27

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இங்கே சரணை ஸ்வஸ்திகாவுடன் தள்ளி விட்ட விக்ரம் நவ்யாவின் அருகில் வந்து அவள் கையை பற்றிட நவ்யா அவனை குழப்பமாய் நோக்கினாள் விக்ரம் "என்னடா ஏதோ திங்கிங்க்ல இருக்க ?"என்க

நவ்யா "இல்லப்பா சரண் அண்ணா திடீர்னு வந்து ஸ்வஸ்திய இழுத்துட்டு போய்ட்டாங்க எங்க போனாங்க நம்மள விட்டுட்டு ?போன் பண்ணி கூபிடுங்களேன் சேர்ந்து போகலாம் "என்க

அவனோ "அவனுங்க வர மாட்டானுங்க"என்க

அவள் "ஏன் வர மாட்டாங்க இருங்க நா ஸ்வஸ்திக்கு கால் பண்றேன் "என்க

முதலுக்கே மோசம் பண்ணிருவா போலயே என்று நினைத்தவன் அவள் phoneai பிடிங்கி தன் pant பாக்கெட்டில் வைத்தவன் "என் அருமை நவ்யா நம்ம ரெண்டு பேருக்கும் பிரைவசி கொடுக்கலாம்னு அவுங்க ரெண்டு பேரும் வேற இடத்துக்கு போயிருக்காங்க ஓகேயா இந்த விளக்கம் போதுமா இல்ல இன்னும் உனக்கு சோப்பு போட்டு வெளக்கணுமா "என்க

அவளோ அவனை சந்தேகமாய் பார்த்தவள் "அவுங்க போனாங்களா இல்ல நீங்க வெரட்டுனீங்களா? "என்று புருவத்தை உயர்த்தி நக்கலாய் கேட்க அவனோ அசடு வழிந்தவன் ஈஈ என்று இழித்து வைக்க மனதில் அவனை செல்லமாய் கடிந்துகொண்டாள் திருட்டுப்பயலே என்று

பின் அவளை கைப்பற்றி அழைத்து சென்றவன் அந்த எஸ்டேட்களின் நடுவில் நடக்க ஆரம்பித்தான் .அவள் அவ்விடத்தை அதீத ரசனையோடு அவன் கரத்தை தன் இருகைகளாலும் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு இடத்தையும் நிதானமாய் நின்று அந்த வாசத்தை தன் சுவாசத்தில் நிரப்பி துள்ளி நடந்த படி வர அவனோ அவளது பிம்பத்தை தன்னுள் நிறைத்துக்கொண்டிருந்தான் .

அவ்விடத்தில் சிறிது நேரம் அவளோடு நடைபயின்றவன் பின் அவளை அழைத்துக்கொண்டு ஸ்வாமிமலைக்கு சென்றான்.ஏலகிரியின் உயரமான மலை சுவாமிமலை ஆகும் அங்கே paragliding மிகவும் சுவாரஸ்யமான பொழுதுபோக்காக பார்க்கப்படுகிறது. இருபது முதல் முப்பது நிமிடம் வரை paraglidingil தேர்ந்த கலைஞர்களை கொண்டு நிகழ்த்தப்படுகிறது .

அங்கே அவளை அழைத்து சென்றவன் அவளை அம்முகட்டின் உச்சிக்கு கூட்டி செல்ல அவளோ கண்களை பயத்தில் இறுக மூடிக்கொண்டு அவன் கரங்களை இறுகப்பற்றிக்கொண்டாள் "விக்ரம் வேணாம் விக்ரம் போலாம் எனக்கு உயரம்னா ரொம்ப பயம் விக்ரம் ப்ளீஸ் வேணாம் "என்க

அவனோ அவள் கரத்தில் தன் கையை வைத்தழுத்தியவன் "நவ்யா ஒண்ணுமில்லடா ஜஸ்ட் ரிலாக்ஸ் எல்லா safety measuresodaயும் தான் போகப்போறோம் இதுல பயப்படுறதுக்கென்ன இருக்கு we ஆர் going to fly நவி உனக்கு excitingaaga இல்லையா "என்க

அவளோ அவன் மார்பில் தன் முகத்தை புதைத்தவள் "வேணாம் விக்ரம் ப்ளீஸ் இது மட்டும் வேணாம் பயமா இருக்கு "என்க

அவள் முகத்தை நிமிர்த்தியவன் "எதுக்கும் பயப்பட கூடாது நவ்யா இட்ஸ் ஜஸ்ட் an adventure முதல்ல பயமா தான் இருக்கும் போக போக ரொம்ப அழகா இருக்கும் இங்க இருந்து பறந்துட்டே ஏலகிரியோட full view ஜஸ்ட் imagine இட் வில் be சோ beautiful "என்க

அவள் இன்னும் தெளியாமல் முகத்தை பயந்தவாறே வைத்திருக்க அவள் கையை இறுகப்பற்றியவன் தான் paragliding பலமுறை செய்திருந்ததால் தானே இயக்குவதாக கூறி அவளை முன்னே அமரவைத்து தான் பின்னே அமர்ந்து கொண்டான்.

பயந்து கொண்டே அமர்ந்தவள் விக்ரமின் "ஆர் யு ரெடி ?"என்ற கேள்விக்கு வேண்டா வெறுப்பாய் தலை அசைக்க அடுத்த இரண்டாம் நிமிடத்தில் இருவர் காலும் தரையில் இல்லாததை கவனித்தவள் கண்களை இறுக மூடிக்கொண்டு முருகா முருகா முருகா என்று பிதற்றத்துவங்க

அடுத்த சில நொடிகளில் அவள் காதிர்கருகே குனிந்த விக்ரம் "நவி ஓபன் யுவர் eyes "என்க

அவள் மறுப்பாய் தலை அசைக்க அவள் காது மடலில் மீசை உரசுமாறு குனிந்தவன் "ஐ said open your eyes " என்க

நவ்யா மனதில் அவனை இம்சை நன்றாக வறுத்தெடுத்தவள் சிறிது சிறிதாய் தன் கண்களை திறந்தாள் .அவள் காலிற்கு கீழே அந்த ஏலகிரி என்னும் அழகிய மலைப்பிரதேசத்தின் வளங்களனைத்தும் ஏதோ தேர்ந்த ஓவியன் வரைந்த அழகிய ஓவியத்தை போல் இருக்க அவள் முகத்தில் வீசிய எதிர்காற்றும் ஏதோ ரெக்கை முளைத்து பறப்பதை போன்ற உணர்வை தர அவள் முகத்தில் விசாலமான ஒரு புன்னகை ஒட்டிக்கொண்டது.

முதலில் சிறிது நேரம் உயரத்தை பார்த்து பயந்தவள் பின் உல்லாசமாய் அவனோடு கத்திக்கொண்டே அந்த இருவது நிமிடங்களை அணு அணுவாய் ரசித்தாள் .paragliding முடிந்து கீழிறங்கிய நவ்யா விக்ரமை கட்டிக்கொண்டவள் "சூப்பராக இருந்துச்சுங்க நா கூட பயந்துட்டே இருந்தேன் பட் கண்ணை திறந்து பார்கேள அந்த scenery அந்த பறக்கிற feel ppaah chanceh இல்லங்க"என்று அவள் பேசிக்கொண்டே வர விக்ரமோ அவளை ஒரு குறுநகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் .

காரிற்கு வந்து அமர்ந்தும் அவன் ஏதும் பேசாமல் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவள் "என்ன விக்ரம் நா பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன் நீங்க பாட்டுக்கு பேசாம வரீங்க ?"என்க

அவனோ சிரித்தவன் "ஒண்ணுமில்ல ஒரு மூணு மாசம் முன்னாடி வரைக்கும் ஒரு வார்த்தை பேசுறதுக்கே ஒருத்தி காசு கேட்பாள் நாம பக்கம் பக்கமா பேசினாலும் அவ கிட்ட இருந்து ஒரு சின்ன ஸ்மைல் தான் பதிலா வரும் அதான் அவ எங்க போனானு யோசிச்சுட்டு இருந்தேன்"என்க

அவளோ மெலிதாய் சிரித்தவள் "அவளை நானும் தேடிட்டு தான் விக்ரம் இருக்கேன் ஆனா உங்க முன்னாடி ஏனோ அவ வெளிப்பட மாட்டேங்குறா "என்க

காரில் தன் அருகில் அமர்ந்தவளே லேசாய் அனைத்தவன் "நீ இப்டியே இருடி எனக்கு அந்த silent நவ்யாவ விட தன்னோட உணர்வுகளை மறைக்காம அப்டியே பிரதிபலிக்குற இந்த நவ்யாவ தான் புடுச்சுருக்கு என்று அவள் மூக்கோடு தன் மூக்கை உரசியவன் விலக மனமின்றி அவள் நெற்றியோடு நெற்றி முட்ட அவளோ அவனுடனான அந்த நெருக்கத்தில் தன் கண்களை மூடிக்கொண்டாள்.

தன் கண்களை திறந்த விக்ரம் அத்தனை அருகாமையில் beauty parlourin உதவி இன்றி சீராய் வளைந்த புருவமும் அதன் கீழே குடையை கவிழ்த்தாற்போல் நிர்மலமாய் மூடி இருந்த அவள் விழிகளும் eyeliner இல்லாமலே கருமையாய் நீண்டு இருக்கும் அவள் இமை முடிகள் அவன் மூக்கில் உரச கூர் நாசி என்றும் சொல்ல முடியாது மழுங்கிய நாசி என்றும் கூற முடியாதவாறு அவளிற்கே அளவெடுத்து செய்தார் போன்ற நாசியும் அதில் அவள் அணிந்திருந்த சிறு வளையமும் உதட்டுச்சாயம் இல்லாமல் பீட்ரூட் போல் சிவந்திருந்த அவள் அதரங்களும் அவனுள் ஏதேதோ மாற்றங்களை ஏற்ப்படுத்தி அவனை பித்தனாக்க மெல்லமாய் அவள் கையை பற்றி இருந்த தன் கையை எடுத்து அவள் கன்னத்தை பற்றினான் .

அவனது அந்த ஸ்பரிசத்தில் அவள் கண்களை மெல்லமாய் திறந்து அவனை நோக்க அவள் கண்களை ஒரு முறை ஆழ்ந்து நோக்கியவன் பின் தன் கண்களை மூடியபடி அவளின் உதட்டை நோக்கி குனிய அவளும் தன் கண்களை மூடிக்கொண்டாள்.

இருவர் இதழும் இணைய நூல் இடைவெளி இருக்கையில் ஏதோ ஒரு சிந்தனை பட்டென அவன் மூலையில் ஒரு மின்னல் வெட்டியதை போன்ற தாக்கத்தை ஏற்படுத்த ஒரு நொடி தயங்கியவன் பின் அவள் முகத்தை திருப்பி அவள் கன்னத்தில் ஆழ்ந்த முத்தத்தை பதித்து அவளை விளக்கினான் .

அவள் கண்களை திறந்து ஏன்? என்பதை போல் பார்க்க சிரித்தபடி அவள் புறங்கையில் முத்தமிட்டவன் "உன் அண்ணனும் அண்ணியும் உன்ன நம்பி இங்க அனுப்சு வச்சுருக்காங்க அவுங்க உன்மேல வச்சுருக்குற நம்பிக்கையை நா காப்பாத்தணும்ல நவி?"என்க அவளோ ஒவ்வொரு செயலிலும் தன் நலனை சிந்திக்கும் அவனின் காதலில் சிலிர்ப்புற்றவள் அவன் தோளில் சாய்ந்துகொண்டாள் "ஐ லவ் யூ" என்ற வார்த்தையுடன் .

அவளை நோக்கி பெருமூச்சு விட்டவன் மனதில்" ஊருக்கு போனதும் முதல் வேலையா இவ அண்ணன் கிட்ட போய் பொண்ணு கேட்டு சட்டுபுட்டுனு கல்யாணம் பண்ணனும்டா சாமி இவளை பக்கத்துல வச்சுட்டு இனிமேல் ரொம்ப நாள் என்னால நல்லவனா இருக்க முடியாது"என்று நினைத்தவன் "லவ் யூ டூ"என்ற கூறி அவள் முடியில் முத்தமிட்டவன் அவளை ஒரு கையில் அணைத்தவாறு காரை செலுத்தினான் .

இங்கே இவர்கள் ஆனந்தமான மனநிலையில் இருக்க சரணின் மனநிலையே கொதிக்கும் உலைக்களமாய் இருந்தது அவன் தன் எதிரே கண்ட நபரை பார்த்து .

அவன் எதிரே கண்டதோ தான் கல்லூரி காலத்தில் காதலித்த நேஹா என்னும் தன் முன்னாள் காதலியை தான் .அவள் தன் கணவன் குழந்தையுடன் அவன் எதிரே நடந்து வர தன் எதிரே அவளை கண்டவனின் உடல் விரைத்து உள்ளம் உலைக்களமாய் கொதிக்க ஆரம்பித்தது.என்ன தான் எளிதாய் வெளியே வந்துவிட்டேன் என்ற ஊரை ஏமாற்றினாலும் சொத்திற்காக அவள் அவனை விட்டு வேறொருவனை மணந்தது உண்மையாய் காதலித்த அவன் மனதில் பெரும் வடுவை ஏற்படுத்தியிருந்தது.முதல் காதல் மரிக்கும் வரை மனதை விட்டு அகலாத ஒன்று அதற்கு சரனும் விதிவிலக்கல்லவே தான் உயிராய் காதலித்த பெண்ணை வேறொருவரின் மனைவியாய் பார்க்கையில் அவன் மனதில் யாரோ ஊசியை வைத்து குத்துவதைப்போல் இருக்க அவன் உடல் விறைத்தது .

அவன் உடல் விறைப்பை தன் தோளில் அவனது பிடி இறுகுவதில் உணர்ந்த ஸ்வஸ்திகா அவனின் இம்மாற்றத்தின் காரணத்தை பார்க்க அங்கே நேஹாவை கண்டவள் அவனின் மனநிலையை ஊகித்து அவன் தன் தோள் மேல் வைத்திருந்த கரத்தில் ஒரு அழுத்தம் கொடுத்தாள்.

அவன் அவளைக் காண அவள் எல்லாம் சரி ஆகிடும் என்பதை போல் கண்ணிமைத்தவள் திரும்பி அவனுடன் நடக்க சரண் என்ற குரலில் இருவரும் நின்றனர்.

அவர்கள் முன் கண்களில் திமிரை மொத்தமாய் தேக்கியபடி நின்றிருந்தாள் நேஹா.அவனை கண்டு ஏளனமாய் புன்னகைத்தவள் என்ன சரண் இன்னும் monthly wages same middle class lifestyle தான் போல ?என்றவள் பின் திரும்பி "haan this is my husband ஆகாஷ் ரெண்டு பெரும் சொந்தமா ஒரு multispeciality ஹாஸ்பிடல் ரன் பண்றோம்.உன் சலரி என்ன மிஞ்சி மிஞ்சி போனா ஒரு 50 தோஸண்ட் இருக்குமா சரண் அது என்னோட ஒரு நாள் சம்பாத்தியதோட 10% .தங்க கோட் உன்ன நா கல்யாணம் பண்ணல "என்றவள்

பின் ஸ்வஸ்திகாவிடம் திரும்பி "இது யாரு சரண் உன் girlfriendaah " என்றவள்

ஸ்வஸ்திகாவிடம் "பார்க்க ரொம்ப அழகா இருக்க எப்படி இவனை போய் சூஸ் பண்ண?" என்று கேட்க ஸ்வஸ்திகா ஏதோ கூற வர அவள் தோளில் இருந்த கையில் அழுத்தம் கூட்டி நேஹாவை ஏளனமாய் பார்த்து சிரித்தவன் "கரெக்ட் நேஹா same middle class monthly wages தான் ஆனா அது என் சொந்த தெறமையால நா உழைச்சு வாங்குற சம்பளம் .சிலர் மாறி அப்பா அம்மா சேர்த்த சொத்தை வச்சு stethescopeah துருப்புடிக்க வைக்கல நான் .அண்ட் இவ யாருனு கேட்டேல she is my ......"என்று அவன் கூற வர

ஸ்வஸ்திகா முடித்தால் "wife என்று"

அவள் கூறியதில் அவன் திகைத்து விழிக்க அவளோ அவன் கையில் அழுத்தத்தை கூட்டியவள்"actuallaah நா உனக்கு தேங்க்ஸ் சொல்லணும் நேஹா இப்டி ஒரு gemmah எனக்கு குடுத்ததுக்கு thank யூ சோ மச்.நீங்க மட்டும் அன்னைக்கு பணத்துக்க்காக இவனை இவனோட உண்மையான காதல உதறிட்டு போகாம இருந்திருந்தா நா என் lifeoda meaningaye மிஸ் பண்ணிருப்பேன் thank யூ சோ மச் for தட்."என்றவள்

சரணிடம் திரும்பி "கெளம்பலாம்ங்க ஏன் தேவை இல்லாம டைம் வேஸ்ட் பண்ணிட்ருக்கீங்க"என்க சரணோ ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன் போல் அவளுடன் நடக்க தன்னை அவமானப்படுத்தியதற்காக உள்ளுக்குள் பொருமிய நேஹா தன் கணவனுடன் எதிர் திசையில் நடக்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரம் பிரம்மை பிடித்தார் போல் நடந்து வந்த சரண் பின் காரில் ஏறியதும் ஸ்வஸ்திகாவின் தோளை பற்றி தன் அருகே இழுத்தவன் அவளை அணைத்து "thanksdi கத்திரிக்கா நெத்தி அடிடி அவ மூஞ்ச பாக்கணுமே ப்பாஹ் .நா கூட கொஞ்ச நேரத்துல first lovenu கொஞ்சம் feel ஆயிட்டேன் அவளை இன்னொருத்தன் பொண்டாட்டியா பாத்து பட் நௌ ஐ thank god அந்த பிசாசுக்கெல்லாம் அந்த மாவு மூஞ்சன் தான் ரைட் .ஆனா செம பொய் டி நானே ஷாக் ஆயிட்டேன் .அவ மூஞ்சி இருக்கே சத்தியமா இவ்ளோ reaction எதிர் பார்க்கல" என்க

அவளோ "நா பொய் சொல்லல சரண்." என்றாள்.

அவள் கூறியதை ப்ரோஸ்ஸ்ஸ் செய்யவே அவனிற்கு இரண்டு நிமிடம் ஆக அவளை திகைத்து நோக்கியவன் அருகில் வந்தவள் அவனை அணைத்து அவன் மார்பில் முகம் புதைத்தவள்"ஐ லவ் யூ சரண்.இந்த பக்கம் பக்கமா டயலாக் பேசலாம் எனக்கு தெரியாதுடா உன்னோட இருந்தா லைப் அழகா இருக்கும்னு தோணுது.கல்யாணம் பண்ணிக்கலாமா? "என்க அதிர்ச்சியில் உறைந்தவன் கைகள் அவன் மூளையின் கட்டளையை மீறி அனிச்சையாய் அவளை அணைத்திருந்தது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro