பகுதி 1

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

காதல் என்னு‌‌‍‍‌ள்ளே வந்த நேரம் அறியாமல்     
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில் நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இன்னாளில் சாலை அத்தனை அழகாய் மாறும்
என் வீட்டை திடலாக்கி
விளையாடும் பறவைப் போல்
மனதினில் உள்ளே வந்தாடுவதாரோ
என் சுவாச அறையாகி எனை தாங்கும் உடலாகி
உயிர் வாழ கூட்டிச்செல்வது யாரோ

    பாட்டில் தன்னை மறந்து லயித்துப் போன வனிதாவை வருண் தட்டி எழுப்ப பொய் கோபத்துடன் எதிர்கொண்டால் வனிதா.

           " சாரி டா அம்மு ஆபிஸ்ல திடிரென மீட்டிங் சாரி மா ஒரு 2 மினிட்ஸ் கொடு ரெடி ஆகிடுரேன் பட்டு".

          " நீ லேட்டா வா தப்பில்லை ஆனா இன்பார்ம் பண்ணிய டா எருமை நா எவ்வளோ நேரம் வெயிட் பண்ண இதே ரிப்பீட் பண்ற இடியட்"

      " சாரி டியர் போன் சார்ஜ் இல்லாம ஆஃப் அகிடுச்சு டி மன்னிச்சிடு டி ".

    அவன் கெஞ்ச சிரித்து கொண்டே " சரி இது தான் லாஸ்ட் வார்னிங்"

                இருவரும் இணைந்து ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு கிளம்பினர்.

                  மணமகள் வனிதாவின் ஆருயிர் தோழி கீதா. மணமகன் நம் நாயகனின் நண்பன் கணேசன்.

                    "என் டா இவ்வளவு லேட்டா வர்ற.. அவன் அங்கே உன்ன காணாத தேடிட்டு இருக்கான் ஓடு டா" என்றான் நாம் வருணின் நண்பன் விக்ரம்.

                         அவன் விரைந்து செல்ல‌ வனிதா தனியே சென்று  அமர்ந்தால்.
அவள் தன் தோழியின் அன்பு கட்டளையை மீற இயலாது இத்திருமணத்தில் பங்கு கொண்டால்.

   அவள் இருக்கும் நிலையில் வேறு யாருக்கும் என்றால் தவிர்த்திருக்கலாம் ஆனால் உயிர் தோழி அன்றோ. தவிர்க்க முடியாத நிலை.
                          

        சிறுது நேரத்தில் நம் வனிதாவின் சிறு சந்தோஷமும் பறிபோனது. வனிதாவின் முன்னால் மாமியார் ராணி அவள் முன்.
             
                 "ஏய் சிறுக்கி வந்துட்டா கல்யாணத்துக்கு உன்னைய போய் கூப்பிட்டு இருக்காங்க அறிவு கெட்டவங்க தாலி கட்டுன அன்னைக்கே என் மகன முழுங்கிட்டு ஒரு மாசத்துக்குள்ள புது தாலியோட வந்து நிக்குது பொண்ணா இது.
இதைப் போய் காதலிச்சு கல்யாணம் பண்ணி உயிர விட்டானே அவன என்ன சொல்ல "

       பேசிக்கொண்டே சென்ற  ராணியை தடுக்க யாருக்கும் துணிவு  இல்லை.  அழுதுகொண்டே வீட்டை சென்று அடைந்தால் வனிதா.

         "என்னால தான் என் விக்கி செத்துட்டானா?..  ஏன் டா என்ன விட்டு போய்ட்ட நீ இருந்த வர நான் எப்பவும் சந்தோஷமா இருந்தனே என் மொத்த சந்தோஷமும் நீ தானே டா அப்புறம் ஏன் டா". 
     
  

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro