நெருக்கம் தேவை ப்ளீஸ் டி." என்றான் இறுக்கத்தை தளர்த்தாமல்.

அவனின் கெஞ்சல் மொழியில் கட்டுண்டவள் போல், அமைதியானாள் அவனின் ராட்சசி.

"தாரும்மா.. நா சங்கிய கல்யாணம் பண்ணவும் நீ தாண்டி காரணம். மாமா இப்போ சொன்னதை வச்சும் உங்க அண்ணன் எழுதின லெட்டர்லர்ந்தும் நல்லா தெரிஞ்சுடுச்சு." என்று அவளின் சங்கு கழுத்தில் இதழ் பதித்து ஆழ்ந்து சுவாசிக்க தொடங்கினான்.

அவனின் இதழ் பட்ட இடம் குருகுறுத்தாலும், உடனே சுதாரித்துக்கொண்டு, "நீ என்ன உளர்றன்னு ஒன்னும் புரியல." என்றாள் விலகாமல் கோபமாய்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro