கனவே - 14

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அசந்தாப்புள அள்ளிபுட்டானே
அடிமனதில் அண்டிபுட்டானே
மிளகாய்பூ போல என்னுள்
அழகாப் பூ பூக்கவிட்டானே
வெட்கத்துல விக்க வச்சானே
வெட்கத்துல சிக்க வச்சானே
பசப்புறனே மழுப்புறனே
சொதப்புறனே.....

ஏனோ நீண்ட காலம் பழகிய உணர்வு தோன்ற வந்த சில நிமிடங்களிலே மிகவும் நெருங்கிவிட்டனர் ரவீயும் ,அஞ்சுவும்.

பூஜாவிடம் தோன்றாத தோழைமை கூட இவளிடத்தில் உடனே தோன்ற அந்நியத்தன்மை முற்றிலும் அகன்றுவிட்டது.

"உன்னை எப்படி வீட்டில் அழைப்பார்கள்" என்று கேட்ட அஞ்சுவிடம் "வீணா" என்று கூற
"அப்போ நான் உன்னை அந்த மாதிரி கூப்பிட மாட்டேன்" என்றவளோ சிறிது நேரம் யோசித்து "எங்களோடு சேர்ந்து நீ வீணாய் போகப் போற காரணத்தினால் இன்று முதல் நீ வீணு என்று அழைக்கப்படுவாயாக!" என்று கூறியதோடு நிறுத்தாமல் "வீணு வீணு வீணு" என்று வேறு அவள் காதில் மூன்று முறை கூறி வாட்டர் பாட்டிலைக் கொடுத்து தண்ணீரைக் குடிக்க சொல்ல ஏன் என்று கேட்டவளிடம் "நேம் வெச்சா சர்க்கரைத் தண்ணி கொடுக்கணும்ல ,சுகர் இல்லை அதான்  தண்ணி மட்டும் " என்று விளக்கம் கொடுக்க பைத்தியம் என்று கூறிய வீணாவோ புன்னகை முகமாக தலையசைத்தாள்.

முதல் நான்கு வகுப்பும் அஞ்சுவின் அட்டூழியத்தால் நன்றாகவே செல்ல லன்ச் பீரியட் வந்ததும்

"சரி டி வா கேண்டீன் போலாம் " என்று அஞ்சு அழைத்தாள்.

"டி "என்று புருவத்தை உயர்த்திய வீணாவிடம் கடவுளே என்று தலையில் கை வைத்துக் கொண்ட அஞ்சு "வாழ்க்கை முழுவதும் சப் டைட்டில்ஸ் பேசியே போயிடும் போலேயே...ஆண்டவா அனுப்புறதும்தான் அனுப்புற ஒரு தமிழ் பொண்ணா அனுப்பக் கூடாது" என்று புலம்பியவள்
"ஆன்..." என்று தாடையில் கை வைத்து யோசித்து
"டி னா உன்னை மரியாதையா கூப்பிடுறேனு அர்த்தம் " என்று கூறி வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள அருகில் இருந்த பூஜாவோ சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள்.

இப்போது வீணா சந்தேகமாக பார்க்க "என் டார்லிங்,செல்லம்" என்று பல்லைக் காட்டியவாறே இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

திரும்பி பூஜாவை அழைக்க அவளோ நான் வரவில்லை என்று கூறிவிட்டாள்.
உனக்கும் வாங்கிட்டு வரோம் என்றவர்களோ கேண்டீனை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

"வீணு கேண்டீன்ல பாவ் பாஜி சூப்பரா இருக்கும்...இன்னைக்கு உனக்கு பர்ஸ்ட் டே அதனால நான் வாங்கித் தருவேனுலாம் நீ கனவு காண கூடாது.
நீ தான் வாங்கித் தரணும் சரியா?" என்று தன் முட்டைக் கண்ணை உருட்டி உருட்டி கேட்டவளிடம் ப்ராடு என முணுமுணுத்தவளோ சரி என தலையசைத்தாள்.

வெளியே வந்ததும் துப்பட்டாவால் தன் முகத்தை மூடிக் கொண்டவளைப் பார்த்த அஞ்சு
"நீ டெரரிஸ்ட்டா?" என்று கண்களில் அதிர்ச்சி காட்டி ,இதழ்கள் மட்டும் நக்கலான புன்னகையைத் தழுவிக் கேட்க

அவள் மண்டையில் கொட்டியவளோ
அப்படி தான் போடணும் என்று கூற
"அப்போ நீ முஸ்லீமா ?" என்றவளிடம் "ரவீணாங்கிற பேரு முஸ்லீம் பேரு மாதிரி இருக்கா ?" என்று அவளை திருப்பி கேள்வி கேட்டவள் ஒருமுறை தன் துப்பட்டாவை சரி செய்து கொண்டாள்.

கண்கள் மட்டுமே தெரியுமளவு இருந்த அந்த நிலவு முகத்தை நோக்கி மறுபடியும் கேள்விக் கேட்ட அஞ்சுவை அங்கேயே நின்று முறைக்க ஆரம்பித்துவிட்டாள்.

"இப்போ நீ ஏன் முறைக்கிற? க்ளாஸ்ல மட்டும் போடல இப்போ போட்டுருக்கியேனு கேட்டேன் இது தப்பா ?" என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு அஞ்சு கேட்க  "இப்படிலாம் முகத்தை பாவமா வெச்சுக்கிட்டா உனக்கு இரண்டு பாவ் பாஜி வாங்கி தருவேனு நினைச்சியா? ப்ராடு ப்ராடு " என்று கூறி சிரித்த வீணாவிடம்

"ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே வீணா " என்று சிவாஜி ஸ்டைலில் நடித்தவள் தலையில் மறுபடியும் கொட்டு வைத்து புன்னகைத்த வீணாவின் மனமோ இப்படி ஒரு மாற்றம் அதுவும் வந்த அன்றே தனக்கு நேரும் என கனவிலும் நினைக்கவில்லை.

உதட்டளவில் கூட புன்னகைக்காமல் தான் கடந்த அந்த கொடிய ஆறு மாதங்களை நினைத்து கசந்த புன்னகை சிந்தியவள் இப்போது அஞ்சுவின் மொக்கைகளை கேட்க ஆரம்பித்தாள்.

அந்த ஹை போனி டேல் அவளின் முக பாவனைக்கு ஏற்ப அங்கும் இங்கும் ஆட ,ஜீன்ஸ் டாப் சகிதம் கைகளை அசைத்து கதை கூறுபவளை தன்னை மீறி சைட் அடித்துக் கொண்டிருந்தான் வருண்.

தூரத்திலேயே அவள் நடந்து வருவதைக் கண்டு கொண்டவன் அவளையேப் பார்க்க கைகள் காற்றில் நடனமாட ,அரட்டை அடித்துக் கொண்டே அடிக்கடி சத்தமாக சிரிப்பது,அருகில் இருக்கும் பெண்ணிடம் ரகசியம் கூறுவது என சேட்டையின் உருவாய் வந்துக் கொண்டிருக்கும் அவன் சில்லிபவுடரை அணுஅணுவாய் ரசித்துக் கொண்டிருந்தான்.

உள்ளே நுழைந்ததும் கடைசி பென்ச்சில் சென்று அமர்ந்தவளின் கண்கள் யாரையோ தேட அவனைக் கண்டுகொண்ட மகிழ்ச்சியில்
மனம் குதித்தாலும் அவன் முகம் சரியாக தெரியாதது போல் தோன்ற  ஒவ்வொரு டேபிளாய் சென்று அமர்ந்து அவனறியாமல் அவனை சைட் அடிக்க இடம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இவள் செய்கைகளை விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தவளோ என்ன பண்ணுற அஞ்சு எனக் கேட்க
என்ன கூறி சமாளிப்பது எனத் தெரியாமல் முழித்தவள் "வாஸ்து படி நான் இங்கே தான் உட்காரணும்" என வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டியவளை வீணு நம்பவில்லை என்பது அவளுக்கே தெரிந்த உண்மை தான்.

வருண் அமர்ந்திருந்த இடத்தை விட்டு நான்கு டேபிள்கள் தள்ளி அவனைப் பார்ப்பது போல் அமர்ந்திருந்தவள்  "ம்ம்ம இப்போ தான் கரெக்ட்டா இருக்கு " என மனதில் நினைத்துக் கொண்டே
"ம்ம்ம் வீணு போ போ சூடா பாவ் பாஜி இரண்டு ப்ளேட் வாங்கிட்டு வா" எனக் கூற

"எனக்கு வேணாம் டி " என்று கூற வந்தவளிடம்
"இரண்டுமே எனக்கு தான்...இன்னும் வேணும்னா சாப்டுட்டு வாங்கிக்கலாம்" என பெருந்தன்மையாக கூறியவளைப் பார்த்து த்தூ என்றவளோ வாங்க சென்றாள்.

சரியாக அந்த நேரம் வருணும் அதே கடைக்கு செல்ல அதைப் பார்த்த அஞ்சுவோ உடனே ஓடிச் சென்று  வீணுவிடம் இருந்த பணத்தை வாங்கிக் கொண்டு வருணைக் கண்டுக்கொள்ளாதவாறு அவளருகில் நிற்க அங்கிருந்த ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தவனோ அஞ்சுவை அங்கு கண்டதும் விஷமமாக புன்னகைத்தான்.

சில்லிபவுடர் மூக்கு சிவந்து ரொம்ப நேரம் ஆச்சே...
டென்சன் பண்ணிட வேண்டியது தான் என மனதில் நினைத்தவன் அருகில் இருந்த வீணாவைக் கண்டதும் அவளிடம் பேச சென்றான்.

"ஹாய் டா...கரெக்ட் டா க்ளாஸ்க்கு போயிட்டியா?" என்றவனின் குரலில் திரும்பிய அஞ்சு ஆராய்ச்சி பார்வை பார்க்க "போயிட்டேன் " என்றவளின் குரலில் திரும்பி இவளை விசித்திரமாக பார்த்தாள்.

அவளின் பதிலுக்கு புன்னகைத்தவனோ "இந்த ரவுடி கூட லாம் சேராத டா " என்று புன்னகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு கூற அவன் கூறியதில் நெற்றிக்கண் திறக்க முறைத்தவளோ "ஆமா இவர் கூட சேரு...நல்லது மட்டும்தான் சொல்லித் தருவாரு சாரு" என்றவள் அவள் கையை பிடித்து இழுத்து பாதி தூரம் சென்று மறுபடியும் திரும்பி வர
என்ன என்று புருவத்தை உயர்த்தியவனின் அழகில் ஒரு நொடி மயங்கினாலும் "சோறு முக்கியம் அஞ்சு " என மனதில் நினைத்து பாவ் பாஜியை கைகளில் எடுத்து  அவனை முறைத்துக் கொண்டே  அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

"வருவை எப்படி தெரியும் ?" என்று கேட்ட அஞ்சுவிடம் பதில் சொல்வதற்கு முன்னரே "ஹாய்  அஞ்சு" என்று அருகில் வந்தமர்ந்த விக்ரம் மற்றும் அனியைப் பார்த்து அஞ்சு புன்னகைக்க அருகில் அமர்ந்திருந்த வீணாவின் விழிகள் ஒரு நொடி அதிர்ந்து பிறகு வெறுப்பைக் கக்கியது.

"யாரு இந்த முகமூடி கேர்ள்" என்ற அனியின் கைகளில் கிள்ளியவள்
"என்னோட ப்ரெண்ட் ரவீணா" என்று கூற அவள் பெயரில் ஒரு நொடி ஜர்க் ஆன விக்ரமோ வீணாவின் கண்களைக் காண
அதில் என்ன கண்டானோ உடனே முகத்தைத் திருப்பி தன்னை சமன் செய்து கொண்டான்.

"அப்போ என் பூ வரலையா?" என்று கேட்ட அனியிடம்
"பூ வா? " என்று யோசித்தவள் "பூஜாவையா பக்கி இப்படி சொல்லுற? " என்று கேட்க
ஆமாம் என்று அத்தனைப் பற்களையும் காட்டி சிரித்தவனை முறைத்தவள் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.
இருக்குறதே இரண்டு எழுத்து இது அதையும் சுருக்குற நீ பைத்தியம் என்று அவனை மறுபடியும் கிள்ள

"என்ன பேசுறீங்க " என்று ஆங்கிலத்தில் வினவிய வீணாவை பாவமாக பார்த்தவளோ இங்கேயும் சப் டைட்டில்ஸா  என்று டேபிளில் படுத்துக் கொண்டாள்.

"ஓஓ தமிழ் வராதா?...உனக்குனு வந்து மாட்டுறாங்க பாரு " என்று அனி சிரிக்க

அவன் மண்டையில் நங்நங்கென்று கொட்டியவளோ சுப் என வாயில் கை வைக்க உடனே அவள் சொன்னதை செய்தவனைக் கண்டு வீணா சத்தமாக சிரிக்க  அந்த சத்தத்தில் திரும்பிய விக்ரமைக் கண்டதும் அமைதியாகி விட்டாள்.

வீணாவின் நடவடிக்கைகளில் ஏதோ வித்தியாசம் தோன்ற நமக்கென்ன என்று தோளைக்குலுக்கியவன் மற்ற இருவர்களிடம் பேச ஆரம்பித்தான்.

மறுபடியும் மூன்று பேரும் தமிழில் கதை அளந்து கொண்டிருக்க அவர்கள் பேசுவது புரியாமல்  வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வீணாவைக் கண்ட வரு தன் சர்ட் காலரை மடிக்கி விட்ட படியே அவர்கள் அருகில் வந்தான்.

ஏற்கனவே அங்கு விக்ரம் அமர்ந்து அஞ்சுவிடம் பேசுவது பிடிக்காமல் முறைத்துக் கொண்டிருந்தவன் வீணாவின் செயலில் எழுந்தே வந்துவிட்டான்.

விக்ரமிற்கு வீணாவிற்கு நடுவில் மட்டுமே ஒரு இருக்கை அதில் வந்து அமர்ந்தவன் "ஹாய் டா...சாப்டாச்சா ?" என்று வீணாவிடம் கேட்க
அவன் செயலில் முறைத்த அஞ்சு "அறிவு இல்ல இப்படி தான் வந்து உட்காருவாங்களா? " என்று கூற

"உனக்கு அது இருக்கா டி" என்று அடிக்குரலில் சீறியவன்
"டி யா " என்று கோபமாக எழுந்த அனியை தூசி போல் ஒதுக்கியவன்
எழுந்து நின்று "நீங்க தமிழ்னா நீங்க மட்டும் இருக்கப்போ பேசிக்கோங்க...இவளும் உன் கூட இருக்கா தானே?உங்க முகத்தை வேடிக்கைப் பார்க்க தான் இவளை கூட்டிட்டு வந்துருக்கியா? " என்று கத்த

தான் செய்தது தவறு தான் எனத் தோன்றினாலும் அதை ஒத்துக் கொள்ள மனம் மறுத்தது.
மற்ற நேரங்களில் எல்லாம் ஆங்கிலம் தான்...அனி ,விக்கியைப்
பார்க்கும் நேரங்களில் மட்டும் தான் அவள் தமிழ் பேசுவதே...
ஏதோ ஒரு வேகத்தில் அப்படி பேசிவிட்டோம் அதற்கு இப்படியா கத்துவது ? என்று மனதில் அவனை அர்ச்சித்துக் கொண்டிருந்தவள் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

வீணாவிடம் திரும்பியவனோ
"நான் வருண் நீ " என்று நிறுத்த
"ரவீணா" என்று மெதுவாக அவள் கூற ஏனோ அந்த நொடி எப்படி உணர்ந்தான் என அவனுக்கே தெரியவில்லை.
" இங்கே பாரு ரவீ" என்று கூற
இப்போது அதிர்ந்து நோக்கிய விக்கியின் பார்வையை எதிர்கொண்டு பதில் பார்வை பார்த்தவன் "இனிமேல் உனக்கு எங்கே போகணும்னாலும் என்னை கூப்பிடு,நான் வரேன். என்ன பிரச்சனைனாலும் எவன் பிரச்சனை பண்ணாலும் " அந்த எவன் என்று கூறும் போது அவன் விழிகள் விக்ரமை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தது.

"எவன் பிரச்சனை பண்ணாலும் என்கிட்ட சொல்லு சரியா?" என்று கூற ம்ம் என்று தலையாட்டியவளோ கைகளை பிசைந்த வண்ணம் அஞ்சுவைப் பார்த்தாள்.

அவள் பார்வையிலிருந்து என்ன நினைக்கிறாள் என்பதையே கண்டுகொள்ள முடியாமல் வீணா நிற்க "ரவீ போலாமா ?" என்று கேட்ட வருணின் குரல்  கண்டிப்பா நீ வந்தே தான் ஆகணும் என்ற பதிலைத் தாங்கி நிற்க
"சரி வரு " என்று கூற இப்போது புன்னகை முகமாக அவள் கைகளைப் பற்றிக் கொண்டு நடந்தான்.

மின்னல் போல நடந்த அனைத்தையும் அஞ்சு ரீவைண்ட் செய்து பார்த்துக் கொண்டிருக்க
"நான் வரேன் டா" என்ற விக்ரமோ சென்று நின்றது அந்த மரத்தின் முன் தான்.

"ரவி..." என்ற அவனின் மனதை உருக்கும் குரலில் தன் ஒட்டுமொத்த மலர்களையும் அவன் மீது தூவியது ரவி என்ற தேவதையை புதைத்து அவளின் உருவாய் வளர்ந்து நின்ற கேஷியா பிஸ்துலா மரம்.

"ஏன் ரவி என் வாழ்க்கைல வந்த...
இப்படி பாதிலேயே விட்டுட்டு போகவா? நீ செத்து போயிட்ட... ஆனால் நான் ஒவ்வொரு நாளும் இங்கே, வீட்டுலனு மரணவேதனையை அனுபவிக்கிறேன்.
என் கூட பேசாம ஒருநாள் கூட இருக்கமாட்டான் ஆனால் இப்போ ?" என்றவனின் கண்களில் கண்ணீர் வர அதைத் துடைக்க கூட திராணி இல்லாமல் அந்த மரத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஏன் டி ஏன்? ஏன் இப்படி ஒரு முடிவெடுத்த...உன் குடும்பம் " என்று நிறுத்தியவன்
" உன் காதலுக்காக, நான் சொன்ன வார்த்தையை தாங்கிக்க முடியாம இந்த முடிவை எடுத்த ஆனால் நான் ? " என்றவனுக்கோ அடுத்த வார்த்தையைக் கூட கூற முடியாமல் தொண்டை அடைத்தது.

மன பாரத்துடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்தவனை ரவி ஏக்கமாக பார்க்க அங்கு ஒருவளோ ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.



யார் அவள்?
கண்டுபிடிங்க...
அடுத்த அப்டேட்டோட வரேன்🏃‍♀

ப்ரியமுடன்
தனு❤

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro