💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-31

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"ஹ்ம்... " என்று பெரு மூச்சு விட்டவள் ஒரு நொடி விழிமூடி யோசித்து வருணை பார்த்தாள்.

"வருண். நீ இந்த பக்கம் வா. நான் வண்டி ஒட்றேன்." என்றாள் தாரணி.

"ஏன் என்னாச்சு? இங்க என்ன நடக்குது? எனக்கு எதுவுமே புரியலை." என்றான் வருண் பதட்டமாய்.

"வருண்... இப்போ எதுவும் சொல்ல முடியாது. நீங்க இங்க வாங்க. வண்டி ரொம்ப ரொம்ப ஸ்லோவா போகுது ஏன்?" என்றாள்.

"அக்கா..." என்ற சங்கீதாவிடம்

"சங்கீ... இப்போ எதுவுமே பேசாத. நான் அந்த போய் வண்டி ஓட்ட ஆரம்பிச்ச பிறகு... சொல்லு." என்று இடம் மாறினாள்.

அவள் ஓட்ட தொடங்கியதும் வண்டி மெதுவாக நகர்ந்தாலும் வண்டியை அழுத்தி கொண்டிருந்த பாரம் குறைந்தது போல் இருந்தது.

"சங்கீ... இப்போ சொல்லு. ஏதாவது மாற்றங்கள் இருக்கா?" என்றாள் தாரணி பயம் கலந்த ஆர்வத்துடன்.

"அக்கா! நம்ம இந்த எல்லைக்குள்ள நுழைஞ்சதும் இருபத்தைந்து ஆத்மாக்கள் மேல வண்டியை சுத்திக்கிட்டாங்க. மாமா ஓட்டும் போது எல்லாமே எல்லா ஆத்மாக்களுமே வண்டி மேலேயே ஒட்டிட்டு வந்ததுங்க. இவ்ளோ ஏன் மாமா பக்கத்துல இருந்து வண்டியை ஒட்ட விடாம கூட செய்துதுங்க." என்றதும் வருண் பதறி, "என்னது ஆத்மாக்களா? தாரு முதல்ல வண்டியை திருப்பு. இங்க இவ்ளோ பெரிய ஆபத்து இருக்கும்னு தெரியாம வந்துட்டோம். உனக்கு ஏதாவது பிரச்னை வரப்போகுது. போயிடலாம் டா." என்றான் கெஞ்சலாய் தாரணியின் பாதுகாப்பை நினைத்து பயந்தபடி.

"மாமா... அப்படி மட்டும் செய்திங்கன்னா ரொம்ப பெரிய பிரச்சனையாகும்." என்றாள் சங்கீ.

"என்ன சங்கீ சொல்ற? இவ்ளோ பெரிய பிரச்னைல வந்து சிக்கிருக்கும் போது திரும்பி போகாம என்ன பண்றது?" என்றான்.

"சங்கீ? இப்போ அந்த ஆத்மாக்கள் என்ன பண்றாங்க?" என்றாள் தாரணி.

"ஆச்சர்யம் தான் கா. நீங்க வண்டிய ஓட்ட ஆரம்பிச்சதும் அவங்க இதுலர்ந்து இறங்கிட்டாங்க. இறங்கினவங்க நம்ம வண்டி முன்ன வரிசையா  இரண்டு பக்கமும் உங்களை பார்த்துக்கிட்டே போறாங்க." என்றாள் சங்கீ.

"என்ன சொல்ற சங்கீ? யாரையாவது ஹெல்ப்க்கு கூப்பிடலாம்." போனை எடுக்கவும்... அதை வேகமாக பிடுங்கிய தாரணி "அப்படி எதுவும் பண்ண கூடாது. பண்ணவும் முடியாது வருண். இப்போ நாம அவங்க கண்ட்ரோல் ல இருக்கோம்." என்றாள் தாரணி.

"அக்கா... அவங்க எல்லோருமே உங்களை பார்த்து ஆனந்த படறாங்க. பூ மாதிரி ஏதோ உங்க நோக்கி தூவிட்டே போறாங்க. இவங்க எல்லாம் யாரு? உங்களுக்கு தெரிஞ்சுருக்கு அதான் அமைதியா இருக்கிங்க?" என்று கேட்டாள் சங்கீதா.

"ஆமா சங்கீ. இங்க என்ன நடக்கும் எதுவும் எனக்கும் தெரியாது. ஆனா இங்க எனக்காக கடந்த எட்டு தலைமுறையா இவங்க எல்லோரும் காத்துட்டு இருக்காங்கன்னு தெரியும்." லேசான புன்னகையோடு.

"என்னது எட்டு தலை முறையா? தாரு நீ என்ன சொல்ற? எனக்கு ஒன்னும் புரியலையே?" என்று தலையை பிடித்து கொண்டான் வருண்.

அவன் தலையை ஆதுரமாய் தடவி, "வரு... இவங்க வம்சத்துல எட்டு தலை முறைக்கும் சேர்த்து பிறந்த ஒரே பெண் குழந்தை நான் மட்டும் தான். அதான் வம்சத்தை தழைக்க வந்த பெண் குழந்தையை பார்க்காம எங்க ஆத்மா சாந்தி அடையாதுன்னு இந்த எல்லைக்குள்ளையே காத்திட்டு இருந்தாங்க. எங்க குடும்பத்தை சேர்ந்தவங்க தவிர வேற யாரும் இந்த எல்லைக்குள்ள நாங்க நினைக்காம வரமுடியாது." என்றாள் தாரணி.

"அப்போ நீ ஏற்கனவே இங்க வந்துருக்கியா?" என்றான் வருண்.

"இல்ல இதான் முதல் முறை. நானே நினைச்சாலும் என்னால இங்க வர முடியாது. இப்போ தான் அதுக்கான நேரம் வந்துருக்கு." என்றாள் லேசாக முகம் சிவக்க.

'அய்யோ இங்க பேய்ங்களா எங்களை சுத்தி டான்ஸ் ஆட்டிட்டு இருக்குங்க... எந்த நிமிஷம் என்ன நடக்குமோன்னு தெரியலைன்னு குலை நடுங்குது. உயிருக்கே உத்திரவாதம் இல்லைன்னு எனக்கு இங்க பயத்துல உடம்பெல்லாம் நடுங்குது. இதுல இவ வேற நேரம் காலம் தெரியாம இப்போ எதுக்கு வெட்க பட்றா?' என்று தலையில் அடித்து கொண்டான் வருண்.

"அதோ நம்ம மாளிகை தெரியுது பாருங்க." என்று தாரணி மகிழ்வுடன் கூறவும் திரும்பி பார்த்தவனின் விழிகள் வெளியேவந்து தெரித்து விழுந்து விடும் போல் இருந்தது.

வானை தொடும் அந்த கால அரண்மனைகள் என்று கேள்வி பட்டும் புத்தகங்களில் படித்தும் இருக்கிறான். இன்று தான் விண்ணை முட்டிடும் அளவு உயர்ந்து நிற்கும் மாளிகையை கண்ணில் காண்கிறான்.

அரண்மனையை சுற்றி கருங்கற்களால் ஆன கோட்டை உயர்ந்து நின்று இருந்தது.

வாகனம் மெதுவாக வாயிலின் முன் சென்று நிற்க மாளிகையே அதிரும் சத்தம் ஒன்று கேட்க இருவரும் நடுங்கி விட்டனர்.

"அக்கா பயப்படாதீங்க. அவங்க எல்லோரும் நீங்க இங்க வந்துருக்குறதை கை தட்டி கொண்டாடுறாங்க." என்றாள் சங்கீ.

இருவரும் அரண்மையின் முன் காரில் இருந்து இறங்கி நின்றனர்.

வருணின் விழிகள் தான் அரண்மனையின் அழகையும் அவர்களின் கட்டிட திறமையும் வியந்து பார்த்து கொண்டிருந்தான்.

அரண்மனையின் நுழைவு கட்டடமானது தமிழக பாரப்பரியத்தின்படி கட்டப்பட்டிருந்தது. அங்கே மரவேலைப்பாடுகளுடன் கூடிய இரட்டைக் மரக்கதவும் கருங்கல் துணையுடன் இருந்தது. இந்தக் கதவில் நூற்றி இருபது வகைத் தாமரைகள் செதுக்கப்பட்டிருந்தன.

"வருண்" என்றாள் பதட்டமாக.

"என்னடா?" என்றான் தோளோடு சேர்த்தணைத்து.

"நாம இப்போ உள்ள போகணும்." என்றாள் அவன் முகம் பார்த்து.

"போகலாம்." என்றான் அவனும்.

"எனக்கு பயமா இருக்கு." என்றாள் லேசான பதட்டத்துடன்.

"ஏன்?"

"என்னால உனக்கும் ஏதாவது நடந்துச்சுடுச்சுன்னா என்னால தாங்க முடியாது." என்றாள் தாரணி குரல் கரகரக்க.

"நீயா அப்படி கற்பனை பண்ணாத... எதுவும் நடக்காது... நீ என் கூட நானும் உன் கூட இருக்கேன்." என்று புன்னகைத்தான்.

"இது எங்க ஜமீன் அரண்மனை. எங்க அப்பா அண்ணாவை தவிர யாரும் இங்க வந்ததில்லை." என்று ஒரு வித பயத்தோடு அந்த கோட்டையை நிமிர்ந்து பார்த்தாள்.

"உனக்கு கெடுதல் நடக்கும்ன்னா மாமா இங்க வர சொல்ல மாட்டார். நீ பயப்படாத." என்று ஆதரவாய் அனைத்து கொண்டான்.

"அதில்லை உள்ள நுழைஞ்சதும் என்ன வேணா நடக்கலாம். என்ன நடந்தாலும் என் கூட இருப்பல்ல? என்னை விட்டுட்டு போக மாட்டல்ல?" என்றாள் விழிகளில் அவனை பிரிந்து விடுவோமோ என்ற பயத்தோடு.

"என்ன நடந்தாலும் உன் கூட தான் இருப்பேன்." என்று சிரித்தான் வருண்.

"அக்கா." என்றாள் சங்கீதா.

"என்ன சங்கீ?"

"இவங்க எல்லோருமே உங்க ரெண்டு பேரை தான் ஆசையா பார்த்துட்டு இருக்காங்க." என்றாள் சங்கீதா.

"ஆசையாவா?" என்று கேட்டவள் சுற்றி சுற்றி பார்க்க யாருமே அவளின் விழிகளுக்கு தெரியவில்லை.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro