1

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மௌனமான இரவு ,ஓங்கி உயர்ந்த கட்டிடங்களும் இருளவனின் ஆளுகைக்குள் மூழ்கிவிட ,மாதவனும் இளைப்பாற சந்திரன் தன் காதலியாம் கடலவளின் அழகை தன் ஒளியாலே ரசித்திருக்க கடலவளும் தன் காதலனாம் நிலவவனின் கை சேர அலையாய் எழும்பிட அவ்வலையை போலே கையில் இருந்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தவனின் எண்ணங்களும் துள்ளி குதித்துக்கொண்டிருந்தன கடந்தகாலத்தில் நினைவுகளில் .

அவன் கையிலிருந்த புகைப்படங்களை அவனோடு நானும் காண ஆவல் மேலோங்க எட்டி பார்க்க அவனோ என்னை கண்டுகொண்டான் .

"ஹே இந்த நேரத்துல இங்க என்ன பண்ற பிரியா ?எக்ஸாம்க்கு படிக்கல"என்க

நானோ "ரொம்ப அக்கறை தான் எனக்கு எக்ஸாம் நேத்தே முடுஞ்சது ஆமா இந்நேரத்துல இங்க தனியா என்ன பண்ணிட்ருக்க போட்டோஸும் கையுமா "என்று கேட்க அவனோ என்னை கொலைகாண்டோடு முறைத்தான் அனைத்தையும் செய்து விட்டு என்னை சீண்டுகிறாயா என்று (இதுக்கெல்லாம் பயப்புடுவோமா )என்று அசால்டாக நான் அவன் கையிலிருந்த ஆல்பத்திலிருந்த புகைப்படத்தை எடுத்து பார்த்தேன் அதில் அவனது சிறுவயது புகைப்படம் இருந்தது 3 வயதிருக்கும் அழகாக சிகை வாரப்பட்டு ஷெர்வானி அணிந்து கொழு கொழுவென்று இருந்தான் அவன் எனில் உதட்டில் மருந்திற்கும் புன்னகை இல்லை என் கையிலிருந்த புகைப்படத்தை பார்த்தவன் உதட்டில் புன்னகை விரிந்தது நான் அதை அவன் கையில் கொடுத்துவிட்டு தங்களை நோக்கி திரும்ப அவனோ என்னை பார்த்து சிரித்தவன் "என்ன கத சொல்ல போறியா"என்க

நான் புரியாத பார்வை பார்த்துவிட்டு"ஆமா என் கேக்குற ?"என்க

அவனோ என் கையிலிருந்த புகைப்படத்தை பிடிங்கியவன் "போன ரெண்டு கதையையும் உன் வாயால தான சொன்ன என்ன பத்தி நானே சொல்லிடுறேன் அதுகப்ரோம் நீ மிச்ச கதையை சொல்லு இப்போ நீ கெளம்பு "என்றான்

நான் "டேய்ய் இதெல்லாம் அநியாயம்டா"என்க அவனோ coolaaga வாசல் அந்த பக்கம் என்று விட்டு வழக்கம் போல அவனது signature போஸில் கையை தலைக்கு பின் கட்டி கொண்டு கால் மேல் காலை போட்டு சாய்ந்தவாறு அமர்ந்துவிட்டான் .(சரி புள்ள ஆசைப்படுது அதுவே சொல்லட்டும் அப்ரோமா நாம என்ட்ரி குடுத்துக்குவோம் என்று நானும் வெளியேறினேன் அவனின் பீச் houseilirundhu )

விக்ரம் :

ப்ரியாவை வெளிய அனுப்புனதுகப்ரோம் நா என்னோட படங்களை மறுபடி பார்க்க ஆரம்பிச்சேன் என்னோட கடந்தகாலத்தை புரட்டி பாக்க ஆரம்பிச்சேன்.

இதோ என் கைல இருக்குற இந்த 3 வயசு கொழந்தையோட போட்டோ என்னோடது தான் நா விக்ரம் echinos குரூப் of கம்பனிஸ் சவுத் இந்தியாலேயே நம்பர் ஒன் கம்பெனி பல நாடுகளையும் என்க கம்பெனியோட கிளைகள் இருக்கு food productsla இருந்து காஸ்மெடிக்ஸ் வரைக்கும் எங்க கம்பெனி கால் பதிக்காத துறையே இல்ல .ஆனா அவ்ளோ கம்பனிஸ் இருக்குறதாலயோ என்னவோ எனக்கு என்க அப்பா அம்மாவோட பாசம் கெடைச்சதே இல்ல கெஸ்ட் மாறி என் பர்த்டே அன்னைக்கு மட்டும் என்ன பாத்துட்டு போவாங்க அப்பா அம்மா இல்லாதவங்கள பாவம்னு சொல்லேல இருந்தும் இல்லன்ற என் நெலம ரொம்ப மோசம்.நா ஸ்கூல் போற வரைக்கும் சிரிப்புன்னா என்னன்னே எனக்கு தெரியாது யாராவது என் முன்னாடி சிரிச்சா தான எனக்கு சிரிப்புன்னா என்னனு தெரியும் ?

அடுத்த பக்கத்தை திருப்புனேன் அதுல கார் racingla ஜெயிச்சப்போ எடுத்த போட்டோ இருந்துச்சு .எனக்கு கார் ரசிங்கினா உயிருஹ் .நா ஒரு ட்ரைனிட் racer ஆனா அதுல போனா பேமிலி buisnessah பாத்துக்க மாட்டேன்னு சொல்லி என்னோட racing கனவையே என் அப்பா அம்மா ரெண்டு பெரும் குழி தோண்டி பொதச்சுட்டாங்க.என் கண்ணுல ஒரு துளி கண்ணீர் எட்டி பாத்துச்சு கனவுகளும் லட்சியங்களும் மறுக்கப்படும்போது அதோட வலி ரொம்ப கொடுமையானதா இருக்கும் அதை அனுபவிக்குறவுங்களுக்கு தான் அதோட வலி புரியும் .

அடுத்த பக்கத்தை திருப்புனேன் அதுல இருந்தது நா என்னோட வழிய மறக்க தப்பான வழில போக ஆரம்பிச்சதோட பிரதிபலிப்பு என் கைல பீர் பாட்டில் இருந்துச்சு .சோகத்தை மறக்க நெறய ஆண்களாலும் இப்போ சில பெண்களாலும் தேர்ந்தெடுக்கப்படுற பாதை போதை என்னோட பிரச்னைய மட்டும் இல்ல என்ன இந்த உலகத்தையே மறக்க வச்சுது போதைக்கு அடிமை ஆனேன் என் 18 வயதில். மது அதோட சுவையை போலவே என் வாழ்க்கைல அது கொடுத்த நினைவுகளும் மிகவும் கசப்பானவை. அதை நா திரும்பி பார்க்க விரும்பல அதுனால அடுத்த பக்கத்தை திருப்புனேன் அதுல இருந்தது அதிதி என்னோட வாழ்க்கைத்துணைன்னு என்னால தப்பா நினைக்கப்பட்டு என்னோட உயிர்த் தோழியா மாறிப் போனா அதிதி .

என்ன விட ரொம்ப சின்னவளா இருந்தும் மனசளவுல என்ன விட ரொம்ப பெரியவ என்னோட தப்பா தில்லா எனக்கு சுட்டி காட்டுன தைரியமான பொண்ணு .அவ அண்ணனே என்ன நேரா face பண்ண தயங்குனப்போ என் முன்னாடி நேருக்கு நேர் நின்னு என்னோட தப்பா புரியவைக்க அசாத்தியமான தைரியசாலி .

அடுத்த பக்கத்தை திருப்புனேன் இப்போ வரைக்கும் ஏதோ ஒரு நினைவோடு புரட்டியிருந்த என் கண்ணுல ஒரு தெளிவு ,என் அனுமதியே இல்லாம என் கைகள் அனிச்சையா அந்த புகைப்படத்தை வருடுச்சு என் இதழ்கள் புன்னகைள விருஞ்சுச்சு என் உதடுகள் தானா அவள் பெற உச்சரிச்சுச்சு "நவ்யா "அவளை முதல் முதல்ல நா பார்த்ததை என்னிக்கும் என்னால மறக்க முடியாது .

அதிதி எனக்கு தோழி ஆனதுகப்ரோம் என்ன அவ வீட்டுக்கு கூப்டருந்தா நானும் என்னோட தோழியோட அழைப்புக்காக போயிருந்தேன். அப்போ எல்லாருக்கும் பன்னீரால் வரவேற்பு கிடைக்கும் ஆனா எனக்கோ அழுக்கு தண்ணீரால் வரவேற்பு கெடச்சது அவளோட கைல இருந்து வந்த கோவத்துக்கு யாரு என்னனு பார்க்காம திட்டிட்டு நிமிர்ந்தேன் அன்னைக்கு தான் அவளை முதல் முதல்ல பார்த்தேன்.

நவ்யா ஒரு பிங்க் கலர் ஸ்கிர்ட் போட்டுட்டு ஒரு வைட் கலர் டாப்ல அவ எடுத்து கொண்ட போட்ருந்த முடில அவ முன் நெத்தில ரெண்டு முடி விழுந்துருந்துச்சு நா கத்துன காதுல அவளோட கண்கள் இரண்டும் மிரண்டு விழிச்சுச்சு அவளோட உதடுகள் பதட்டத்துல துடிச்சுச்சு அவ கைகள் நடுங்க ஆரம்பிச்சது அடுத்த நொடியே அவ தலையை குனிஞ்சு sorrynu சொல்லிட்டு உள்ள போய்ட்டா அவளோட அந்த வாடிய முகம் என்ன அறியாமை என் மனசுல ஒரு வலிய கொடுத்துச்சு அவளை ரொம்ப காயப்படுத்திட்டேன்னு அவளை அதுகப்ரோம் பாத்து மன்னிப்பு கேட்கலாம்னு நெனச்சுட்டு திரும்புனப்போ வித்யுத், அதிதியோட அண்ணன் என்ன பார்த்து சிரிச்சான் என்ன தான் அதிதியை நா இப்போ தோழியை மட்டுமே பார்க்குறேன்னாலும் நா பண்ண தப்பு என்ன வித்யுத் முன்னாடி பேச தயங்க வச்சது நா அமைதியா நிக்க அவன் என்ன சகஜமாக்கி உள்ள கூட்டிட்டு போனான் .

நா பாக்க வந்தது என்னவோ அதிதியை தான் ஆனா என் கண்கள் தேடுனதென்னவோ அந்த மிரண்ட விழிகளை தான் அவள்ட மன்னிப்பு கேக்கணும்ங்குறது மட்டும் தான் என் மனசுல அப்போ ஓடிட்டு இருந்தது

.அப்பறோம் அதிதியும் மற்ற நண்பர்களும் வர நா அதிதியோட பேச்சை கேட்டு உடை மாற்றிட்டு வந்தேன் அப்போ நா கதவை துறக்கேல ஒரு பெண்ணோட நெற்றியோடு என் நெற்றி முட்டி நின்னேன் ஒரு சில நொடிகள் தான் ஆனா அந்த ஒரு சில நொடிகளே ஏதோ மின்சார சிலிர்ப்பு என் உடம்புல உருவாச்சு .

ஆனா அதா நா முழுசா உணருறதுக்கு முன்னயே அதே மிரண்ட விழிகளை சந்திச்சேன் .அவ என்ன பார்த்து குடுக்குற அந்த லுக் எனக்கு சிரிப்பை தான் வரவழைச்சது நா அவளோட அந்த கண்ணையே பார்த்துட்டு இருக்க அவ என்ட ஏதோ சொன்னா ஆனா நா அதை செரியா கவனிக்கல அவ என்ன கண்டுபுடுச்சுர கூடாதுனு நானும் அவளை கத்துனதுக்கு சாரி சொன்னேன் என் வழக்கத்துக்கு மாறா நானே என் பேரை சொல்லி அறிமுகம் ஆய்கிட்டேன் அவளும் அவ பேர சொன்னா நவ்யா என்று என்னையே அறியாம அவ பெயர் என் மனசுல ஆழமா பதிஞ்சது .

அன்னைக்கு முழுதும் அதிதி வீட்டுல அவளோட நண்பர்களோட சாரி சாரி இப்போ என்னோட நண்பர்களோட நேரத்தை செலவிட்டேன் ஆனா என் கண்கள் அவளோட நடவடிக்கை ஒவ்வொன்னையும் ஆராஞ்சுட்ருந்தது.அவள் சிறு தீப்பொறியாய் என்னுள் என்னனுமதி இன்றி நுழைந்தால் அன்று.பிறகு நான் என்னோட mba படிப்பிற்காக டெல்லி சென்றேன் .

அதிதியுடன் வாரத்தில் 2 முறையேனும் வீடியோ கால்ல பேசிவிடுவேன் இல்லேன்னா யாரு அந்த மங்கம்மாட்ட திட்டு வாங்குறது. ஆனா அதுகப்ரோம் அவளோட தரிசனம் எனக்கு கிடைக்கவே இல்ல நா அப்பப்போ அவளை அதிதியோட பேசேல தேடுனாலும் அவ என் கண்ணனுக்கு அகப்படவே இல்ல .

5 வருடங்களும் கடந்தது வினையுடன் இணைந்து exports அண்ட் இம்போர்ட்ஸ் தொழிலையும் துவங்கியிருந்தேன் எனக்கும் வினைக்கும் பல கருத்துக்கள் ஒற்றுப் போக என்னுடைய உயிர்த் தோழனாய் வினையும் என்னுடைய உயிர்த் தோழியாய் அதிதியும் மாறினார்கள் மற்ற நண்பர்களிடம் உரையாடினாலும் என்னால் அவர்களுடன் அத்தனை இயல்பாய் ஒன்ற முடியவில்லை .

வருடங்களும் கடக்க அவளின் முகத்தை இன்றளவும் நான் பார்க்கவில்லை அவ்வப்பொழுது அவள் நினைவு வந்தாலும் என்னால் அவளை பற்றி எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை .அன்று சைந்தவி மற்றும் வித்யுத்தின் நிச்சயம் நான் மாடிப்படியில் என் போனை பார்த்து கொண்டே ஏறினேன் ஏதோ ஒன்று பலமாய் என் தலையை தாக்கியது முகம் சுருங்க யாரென்று ஏறிட்டேன் அது அவள் தான் .

அன்று சிறுமியாய் பால்முகம் கொண்டிருந்தவள் இன்று குமரியாய் நிற்கிறாள் சேலையில் என் முன்னே .ஏனோ என்னால் அவள் மீதிருந்த என் கண்ணை திருப்ப முடியவில்லை எனில் அவளோ திடீரென்று ஏதோ பேச அவள் கூறிய கடைசி வார்த்தைகளை மட்டுமே நான் கவனித்தேன் என்னை நினைவிருக்கிறதா என்று ஏனோ அவளை சீண்ட நினைத்தேன் யாரென்று தெரியவில்லை என்று கூறினேன் அவள் முகம் சுருங்கி விட்டது முகம் சுருங்கினாள் கூட ஒருவள் அத்தனை அழகாய் இருக்க முடியுமா? இல்லை என் கண்களுக்கு அவள் அத்தனை அழகாய் தெரிகின்றாளா? என்னால் என் எண்ணத்தை யாதென்று பிரித்து பார்க்க முடியவில்லை.

அவள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பதை ரசித்தேன் அவள் மௌனத்தை ரசித்தேன் அவள் குழந்தை தனத்தை ரசித்தேன் இதுவரை நான் பெண்களை கண்ட பார்வையிலிருந்து வேறொரு பார்வையில் அவளை ரசித்தேன் இயற்கையை ரசிப்பதை போல் என் பார்வையில் துளியும் குறும்பு கலக்கவில்லை அதை ஏனென்று நான் ஆராயவும் இல்லை.

அவளையே என் கண்கள் தேடிட அவளை சீண்டவே என் மனது துடிக்க என்னென்று அறியாமலே அவளை என் கம்பெனியில் என் PAvaaga சேர்க்க சில திருட்டுத்தனங்களை செய்தேன்.நாளை அதற்கான நேர்காணல் நடக்கவுள்ளது நான் நாளைய நாளை ஏனோ வழக்கத்திற்கு மாறாய் அதிக உற்சாகத்துடன் எதிர் பார்த்திருக்கிறேன் பாப்போம் என்ன நடக்கும் என்று என்று நினைத்தவன் அங்கிருந்த sofaaவில் தலை சாய்த்து அமர்ந்து கொண்டான் .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro