கனவே - 10

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்
அடை மழை தந்து என்னை மிதக்கவிட்டாய்
சிலுவைகள் நான் சுமந்து நின்றேன்
சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய்
விழிகள் ஓரம் நீர்த்துளியை
மகிழ்ச்சி தந்து உலரவைத்தாய்
பாலைவனத்தில் பூக்கள் தந்து
சொர்க்கங்களை கண்ணருகில் காட்டினாய்

அந்த வெண்டை பிஞ்சு விரல்களை பற்றிய அவனின் புன்னகையிலும் அவன் கைகளில் கொடுத்த அழுத்தத்திலும் நான் இருக்கிறேன் உனக்காக என்பதை உணர்த்த அவனை அதிர்ச்சி நிறைந்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ரவி " என்றவனின் அழைப்பில் நிமிர்ந்து பார்க்க அமர்ந்திருந்தவனின் பின்புறம் விஷ்வா மற்றும் வருண் நின்றுக் கொண்டிருந்தனர்.

தன் கைகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் விக்ரமைத் தான் அவள் விழிகள் பார்த்துக் கொண்டிருந்தது.

"இங்கே பாரு ரவி...இப்போ நீ எதுக்கு அழுகுற? நீ என்ன தப்பு பண்ண அழுக? பெண்களோட கண்ணீர் விலைமதிப்பானது அதை அந்த பொறுக்கிங்களுக்காக வீணாக்காத சரியா?" என்று வருண் அதட்ட அதில் பயந்தவள் வதனம் நடுங்க ஆரம்பித்திருந்தது.

"ஏன் டா " என்று வருணை முறைத்த விக்ரம் "இங்கே பாரு ரவி மா...நீ அழுக கூடாதுனு தான் அவன் அப்படி சொல்லுறான். பெண்கள் தைரியமா இருக்கணும் டா...இனிமேல் அழக்கூடாது சரியா? " என்று கேட்டவனிடம் அவள் தலை தானாக ஆடி சம்மதம் தெரிவித்தாலும் மனது அம்மாவின் கூற்றால் சமாதானம் ஆக முரண்டு பிடித்தது.

நாற்பது வேகத்தில் ஆடிய தலை இப்போது இருபதாக குறைய அவளை முறைத்த வருண் "தள்ளிக்கோ டா அந்த பக்கம் " என்று விக்ரமை நகர்த்தி விட்டு ரவியை இழுத்துக் கொண்டு வகுப்பில் அனைவரின் முன்பு சென்று நின்றான்.

அனைவரும் கேள்வியாக இவர்களைப் பார்க்க தன் துப்பட்டாவை இழுத்து போர்த்தி நடுங்கிக் கொண்டிருக்கும் ரவியை ஏகத்தும் முறைத்தவனோ அந்த துப்பட்டாவை இழுத்து கழுத்தை சுற்றி போட்டுவிட்டான்.

விழிவிரித்து நோக்கிய ரவியை கண்களாலே அமைதிப்படுத்தியவன்

"இதோ இப்போ பாருங்க டா? இவளை நீங்க உங்க ப்ரெண்டா ஏத்துக்கலனா கூட பரவால ஒரு சாதாரண பெண்ணா பார்க்க கூட முடியல ல...இவ அப்படி என்ன தப்பு பண்ணிட்டா ? நானும் வந்ததிலிருந்து பாக்குறேன் அவன் ஏதோ உன் காதுல சொல்லுறான், இதோ இந்த பொண்ணு வாய்மேல கை வெச்சு சிரிக்குது... ஏன் மா உனக்கு இந்த மாதிரி ஆகி உன்னை பாத்து இப்படி சிரிச்சா உனக்கு எப்படி இருக்கும்?

ஒருத்தர் நிலையை இப்படி கேலி செய்து சிரிக்கிறதுக்கு முன்னாடி நீங்க அந்த நிலைல இருந்தா என்ன ஆகியிருக்கும்னு யோசிங்க...
உங்க அக்கா,தங்கைக்கு இந்த நிலை வந்தாலும் இப்படி தான் பார்ப்பீங்களா டா?இவ என்ன தப்பு பண்ணானு இவளுக்கு இப்படி ஒரு தண்டனை ஏதோ புழு பூச்சியை பார்க்கிற மாதிரி ஒரு பார்வை, இதோ இவனுங்க சொல்லவே வாய் கூசுது.

மனுச ஜென்மங்கள் தானே நீங்க?
நீ என்ன வேணா சொல்லிக்கோ நாங்க அதெல்லாம் கண்டுக்க மாட்டேனு சொன்னா ??? என்று நிறுத்தியவன் கண்களை மூடி தன்னை சமன் செய்து கொண்டு "முதல்ல உங்க அக்கா , தங்கச்சிங்களை பாத்துட்டு வாங்க "
அதை கூறுவதற்கே அவன் கைகள் நடுங்க இப்போது அவன் கையை பிடித்து ஆறுதல் சொல்வது ரவியின் முறையானது.

"வருண் கூல் டவுன் டா " என்ற விக்ரமிற்கு தலையசைத்தவன் " சாரி ரொம்ப கோவம் அதான் இப்படி பேசிட்டேன்...
நம்ம க்ளாஸ் பொண்ணு நம்ம தானே ஆதரவா இருக்கணும். ஒரு வேளை அவ வீட்டுலையும் அவளை அடிச்சு, திட்டி கஷ்டபடுத்தி நம்மளும் அதே செஞ்சா அவ மனசு என்ன பாடு படும்...புரிஞ்சுக்கோங்க" என்றவன் ரவியை இழுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

கண்கள் தானாக சுரக்க ஆரம்பிக்க "இப்போ உனக்கு என்ன பிரச்சனை சும்மா அழற? வேண்டுதலா அழுகணும்னு " என்று கத்திய வருணைக் கண்டு பயந்தவள்

உதட்டைக் கடித்துக் அழுகையைக் கட்டுப்படுத்தியவாறே "வீட்டுல சாக தான் சொன்னாங்க...இப்போ இவங்க பண்ணதை பாத்து அந்த முடிவு தான் எடுத்தேன் " என்று கூறி தலை குனிய கோபம் வந்து வருண் அறைய வருவதற்குள் விக்ரமின் கை அதை செய்திருந்தது.
(நீ என்ன டா சும்மா சும்மா அடிக்கிற)

இப்போது அவள் அழுகை அதிகரிக்க அய்யோ என்று தலையில் அடித்துக் கொண்டவனோ " நீ எதுக்கு சாகப் போற ரவி மா...இனி ஒரு முறை இப்படி பண்ண அவ்வளவு தான் பாத்துக்கோ" என்றவனிடம்

"அப்போ என் மேல எந்த தப்பும் இல்லையா? " என்று சிறு குழந்தைப் போல் வினவ ஏனோ உடனே அவளை அணைத்துக் கொள்ள கைகள் பரபரக்க அதை செய்தும் முடித்தான்.

"ஒன்னுல டா...உன் மேல எந்த தப்பும் இல்லை..." என்ற விக்ரமின் வார்த்தைகள் மட்டுமே அவள் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.
அவனே இதை மாற்றி கூறுவான் அன்று தான் இவன் செய்ய வேண்டாம் என்று கூறியதை செய்யப் போகிறோம் எனத் தெரியாமல் அவனின் அணைப்பில் சந்தினியின் அணைப்பு நினைவு வர இன்னும் ஒன்றினாள்.

"ம்க்கும் போதும் போதும் " என்ற விஷ்வாவின் குரலில் நடப்பிற்கு வந்தவர்கள் மெல்லிய புன்னகை ஒன்றை வீசினர்.

"நான் கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்ல டா" என்ற வருணிடம் இல்லை என தலையசைத்தவர்களைக் கண்டுகொள்ளாது மனம் ஒரு வித தயக்கத்தில் உருள சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தான்.

அவன் வாயில் இருந்து அதை பிடுங்கி தூர வீசியவளோ இடுப்பில் கை வைத்து அவனை முறைக்க ஆரம்பித்தாள்.

இவனும் பதிலுக்கு முறைக்க
"நீ முறைச்சுக்கோ எனக்கென்ன " என்பது போல் வாங்க போலாம் எனக் கூறி நடக்க ஆரம்பித்தாள்.

பற்களை நறநறவென்று கடித்தவன் அடுத்த சிகரெட் எடுக்க பேண்ட் பேக்கட்டினுள் கை விட அதை அங்கு காணவில்லை...
நடந்து கொண்டிருந்தவள் அவன் புறம் திரும்பாது தன் கைகளில் இருக்கும் சிகரெட்டை ஆட்ட அவள் செயலில் கோபம் கொண்டவனோ விஷ்வாவின் கன்னத்தில் அறைந்தான்.

"நான் என்ன டா பண்ணேன்?" என்று கன்னத்தில் கை வைத்தவாறே கேட்ட விஷ்வாவை முறைத்தவன் என்னோட சிகரெட் பேக்கட்டை தர சொல்லுடா எனக் கேட்க

"உனக்கு வேணும்னா நீ போய் கேளு என்னை ஏன் டா அடிக்கிற " என்றவன் கூறி முடிப்பதற்குள் அடுத்த அடி இடியாக இறங்கியது.

அடேய் என்ன டா சும்மா ஒரு குழந்தை பையன அடிச்சுட்டு "ஏம்மா பரதேவதை கொடுத்து தான் தொலையேன்" என்று கத்தியவனிடம் கஷ்டம் கஷ்டம் என்று கூறிக் கொண்டே விக்ரம் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள்.

வருணும் தரையை எட்டி உதைத்தவாறு அவர்களின் பின்னால் நடக்க "இந்த அனி பையன் மட்டும் ஊருக்கு போய் இதுல இருந்து தப்பிச்சுட்டான்" என்று புலம்பியவாறே இரு கன்னங்களிலும் கை வைத்துக் கொண்டு பின்தொடர்ந்தான்.

அன்று வருண் மிகவும் சோகமாக அமர்ந்திருந்தான்.
எதனால் இந்த சோகம் என அறிந்திருந்த விஷ்வாவும்,விக்கியும் அமைதியாக இருக்க இவர்களுடன் ஐக்கியமாகி இத்தனை வருடம் பேசாமல் விட்ட அனைத்தையும் பேச ஆரம்பித்திருக்கும் ரவியால் அப்படி இருக்க முடியவில்லை.

ஒவ்வொருவரின் அருகிலும் சென்று அமர்ந்து ஏதாவது கேட்டுக் கொண்டிருக்க யாரும் கண்டுக்கொள்வதாய் இல்லை.
போங்கடா என்றவள் வெளியே கார்டனில் இருக்கும் வேறு ஒரு பென்ச்சில் அமர்ந்துக் கொண்டாள்.

அவளுக்கு நேரெதிராக சோகத்தின் மருஉருவாய் வந்துக் கொண்டிருக்கும் யுதுவீரைக் கண்டவள் எழுந்து நின்று புன்னகைக்க அவரும் பதிலுக்கு புன்னகைக்க முயன்று தோற்றுவிட்டார்.

கண்கள் சிவப்பாக இருக்க அழுதிருப்பார் போல என மனதில் நினைத்தவள் உடனே வருணிடம் சென்று அதைக் கூற சொல்ல வேண்டாம் என விக்கி சைகை செய்ததை கண்டுக்கொள்ளவே இல்லை...

"வருண் யுதுவீர் சார் பாவம் டா...அழுதிருப்பார் போல கண்ணுலாம் வீங்கி சிவந்திருக்கு " என்று அழுவது போல் கூறியவளை

"செத்து தொலைய சொல்லு அவனை..." என்று திடீரென்று கர்ஜித்தவனின் குரலில் பயந்து இரண்டடி தள்ளி நின்றாள்.

"ஏன் டா இப் இப்படி சொல்லுற " என்று திக்கித் திணறி கூறியவளை

"அவனைப் பத்தி பேசாத ரவி...போ மொதல்ல " என்று மறுபடியும் கத்தினான்.

"அவரு நம்ம சார்...மொதல்ல ரெஸ்பக்ட் கொடு " என்றவளின் குரல்வளையை பிடித்தவன் "அவனுக்கு?? நான் மரியாதை...அதுக்கு வாய்ப்பே இல்லை" என்று கூறி அவளை தள்ளிவிட்டவன் " டேய் இவளை போகச் சொல்லு டா...எனக்கு வர கோவத்துக்கு ஏதாவது பண்ணிருவேன் " என்று கத்தியவனின் செயலில் ஓரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த யுதுவீருக்கும் கண்கள் கலங்கியது .

ரவியை இழுத்துக் கொண்டு வந்த விக்கி "ரவி மா...அவன் இன்னைக்கு ரொம்ப அப்சட்டா இருப்பான் யாரு பேசுனாலும் இப்படிதான் ரியாக்ட் பண்ணுவான் ,ப்ளீஸ் டா இப்போதைக்கு அவன் கூட பேச வேணாம் " என்றவன் தண்ணீர் கொடுத்து குடிக்க சொல்ல அவன் அக்கறையில் மெய் சிலிர்த்தவள்
வலிக்குதா டா என்ற கேள்வியில் க்ளீன் போல்ட் ஆகிவிட்டாள்.

யாரிடமும் கிடைக்காத அக்கறை இவனிடம் கிடைப்பது போல் இப்போதெல்லாம் ரவிக்கு தோன்ற ஆரம்பித்துவிட்டது.
நட்ட நடு காட்டில் கொடிய விலங்குகளுக்கு மத்தியில் இருந்தவளை இப்போது குழந்தைகள் சூழ்ந்திருக்கும் மலர்கள் நிறைந்த பூங்காவில் விட்டது போல் அவள் வாழ்க்கையும் ஆனந்தமாக மாறிவிட்டது.
விக்ரம் ஒருவனே இதற்கு காரணம் என்ற எண்ணம் ஆழ் மனதில் பதிய
நட்பு காதலாய் மலரத் தொடங்கிவிட்டது என்பது தான் உண்மை.

அனாதையாய் சுற்றித் திரிந்தவளிடம் நான் இருக்கிறேன் என்பதைப் போன்ற ஒரு அணைப்பு அவனிடமிருந்து கிடைத்துவிட அது தினமும் வேண்டும் என மழலையாய் அவள் மனம் ஏங்க ஆரம்பித்துவிட்டது.

"நீ க்ளாஸ்க்கு போ நான் ஈவ்னிங் வரேன் " என்றவன் திரும்பி நடக்க அவன் கைகளை பிடித்தவளோ மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தி வருணை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

"ஏன் டா " என்ற விஷ்வாவிடம் தோளை குலுக்கிய விக்ரம் ரவி அடுத்து என்ன செய்யப் போகிறாள் எனப் பார்த்துக் கொண்டிருக்க
அவளோ வருணின் அருகில் சென்று சம்மனமிட்டு அமர்ந்துக் கொண்டாள்.

"வரு" என்ற அழைப்பில் அவன் கண்கள் தானாக கண்ணீர் உகுக்க
அதைத் துடைத்து விட்டவளோ அவனுக்கு சாதம் ஊட்ட ஆரம்பித்தாள்.

"நீ ஏன் அழுகுற ? ஏன் கோவப்படுற? எதுவுமே எனக்குத் தெரியல வரு...ஆனால் உனக்காக நான் இருக்கேன் சரியா? எப்போமே உனக்குத் துணையா இருப்பேன் " என்றவளிடம்

"இப்படி ஊட்டி விடுவியா தினமும்?" என்று கண்களில் கண்ணீருடன் கேட்ட வருண் அவளுக்குக் குழந்தையாய் தான் தெரிந்தான்.

"கண்டிப்பா ஊட்டிவிடுவேன் ஆனால் கையை கடிச்சுட கூடாது...அடி பிச்சுபுடுவேன் " என்றவளின் மிரட்டல் தோணியில் அவன் இதழோரம் புன்னகை எட்டிப் பார்க்க

"ஏய்ய்ய் நீ சிரிச்சுட்ட நான் பார்த்துட்டேன் " என்று புன்னகைத்து கேலி செய்தவளை பொய்யாய் முறைத்து அவன் முகம் திருப்பிக் கொண்டு "நான் ஒன்னும் சிரிக்கலையே " என்று கூற

"பொய் சொல்லாத வரு " என்றவளின் கைகளை பிடித்துக் கொண்டவன்
"இப்படி தான் தினமும் வரு சொல்லுவியா" என ஒருவித ஏக்கத்துடன் கேட்க ஆமென்று வேகமாக தலையசைத்தவளோ வாயில் உணவை திணித்தாள்.

ஏதோ வென்று விட்ட உணர்வில் அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்க அதை மகிழ்வோடு பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா, விக்ரம் இருவரும் இந்த அழகான குருவிக் கூடு என்றும் கலைந்துவிடக் கூடாது எனத் தான் நினைத்துக் கொண்டிருந்தனர். நாளையே அது சிதைந்துவிடப் போகிறது என்பதை அறியாமல்.



நான் எழுத ஆரம்பித்த முதல் பகுதியிலேயே நீங்க கெஸ் பண்ணியிருக்கலாம் ஒரு சமுதாய கருத்து சொல்ல தான் இந்த கதைனு.
ஆமா அதற்காகத் தான் இந்த கதை.
என் மனசுல ஒடிட்டு இருக்க ஒரு ஆதங்கம் தான் சில சமயம் எழுத்துகளாக வந்துடும் ஏதாவது தப்பா சொன்னா மன்னிச்சிடுங்க.

போர் அடிக்குது இந்த இடமா நல்லா இல்லைனு அந்த மாதிரி தோணுனா கூட சொல்லுங்க முடிஞ்ச அளவு மாத்திடுறேன்.

இன்னும் இரண்டு பதிவு தான் ப்ளேஸ் பேக் முடிஞ்சிடும்...
அதுக்கப்புறம் நாம அஞ்சுவை பார்க்கலாம்....

ஸ்பெல்லிக் மிஸ்டேக்ஸ் இருந்தால் மன்னிக்கவும்...
தூக்க கலக்கத்துல டைப் பண்ணது😂

நன்றி
தனு❤

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro